Saturday, 22 November 2014

TNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா

தாவரவியல்பிரையோஃபைட்டா தாவர புற அமைப்பியல்

இந்த பக்கத்தை download  செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லவும்
தாவர புற அமைப்பியல்
* தாவர புற அமைப்பியல் என்பது தாவரங்களின் உறுப்புக்களான வேர், தண்டு, இலை, பூ, கனி

மற்றும் விதை இவற்றின் வடிவம், அமைப்பு ஆகியவற்றை அறிவதாகும்.
* தாவரத்தின் வேர்கள், தண்டுகள் மற்றும் இலைகள் தாவரங்களின் உணவூட்ட முறையிலும்,
வளர்ச்சியிலும் பங்கேற்கின்றன. ஆகவே இவை உடலப்புற அமைப்பியல் என்றும்
அழைக்கப்படுகின்றன.
* மலர்கள், கனிகள் மற்றும் விதைகள் தாவர இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வுறுப்புக்களை விளக்கும் பிரிவு இனப்பெருக்க புற அமைப்பியல் என்று அழைக்கப்படுகிறது.

வேர்த்தொகுப்பு
* வேர்த்தொகுப்பு பச்சையம் அல்லாத தரைக்குக் கீழே வளரும் தாவர உறுப்பு.
* வேர்கள் நேர் புவி நாட்டமும், எதிர் ஒளி நாட்டமும் உடையவை. வேர்கள் பொதுவாகப்
பசுமையற்றவை.
* பக்கவாட்டு வேர்கள் என்பவை அகத்தோன்றிகள் ஆகும். அதாவது அவை பிரதான வேரின்
உள்ளே உள்ள திசுவான பெரிசைக்கிளில் இருந்து தோன்றுகின்றன.

வேர்த்தொகுப்பின் வகைகள்
* இரண்டு வகையான வேர்த்தொகுப்புக்கள் உள்ளன. அவை: 1. அணி வேர்த்தொகுப்பு 2.
வேற்றிட வேர்த்தொகுப்பு
* கருவின் முளை வேரிலிருந்து தோன்றுவது ஆணி வேர்த்தொகுப்பு ஆகும்.
* முளை வேர் தவிர தாவரத்தின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் வளரும் வேர் வேற்றிட வேர்
எனப்படுகிறது.

ஆணி வேரின் மாற்றுருக்கள்
* சில தாவரங்களில் முதன்மை வவேரானது உணவு சேமித்து வைப்பதால், பருத்து
சதைப்பற்றுடன் காணப்படுகின்றன. இவை வேர் கிழங்குகள் அல்லது கிழங்கு வேர்கள்
எனப்படும்.
* வடிவத்தின் அடிப்படையில் வேர்க்கிழங்குகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன. அவை:
1. கூம்பு வடிவம் எ.கா. கேரட் 2. கதிர் வடிவம் எ.கா. முள்ளங்கி 3. பம்பர வடிவம் எ.கா.
பீட்ரூட்
* சதுப்பு நிலங்களில் வாழும் அவிசீனியா போன்ற தாவரங்களில் மண்ணில் நீர் நிரம்பக்
காணப்படுவதால் காற்றோட்டம் மிகவும் குறைவு. இத்தகைய தாவரங்களில் உப்பு நிறைந்த
நீருக்குள் புதைந்திருக்கும் சாதாரண வேர்களிலிருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி
வருகின்றன. இவை நெமட்டோஃபோர்கள் என அழைக்கப்படுகின்றன.
* நெமட்டோஃபோர் வேர்கள் சுவாச வேர்கள் அல்லது மூச்சுவிடும் வேர்கள் என்றும்
குறிப்பிடப்படுகின்றன.

வேற்றிட வேரின் மாற்றுருக்கள்
* வேற்றிட வேர்களின் மாற்றுருக்களில் சேமிப்பு வேர்கள், உணவைச் சேமித்து வைத்து, பருத்து
சதைப்பற்றுடன் காணப்படுகின்றன.
* வடிவங்களின் அடிப்படையில் சேமிப்பு வேர்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை:
1. கிழங்கு வேர்கள் எ.கா. சர்க்கரை வள்ளி 2. கொத்து வேர்கள் எ.கா. ஆஸ்பராகஸ்ட், டாலியா
3. முடிச்சு வேர்கள் எ.கா. இஞ்சி, மஞ்சள்

கூடுதல் உணவுக்காக மாறுபாடு அடைந்த வேர்கள்
* இவை வேற்றிட வேரின் மாற்றுருக்களே. இவை 1. முண்டு வேர்கள் எ.கா. சோளம், கரும்பு,
தாளை 2.தூண் வேர்கள் எ.கா. ஆலமரம் என இரு வகைப்படும்.

