Thursday, 20 November 2014

TNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்

இந்த பக்கத்தை pdf  download செய்ய இந்த பக்கத்தின் இறுதிவரிக்கு செல்லவும்

புன்கணீர்-துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
என்பு-எலும்பு
வழக்கு-வாழ்க்கை நெறி
நண்பு-நட்பு
அணியார்-நெருங்கி இருப்பவர்
என்னாம்-என்ன பயன்?
சேய்-தூரம்
செய்-வயல்
அனையர்-போன்றோர்
வண்மை-கொடை
வன்மை-கொடுமை
உழுபடை-விவசாய கருவிகள்
மடவாள்-பெண்
தகைசால்-பண்பில் சிறந்த
உணர்வு-நல்லெண்ணம்
புனல்-நீர்
பொடி-மகரந்தப் பொடி
தழை-செடி
தலையா வெப்பம்-வெப்பம்/குறையா வெப்பம்
தழைத்தல்-கூடுதல், குறைதல்
ஆற்றவும்-நிறைவாக
தமவேயாம்-தம்முடைய நாடே ஆகும்
ஆறு-வலி, நதி, ஓர் எண்
உணா-உணவு
அரையன்-அரசன்
செய்ய வினை-துன்பம் தரும் செயல்
வேம்பு-கசப்பான சொற்கள்
வீறாப்பு-இறுமாப்பு
பலரில்-பலருடைய வீடுகள்
கடம்-உடம்பு
ஒன்றோ-தொடரும் சொல்
அவள்-பள்ளம்
மிசை-மேடு
நல்லை-நன்றாக இருப்பாய்
ஈரம்-அன்பு
அளைஇ-கலந்து
படிறு-வஞ்சம்
அமர்-விருப்பம்
முகன்-முகம்
துவ்வாமை-துன்பம்
நாடி-விரும்பி
இனிதீன்றல்-இனிது + ஈன்றல்
இரட்சித்தானா?-காபாற்றினானா?
அல்லைத்தான்-அதுவும் அல்லாமல்
பதுமத்தான்-தாமரையில் உள்ள பிரமன்
குமரகண்ட வலிப்பு-ஒருவகை வலிப்பு நோய்
குரைகடல்-ஒலிக்கும் கடல்
வானரங்கள்-ஆண் குரங்குகள்
மந்தி-பெண் குரங்குகள்
வான்கவிகள்-தேவர்கள்
காயசித்தி-இறப்பை நீக்கும் மூலிகை
வேணி-சடை
மின்னார்-பெண்கள்
மருங்கு-இடை
கோட்டு மரம்-கிளைகளைஉடைய மரம்
பீற்றல் குடை-பிய்ந்த குடை
பண்-இசை
வண்மை-கொடைத்தன்மை
போற்றி-வாழ்த்துகிறேன்
புரை-குற்றம்
பயக்கும்-தரும்
சுடும்-வருத்தும்
அன்ன-அவை போல்வன
எய்யாமை-வருந்தாமல்
அகம்-உள்ளம்
அறிகை-அறிதல் வேண்டும்
தானை-படை
கடனே-கடமை
ஆர்கலி-நிறைந்த ஓசையுடைய கடல்
காதல்-அன்பு, விருப்பம்
மேதை-அறிவு நுட்பம்
வண்மை-ஈகை, கொடை
பிணி-நோய்
மெய்-உடம்பு
பால்ப்பற்றி-ஒருபக்கச் சார்பு
சாயினும்-அழியினும்
தூஉயம்-தூய்மை உடையோர்
ஈயும்-அளிக்கும்
நெறி-வழி
மாந்தர்-மக்கள்
வனப்பு-அழகு
தூறு-புதர்
வித்து-விதை
சுழி-உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
துன்னலர்-பகைவர், அழகிய மலர்
சாடும்-தாக்கும், இழுக்கும்
கைம்மண்ணளவு-ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
மெத்த-மிகுதியாக
புலவீர்-புலவர்களே
கலைமடந்தை-கலைமகள்
என்பணிந்த-எலும்பை மாலையாக அணிந்த
தென்கமலை-தெற்கில் உள்ள திருவாரூர்
பூங்கோவில்-திருவாரூர் கோவிலின் பெயர்
புண்ணியனார்-இறைவன்
பதுமை-உருவம்
மெய்பொருள்-நிலையான பொருள்
கணக்காயர்-ஆசிரியர்
மாறி-மழை
சேமம்-நலம்
தேசம்-நாடு
முட்டு-குவியல்
நெத்தி-நெற்றி
திரு-செல்வம்
கனகம்-பொன்
கோ-அரசன்
நிவேதனம்-படையல்அமுது
புரவி-குதிரை
கடுகி-விரைந்து
கசடு-குற்றம்
நிற்க-கற்றவாறு நடக்க
உவப்ப-மகிழ
தலைக்கூடி-ஒன்று சேர்ந்து
ஏக்கற்று-கவலைப்பட்டு
கடையர்-தாழ்ந்தவர்
மாந்தர்-மக்கள்
ஏமாப்பு-பாதுகாப்பு
காமுறுவர்-விரும்புவர்
மாடு-செல்வம்
தத்தும் புனல்-அலையெறியும் நீரும்
கலிப்புவேளை-கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
