Saturday, 28 February 2015

இரயில்வே பயணிகள் உணவுக்கு 138 , பாதுகாப்புக்கு 182


ரயில் பயணம் தொடர்பான இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு 138 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே துரிதமாக பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

ரயில் பயணம் தொடர்பான இடர்பாடுகள், மருத்துவ அவசர உதவி, உணவுப் பொருட்கள் தொடர்பான
புகார்களுக்கு 138 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பாதுகாப்பு தொடர்பான அனைத்து புகார்களுக்கும் 182 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

2015-2016 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பின்படி ரயில் பயணிகளின் வசதிக்காக அனைத்து இந்திய அளவிலான ஹெல்ப்லைன் எண் '138' சேவை தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து ரயில்வே கோட்ட வர்த்தக கட்டுப்பாட்டு அறைகளிலும் நிறுவப்பட்டுள்ளது.

சுகாதாரம், உணவு தரம், ரயில் பெட்டிகள் மேலாண்மை, மருத்துவ அவசர உதவி, ரயில்களில் வழங்கபப்டும் போர்வைகளின் தரம் தொடர்பான புகார்களை இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 comments:

 1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம் மேடம்

   Delete
 2. குருகுலம் நண்பர்கள் அனைவருக்கும்
  காலை வணக்கம்

  ReplyDelete
 3. வணக்கம் தங்கையே.....

  ReplyDelete
  Replies
  1. இனிய காலை வணக்கம் அண்ணா.

   Delete 4. ...ஏனுங்கோ நான் சொல்ரது சரிதானுங்கோ..? ?

  கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

  இன்னுமொரு 50 வருடங்கள்
  கழித்து வாங்கியிருக்கலாம்...

  அதற்குள் நாடுமுழுவதும் உள்ள
  அத்தனை நதிகளையும்
  இணைத்துவிட்டிருப்பான்
  அந்த வெள்ளைக்காரன்,
  நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

  நாடு முழுவதும் எப்போதோ
  bullet rail வந்திருக்கும்,
  நாம் இப்போது தான் மீட்டர்
  கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!

  ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
  வெள்ளைக்காரன்,
  நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

  நாடு முழுவதும் வெள்ளைக்காரனால்
  கட்டப்பட்ட ஆயிரக்கணக்
  கட்டிடங்களும் பாலங்களும்
  அணைகளும் அப்படியே இருக்க
  முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

  நாட்டிற்கு வருமானத்தை தரும்
  சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான்
  வெள்ளைக்காரன்!

  பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான
  கல்விமுறை வந்திருக்கும்!
  நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும்,
  இடஒதுக்கீட்டுக்கும்
  போராடிக்கொண்டு இருக்கிறோம்!

  வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட
  அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
  வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்
  கொண்டிருக்கிறது,

  அடித்து வாங்க சக்தியில்லாமல்
  அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!

  மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம்
  வாங்கினோம் மக்களுக்கு வாங்க
  தவறிவிட்டோம் !

  120 கோடி மக்கள் தொகையில்
  70 கோடி வறுமைக்கு கீழ்!
  பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
  70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!

  இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
  பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!
  எப்படி குத்திக்கொள்ளமுடியும்
  கொடியை,
  ஒவ்வொரு முறை குத்தும்போதும்
  இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

  நம்நாட்டு பெண்களை கூட்டம்
  கூடி கற்பழிக்கும் வரை,
  நம்நாட்டு குழந்தைகள் தெருவில்
  நின்று பிச்சைகேட்கும் வரை,
  நம்நாட்டு பெண்சிசுக்கள்
  கள்ளிப்பாலில் சாகும்வரை
  நமக்கெல்லாம் அருகதையில்லை
  சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!

  ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும்,
  அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
  மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்
  என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!

  "படித்ததில் வலித்தது"

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.