Monday, 29 December 2014

கட்டாயம் படியுங்கள் : குழந்தைகளுக்கு(0 முதல் 5 வயது ) ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்கும் முறைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு  உணவிலும் , நீரிலும்  உள்ள  நோய் கிருமிகள்(Virus, Bacteria, Protozoa)  வயிற்றில் சென்று வயிற்று போக்கை  ஏற்படுத்தும் .  பாட்டில் பாலே இதற்கு முழு முதல் காரணம் .இதர காரணங்கள் : மூடி வைக்காத உணவு , ஊட்டி எனப்படும் சூப்பான் (கீழே விழுந்தபின் கழுவாமல்  உடனே வாயில் வைப்பது ),சுகாதர குறைவு ....  குழந்தைகளுக்கு  வரும் வயிற்று போக்கிற்கு  பெரும்பாலும் வைரஸ் காரணம் .   பாக்ட்ரியா, ப்ரோடோசோவா, உணவு ஒவ்வாமை  - இதர காரணங்கள்   வைரசில் Rota Virus முதன்மையானது . முதலில் வாந்தியும் பிறகு வயிற்றுப்போக்கும் ஏற்படும் .இதனால் உண்டாகும் வயிற்றுப்போக்கில் அதிகபடியான நீர் இழப்பு ஏற்படும் . மற்றும் சுரம் அதிகமாக இருக்கும் .  இரத்தம், சளி போன்ற Mucus , இருந்தால் அது Dysentery எனப்படும் .இதில் வயிறு வலி , சுரம் ,வலியுடன் மலம் போகுதல் ஆகிய அறிகுறிகள் காணப்படும். இதில் நீர் இழப்பு குறைவாக இருக்கும் .  வெறும் நீராக மற்றும் பாதி நீராக போனால் அது Diarrhea எனப்படும் .இதில் நீர் இழப்பு அதிகமாக இருக்கும் .  வயிற்று போக்கு உள்ள போது குழந்தையை  பட்டினி போடுதல் கூடாது , நீர் இழப்பிற்கு தகுந்தாற் போல் ஊட்டம் அளிக்கவேண்டும் .  வயிற்றுப்போக்கின் போது நீர் சத்தும் , ஊப்பு சத்தும் குறைவதால் அதை சரிசெய்ய வேண்டும் .  பால் குடிக்கும் குழந்தைக்கு விடாமல் தாய்ப்பால் தரவேண்டும்   வீட்டிலேயே முதல் உதவி அளிக்க முடியும்  ஒரு தம்ளர் காய்ச்சிய நீர் எடுத்துகொள்ளவும்  இரண்டு விரற்கிடை அளவு  உப்பு சேர்க்கவும்  மூன்று விரற்கிடை அளவு சர்க்கரை சேர்க்கவும்  நன்கு கலக்கி  அடிக்கடி தரவும்   பாட்டிலில் பால் தருவதை உடனே நிறுத்தவேண்டும் .  திட , திரவ உணவை நிறுத்தாமல்  கொடுத்துகொண்டே இருக்க வேண்டும் .  வயிற்று போக்கு குறைய மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆகலாம். எனவே பொறுமையுடன் மருத்துவர் ஆலோசனை பேரில் மருந்து தரவும் . நீர் இழப்பை தடுப்பதே மிக முக்கிய மருத்துவம் ஆகும் .  வயிற்றுப்போக்கை உடனே நிறுத்த சில மருந்துகள் உள்ளன , அவற்றை குழந்தைகளுக்கு தரக்கூடாது . Loperamide என்ற  மாத்திரையை தந்தால் போக்கு உடனே நின்று விடும் , ஆனால் வயிறு வீங்கும் , சுரம் வரும் , செப்டிக் ஆகிவிடும் . இந்த மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பெரியவர்களுக்கு தரலாம் , ஆனால் 12 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு தரக்கூடாது .  எனவே வயிற்று போக்கை அதன் போக்கிலேயே விட்டு மருத்துவம் செய்ய வேண்டும் .   இப்பொழுது ORS எனப்படும் உயிர் கரைசல் கிடைக்கிறது. அதை வாங்கி வீட்டில் வைத்திருந்தால் தேவை படும் போது முதல் உதவியாக தரலாம். குறிப்பு இவை எல்லாம் முதலுதவி போன்ற வீட்டுமுறை சிகிச்சை முறைகள். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்கால், இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பிற்கு ஆளாகின்றனர். இதற்கு பெரும் காரணம், சரியான வைத்தியத்தை கடைப்பிடிக்காததே ஆகும். ஆனால் உண்மையில் இந்த பிரச்சனை அவ்வளவு பெரியது அல்லது. எளிதில் குணமாக்கக்கூடியவையே ஆகும். இருப்பினும் பலருக்கு, அதனை குணப்படுத்துவதற்கான முறை தெரியவில்லை. ஆகவே அத்தகைய தாய்மார்களுக்காக, அதனை எப்படி எளிதில் குணப்படுத்தலாம் என்று கூறியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, குழந்தைக்கு வயிற்றுப் போக்கினால் ஏற்படும் ஆபத்தை தடுக்கலாம். குணப்படுத்தும் முறை என்றதும், மருந்து மாத்திரைகளை தேட வேண்டாம். வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். * குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கு பெரும் காரணம் உடல் வறட்சி தான். அதிலும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை என்றால், அடிக்கடி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இல்லை சற்று பெரிய குழந்தை என்றால், அவர்களது உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது ஜூஸ் போன்ற நீர்மத்தை கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் உடலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம். * குழந்தைக்கு வயிற்றுப் போக்கு இருந்தால், அப்போது அவர்களது உடலில் இருந்து உப்பு மற்றும் நீர்ச்சத்தானது வெளியேறிவிடும். எனவே அவர்களது உடலில் இருந்து வெளியேறிய உப்புச்சத்தை மீண்டும் பெற வைப்பதற்கு, தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிக்க கொடுக்க வேண்டும்(முதலுதவி). ஒரு வேளை அவர்கள் குடிக்க மறுத்தால், வற்புறுத்தியாவது கொடுக்க வேண்டும். * குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு இருந்தால், அப்போது அவர்களுக்கு செர்லாக் போன்ற உணவுப் பொருட்களை கொடுக்க கூடாது. அதற்கு பதிலாக வீட்டில் சமைத்த உணவுகளான சாதம், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை கொடுக்க வேண்டும். * சிலசமயங்களில் பற்கள் முளைப்பதால் ஏற்படும் வலியின் காரணமாகவும், வயிற்றுப் போக்கு ஏற்படலாம். எனவே இந்த நேரத்தில் அவர்களது ஈறுகளுக்கு மசாஜ் செய்யும் வகையில், அவர்கள் கடிப்பதற்கு ஏற்றவாறான பொம்மைகளை கொடுக்க வேண்டும். இல்லையெனில் விரல்களை வைத்துக் கூட, குழந்தைகளின் ஈறுகளை மசாஜ் செய்யலாம். * குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கோ அல்லது வயிற்று வலியோ ஏற்பட்டால், உடனே கிரேப் வாட்டர் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் உலகத்திற்கே தெரிந்த ஒன்று தான். அதிலம கிரேப் வாட்டர் கொடுத்தால், குழந்தைகளின் வயிற்று வலி நீங்குவதோடு, வயிற்றில் இருக்கும் வாயுவும் வெளியேறிவிடும். இத்தகைய செயல்களையெல்லாம் குழந்தைகளுக்கு மூன்று நாட்கள் வயிற்றுப் போக்கு இருக்கும் போது செய்ய வேண்டும். இதனால் அவை குணமாகிவிடும். ஒருவேளை மூன்று நாட்களுக்கும் மேல், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை நீராக மலமானது வெளியேறினால், உடனே குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
வயிற்றுபோக்கு காரணம் மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகள்