மதோன்மத்தர்-சிவபெருமான்s
களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா-யானை
களபம்-சந்தனம்
மாதங்கம்-பொன்
வேழம்-கரும்பு
பகடு-எருது
கம்பமா-கம்பு மாவு
விண்-வானம்
வரை-மலை
முழவு-மத்தளம்
மதுகரம்-தேன் உண்ணும் வண்டு
கதி-துணை
பேறு-செல்வம்
நனி-மிகுதி(மிக்க)
தரம்-தகுதி
புவி-உலகம்
மேழி-கலப்பை, ஏர்
வேந்தர்-மன்னர்
ஆழி-மோதிரம், சக்கரம், கடல்
காராளர்-மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்
சுடர்-ஒளி
ஆனந்தம்-மகிழ்ச்சி
பராபரம்-மேலான பொருள், இறைவன்
வினை-செயல்
காப்பு-காவல்
நீரவர்-அறிவுடையார்
கேண்மை-நட்பு
நவில்தொறும்-கற்கக்கற்க
நயம்-இன்பம்
நகுதல்-சிரித்தல்
கிழமை-உரிமை
அகம்-உள்ளம்
ஆறு-நல்வழி
உய்த்து-செலுத்தி
உடுக்கை-ஆடை
கொட்பின்றி-வேறுபாடு இல்லாமல்
புனைதல்-புகழ்தல்
குழவி-குழந்தை
பிணி-நோய்
மாறி-மயக்கம்
கழரும்-பேசும்
சலவர்-வஞ்சகர்
குவை-குவியல்
மாறன்-மன்மதன்
வள்ளை-நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
அளகு-கோழி
ஆழி-கடல்
விசும்பு-வானம்
செற்றான்-வென்றான்
அரவு-பாம்பு
பிள்ளைக்குருகு-நாரைக்குஞ்சு
வள்ளை-ஒருவகை நீர்க்கொடி
கடா-எருமை
வெளவி-கவ்வி
சங்கின் பிள்ளை-சங்கின்குஞ்சுகள்
கொடி-பவளக்கொடி
கோடு-கொம்பு
கழி-உப்பங்கழி
திரை-அலை
மேதி-எருமை
கள்-தேன்
செற்றான்-வென்றான்
அரவு-பாம்பு
புள்-அன்னம்
சேடி-தோழி
ஈரிருவர்-நால்வர்
கடிமாலை-மணமாலை
தார்-மாலை
காசினி-நிலம்
வெள்கி-நாணி
மல்லல்-வளம்
மடநாகு-இளைய பசு
மழவிடை-இளங்காளை
மறுகு-அரசவீதி
மது-தேன்
தியங்கி-மயங்கி
சம்பு-நாவல்
மதியம்-நிலவு
வாய்மை-உண்மை
களையும்-நீக்கும்
வண்மை-வள்ளல் தன்மை
சேய்மை-தொலைவு
கலாபம்-தோகை
விவேகன்-ஞானி
கோல-அழகிய
வாவி-பொய்கை
மாதே-பெண்ணே
குவடு-மலை
பொன்னி-காவிரி
கொத்து-குற்றம்
அரவம்-பாம்பு
திடம்-உறுதி
மெய்ஞ்ஞானம்-மெய்யறிவு
உபாயம்-வழிவகை
நகை-புன்னகை
முகை-மொட்டு
மேனி-உடல்
வழக்கு-நன்னெறி
ஆன்ற-உயர்ந்த
நயன்-நேர்மை
மாய்வது-அழிவது
அரம்-வாளைக் கூர்மையாக்கும் கருவி
நண்பு-நட்பு
கடை-பழுது
நகல்வல்லர்-சிறிது மகிழ்பவர்
பசியறாது-பசித்துயர் நீங்காது
அயர்ந்த-களைப்புற்ற
நீடிய-தீராத
வான்பெற்ற நதி-கங்கையாறு
களபம்-சந்தனம்
துழாய் அலங்கல்-துளசிமாலை
புயம்-தோள்
பகழி-அம்பு
இருநிலம்-பெரிய உலகம்
ஊன்-தசை
நாமம்-பெயர்
கைம்மாறு-பயன்
மாசற்ற-குற்றமற்ற
தேட்டை-திரட்டிய செல்வம்
மீட்சி-மேன்மை
மாலை-நீங்க
தாது-மகரந்தம்
பொது-மலர்
பொய்கை-குளம்
பூகம்-கமுகம்
திறல்-வலிமை
மறவர்-வீரர்
மதி-அறிவு
அமுதகிரணம்-குளிர்ச்சியான ஒளி
உதயம்-கதிரவன்
மதுரம்-இனிமை
நறவம்-தேன்
கழுவிய துகளர்-குற்றமற்றவர்
சலதி-கடல்
புவனம்-உலகம்
மதலை-குழந்தை
பருதிபுரி-கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)
உளவாக்கல்-உண்டாக்குதல், படைத்தல்
நீக்கல்-அழித்தல்
நீங்கலா-இடைவிடாது
அலகிலா-அளவற்ற
அன்னவர்-அத்தகைய இறைவர்
சரண்-அடைக்கலம்
அகழ்வாரை-தோண்டுபவரை
தலை-சிறந்த பண்பு
பொறுத்தல்-பொறுத்துக்கொள்ளுதல்
இறப்பு-துன்பம்
இன்மை-வறுமை
ஒரால்-நீக்குதல்
மடவார்-அறிவிலிகள்
