Thursday, 20 November 2014

TRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்


ஐம்பெரும்காப்பியங்கள்
"பொருட் தொடர்நிலைச் செய்யுள்", காப்பியம் எனப்படும். காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்


காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.
ஐம்பெரும்காப்பியங்கள்:
ஐம்பெரும்காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்

ஐம்பெரும்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர்(திருத்தணிகைஉலா) 

சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள்
மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர்
வளையாபதி = பெயர் தெரியவில்லை
குண்டலகேசி = நாதகுத்தனார்

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.

சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி

புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை, குண்டலகேசி

சுத்தானந்த பாரதி: கவியோகி சுத்தானந்தபாரதி ஐம்பெரும்காப்பியங்களையும் அணிகலன்களாக உருவகிக்கிறார்.
காதொளிரும் குண்டலமும் கைக்குவளையாபதியும்
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும்
மெல்லிடையில் மேகலையும் சிலம்பார்
இன்பப்போது ஒளிரும் திருவடியும்

ஐம்பெரும்காப்பியங்கள் அட்டவணை: நூல் சமயம் பாவகை ஆசிரியர் நூல் அமைப்பு

சிலப்பதிகாரம்
சமணம்
நிலைமண்டில ஆசிரியப்பா + கொச்சக கலிப்பா
இளங்கோவடிகள்
3 காண்டம், 30 காதை,
5001அடிகள்

மணிமேகலை
பௌத்தம் நிலைமண்டில ஆசிரியப்பா
சீத்தலைச் சாத்தனார்
30 காதை, 4755 வரிகள்

சீவகசிந்தாமணி
சமணம்
விருத்தம்
திருத்தக்கதேவர்
13 இலம்பகம், 3145 பாடல்கள்

வளையாபதி
சமணம் விருத்தம்
72 பாக்கள் கிடைத்துள்ளன

குண்டலகேசி
பௌத்தம்
விருத்தம்
நாதகுத்தனார்
224 பாடல்கள் கிடைத்துள்ளன
ஐம்பெருங்காப்பியங்களின் வேறுபெயர்கள்:

நூல் வேறுபெயர்கள்
சிலப்பதிகாரம்
தமிழின் முதல் காப்பியம் உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள் முத்தமிழ்க்காப்பியம் முதன்மைக் காப்பியம் பத்தினிக் காப்பியம் நாடகப் காப்பியம் குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ) புதுமைக் காப்பியம் பொதுமைக் காப்பியம் ஒற்றுமைக் காப்பியம் ஒருமைப்பாட்டுக் காப்பியம் தமிழ்த் தேசியக் காப்பியம் மூவேந்தர் காப்பியம் வரலாற்றுக் காப்பியம் போராட்ட காப்பியம் புரட்சிக்காப்பியம் சிறப்பதிகாரம்(உ.வே.சா) பைந்தமிழ் காப்பியம்
மணிமேகலை
மணிமேகலைத் துறவு முதல் சமயக் காப்பியம் அறக்காப்பியம் சீர்திருத்தக்காப்பியம் குறிக்கோள் காப்பியம் புரட்சிக்காப்பியம் சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம் கதை களஞ்சியக் காப்பியம் பசிப்பிணி மருத்துவக் காப்பியம் பசு போற்றும் காப்பியம்

சீவக சிந்தாமணி
மணநூல் முக்திநூல் காமநூல் மறைநூல் முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்) இயற்கை தவம்

குண்டலகேசி

குண்டலகேசி விருத்தம்

116 comments:

  1. Replies
    1. Dear gurugulam admin..
      I will give suggestion to u ... Now every town have some famous institutions for coaching to TNPSC and trb exam... U ask our friends famous coaching institute test questions papers upload guruglam web ...its useful for everyone.. Share everyone... When we see more questions then only clear competitive exam...