v  உணவிலும்  , நீரிலும்   உள்ள   நோய்  கிருமிகள்(Virus, Bacteria, Protozoa)   வயிற்றில்  சென்று  வயிற்று  போக்கை   ஏற்படுத்தும் .

v  பாட்டில் பாலே இதற்கு முழு  முதல்  காரணம் .இதர  காரணங்கள் : மூடி வைக்காத  உணவு , ஊட்டி எனப்படும்  சூப்பான் (கீழே  விழுந்தபின்  கழுவாமல்   உடனே வாயில்  வைப்பது ),சுகாதர  குறைவு ....

v  குழந்தைகளுக்கு   வரும்  வயிற்று  போக்கிற்கு   பெரும்பாலும்  வைரஸ் காரணம் .

v  பாக்ட்ரியா, ப்ரோடோசோவா, உணவு  ஒவ்வாமை   - இதர  காரணங்கள்

v  வைரசில் Rota Virus  முதன்மையானது . முதலில் வாந்தியும் பிறகு வயிற்றுப்போக்கும் ஏற்படும் .இதனால் உண்டாகும்  வயிற்றுப்போக்கில்  அதிகபடியான  நீர் இழப்பு  ஏற்படும் . மற்றும்  சுரம்  அதிகமாக  இருக்கும் .

v  இரத்தம், சளி போன்ற  Mucus ,  இருந்தால்  அது  Dysentery  எனப்படும் .இதில்  வயிறு வலி , சுரம் ,வலியுடன் மலம்  போகுதல் ஆகிய அறிகுறிகள்  காணப்படும். இதில் நீர் இழப்பு  குறைவாக  இருக்கும் .

