Thursday, 12 February 2015

செல்போனில் இலவசமாக இணைய தள வசதி பேஸ்புக் திட்டம்

இந்தியாவில் உள்ள
வாடிக்கையாளர்களுக்கு செல்போனில்
இணைய தள வசதியை இலவசமாக
வழங்க பேஸ்புக் நிறுவனம்
முடிவு செய்துள்ளது. உலகம்
முழுவதும் சுமார் 500
கோடி வாடிக்கையாளர்களை தன்வசம்
ஈர்ப்பதற்காக, ‘இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி’
என்ற
ஒரு அதிரடி திட்டத்தை பேஸ்புக்
நிறுவனம் செயல்படுத்த
தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த
திட்டம் ஆப்பிரிக்க நாடுகளில்
செயல்படுத்த தொடங்கிவிட்டது.
இந்த சேவையை ரிலையன்ஸ்
கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன்
இணைந்து வழங்க உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. இந்த
வசதியை தமிழகம், ஆந்திரா உள்பட 6
மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ்
வாடிக்கையாளர்கள் பெறமுடியும்.
முதல் கட்டமாக 33 இணைய
தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம்
என்றும் பேஸ்புக் நிறுவனம்
குறிப்பிட்டுள்ளது. தவிர ஏர்டெல்
மற்றும் வோடோபோன்
வாடிக்கையாளர்க ளுக்கும் இந்த
சேவையை வழங்குவதற்காக அந்த
நிறுவனங்களுடன்
ஆலோசனை நடத்தி வருவதாக
பேஸ்புக் நிறுவனம்
தெரிவித்துள்ளது.

1 comment:

  1. தம்பி பொன்மாரி வணக்கம், என்னை போனில் தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.