      Delete
  2. ஆற்றுப்படை நூல்கள் எப்பாவில் இயற்றப்பட்டன

    -ஆசிரியப்பா
    -வெண்பா
    -வஞ்சிப்பா
    -விருத்தப்பா

    ReplyDelete
  3. குழந்தை இலக்கியத்தின் முன்னோடி

    -இராமலிங்கர்
    -கவிமணி
    -பாரதியார்
    -அழ.வள்ளியப்பா

    ReplyDelete
    Replies
    1. அழ.வள்ளியப்பா

      Delete
    2. தவறு சரண்.

      இந்த கேள்வி அடிக்கடி Trb ல் கேட்பார்கள்.

      Delete
    3. தவறு சரண்.

      இந்த கேள்வி அடிக்கடி Trb ல் கேட்பார்கள்.

      Delete
    4. விடை : கவிமணி

      Delete
  4. சின்னூல் என்று வழங்கப்படும் நூல்

    -நன்னூல்
    -வீரசோழியம்
    -நேமிநாதம்
    -நம்பியகப்பொருள்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வளர்மதி மேம் வணக்கம், Pg trb க்கு தீவிரமாகப் படிக்க ஆரம்பித்து விட்டீர்களா., தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொன்மாரி சார்.
      தங்களுக்கும் வாழ்த்துகள்.

      Delete
  7. பனை + அட்டு எவ்வாறு புணரும்

    -பனாடு
    -பனாட்டு
    -பனையாட்டு
    -பனையட்டு

    ReplyDelete
  8. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர்

    -சரவண பெருமாள் ஐயங்கார்
    -பாண்டித்துரை தேவர்
    -பொன்னுசாமி தேவர்
    -வீரசாமி செட்டியார்

    ReplyDelete
    Replies
    1. பாண்டித்துரை தேவர்

      Delete
    2. வாங்க சசி எப்டி இருக்கீங்க.

      சரியான பதில்

      Delete
    3. ம்..... ஓ.கே ..வேலை அதிகமாகி விட்டது அதனால் தான்......

      Delete
  9. தலைதடுமாற்றம் என்பது

    -எழுத்துப்பிழை
    -சந்தி பிழை
    -இலக்கண பிழை
    -நூல் குற்றம்

    ReplyDelete
    Replies
    1. நூல் குற்றம்

      Delete
    2. குற்றமில்லா பதில். மிகச்சரி

      Delete
  10. வடிவத்தால் பெயர் பெற்றது

    -அங்கமாலை
    -திருவிரட்டை மணிமாலை
    -நவ மணிமாலை
    -வருக்க மாலை

    ReplyDelete
    Replies
    1. விடை : திருவிரட்டை மணிமாலை

      Delete
  11. ஞானச் சுடரேற்றி ஞானத் தமிழ் புரிந்தவர்

    -மதுரகவியாழ்வார்
    -நம்மாழ்வார்
    -பூதத்தாழ்வார்
    -பொய்கையாழ்வார்

    ReplyDelete
    Replies
    1. நம்மாழ்வார்

      Delete
    2. மதுரகவியாழ்வார்

      Delete

    3. சரியான விடை?

      Delete
    4. பூதத்தாழ்வார்

      Delete
  12. உரையில்லாத இலக்கண நூல்

    -நேமிநாதம்
    -யாப்பருங்கலம்
    -வீரசோழியம்
    -பன்னிருபாட்டியல்

    ReplyDelete
  13. பதிணென் கீழ்க்கணக்கில் புறநூல்கள்

    -6
    -11
    -12
    -1

    ReplyDelete
  14. கோவில் பாடியது -உறுப்பு இடம்பெறுவது

    -பிள்ளை தமிழ்
    -பரணி
    -உலா
    -தூது

    ReplyDelete
  15. கடல் நீருக்கு உப்பு சுவையூட்டும் இரு மூலக்கூறுகள்

    -பாஸ்பேட் அயோடின்
    -சோடியம் குளோரின்
    -கால்சியம் பாஸ்பரஸ்
    -குளோரின் பாஸ்பேட்

    ReplyDelete
  16. சூரியஒளியில் கிடைக்கும் விட்டமின்

    -A
    -E
    -D
    -K

    ReplyDelete
  17. கிங் இன்ஸ்டிட்யூட் உள்ள இடம்

    -பெங்களுர்
    -சென்னை
    -மதுரை
    -ஹைதராபாத்

    ReplyDelete
  18. கிங் இன்ஸ்டிட்யூட் உள்ள இடம்

    -பெங்களுர்
    -சென்னை
    -மதுரை
    -ஹைதராபாத்

    ReplyDelete
  19. காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட இலக்கியம்

    -புலவர் புராணம்
    -இராவணகாவியம்
    -இராமநாடகம்
    -எம்.ஜி.ஆர் பிள்ளைத்தமிழ்

    ReplyDelete
    Replies
    1. எம் ஜி ஆர் பிள்ளைத்தமிழ்

      Delete
    2. Ha....ha......இல்லை சார்.