விருந்து-வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
நிறை-சால்பு
ஒறுத்தாரை-தண்டித்தவரை
போன்றும்-உலகம் அழியும்வரை
நோநொந்து-துன்பத்திற்கு வருந்தி
மிக்கவை-தீங்குகள்
தகுதியான்-பொறுமையால்
துறந்தார்-பற்றற்றவர்
இன்னா-தீய
கண்ணோட்டம்-இறக்கம் கொள்ளுதல்
எண்வனப்பு-ஆராய்சிக்கு அழகு
ஆராய்சிக்கு அழகு-அரசன்
எம்பி-என் தம்பி
மடப்பிடி-பாஞ்சாலி
கோமான்-அரசன்
நுந்தை-நும் தந்தை
அடவி-காடு
தடந்தோள்-வலியதோள்
மருங்கு-பக்கம்
கா-காடு
குலவு-விளங்கும்
பண்ணவர்-தேவர்
அரம்பையர்-தேவமகிளிர்
வீறு-வலிமை
நிழற்றிய-நிழல் செய்த
துஞ்சான்-துயிலான்
மா-விலங்கு
நாழி-அளவுப்பெயர்
ஈதல்-கொடுத்தல்
துய்ப்போம்-நுகர்வோம்
நீர்-கடல்
கோல்-கொம்பு
செவிச்செல்வம்-கேள்விச்செல்வம்
தலை-முதன்மை
போழ்து-பொழுது
ஈயப்படும்-அளிக்கப்படும்
ஆவி உணவு-தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு
ஒப்பர்-நிகராவர்
ஒற்கம்-தளர்ச்சி
ஊற்று-ஊன்றுகோல்
ஆன்ற-நிறைந்த
வணங்கிய-பணிவான
கந்துகம்-பந்து
கோணம்-வாட்படை
குந்தம்-சூலம்
கொடை-வேனிற்காலம்
பாடலம்-பாதிரிப் பூ
மா-மாமரம்
சடிலம்-சடை
கிள்ளை-கிலி
கந்தருவம், கந்துகம், 
கோணம், கொக்கு, 
கொடை, குந்தம், 
பாடலம், சடிலம், கிள்ளை
-குதிரை
உய்ம்மின்-பிழைத்துக் கொள்ளுங்கள்
மலை-வளமை
வள்-நெருக்கம்
விசும்பு-வானம்
புரவு-புறா
நிறை-எடை
ஈர்த்து-அறுத்து
துலை-துலாக்கோல்(தராசு)
நிறை-ஒழுக்கம்
மேனி-உடல்
மறுப்பு-தந்தம்
ஊசி-எழுத்தாணி
மறம்-வீரம்
கனல்-நெருப்பு
மாறன்-பாண்டியன்
களிறு-யானை
தீயின்வாய்-நெருப்பில்
சிந்தை-எண்ணம்
கூர-மிக
நவ்வி-மான்
முகில்-மேகம்
மதி-நிலவு
உகு-சொரிந்த(பொழிந்த)
ஆயம்-தோழியர் கூட்டம்
ஆசனம்-இருக்கை
நாத்தொலைவில்லை-சொல் சோர்வின்மை
யாக்கை-உடல்
பிணி நீங்கா-நோய்
பேதைமை-அறியாமை
செய்கை-இருவினை
உணர்வு-அறிவியல் சிந்தனை
அரு-உருவமற்றது
உறு-வடிவம்
வாயில்-ஐம்பொறிகள்
வேட்கை-விருப்பம்
பவம்-பயன் நோக்கிய செயல்
கொடு-கொம்பு
அலகில-அளவற்ற
தொக்க விலங்கு-விலங்குத்தொகுதி
குரலை-புறம் பேசுதல்
வெஃகல்-விரும்புதல்
வெகுளல்-சினத்தல்
சீலம்-ஒழுக்கம்
தானம்-கொடை
கேண்மின்-கேளுங்கள்
உய்ம்மின்-போற்றுங்கள்
உறைதல்-தங்குதல்
கூற்று-எமன்
மாசில்-குற்றமற்ற
புக்கு-புகுந்து
இடர்-இன்னல்
பகர்வது-சொல்வது
தெளிவீரே-தெளியுங்கள்
துவ்வா-நுகராத
அகன்று-விலகி
ஆழி-கடல்
கடன்-கடமை
நாண்-நாணம்
ஒப்பரவு-உதவுதல்
வாய்மை-உண்மை
சால்பு-சான்றாண்மை
ஆற்றல்-வலிமை
பொறை-சுமை
மாற்றார்-பகைவர்
கட்டளை-உரைகல்
இனிய-நன்மை
திண்மை-வலிமை
ஆழி-கடல்
இருநிலம்-பெரிய நிலம்
இசைபட-புகழுடன்
கயவர்-கீழ்க்குணமுடையோர்
உறுதி-உளஉறுதி
சொருபம்-வடிவம்
தரணி-உலகம்
தாரம்-மனைவி
வையை நாடவன்-பாண்டியன்
உய்ய-பிழைக்க
இறந்து-பணிந்து
தென்னவன் குலதெய்வம்-சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன்
இறைஞ்சி-பணிந்து
சிரம்-தலை
மீனவன்-மீன் கொடியை உடைய பாண்டியன்
விபுதர்-புலவர்
தூங்கிய-தொங்கிய
பொற்கிழி-பொன்முடிப்பு
நம்பி-தருமி
பைபுள்-வருத்தம்
பனவன்-அந்தணன்
கண்டம்-கழுத்து
வழுவு-குற்றம்
சீரணி-புகழ் வாய்ந்த
வேணி-செஞ்சடை
ஓரான்-உணரான்