வேறுசில முக்கியப் பணிகளுக்காக மாறுபாடு அடையும் வேர்கள்
* இவை வேற்றிட வேரின் மாற்றுருக்களே. இவை மூன்று வகைப்படும் 1. தொற்றுவேர்கள் எ.கா.
ஆர்க்கிடுகளில் காணப்படும் வேற்றிட வேர்களான இவை எபிடைட்டுகளில் காணப்படுகின்றன.
2. ஒளிச்சேர்க்கை அல்லது சேமிப்பு வேர்கள் எ.கா. டைனோஸ்போரா 3. ஒட்டுண்ணி வேர்கள்
அல்லது ஹாஸ்டோரியாக்கள் எ.கா. கஸ்கியூட்டா
தண்டின் முக்கியப் பண்புகள்
* கருவின் முளைக் குருத்தாக தண்டு வளர்கிறது. இது நேர் ஒளிச் சார்பும், எதிர் புவிச் சார்பும்
உடையது. தெளிவான கணுக்களையும், கணுவிடைப் பகுதிகளையும் பெற்றுள்ளன.
* தண்டின் பக்கவாட்டுக் கிளைகள் புறத்தோன்றிகள் ஆகும். அதாவது இவை தண்டின் புறத்தே
உள்ள திசுக்களில் இருந்து தோன்றுகின்றன.
* தண்டு மலர்களையும் கனிகளையும் தாங்குகிறது.
* மொட்டுக்கள் எனப்படுபவை வளர வேண்டிய இளம் தண்டு ஆகும்.
* மொட்டுக்கள் தண்டு அல்லது கிளையின் நுனியில் காணப்பட்டால் அது நுனி மொட்டு அல்லது உச்சி மொட்டு என அழைக்கப்படுகிறது.
* மொட்டுக்கள் அசாதாரணமான இடங்களில் தோன்றுகின்றன. இவ்வகை மொட்டுக்கள் வேற்றிட மொட்டுக்கள் எனப்படும். எ.கா. பிரையோஃபில்லம்
* கிளைகளையும் இலைகளையும் தாங்குவதே தண்டின் முக்கியப் பணியாகும்.
* நீரையும் தனிமங்களையும் வேரிலிருந்து இலைக்கும், உணவுப் பொருட்களை இலையிலிருந்து வேருக்கும் தண்டு கடத்துகிறது.
* தண்டின் இரண்டாம் நிலைப்பணிகள் 1. சேமித்தல் எ.கா. உருளை 2. பல்லாண்டு வாழும் தன்மை எ.கா. இஞ்சி 3. உடல் இனப்பெருக்கம் எ.கா. உருளை 4. ஒளிச்சேர்க்கை எ.கா. ஓபன்ஷியா ஆகியன.
* தண்டின் மாறுபாடுகள் மூன்று வகைகளைச் சார்ந்தவை. அவை: 1. தரைமேல் மாறுபாடுகள் 2. தரை ஒட்டிய மாறுபாடுகள் 3. தரைகீழ் மாறுபாடுகள்.
* தரைமேல் மாறுபாடுகள் சில சிறப்புப் பணிகளைப் புரிவதற்காக பலவிதங்களில் மாறுபாடு அடைந்துள்ளது. 1. பற்றுக்கம்பிகள் 2. முட்கள் 3.ஃபில்லோகிளேடு எ.கா. ஓபன்ஷியா 4.கிளாடோடு எ.கா.ஆஸ்பராக்ஸ் 5. புல்பில் ஆகியன
* வறள் நிலப் பிரதேசங்களில் வளர்வதால் சப்பாத்திக் கள்ளித் தாவரத்தில் நீராவிப் போக்கின் மூலம் நீர் ஆவியாதலைத் தடுக்க இலைகள் முட்களாக மாறியுள்ளன.
* தரைஒட்டிய மாறுபாடுகள் நான்கு வகைகளில் மாற்றம் அடைந்துள்ளது. 1.மட்ட நிலத் தண்டு எ.கா. இஞ்சி, மஞ்சள், ரைசோம் 2.கிழங்கு எ.கா. உருளை 3. குமிழம் எ.கா. வெங்காயம் 4. கந்தம் எ.கா. சேனைக்கிழங்கு ஆகியன.
இலை
* ஒளிச்சேர்க்கை புரியும் முக்கிய உறுப்பு இலைகளாகும். ஒரு தாவரத்தின் அனைத்துப் பசுமையான இலைகளும் மொத்தமாக தழையிலைகள் என்று அழைக்கப்படுகின்றன.
* இலையின் மூன்று முக்கிய பாகங்கள் 1. இலையடிப் பகுதி 2. இலைக்காம்பு 3. இலைப் பரப்பு ஆகியன.
* இலைத்தாள் அல்லது இலைப் பரப்பில் நரம்புகள் அமைந்திருக்கும் விதத்திற்கு நரம்பமைவு என்று பெயர். இவை வலை நரம்பமைவு, இணை நரம்பமைவு என இரு வகைப்படும்.
* வலை நரம்பமைவு நான்கு வகைகளாக மாற்றமடைந்திருக்கிறது. 1. சிறகு வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு அல்லது ஒரு மைய நரம்புடைய வலைப்பின்னல் நரம்பமைவு எ.கா. மா 2. பல மைய நரம்புடைய வலை நரம்பமைவு அல்லது ்ங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு.