      Delete
    3. ராம நாடகம்னு நினைக்கிறேன் மேம்.....

      Delete
    4. இல்லை சசி.......

      விடை : இராவணகாவியம்

      Delete
  20. சென்னை மாகானத்தை விட்டு ஆந்திரா பிரிந்த ஆண்டு

    -1953
    -1954
    -1956
    -1955

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் மூன்று வருடங்கள் பின்னாடியே பிரிந்து விட்டது

      விடை : 1953

      Delete
    2. திருத்தம் : முன்னாடியே

      Delete
  21. செவ்வேள் யார்

    -சிவன்
    -திருமால்
    -முருகன்
    -கண்ணண்

    ReplyDelete
  22. நண்பர்களுக்கு மாலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. மாலை வணக்கம் கார்த்திக்

      Delete
    2. ஐயையோ.....அட்மின் இங்க பக்கத்ல தான் இருக்காரா.....!!
      என்னப் பார்த்தா எரிமலையால்ல பொங்கிடுவாரு............

      Delete
    3. எவ்வளவு பொிய எாிமலையையும் தணிக்கக் கூடிய ஆற்றல் உங்க கேள்விகளுக்கு உண்டு வளா்மதி. தொடருங்கள் உங்கள் சேவையை.

      Delete
  23. வாங்க நரேன் நலமா?

    ReplyDelete
    Replies
    1. நலம் சகோதாி.

      Delete
    2. முதுகலை தோ்வுக்கான தயாாிப்புகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது.

      Delete
    3. வீடு கட்டும் பணி நடந்துகொண்டிருக்கிறது நரேன், அதை மேற்பார்வையிடும் வகையில் வீட்டிலும் யாரும் பெரியவர்கள் இல்லை, சாரும் அதிகம் விடுப்பு எடுக்க இயலவில்லை, அதனால்
      அடிக்கடி நான் செல்ல வேண்டியிருக்கிறது, பழக்கம் இல்லை ஆனாலும் வேறு வழில்லாமல் செல்லவேண்டிய சூழல்..... படிக்கவே நேரம் கிடைப்பதில்லை அது தான் பெரிய கவலையாக இருக்கிறது நரேன்.

      Delete
  24. வினா கேட்கட்டுமா.....நீங்க கேக்றீங்களா நரேன்.
    வினாத்தொகுப்பு தயார் செய்யப் போவதாக சொல்லியிருந்தீர்கள், ரெடியாகி விட்டதா...

    ReplyDelete
    Replies
    1. மு.வ. அவா்களின் தமிழ் இலக்கிய வரலாறு புத்தகத்தில் நாடக இலக்கியம் என்ற பகுதியை முழுவதுமாக படித்து கொஞ்சம் கேள்விகள் எடுத்திருக்கிறேன். தற்போது அதனை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். இன்றோ அல்லது நாளையோ பதிவிடுகிறேன்.

      நாடக மேடையில் மேலிருந்து கிழிறங்கும் திரை
      (அ) ஒருமுக எழினி
      (ஆ) இருமுக எழினி
      (இ) பொருமுக எழினி
      (ஈ) கந்துவரல் எழினி

      Delete
    2. தெரியவில்லை நரேன் , கந்து வரல்....??

      Delete
    3. கந்துவரல் எழினி தான் சாியான் விடை

      Delete
    4. நரேன் நீங்க ஒரு வினா, நான் ஒரு வினா அப்படிக் கேட்கலாமா?
      ஆளுக்கு 10 வினாக்கேட்டு விட்டு வணக்கம் போட்டுவிடலாம் ஓகே வா.....