குழல்-கூந்தல்
ஞானப்பூங்கோதை-உமையம்மை
கற்றைவார் சடையன்-சிவபெருமான்
உம்பரார் பத்தி-இந்திரன்
நுதல்-நெற்றி
ஆய்ந்த நாவலன்-நக்கீரன்
காய்ந்த நாவலன்-இறைவன்
மெய்-உடல்
விதிவிதிர்த்து-உடல் சிலிர்த்து
விரை-மணம்
நெகிழ-தளர
ததும்பி-பெருகி
கழல்-ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
சயசய-வெல்க வெல்க
விழுப்பம்-சிறப்பு
ஓம்பப்படும்-காத்தல் வேண்டும்
பரிந்து-விரும்பி
தேரினும்-ஆராய்ந்து பார்த்தாலும்
குடிமை-உயர்குடி
இழுக்கம்-ஒழுக்கம் இல்லாதவர்
அழுக்காறு-பொறாமை
ஆகம்-செல்வம்
ஏதம்-குற்றம்
எய்துவர்-அடைவர்
இடும்பை-துன்பம்
வித்து-விதை
ஒல்லாவே-இயலாவே
ஓட்ட-பொருந்த
ஒழுகல்-நடத்தல்
கூகை-கோட்டான்
இகல்-பகை
தீராமை-நீங்காமை
பொருதகர்-ஆட்டுக்கடா
சேருவர்-பகைவர்
சுமக்க-பனிக
கிழக்காந்தலை-தலைகீழ்(மாற்றம்)
எய்தற்கு-கிடைத்தற்கு
கூம்பும்-வாய்ப்பற்ற
வணங்கி-பணிந்து
மாண்டார்-மாண்புடைய சான்றோர்
நுணங்கிய நூல்-நுண்ணறிவு நூல்கள்
நோக்கி-ஆராய்ந்து
கொற்கை-பாண்டிய நாட்டின் துறைமுகம்
தென்னம் பொருப்பு-தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
பலியோடு படரா-மறநெறியில் செல்லாத
பசுந்துணி-பசிய துண்டம்
தடக்கை-நீண்ட கைகள்
அறுவற்கு இளைய நங்கை-பிடாரி
கானகம்-காடு
உகந்த-விரும்பிய
தாருகன்-அரக்கன்
செற்றம்-கறுவு
தேரா-ஆராயாத
புள்-பறவை
புன்கண்-துன்பம்
ஆழி-தேர்ச்சக்கரம்
படரா-செல்லாத
வாய்முதல்-உதடு
தெளிவுறுத்தும்-விளக்கமாய் காட்டும்
சுவடி-நூல்
எளிமை-வறுமை
நாணிடவும்-வெட்கப்படவும்
தகத்தகாய-ஒளிமிகுந்த
சாய்க்காமை-அழிக்காமை
தாபிப்போம்-நிலைநிறுத்துவோம்
ஆயகாலை-அந்த நேரத்தில்
அம்பி-படகு
நாயகன்-தலைவன்
நாமம்-பெயர்
கல்-மலை
திரள்-திரட்சி
துடி-பறை
அல்-இருள்
சிருங்கிபேரம்-கங்கைகரையோர நகரம்
திரை-அலை
மருங்கு-பக்கம்
நாவாய்-படகு
நெடியவன்-இராமன்
இறை-தலைவன்
பண்ணவன்-இலக்குவன்
பரிவு-இரக்கம்
குஞ்சி-தலைமுடி
மேனி-உடல்
மாதவர்-முனிவர்
முறுவல்-புன்னகை
விளம்பல்-கூறுதல்
கார்குலாம்-மேகக்கூட்டம்
பார்குலாம்-உலகம் முழுவதும்
குரிசில்-தலைவன்
இருத்தி-இருப்பாயாக
நயனம்-நயனம்
இந்து-நிலவு
நுதல்-நெற்றி
கடிது-விரைவாக
முரிதிரை-மடங்கிவிழும் அலை
அமலன்-குற்றமற்றவன்
இளவல்-தம்பி
அரி-நெற்கதிர்
சேறு-வயல்
யாணர்-புதுவருவாய்
வட்டி-பனையோலைப் பெட்டி
நெடிய மொழிதல்-அரசரிடம் சிறப்புப் பெறுதல்
துகிர்-பவளம்
மன்னிய-நிலைபெற்ற
செய-தொலைவு
தொடை-மாலை
கலம்-அணி
காய்ந்தார்-நீக்கினார்
-பசு
நிறைகோல்-துலாக்கோல்(தராசு)
மந்தமாருதசீதம்-குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்
ஈறு-எல்லை
புவனம்-உலகம்
தெருளும்-தெளிவில்லாத
கமலம்-கமலம்
திருநீற்றுக்காப்பு-திருநீறு
பொற்குருத்து-இளமையான வாழைக்குருத்து
மல்லல்-வளமான
வால்-கூரிய
அல்லல்-துன்பம்
உதிரம்-குருதி
மறைநூல்-நான்மறை
பூதி-திருநீறு
பணிவிடம்-பாம்பின் நஞ்சு
மனை-வீடு
மேதி-எருமை
தடம்-தடாகம்
சந்தம்-அழகு
கல்மிதப்பு-கல்லாகிய தெப்பம்
சூலை-கொடிய வயிற்றுநோய்
கரம்-கை
மிசை-மேல்
நேர்ந்தார்-இசைந்தார்
ஒல்லை-விரைவு
ஆம்-அழகிய
அரா-பாம்பு
அங்கை-உள்ளங்கை
மேனி-உடல்