* பல மைய நரம்புடைய வலை நரம்பமைவு இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. 1. பல மைய நரம்புடைய குவி நரம்பமைவு எ.கா. இலந்தை 2. பல நரம்புடைய விரி நரம்பமைவு எ.கா பப்பாளி ஆகியன.
* இணை நரம்பமைவு இரு வகைப்படும். 1. ஒரு மைய நரம்புடைய இணை நரம்பமைவு எ.கா. வாழை 2. பல மைய நரம்புடைய இணை நரம்பமைவு எ.கா. பணை ஆகியன.
இமையமைவு
* இலை அமைவுகள் நான்கு வகைகளாக அறியப்படுகிறது. 1. மாற்று இலையமைவு எ.கா. நெட்டிலிங்கம் 2. எதிர் இலை அமைவு 3. மூவிலை அமைவு எ.கா. அரளி 4. வட்ட இலை அமைவு எ.கா. அலமாண்டா ஆகியன.
* எதிர் இலை அமைவு இரு வகைப்படும். 1, ஒரே போக்கில் அமைந்தவை எ.கா. கொய்யா 2. குறுக்குமறுக்கு எ.கா. எருக்கு ஆகியன.
தனி இலை மற்றும் கூட்டிலை
* இலைத்தாள் அல்லது இலைப்பரப்பு முழுமையாக இருப்பின் அது தனி இலை எனப்படும். எ.கா. மா
* இலைப்பரப்பு பல மடல்கள் போன்றி சிறிய இலைகளாகப் பிளவு பட்டிருப்பின் அது கூட்டிலை எனப்படும். கூட்டிலை இருவகைப்படும். 1. சிறகு வடிவ கூட்டிலைகள் 2. அங்கை வடிவ கூட்டிலைகள் ஆகியன.
* சிறகு வடிவ கூட்டிலையில் சிற்றிலைகள் ராக்கிஸ் எனப்படும் ஒரு மைய அச்சில் அமைந்துள்ளன. சிற்றிலைகள் பின்னாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
* சிறகு வடிவ கூட்டிலைகள் நான்கு வகைப்படும். அவை 1.ஒற்றைச் சிறகு கூட்டிலை எ.கா. வேம்பு, புளி 2. இரட்டைச் சிறகு கூட்டிலை எ.கா. அக்கேசியா 3. மும்மடங்கு சிறகு கூட்டிலை எ.கா. முருங்கை 4. பன்மடங்கு சிறகு கூட்டிலை எ.கா. கொத்தமல்லி
* இணைப்பட்டுள்ள சிற்றிலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அங்கை வடிவ கூட்டிலை பல வகைப்படுகின்றன. 1.ஒரே ஒரு சிற்றிலை உடைய அங்கைக் கூட்டிலை எ.கா. எலுமிச்சை 2. இரு சிற்றிலைகளை உடைய அங்கைக் கூட்டிலை எ.கா. சோர்னியை டைஃபில்லா 3.மூன்று சிற்றிலைகளை உடைய அங்கை கூட்டிலைகள் எ.கா. ஆக்சாலிஸ் 4. ஐந்து சிற்றிலைகளை உடைய அங்கை கூட்டிலைகள் எ.கா. மார்ஷிலியா 5.பல சிற்றிலைகளை உடைய ்ங்கை கூட்டிலைகள் எ.கா. இலவ இலைகள்.
இலையின் மாற்றுரு
* ஒளிச்சேர்க்கையும் நீராவிப்போக்கும் இலையின் முக்கியப் பணிகள் ஆகும். கூடுதல் பணிகளைச் செய்வதற்காக இலைகள் மாற்றுருக்களைப் பெற்றுள்ளன. அவை 1. இலைப்பற்றுக் கம்பிகள் எ.கா. பட்டாணி 2. இலை கொக்கிகள் எ.கா.பிக்னோனியா 3. இலை முட்கள் எ.கா. இலந்தை 4. இலைத் தொழில் இலைக்காம்பு எ.கா. அக்கேசியா 5. குடுவை எ.கா. நெப்பந்தஸ் 6. பை அல்லது பிளாடர் எ.கா.யுட்ரிகுளேரியா
* தட்டையான இறகு வடிவ இலைக்காம்பு அல்லது ராக்கிசிற்கு இலைத்தொழில் இலைக்காம்பு என்று பெயர். சிறகு வடிவ கூட்டிலைகளால் ஆன சாதாரண இலைகள், தாவரம் இளமையாக இருக்கும்போது தோன்றுகிறது. பின்னர் உடனே உதிர்ந்துவிடுகின்றன. பிறகு ஃபில்லோடு இலையின் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்கிறது.
* நெப்பந்தஸ் தாவரத்தில் (குடுவைத் தாவரத்தில்) இலையானது குடுவை வடிவத்தில் மாறுபாடு அடைந்துள்ளது. இத்தாவரங்கள் தங்களுக்குத் தேவையான நைட்ரஜன் சத்தைப் பெறுவதற்காக பூச்சிக்களைப் பிடித்து உண்ணுகிறது.
மஞ்சரி
* பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புக்கள் மலர்கள் ஆகும்.
* கொத்தாக பல மலர்கள் பொதுவான ஒரு அச்சின் மீது தோற்றுவிக்கப்பட்டால் அதற்கு மஞ்சரி என்று பெயர் பொதுவான அச்சு, மஞ்சரித் தண்டு அல்லது மஞ்சரி அச்சு எனப்படும்.
