Wednesday, 11 February 2015

மத்திய படைகளில் போலீசாகலாம் 62,390 காலியிடங்கள் அறிவிப்பு


மத்திய போலீஸ் படைகளான அசாம்
ரைபிள்ஸ், எல்லை காவல் படை, மத்திய
தொழில் பாதுகாப்பு படை, மத்திய
ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ திபெத்
எல்லை காவல் படை, சஷாத்ர சீமாபால்
ஆகிய துணை ராணுவப்படைகளில்
காலியாக உள்ள 62 ஆயிரத்து 390
கான்ஸ்டபிள்
பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டிற்கு 2148 பணியிடங்கள்.
மொத்த இடங்கள்:
62,390. இவற்றில்
எல்லை பாதுகாப்பு படைக்கு ஆண்களும்,
பெண்களும் சேர்த்து 22,517 இடங்களும்,
மத்திய தொழில்
பாதுகாப்பு படையில் 5 ஆயிரம்
இடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ்
படையில் 24,588 இடங்களும், சாஸ்த்ர
சீமாபாலுக்கு 6224 இடங்களும்,
இந்தோ திபெத் போலீஸ் படைக்கு 3101
இடங்களும், ஆயுதப்படையில் 600
இடங்களும், தேசிய
புலனாய்வு ஏஜென்சிக்கு 86
இடங்களும்,
சிறப்பு பாதுகாப்பு படைக்கு 274
இடங்களும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம்
ரூ.2000. வயது: 1.8.2015
தேதியின்படி 18 லிருந்து 23க்குள்.
எஸ்சி, எஸ்டியினருக்கு 5
ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3
ஆண்டுகளும், முன்னாள்
ராணுவத்தினருக்கு அவர்கள் இருந்த
சர்வீஸ் படியும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி:
1.8.2015 தேதியில் விண்ணப்பதாரர்கள்
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
உடல் தகுதிகள்:
ஆண்களுக்கான உயரம்: 170 செ.மீ.,
எஸ்டி பிரிவினருக்கு 162.5 செ.மீ.,
பெண்களுக்கான உயரம்: 157 செ.மீ.,
எஸ்டி பிரிவினருக்கு 150 செ.மீ.,
ஆண்களுக்கான மார்பளவு: 80 - 85
செ.மீ., எஸ்டி பிரிவினருக்கான
மார்பளவு 76 - 81 செ.மீ., எடை:
மருத்துவ தர நிர்ணயப்படி உயரம்
மற்றும் வயதுக்கேற்ற எடை இருக்க
வேண்டும்.
உடல் அளவுகள் சரிபார்த்தல், உடல்
திறன் தேர்வு,
எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த
விண்ணப்பதாரர்களுக்கு ஆங்கிலம்,
இந்தி, தமிழ் ஆகிய மூன்ற
மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.
ஏதேனும் ஒரு மொழியில்
தேர்வு எழுதலாம். ஆன்லைன்
முறையில் தேர்வு எழுத
விரும்புகிறவர்கள் ஆங்கிலம்/
இந்தி மொழியில்
மட்டுமே தேர்வு எழுத முடியும்.
தமிழ்நாட்டில் சென்னை,
மதுரை ஆகிய இடங்களில்
தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50. பொது மற்றும் ஒபிசியினர்
மட்டும் கட்டணத்தை நெட் பேங்கிங்
மூலமோ, ஸ்டேட் வங்கி செலான்
மூலமோ செலுத்த வேண்டும். எஸ்சி.,
எஸ்டியினர், முன்னாள்
ராணுவத்தினர்,
பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம்
கிடையாது.
http://ssconline.nic.in/ மற்றும் http://
ssconline2.gov.in என்ற இணையதளங்களில்
ஆன்லைன் முறையில்
மட்டுமே விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் படிவத்தின் முதல்
பகுதியை நிரப்ப கடைசி நாள்:
21.2.2015.
2ம் பகுதியை நிரப்ப கடைசி நாள்:
23.2.2015.
எழுத்துத்தேர்வு நடைபெறும்
நாள்: 4.10.2015.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.