சேய்-குழந்தை
மெய்-உண்மை
சவம்-பிணம்
அரியாசனம்-சிங்காதனம்
பா ஒரு நான்கு-வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
வரம்பு-வரப்பு
ஏர்-அழகு
நார்கரணம்-, புத்தி, சித்தம், அகங்காரம்
நெறிநாலு-வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),பாஞ்சாலம் 
(சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி)
நாற்பொருள்-அறம், பொருள், இன்பம், வீடு
சீத்தையர்-கீழானவர், போலிப்புலவர்
நாளிகேரம்-தென்னை
மூத்த-முதிர்ந்த
தேர்ந்து-ஆராய்ந்து
உறாஅமை-துன்பம் வராமல்
தமர்-உறவினர்
தலை-சிறப்பு
செற்றார்-பகைவர்
தகைமை-தன்மை
மதலை-துணை
பொய்யா விளக்கம்-அணையா விளக்கு
ஈனும்-தரும்
புல்லார்-பற்றார்
உல்குபொருள்-வரியாக வரும்பொருள்
குழவி-குழந்தை
கேண்மை-நட்பு
நோய்-துன்பம்
பேணி-போற்றி
வன்மை-வலிமை
சூழ்வார்-அறிவுடையார்
இல்-இல்லை
ஏமரா-பாதுகாவல் இல்லாத
எள்ளுவர்-இகழ்வர்
இருள்-பகை
தீதின்றி-தீங்கின்றி
உறுபொருள்-அரசு உரிமையால் வரும்பொருள்
தெரு-பகை
செவிலி-வளர்ப்புத்தாய்
குன்று-மலை
செருக்கு-இறுமாப்பு
இடர்-துன்பம்
பிணி-நோய்
சேவடி-இறைவனின் செம்மையான திருவடிகள்
ஏமாப்பு-பாதுகாப்பு
நடலை-துன்பம்
நமன்-எமன்
தெண்டிரை-தெளிந்த அலைகள்
தடக்கரி-பெரிய யானை
தாரை-வழி
உழுவை-புலி
வெள்ளெயிறு-வெண்ணிறப் பற்கள்
வள்ளுகிர்-கூர்மையான நகம்
நிணம்-கொழுப்பு
கிரி-மலை
தொனி-ஓசை
கவை-பிளந்த
எண்கு-கரடி
எழில்-அழகு
இடர்-துன்பம்
மாத்திரம்-மலை
புளகிதம்-மகிழ்ச்சி
பூதரம்-மலை
திறல்-வலிமை
மந்தராசலம்-மந்தரமலை
சிரம்-தலை
உன்னி-நினைத்து
கான்-காடு
திரள்-கூட்டம்
அடவி-காடு
கனல்-நெருப்பு
வனம்-காடு
மடங்கள்-சிங்கம்
கோடு-தந்தம்
உரும்-இடி
மேதி-எருமை
கேழல்-பன்றி
மரை-மான்
புயம்-தோள்
வேங்கை-புலி
கேசரி-சிங்கம்
கவின்-அழகு
தெரிசனம்-காட்சி
புந்தி-அறிவு
சந்தம்-அழகு
செகுதிடுவது-உயிர்வதை செய்வது
தெளிந்தார்-தெளிவு பெற்றார்
கிளை-சுற்றம்
நோன்றல்-பொறுத்தல்
புயல்-மேகம்
பனண-மூங்கில்
பகரா-கொடுத்து
பொருது-மோதி
நிதி-செல்வம்
புனல்-நீர்
கவிகை-குடை
மீன்நோக்கும்-மீன்கள் வாழும்
என்பால்-என்னிடம்
தார்வேந்தன்-மாலையணிந்த அரசன்
கோல்நோக்கி-செங்கோல் செய்யும் அரசனை நோக்கி
செத்தை-குப்பைகூளம்
இளைப்பாறுதல்-ஓய்வெடுத்தல்
ஆரமிர்தே-அரிய அமிழ்தே
பூரணமாய்-முழுமையாய்
புனிதம்-தூய்மை
விழுப்பொருள்-மேலானப்பொருள்
வையம்-உலகம்
இரிந்திட-விலகிட
பைய-மெல்ல
தாள்-திருவடி
ஐயை-தாய்
மருவு-பொருந்திய
செய்-வயல்
மல்குதல்-நிறைதல்
இருநிலம்-பெரிய பூவுலகு
ஓங்குமலை-உயர்ந்த மலை
சிலம்பு-மலைச்சாரல்
வேங்கை பிடவு-மலைநிலத்தே வளரும் மரங்கள்
உகிர்-நகம்
உழுவை-ஆண்புலி
கவலை-கிளைவழி
சாஅய்-மெலிவுற்று
தோகை-மயில்
வதுவை-திருமணம்
அமரருள்-தேவர் உலகம்
ஆரிருள்-நரகம்
செறிவு-அடக்கம்
தோற்றம்-உயர்வு
பணிதல்-அடங்குதல்
எழுமை-ஏழு பிறப்பு
சோகாப்பர்-துன்புறுவர்
கதம்-சினம்
தாளாற்றி-மிக்க முயற்சி செய்து
வேளாண்மை-உதவி
இடம்-செல்வம்
திரு-செல்வம்
கடன்-முறைமை
கூகை-கோட்டான்
தகர்-ஆட்டுக்கிடாய்
செறுநர்-பகைவர்
மாற்றான்-பகைவர்
சாகாடு-வண்டி
உய்க்கும்-செலுத்தும்
காக்க-கடைப்பிடித்து ஒழுகுக
