Friday, 6 February 2015

பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் 250 குழந்தைகளை ஒரு அறையில் அடைத்து வைத்த பள்ளி நிர்வாகம்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பள்ளிக்
கட்டணம் செலுத்தாததால், 8 வயதுள்ள
சுமார் 250 மாணவர்களை தனி அறையில்
அடைத்து வைத்து, அவர்களுக்கு குடிநீர்
வழங்காமல், கழிவறைக்கு அனுப்பாமல்
பள்ளி நிர்வாகம்
கொடுமை படுத்தியுள்ளது. இதனால்
உடல்நிலை பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள்
தற்போது பீச் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்திரமடைந்த பெற்றோர்கள்
பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசில் புகார்
அளிக்கப்பட்டதை தொடர்ந்து சிறுவர்
நீதி சட்டத்தின்
படி குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்ததாக
கூறி பள்ளி முதல்வர் அப்துல் ரஹ்மான்,
துணை முதல்வர் கிரிஜா சுரேந்திரன் மற்றும்
கணக்கு அலுவலர் ஷாஜஹான்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

4 comments:



  1. கடூமையான தண்டனை அவர்களுக்கு தரப்படவேண்டும்

    ReplyDelete
  2. pg trb result trb website pls go www.trb.tn.nic.in

    ReplyDelete
  3. உண்மைதான் பிரதர்,10மணியிலிருந்து 12 மணி வரை மாணவர்ள் கால் கடுக்க நின்ற அவலத்தை கண்ணால் பார்த்த அனுபவம் எனக்கும்உண்டு.கண் கலங்கி அவர்களைகடந்து போக முடிந்ததே தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.