* தரைக்கீழ்த் தண்டு உடைய தாவரங்களில் மஞ்சரித் தண்டு நேரிடையாக தரைகீழ்த் தண்டில் இருந்து உண்டாகிறது. இத்தகைய தண்டு ஸ்கேப் எனப்படும்.
* தாமரையில் ஸ்கேப் ஒரு தனி மலரைத் தோற்றுவிக்கும். வெங்காயம் போன்ற தாவரங்களில் மஞ்சரியைத் தோற்றுவிக்கும்.
* மஞ்சரிகளில் உள்ள மலர்களின் அமைப்பு, அவை அமைந்திருக்கும் விதம், மஞ்சரித் தண்டின் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மஞ்சரிகளை பல வகைகளாகப் பிரிக்கலாம். 1.ரெசிமோஸ் மஞ்சரி 2.சைமோஸ் மஞ்சரி 3.கலப்பு வகை மஞ்சரி. 4.சிறப்பு வகை மஞ்சரி ஆகியன.
ரெசிமோஸ் மஞ்சரி
* ரெசிமோஸ் மஞ்சரியில் மஞ்சரித் தண்டு வரம்பற்ற வளர்ச்சி உடையது.
* மைய அச்சு நீண்ட ரெசிமோஸ் மஞ்சரியில் 6 வகைகள் உள்ளன. 1. தனி ரெசிம் எ.கா.குரோட்டலேரியா ரெட்டியுசா, கிளியோம் விஸ்கோசா 2. கூட்டு ரெசிம் அல்லது பானிக்கிள் எ.கா. மாஞ்சிஃபெரா 3.கதிர் மஞ்சரி எ.கா.அக்கிராந்தஸ் அல்லது நாயுருவி, பைப்பர்லாங்கம் அல்லது மிளகு 4. கூட்டுக் கதிரி மஞ்சரி எ.கா. நெல் அல்து ஒரைசா சட்டைவா 5. மடல் கதிர் மஞ்சரி எ.கா ஆரம், கோலக்கேசியா 6. கூட்டு மடல் கதிர் மஞ்சரி எ.கா. கோக்கோஸ் ஆகியன.
* மையத்தண்டு குட்டையான ரெசிமோஸ் மஞ்சரியில் காரிம்ப் என்ற மஞ்சரி அடங்கும் எ.கா.சீசல்பினியா
* மையத்தண்டு மலர்களில் முடியும் ரெசிமோஸ் மஞ்சரியில் 1.அம்பெல் எ.கா. அல்லியம் சீப்பா அல்லது வெங்காயம் 2. கூட்டு அம்பெல் எ.கா.டாக்கஸ் கரோட்டா அல்லது காரட் என இரு வகைகள் உள்ளன.
* மையத்தண்டு தட்டையான ரெசிமோஸ் மஞ்சரியில் 1.சிரமஞ்சரி அல்லது காப்பிடுலகம் 2. கூட்டு சிரமஞ்சரி எ.கா.லகாஸ்கா மால்லிஸ் என இரு வகைகள் உள்ளன.
* சிரமஞ்சரி அல்லது காப்பிடுலம் இரு வகைப்படும் 1.ஹோமோகேமஸ் வகை எ.கா.லானியா, வெர்னோனியா 2. ஹெட்டிரோகேமஸ் வகை எ.கா டிரைடாக்ஸ், ஹீலியாந்தஸ் என்ற சூரியகாந்தி ஆகியன.
சைமோஸ் மஞ்சரி
* சைமோஸ் மஞ்சரி ஐந்து வகைப்படும். 1. தனி் சைம் 2. தனி டைக்கேஷியம் எ.கா. ஜாஸ்மினம் 3. கூட்டு டைகேஷியம் எ.கா. கிளிரோ டென்ட்ரான் 4. ஒரு பாதக் கிளைத்தல் 5.பல பாதக் கிளைத்தல் எ.கா.நீரியம் ஆகியன.
* தனி சைம் மேலும் இரு வகைகளாகப் பரிகிகப்படுகிறது. 1.நுனி தனி சைம் எ.கா.ஹைபில்கஸ் 2. கோண தனி சைம் எ.கா. பப்பாவர் சாம்னிஃபெரம் ஆகியன.
* ஒரு பாதக் கிளைத்தல் 1.ஹெலிக்காய்டு சைம் எ.கா.ஹமிலியா பேட்டன்ஸ் 2. ஸ்கார்ப்பியாய்டு சைம் எ.கா. ஹீலியோட்ராப்பியம் என இரு வகைப்படும்.
கலப்பு வகை மஞ்சரி
* கலப்பு வகை மஞ்சரிகளில் மஞ்சரித் தண்டு ரெசிமோஸ் வகையிலும், தொடர்ந்து சைமோஸ் முறையிலும் கிளைத்துள்ளது. கலப்பு வகை மஞ்சரி 1.திர்சஸ் எ.கா.ஆசிமம்(துளசி) 2. வெர்டிகிலாஸ்டர் எ.கா.லியுக்காஸ் அல்பெரா(தும்பை) 3.கலப்பு மடல் கதிர் எ.கா.மியுசா(வாழை) என மூன்று வகைப்படும்.
சிறப்பு வகை மஞ்சரி
* சிறப்பு வகை மஞ்சரி ரெசிமோஸ் வகையிலோ அல்லது சைமோஸ் வகையிலோ சேர்க்க முடியாதவை. இவை 1.சையாத்தியம் எ.கா யூஃபோர்பியா சையாத்தோ ஃபோரா 2. ஹைபன்தோடியம் எ.கா. பைக்கஸ் பெங்காலென்சிஸ் (ஆலமரம்) 3. சீனான்தியம் எ.கா.டார்ஸ்டீனியா என மூன்று வகைப்படும்.
மலர்கள், கனிகள், விதைகள்
* மலர் என்பது இனப்பெருக்கத்திற்காக ஒர் மாறுபாடு அடைந்த அல்லது மாற்றுரு கொண்ட தண்டுத் தொகுதி.