சீர்மை-விழுப்பம், சிறப்பு
மாண-மிகவும்
ஒருமை-ஒருபிறப்பு
ஏமாப்பு-பாதுகாப்பு
வடு-தழும்பு
செவ்வி-தகுந்த காலம்
தந்த-ஈட்டிய
புத்தேள் உலகம்-தேவர் உலகம்
அற்று-போலும்
ஒல்கார்-தளரார்
கேடு-பொருள்கேடு
இகல்-பகை
பொள்ளென-உடனடியாக
சுமக்க-பனிக
பீலி-மயில்தோகை
இரும்-முரியும்
சிலை-வில்
குரங்கின-வளைந்தன
கருங்கொடி-கரிய ஒழுங்கு
கொடி-ஒழுங்கு
எயிரு-பல்
எரிமலர்-முருக்கமலர்
இவுளி-குதிரை
நுனை-கூர்மை
பிணை-பெண்மான்
இழுக்கி-தப்பி
மொய்ம்பு-வலிமை
கணிகை-பொதுமகள்
குரங்கி-வளைந்து
நிலமடந்தை-பெற்ற தாய்
கைத்தாய்-செவிலித்தாய்
புரி-முறுக்கு
பொழில்-சோலை
பறவை-கின்னரமிதுனம் என்னும் பறவை
மிடறு-கழுத்து
கடி-விளக்கம்
விம்மாது-புடைக்காது
உளர-தடவ
கால்-காற்று
கடம்-காடு
மாழ்கி-மயங்கி
எழினி-உறை
மடங்கள்-சிங்கம்
கொல்லை-முல்லைநிலம்
தூமம்-அகிற்புகை
இருவிசும்பு-செவிலித்தாய்
ஓதி-சொல்லி
பத்தர்-யாழின் ஓர் உறுப்பு
கான்-காடு
சிரம்-தலை
வளை-புற்று
பிடவை-துணி
பொறி-புள்ளிகள்
பருவரல்-துன்பம்
கடி-மணம்
நறை-தேன்
கெந்தம்-பற்கள்
சென்னி-தலை
கோடிகம்-ஆடை
கான்று-உமிழ்ந்து
வரை-மலை
முரணி-மாறுபட்டு
நகம்-மலை
முழை-குகை
பாந்தள்-பாம்பு
வெருவி-அஞ்சி
உரகம், பணி-பாம்பு
நித்திரை-தூக்கம்
காந்தி-பேரொளி
பரல்-கல்
வேகம்-சினம்
மரைமலர்-தாமரை மலர்
கால்-காற்று
பன்னகம்-பாம்பு
புடை-வளை, பொந்து
புதியன்-இறைவன்
செந்தழல்-வேள்வியில் மூடுகிற நெருப்பு
வானோர்-தேவர்கள்
இந்தனம்-விறகு
உகம்-யுகம்
திருந்தலீர்-பகைவர்கள்
செயமாது-வெற்றித் திருமகள்(விசயலட்சுமி)
காயம்-உடம்பு
வாரி-கடல்
கோற்றொடியார்-பெண்கள்(உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்)
குக்குவென-நெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு
பண்ணை-வயல்வெளி
வேய்-மூங்கில்
அரி-சிங்கம்
அவுணன்-இரணியன்
சேனை-சைனியம்
படி-உலகம்
பெண்-அகலிகை
நாரி-சீதாப்பிராட்டி
அரண்-சிவன்
காயம்-உடம்பு
பண்ணும் தொழில்-காத்தல் தொழில்
பாதவம்-மருத மரம்
பாரம்-பளு
வேலை-கடல்
வரை-மலை
மாசை-பழிப்பை
அரை-இடுப்பு
அமணர்-சமணர்
சிலை-வில்
மடி-இறந்த
கடகரி-மத யானை
அபயன்-முதல் குலோத்துங்கச்சோழன்
சேர-முற்றும்
ஆற்றி-உண்டாக்கி
கலிங்கம்-ஆடை
முந்நூல்-பூணூல்
அரிதனை-பகை
சயத்தம்பம்-வெற்றித்தூண்
வயமா-குதிரை
வண்டையார் கோன்-கருணாகரத் தொண்டைமான்
புலராமே-வறண்டு விடாமல்
விரல்-பெருவிரல்
அஞ்சனம்-கண்மை
தாள்-கால்
கம்முதல்-குரல் தேய்ந்து மங்குதல்
சிவவாமே-சிவக்காமல்
கலுழ்தல்-அழுதல்
வயித்தியநாதபுரி-புள்ளிருக்குவேளூர்
ஏகன்-இறைவன்
தற்பரன்-இறைவன்
அருந்தவம்-பண்புத்தொகை
உன்னதம்-வீரம்
இமமலை-இமயமலை
கீர்த்தி-புகழ்
பண்-பாடல்
ஈர்க்கின்ற-கவர்கின்ற
புலம்-அறிவு
புல்லடிமை-இழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம்
தட்டின்றி-குறையின்றி
மூவாத-மூப்படையாத
மீன்-விண்மீன்
தளை-விலங்கு
வதிபவர்-வாழ்பவர்
மிடிமை-வறுமை
நமன்-எமன்
நடலை-இறப்பு
பிணி-நோய்
ஏமாப்பு-பாதுகாப்பு
ஆழி-கடல், சக்கரம்
சார்ங்கம்-வில்
பாழி-வலிமை
துசங்கட்டுதல்-விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு.