      Delete
  25. மன்னிக்கவும். தற்போது நான் அலுவலகத்தில் இருக்கிறேன். கொஞ்சம் வேலை அதிகமாக இருப்பதால் என்னால் கேள்விகள் கேட்க முடியாத சூழல்.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு நேரமா.....?? எத்தனை மணி வரை வேலை செய்வீர்கள் நரேன், இரவு உணவு முடிந்ததா....இனிமேல் தானா?

      Delete
    2. பணி இரவு 10 மணிவரை. இரவு உணவு முடிந்தது.

      Delete
    3. அப்போக் கேள்விகளை நான் மட்டும் கேட்கட்டுமா? இல்லை பணி முடிந்து கிளம்பபோகிறீர்களா?

      Delete
    4. கிளம்பிவிட்டேன்.

      Delete
    5. இரவு வணக்கம் நரேன்.

      Delete
    6. அனைவருக்கும் இரவு வணக்கம்.

      Delete
  26. காா்த்திக் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தூயத் தமிழ்...., ம்.... பாராட்டுக்கள் நரேன். எனக்கு விருப்பப்பாடம் என்னவோ....தமிழ் தான் ஆனாலும் தூயதமிழில் முடியவில்லை,அடிக்கடி ஆங்கிலமே கலந்து விடுகிறது.

      Delete
  27. வணக்கம் விஜி தோழி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே நலமா? மெயில் செய்ய வேண்டுமென்று நினைத்தேன் , குருகுலம் வந்ததும் நேரம் போனதே தெரியவில்லை.

      Delete
    2. சிதம்பரத்தில் விசாரித்தோம் நண்பரே, மோட்டோ ஈ ஆன்லைன் பர்ச்சேஸ் மட்டும்தானாம் இல்லை என்றார்கள். வேறு ஏதேனும் மொபைல்......

      Delete
    3. நலம் தோழி, நீங்கள் நலமா, மருத்துவமனையில் தான் இருக்கிறேன், சனிக்கிழமை தான் வீட்டிற்குச் செல்வேன், அதன்பிறகு தான் படிக்கனும்,

      Delete
    4. சகோதரி விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் நண்பரே.

      Delete
    5. மோடோ இ ஆன்லைனில் வாங்கலாம். பார்சல் பெற்றுக்கொண்டு பணத்தை கொடுத்து விடலாம்.

      Delete
  28. நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. Micromax canvas 2 , or Panasonic நன்றாக இருக்கும்

      Delete
    2. சார் கிரடிட் கார்டுக்கு சாம்சங், சோனி,யாத்ரா இது மூன்றும் பர்ச்சேஸ் செய்யலாமாம் , எது பெஸ்ட் என்று நண்பர்களிடம் கேட்டு விட்டு சொல்கிறேன் எனக்கூறிவிட்டேன், நீங்கள் மேல சொன்னவை விலை எவ்வளவு? 2ஜி ஆர் 3 ஜி......

      Delete
  29. இல்லை அதுதான் பெஸ்ட் என்றால் கடலூர், அல்லது பாண்டியில் கேட்டுப்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. மோட்டோ ஈ, ஆன்லைனில் தான் வாங்க முடியும் தோழி

      Delete
    2. அப்பாடியா ..... சிஸ்டமே பயன்படுத்திக்கொண்டிருப்பதால் மொபைல் பக்கமேப் போகவில்லை.

      Delete
  30. நண்பர்களுக்கு இரவு வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. எனது அப்பாவுக்குத்தான் ஆப்ரேசன் தோழி

      Delete
    2. ஓ....சாரி நண்பரே நேற்று பஸ் சத்தத்தில் சரியாக காதில் விழவில்லை .......அப்பாவுக்கு இப்போது உடல் நிலை பரவாயில்லையா?

      Delete
    3. பொன்மாரி சார் அப்பா தற்போது நலமாக உள்ளாரா ஆண்டவன் அவருக்கு நல்ல உடல் நலத்தை கொடுக்க நான் வேண்டிக் கொள்கிறேன்

      Delete
  31. நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.