* மலர் அச்சின் நுனிப்பகுதி மலரின் எல்லா உறுப்புக்களையும் தாங்க்ககூடியது. இது பூத்தளம் என அழைக்கப்படும்.
மலரின் உறுப்புக்கள்
* பூவடிச் செதில்கள் பூக்காம்புச் செதில்கள் பூத்தளம் பூவட்டங்கள் ஆகியன மலரின் உறுப்புக்கள்.
மலரின் முக்கியப் பாகங்கள், துணை பாகங்கள்
* மலரில் 4 பாகங்கள் உள்ளன. அவை: புல்லி வட்டம், அல்லி வட்டம் மகரந்தத் தாள் வட்டம், சூலக வட்டம் ஆகியன.
* மகரந்தத் தாள் வட்டமும், சூலக வட்டமும் நேரிடையாக இனப்பெருக்கச் செயலில் ஈடுபடுகின்றன. எனவே இவை மலரின் முக்கிய பாகங்களாகும்.
* புல்லி வட்டமும், அல்லி வட்டமும் இனப்பெருக்கச் செயலில் பங்குகொள்வதில்லை. எனவே இவற்றை மலரின் துணை பாகங்கள் என்று அழைக்கிறோம்.
தாவரவியல் – பிரையோஃபைட்டா
* மிக எளிமையான, மேம்பாடு அடையாத நில வாழ்த் தாவரங்கள் பிரையோஃபைட்டுகள் ஆகும்.
* வாழ்க்கைச் சுழற்சியை முழுமையாக்க இன்னுமும் ஈரத்தை நம்பி வாழும் வாஸ்குலார் திசுக்களற்ற நிலவாழ்த் தாவரங்களே பிரையோஃபைட்டுகள்.
தாவர உலகின் நீர் நில வாழ்வன (Amphibians) என அழைக்கப்படுகின்றன.
* பிரையோஃபைட்டுகளின் வாழ்க்கை சுழற்சியில் தெளிவான சந்ததி மாற்றம் காணப்படுகிறது. மாஸ்கன், ஈரல் (லிவர்வொர்ட்ஸ்) மற்றும் கொம்பு பிரையோ ஃபைட்டுகள் ஆகியன பிரையோஃபைட்டுகளில் அடங்கும்.
* தனியான வேர்த்தொகுப்பைப் பெற்றிருக்கா விட்டாலும், மெல்லிய இலை போன்ற ரைசாய்டுகள் மூலம் வளர்தளத்தில் ஊன்றப்பட்டுள்ளன. இவைகளுக்கு உண்மையான வாஸ்குலார் திசு கிடையாது.
* நீரும் கனிம உப்புக்களும், ரைசாய்டுகள் உட்பட முழுத் தாவர உடலத்தால் உறிஞ்சப்படுகின்றன.
* ஆண் இனப்பெருக்க உறுப்புக்கள் ஆந்திரிடியம் எனவும், பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் ஆர்க்கினோனியம் எனவும் அழைக்கப்படுகின்றன.
பிரையோஃபைட்டுகளில் கேமிட்டோபைட் சந்ததி ஒங்கிய தன்மை உடையது.
* ஸ்போரோபைட் சந்ததி மிகச்சிறியது. நுண்ணோக்கியில் மட்டுமே காணவல்லது. கேமிட்டோபைட் சந்ததியைச் சார்ந்து வாழ்கின்றன.
பிரையோஃபைட்டுகளின் மூன்று முக்கிய வகுப்புகள் 1. ஹெப்பாட்டிகே 2. ஆந்தோசெரோட்டே 3. மஸ்ஸை ஆகியன.
* ஹெப்பாட்டிகே வகுப்பிற்கு எடுத்துக்காட்டு ரிக்சியா, ஆந்தோசெரோட்டே வகுப்பிற்கு எடுத்துக்காட்டு ஆந்தோசெராஸ், மஸ்ஸை வகுப்பிற்கு எடுத்துக்காட்டு ஃப்யூனேரியா ஆகும்.
* பிரையோஃபைட்டுகளில் ஸ்பேக்னம் அதிக ்ளவு நீரை உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் திறனுடையது. நர்சரிகளில் நாற்றுக்களையும், வெட்டப்பட்ட தாவரப் பகுதிகளையும் ஈரமாக வைத்திருக்க ஸ்பேக்னம் தாவரம் தோட்டக்காரர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
* விலை மதிப்பற்ற எரிபொருளாகப் பயன்படும் கரியைப் போன்ற பீட், ஸ்பேர்னம் போன்ற சில மாஸ்களின் உதவியால் தொல்லுயிர்ப் படிமமாக மாறி பின்பு பீட்டாக மாறுகிறது.
* வேரிகள் (ரைசாயிடுகள்) ஒற்றைச் செல்லால் ஆன நீண்ட தூவி போன்ற அமைப்புக்கள் ஆகும்.
* ரிக்சியாவின் உள்ளமைப்பில் உணவு தயாரிக்கவல்ல டார்ஸ் பகுதி, சேமிப்புத் திசு கொண்ட வென்ட்ரல் பகுதி ஆகியன காணப்படுகின்றன.
* ரிக்சியா கிளாக்கா என்ற சிற்றினத்தில் இளம் ரைசாயிடுகளின் நுனிப்பகுதியில் பகுப்புக்கள் நிகழ்ந்து, செல் திரள்கள் தோன்றுகின்றன. இவற்றிற்கு ஜெம்மாக்கள் என்று பெயர்.