இருவினை-நல்வினை, தீவினை
பரவுதும்-யாம் தொழுதும்
ஓங்குநீர்-கடல்
முப்பகை-காமம், வெகுளி, மயக்கம்
முனிவர்-துறவி
வாழ்க்கை-தொழிற்பெயர்
அம்மா-வியப்பிடைச்சொல்
நண்ணும்-கிட்டிய
இசைத்த-பொருந்தச் செய்த
வண்ணம்-ஓசை
பிறமொழி-வேற்றுமொழி
வண்மை-வளமை
வாடின-தளர்ந்த
ஓடின-மறைந்தன
கயன்முள்-மீன்முள்
திரைகவுள்-சுருக்கங்களை உடைய கன்னம்
கணிச்சி-மழுவாயுதம்
திறல்-வலிமை
ஒருவன்-எமன்
ஆறு-நெறி
பசை-ஓட்டும் பசை(ஈரம்)
பச்சை-தோல்
மாச்சிறைப் பறவை-கரிய சிறகுகள் உடைய வௌவால்
முதுமரம்-பழையமரம்
முகை-மொட்டு
கடிமகள்-மணமகள்
கதப்பு-கூந்தல்
தண்பதம்-குளிர்பதம்
இறவு-இறாமீன்
முதல்-அடி
பிணர்-சருச்சரை(சொர சொரப்பு)
தடவு-பெருமை
சுறவு-சுறாமீன்
கொடு-கொம்பு
மருப்பு-தந்தம்
உழை-பெண்மான்
உரவு-வலிமை
ஒழுகுநீர்-ஓடுகின்ற நீர்
ஆரல்-ஆரல் மீன்
குருகு-நாரை
மறு-குற்றம்
தூவி-இறகு
மரபு-முறைமை
ஓதி-கூந்தல்
கிளை-சுற்றம்
ஊன்-தசை
நிணம்-கொழுப்பு
வல்சி-உணவு
போலாம்-பொன்
விறல்-வலிமை
வையகம்-உலகம்
தினை-மிகச் சிறிய அளவு
சால்பு-நிறைபண்பு
மாசு-குற்றம்
அகழ்வாரை-தோண்டுபவரை
பொறுத்தல்-மன்னிக்க
ஓரால்-நீக்குதல்
மடவார்-அறிவிலிகள்
விருந்து-புதியராய் வந்தவர்
பொன்றும்-அழியும்
அரண்-கோட்டை
ஒட்பம்-அறிவுடைமை
அதிர-நடுங்கும் படி
திட்பம்-வலிமை
ஒரால்-செய்யாமை
கோள்-துணிபு
வீறு-செய்தல்
நன்றி-நன்மை
பனை-ஒரு பேரளவு
கேண்மை-நட்பு
விழுமம்-துன்பம்
தலை-சிறந்த அறமாகும்
இன்மை-வறுமை
வன்மை-வலிமை
பொறை-பொறுத்தல்
நிறை-சால்பு
அற்றம்-அழிவு
ஓரீஇ-நீக்கி
கூம்பல்-குவிதல்
நோய்-துன்பம்
ஊறு-பழுதுபடும் வினை
ஆறு-நெறி
கொட்க-புலப்படும் படி
திண்ணியர்-வலியர்
வெய்யோன்-கதிரவன்
ஈர்வளை-அறுத்து செய்யப்பட்ட வளையல்
இலங்கு-ஒளிருகின்ற
தோளி-கண்ணகி
முறை-நீதி
நிறை-கற்பு
படுகாலை-மாலைக்காலம்
மாதர்-காதல்
மல்லல்-வளம்
கொற்றம்-அரசியல்
வைவாள்-கூரியவாள்
பழுது-உடல்
கழல்-திருவடி
தையல்-திருமகளாகிய சீதாப்பிராட்டி
திண்டிறல்-பேராற்றல் மிக்க இராமன்
மற்று-மேலும்
திரை-அலை
தனயை-மகள்
உம்பி-உன் தம்பி
கனகம்-பொன்
அலங்கல்-மாலை
திருக்கம்-வஞ்சனை
வீங்கினள்-பூரித்தாள்
தோகை-மயில்
முளரி-தாமரை
இறைஞ்சி-வணங்கி
ஓதி-கூந்தல்
துறத்தி-கைவிடுக
மருகி-மருமகள்
தடந்தோள்-அகன்ற தோள்
வேலை-கடல்
சாலை-பர்ணசாலை
கோரல்-கொல்லுதல்
முறிவு-வேறுபாடு
ஆழி-மோதிரம்
மாமணிக்கரசு-சூடாமணி
மாலி-சூரியன்
கரிந்து-கருகி
வியன்வட்டம்-அகன்ற கேடயம்
கிளர்ப-நிறைய
ஓகையால்-களிப்பினால்
கதத்த-சினமிக்க