v  வெறும்  நீராக  மற்றும் பாதி நீராக  போனால்  அது Diarrhea  எனப்படும் .இதில் நீர்  இழப்பு  அதிகமாக  இருக்கும் .

v  வயிற்று போக்கு  உள்ள போது குழந்தையை   பட்டினி  போடுதல் கூடாது , நீர் இழப்பிற்கு தகுந்தாற் போல்  ஊட்டம்  அளிக்கவேண்டும் .

v  வயிற்றுப்போக்கின் போது  நீர் சத்தும் , ஊப்பு  சத்தும்  குறைவதால்  அதை  சரிசெய்ய  வேண்டும் .

v  பால் குடிக்கும்  குழந்தைக்கு  விடாமல்  தாய்ப்பால்  தரவேண்டும்

v  வீட்டிலேயே  முதல்  உதவி அளிக்க  முடியும்
§  ஒரு  தம்ளர்  காய்ச்சிய  நீர்  எடுத்துகொள்ளவும்
§  இரண்டு  விரற்கிடை அளவு   உப்பு  சேர்க்கவும்
§  மூன்று  விரற்கிடை  அளவு  சர்க்கரை  சேர்க்கவும்
§  நன்கு  கலக்கி   அடிக்கடி  தரவும்

v  பாட்டிலில்  பால் தருவதை  உடனே  நிறுத்தவேண்டும் .

v  திட  , திரவ  உணவை  நிறுத்தாமல்   கொடுத்துகொண்டே  இருக்க வேண்டும் .

v  வயிற்று போக்கு  குறைய  மூன்று முதல்  ஐந்து நாட்கள்  ஆகலாம். எனவே பொறுமையுடன்  மருத்துவர் ஆலோசனை  பேரில் மருந்து தரவும் . நீர் இழப்பை  தடுப்பதே  மிக முக்கிய  மருத்துவம் ஆகும் .

v  வயிற்றுப்போக்கை  உடனே நிறுத்த  சில மருந்துகள்  உள்ளன , அவற்றை  குழந்தைகளுக்கு  தரக்கூடாது . Loperamide என்ற   மாத்திரையை  தந்தால் போக்கு உடனே  நின்று விடும் , ஆனால் வயிறு  வீங்கும் , சுரம் வரும் , செப்டிக் ஆகிவிடும் . இந்த  மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின் பேரில்  பெரியவர்களுக்கு  தரலாம் , ஆனால்  12  வயதிற்கு  குறைந்த  குழந்தைகளுக்கு  தரக்கூடாது .

v  எனவே  வயிற்று போக்கை  அதன் போக்கிலேயே  விட்டு  மருத்துவம் செய்ய வேண்டும் .

v  இப்பொழுது  ORS எனப்படும்  உப்பு சர்க்கரை கரைசல்  கிடைக்கிறது. அதை  வாங்கி வீட்டில்  வைத்திருந்தால்  தேவை படும்  போது  முதல் உதவியாக  தரலாம்.

குறிப்பு
இவை எல்லாம் முதலுதவி போன்ற வீட்டுமுறை சிகிச்சை முறைகள். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.6 comments:

 1. உபயோகத்தகவல் நன்றி.

  ReplyDelete
 2. குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படக் காரணமான ரோட்டா வைரஸýக்கான தடுப்பு மருந்து இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

  குழந்தைகளுக்கு வாய்வழியாக இந்த தடுப்பு மருந்தை கொடுப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

  இந்தியாவில் ஆண்டுதோறும் 5 வயதுக்குள்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுப் போக்கால் இறக்கின்றனர்.

  இந்தியாவிலேயே குறைந்த விலையில் தடுப்பு மருந்து தயாரிக்கப்படாமல் இருந்தது இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்பு, இந்த தடுப்பு மருந்து வர்த்தகரீதியாக விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ.55 என்ற அளவிலேயே இருக்கும். இப்போது சந்தையில் கிடைப்பவற்றுடன் ஒப்பிடும்போது இது மிகவும் மலிவாகும்.

  இந்திய உயிரிதொழில்நுட்பத் துறை செயலாளர் கே.விஜய் ராகவன், முன்னாள் செயலாளர் எம்.கே.பான், பாரத் பயோடெக் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எம்.இலான் ஆகியோர் தில்லியில் செவ்வாய்க்கிழமை இத்தகவலைத் தெரிவித்தனர்.

  ReplyDelete
 3. சாரி...அட்மின் மழையால் சரியாக நெட் கனெக்ட் கிடைக்கவில்லை.

  ReplyDelete
 4. See part time teacher state level meeting news see www.tnptasalem.blogspot.in by Jagadesan Salem.

  ReplyDelete
 5. Useful information. Thank you sir.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.