டெரிடோஃபைட்டா
* மிகப்பழமையான டெரிடோஃபைட்டு 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிலூரியன் காலத்திலிருந்து எடுக்கப்பட்ட தொல்லுயிர் படிமமாகும்.
* வாஸ்குலார் திசுக்களை உடைய மிகத்தொன்மையான தாவரம் டெரியோஃபைட்டுகள் ஆகும்.
* அனைத்து வாஸ்குலார் தாவரங்களும் சில நேரங்களில் டிரக்கியோஃபைட்டா என்ற ஒரே பிரவில் வைக்கப்படுகின்றன.
* டிரக்கியோஃபைட்டா பரிவில் டெரியோ ஃபைட்டுகளும் மேலும் மேம்பாடு அடைந்த ஸ்பெர்மெட்டோ ஃபைட்டுகளும் இரண்டு உட் பிரிவுகளாகும்.
* வாஸ்குலார் திசுக்கள் ஸ்போரோபைட் தலைமுறையில் காணப்படும் திசுக்களாகும்.
* ஸ்போரோபைட் தலைமுறை பிரையோபைட்டுகளில் மிகவும் குறுகியது. கேமிட்டோபைட் தலைமுறைறைச் சார்ந்து வாழ்வது, ஆனால் வாஸ்குலார் திசுக்கள் டெரிடோஃபைட்டுகளில் உள்ளதால் தான் வாஸ்குலார் தாவரங்களில் ஸ்போரோபைட் தலைமுறை ஒங்கியதாக உள்ளது.
* ரிடோஃபைட்டுகலில் வாஸ்குலார் திசுக்கள், அதாவது சைலம் மற்றும் ஃபுளேயம் காணப்படும்.
* சைலத்தில் டிரக்கீடுகள் மட்டுமே உள்ளன. குழாய்கள் கிடையாது.
* ஃபுளோயத்தில் சல்லடைச் செல்கள் மட்டுமே உள்ளன. சல்லடைக் குழாய்கள் கிடையாது. டெரிடோஃபைட்டுகள் ஹோமோஸ்போரஸ் வகை, அதாவது ஒரே ஒரு வகையான ஸ்போர்களை உருவாக்குபவை.
* ஸ்போரகங்களை உடைய இலைகள் ஸ்போரோஃபில்கள் அல்லது ஸ்போரக இலை எனப்படுகின்றன.
* ஸ்போர்கள் முளைத்து கேமிட்டோஃபைட்டைத் தோற்றுவிக்கின்றன. கேமிட்டோஃபைட் பல செல்களால் ஆன பாலுறுப்பைத் தோற்றுவிக்கும்.
* ஆன் பாலுறுப்பு ஆந்திரிடியம் என்றும், பெண் பாலுறுப்பு ஆர்க்கிகோனியம் என்றும் அழைக்கப்படும்.
* ஆர்க்கிகோனியத்தின் உள்ளே கருவுறுதல் நிகழ்கிறது. கரு வுற்ற சைகோட் கருவாக வளர்கிறது.
* ஃபெனரோகேம்கள் என அழைக்கப்படும் விதையுள்ள தாவரங்களில் காணப்படும் மிகச்சிறந்த தகவமைப்பு அவற்றில் விதைகள் உருவாவது தான் விதைகள் உள்ளே உள்ள இளம் கருவிற்கு பாதுகாப்பாக இருப்பதுடன் மட்டுமின்றி அதற்கு உணவூட்டத்தையும் அளிக்கிறது.
* டெரிடோஃபைட் (பெரணிகள்) அவற்றின் அழகான பெரிய இலைகளுக்காக அழகுத் தாவரமாக வளர்க்கப்படுகிறது.
* டிரையாப்பெரிஸ் என்ற பெரணியின் ரைசோம் மற்றும் இலைக்காம்பிலிருந்து புழுக்கொல்லி மருந்து பெறப்படுகிறது.