நிரூபன்-அரசன்
கைவயம்-தோள்வலிமை
ஐஞ்சிலை-ஐந்து கற்கள்
மருகி-சுழன்று
செல்-மேகம்
உருமு-இடி
சிரம்-தலை
ஆலி-மலை நீர்
புடை-இடையின் ஒருபக்கம்
கீண்டு-கிழித்து
தொழும்பர்-அடிமைகள்
வெருவி-அஞ்சி
கல்நெடுங்குவடு-மலைச்சிகரம்
விளி-சாவு
மெய்வயம்-உடல் வலிமை
ஓதை-ஓசை
மிடல்-வலிமை
நுதல்-நெற்றி
மருங்கு-இடுப்பு
அசனி-இடி
மின்-மின்னல்
குறடு-அரண்மனை முற்றம்
பதடி-பதர்
பேழை-பெட்டி
சூளிகை-நிலாமுற்றம்
தெற்றி-திண்ணை
பிணங்கி-நெருங்கி
கோடி-வளைந்து
மகோததி-கடல்
சரதம்-வாய்மை
மூவெழுகால்-21 தலைமுறை
பெருமாள்-அரசர்
சாளரம்-பலகணி
பாங்கரும்-பக்கத்தில் உள்ள இடங்கள்
மறுகு-தெரு
சதகோடி-நூறுகோடி
உதியர்-சேரர்
பவித்ரம்-தூய்மை
அவனி-நாடு
கூடல்-காவிரிப்பூம்பட்டினம்
கழல்-திருவடி
பத்தி-ஊர்
குஞ்சி-தலைமயிர்
போதன்-பிரமன்
வாசவன்-இந்திரன்
அந்தி-மாலை
வேலை-கடல்
இருக்கு ஆரணம்-இருக்கு வேதம்
கஞ்சம்-தாமரை மலர்
அணங்கு-திருமகள்
பொழில்-சோலை
ஏமவெற்பு-மேருமலை
ஏமம்-பொன்
மலயாசலம்-பொதிகை மலை
பரிதி-சூரியன்
வண்ணம்-அழகு
முகில்-மேகம்
பொய்கை-நீர்நிலை
இருட்கடல்-நீலக்கடல்
களஞ்சியம்-தொகுப்பு
மனோபாவம்-உளப்பாங்கு
சகமக்கள்-உடன் வாழும் மக்கள்
ஒன்று-ஓரினம்
இலகுவது-விளங்குவது
சுவடி-நூல்
சுவடிச்சாலை-நூலகம்
சர்வகலாசாலை-பல்கலைக்கழகம்
வெய்யோன்-கதிரவன்
புரையோடி-உள்ளுக்குள் அரிக்கப்பட்டு
முதல்-வேர்
செல்-ஒருவகை கரையான்
சோங்கி-வாட்டமுற்று
பகட்டு வாழ்க்கை-ஆடம்பரமான வாழ்க்கை
செட்டு-சிக்கனம்
சிந்தை-உள்ளம்
குன்றி-குறைந்து
சாந்தி-தெருக்கள் கூடுமிடம்
சிறுமை-இழிவு
மூடத்தனம்-அறியாமை
மூலதனம்-முதலீடு
காமகோபன்-காமனைக் காய்ந்தவன்
ஆவணம்-அடிமையோலை
ஆனாத-குறைவு படாத
அரம்பையர்கள்-தேவமாதர்கள்
தீர்த்தன்-தூயன்
புராணன்-மிகப்பழையன்
ஏமம்-பாதுகாப்பு
ஆரம்-சக்கரக்கால்
கடிந்தேன்-துறந்தேன்
சாமரை-சாமரம் ஆகிய வெண்கவரி
புடைபுடை-இருமருங்கினும்
இயக்கர்-கந்தருவர்
இரட்ட-அசைக்க
சிங்கவாசனம்-அரியணை
ஆசனம்-இருக்கை
ஒளிமண்டிலம்-ஆலோகம்
நிழற்ற-ஒளிர
சந்திராதித்தம்-முத்துக்குடை
சகலபாசனம்-பொற்குடை
நித்தவிநோதம்-மணிக்குடை
கண்ணி-மரியன்னை
காசினி-உலகம்
வான்கதி-துறக்கம்
மருவ-அடைய
பொறி-ஒளிப்பிழம்பு
ஒளிப்பிழம்பு-வடிவினையுடையார்
நவியார்-நபிகள் நாயகம்
download

5 comments:

  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் வணக்கம்.
    நல்ல முயற்சி,பாராட்டுக்கள்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.