ஜிம்னோஸ்பெர்ம்கள்
* மிக வெற்றிகரமாக நிலச்சூழலில் வாழும் மேம்பாடு அடைந்த தாவரங்கள் விதைத்தாவரங்கள் ஆகும்.
* விதைத்தாவரங்கள் மூன்று முக்கிய மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளன. 1.ஹெட்டிரோஸ்போரியின் தோற்றம் 2.விதைகள் உருவாக்கம் 3. நீந்தும் தன்மையற்ற ஆண் கேமிட்டுகள் தோன்றுதல் ஆகியன.
* ஜிம்னோஸ்பெர்ம்களில் பெண் கேமி்ட்டோ பைட் சூலினால் பாதுகாக்கப்படுகிறது. இது முழுமையாக தாய் ஸ்போரோபைட்டையே சார்ந்திருக்கும். கருவுறுதலுக்குப் பின்னர் இது இணைக்கப்பட்டிருக்கும். ஸ்போரோபைட்டிலிருந்து பெறப்படும் உணவைச் சேமித்து வளரும் சைகோட்டுக்கு அளிக்கிறது.
* விதை சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்கி கொள்ளும் ஒரு சிறப்பு அமைப்பாகும்.
* ஸ்பெர்மெட்டோஃபைட்டா பிரிவின் பின்தங்கிய வகுப்பே ஜிம்னோஸ்பெர்மகள் ஆகும்.
* ஜிம்னோஸ்பெர்ம்களின் விதைகள் திறந்தவை. இவை கன்த்தோலினால் மூடப்படவில்லை.
* ஜிம்னோஸ்பெர்ம்கள் மீசோசோயிக் காலத்திலேயே மிக அதிகமாகக் காணப்பட்டன. இந்தியக் குணைக் கண்டத்தில் ஹிமாலயப் பிரதேசத்தில் ஊசியிலைக் காடுகளில்  இவை காணப்படுகின்றன.
* பைன், ஃபர், ஸ்ப்ரூஸ், செடார், குப்ரஸஸ், செக்கோயா ஜெஜாண்டிகா ஆகியவை சில கோனிஃபெர்கள் ஆகும்.
* ஜிம்னோஸ்பெர்ம்கள் பல்லாண்டுகள் வாழக்கூடிய மரங்கள் ஆகும். வெகு அரிதாக புதர்ச்செடிகளாகவும் உள்ளன.
* ஜிம்னோஸ்பெர்ம்களின் வாழ்க்கைச் சுழற்சியில் ஹெட்டிரோமார்ஃபிக் சந்ததி காணப்படுகிறது.
* ஸ்போரோஃபைட் இரண்டு வகை வளமான இலைகளை உடையவை. 1. மைக்ரோஸ்போர்களை உருவாக்கும் மைக்ரோஸ்போராக இலை, 2. மெகாஸ்போர்களை உருவாக்கும் மெகாஸ்போரக இலை ஆகியன.
* ஜிம்னோஸ்பெர்ம்களி்ல் மகரந்தச் சேர்க்கை காற்றின் மூலமே நிகழ்கிறது. கருவுறுதல் ஒரே ஒரு இணைவை மட்டுமே உடையது. வளரும் கருவுக்கு பெண் கேமிட்டோபைட் உணவூட்டம் அளிக்கிறது.
* ஜிம்னோஸ்பெர்ம்களின் விதைகள் திறந்தவை. கனித்தோலினால் மூடப்படாதவை.
* நீட்டேல்ஸ் தாவரத்தில் மட்டுமே சைலத்தில் குழாய்கள் காணப்படும்.

ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
* மலரும் தாவரங்கள் அனைத்தும் ஆஞ்சியோஸ்பெர்ம் பிரிவைச் சார்ந்தவை. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் தாவர வகைகளிலேயே மிக அதிக மேம்பாடுடற்ற தாவர வகையாக மட்டுமின்றி ஏனைய தாவர வகைகளை விட மிக  அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
* அண்மைக் காலக் கணக்கெடுப்பின்படி ஆஞ்சியோஸ் பெர்ம்களில் ஏறத்தாழ 2,86,000 சிற்றினங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
* ஆஞ்சியோஸ்பெர்ம்கள் ஒருவித்திலைத் தாவரங்கள் (மோனோ காட்டிலிடனே) இரு வித்திலைத் தாவரங்கள் (டைகாட்டிலிடனே) என இரு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
* இருவித்திலைத் தாவரத்தில் ஆணி வேர்த் தொகுப்பு காணப்படும். ஒரு வித்திலைத் தாவரத்தில் சல்லி வேர்த் தொகுப்பு காணப்படும்.
* இரு வித்திலைத் தாவரத் தண்டின் உள்ளமைப்பில் வாஸ்குலார் கற்றைகள் வளைய வடிவில் அமைந்துள்ளன. ானால் ஒரு வித்திலையில் தண்டின் வாஸ்குலார் கற்றைகள் விரவிக் காணப்படுகின்றன.
* ஒரு வித்திலையில் கேம்பியம் இல்லாமையால் மூடிய வாஸ்குலாக் கற்றைகள் காணப்படுகின்றன. இரு வித்திலையில் கேம்பியத் திசு காணப்படுவதால் வாஸைகுலார் கற்றைகள் திறந்தவை.
* இரு வித்திலைத் தாவர மலரில் இரு வெளி அடுக்குகள் பொதுவாக புல்லி வட்டம், அல்லி வட்டம் என வேறுபாடு கொண்டிருக்கும்.
* ஒரு வித்திலையில் புல்லி வட்டம், அல்லி வட்டம் இல்லை. அவற்றிற்கு பதிலாக பூவிதழ் வட்டம் உள்ளது.
* ஒரு வித்திலையில் இரண்டாம் நிலை வளர்ச்சி காணப்படுவதில்லை. இரு வித்திலைத் தாவரத்தில் கேம்பிய செயலினால் இரண்டாம் நிலை வளர்ச்சி பொதுவாக காணப்படுகின்றன.

download

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.