Tuesday, 25 November 2014

TNPSC TET PG TRB 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள இலக்ணக்குறிப்பு பாகம் 1

இலக்ணக்குறிப்பு

யாவையும்-முற்றும்மை
அலகிலா-ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
அகல்வார், இகழ்வார்-வினையாலணையும் பெயர்
நன்று-குறிப்பு வினைமுற்று
ஒரால், நீக்குதல்-தொழிற்பெயர்
ஒருத்தார்-வினையாலணையும் பெயர்
வையார்-வினைமுற்று
தற்பிறர்-ஏழாம் வேற்றுமைத் தொகை
நொந்து-வினையெச்சம்
விடல்-அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
உண்ணாது-வினையெச்சம்
கேட்டார், வாட்டான்-வினையாலணையும் பெயர்
மாநகர்-உரிச்சொற்றொடர்
நுந்தை-நும் தந்தை என்பதன் மரூஉ
கடந்து-வினையெச்சம்
செறிந்து, பாய்ந்து-வினையெச்சம்
நீளமுடி, நன்செய், புன்செய்-பண்புத்தொகை
தொல்லுலகு-பண்புத்தொகை
பதமலர்-உருவகம்
நாழி-ஆகுபெயர்
நிலத்தினும், வானினும், நீரினும்-உயர்வு சிறப்பும்மை
வயிற்றுக்கும்-இழிவு சிறப்பும்மை
கேட்க-வியங்கோள் வினைமுற்று
ஆன்ற-பெயரெச்சம்
எழுதி, புரந்து-வினையெச்சம்
பாடாத, பறவாத, சூடாத-எதிர்மறைப் பெயரெச்சம்
மலை-பெயர் சொல்
வாங்குவில்-வினைத்தொகை
குறையா-ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
மருப்பூசி, மார்போலை-உருவகம்
வெந்து, உலர்ந்து, எனா, கூர-வினையெச்சம்
கருமுகிலும் வெண்மதியும்-எண்ணும்மை
கடக்க, ஓடி, இளைத்து-வினையெச்சம்
அருந்தவர், நல்வினை-பண்புத்தொகை
செய்தவம், வீழ்கதிர்-வினைத்தொகை
பல்லுயிர், நல்வினை, தீவினை, பேரின்பம்-பண்புத்தொகை
கம்மத்தீ-உருவகம்
நோக்கா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
துவ்வா விடம்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
மேற்கொள்பவர்-வினையாலணையும் பெயர்
அன்று-குறிப்பு வினைமுற்று
கொல்லா, சொல்லா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆற்றுவார், மாற்றார்-வினையாலணையும் பெயர்
சான்றவர்-வினையாலணையும் பெயர்
தளிர்க்கை-உவமைத்தொகை
வழங்கி-வினையெச்சம்
அன்பும் ஆர்வமும் அடக்கமும்-எண்ணும்மை
உரைத்து, இரந்து-வினையெச்சம்
மகிழ்ச்சி-தொழிற்பெயர்
நேர்ந்து-வினையெச்சம்
தேரா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பற்றுவான், அஞ்சான்-வினையாலணையும் பெயர்
தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த-பெயரெச்சம்
வம்மை-பண்புத்தொகை
நாடுநகர்-உம்மைத்தொகை
மாடுமஆடும்-எண்ணும்மை
விடேன்-தன்மை ஒருமை வினைமுற்று
பரிந்து, தெரிந்து-வினையெச்சம்
கொளல்-அல் ஈற்றுத் தொழிற்பெயர்
உரவோர்-வினையாலணையும் பெயர்
நல்லொழுக்கம்-பண்புத்தொகை
அருவினை-பண்புத்தொகை
நூல்நோக்கி-இரண்டாம் வேற்றுமைத்தொகை
மடக்கொடி-அன்மொழித்தொகை
தடக்கை-உரிச்சொற்றொடர்
உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன்-வினைத்தொகை
வாழ்தல்-தொழிற்பெயர்
புகுந்து-வினையெச்சம்
வருக, தருக, கொடுக-வியங்கோள் வினைமுற்று
செந்தமிழ்-பண்புத்தொகை
போர்க்குகன்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்கதொகை
நீர்முகில்-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் 
உடன்தொக்கதொகை
வந்துஎய்தினான்-வினையெச்சம்
குறுகி, சேவிக்க-வினையெச்சம்
அழைத்தி-முன்னிலை ஒருமை வினைமுற்று
பணிந்து, வளைத்து, புதைத்து-வினையெச்சம்
தேனும் மீனும்-எண்ணும்மை
அமைந்த காதல்-பெயரெச்சம்
கார்குலாம்-ஆறாம் வேற்றுமைத்தொகை
தீராக் காதலன்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இனிய நண்ப-குறிப்புப் பெயரெச்சம்
தாமரை நயனம்-உவமைத்தொகை
நெடுநீர்-பண்புத்தொகை
நன்னுதல்-பண்புத்தொகை
சென்ற வட்டி-பெயரெச்சம்
புன்கண், மென்கண்-பண்புத்தொகை
பொன்னும் துகிரும் முத்தும்
பவளமும் மணியும்
-எண்ணும்மை
அருவிலை, நன்கலம்-பண்புத்தொகை
உறுவேனில்-உரிச்சொற்றொடர்
பந்தர்-கடைப்போலி
அணைந்த வாகீசர்-பெயரெச்சம்
அறிந்து, அடைந்து-வினையெச்சம்
வந்தவர்-வினையாலணையும் பெயர்
தீண்டிற்று-ஒன்றன்பால் வினைமுற்று
நோக்கி-வினையெச்சம்
பெருமையறிந்து-இரண்டாம் வேற்றுமைத் தொகை
தேசம்-இடவாகு பெயர்
மல்லலம் குருத்து-உரிச்சொற்றொடர்
அங்கணர்-அன்மொழித்தொகை
கேளா-செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்
அறனறிந்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
உற்றநோய்-பெயரெச்சம்
வன்மை-பண்புப்பெயர்
துணையார்-வினையாலணையும் பெயர்
அறனீனும்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தன்ஒன்னார்-ஆறாம் வேற்றுமைத்தொகை
குன்றேறி-ஏழாம் வேற்றுமைத்தொகை
திறனறிந்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தேசம்-இடவாகு பெயர்
மல்லலம் குருத்து-உரிச்சொற்றொடர்
அங்கணர்-அன்மொழித்தொகை
கேளா-செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்
அறனறிந்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
உற்றநோய்-பெயரெச்சம்
வன்மை-பண்புப்பெயர்
துணையார்-வினையாலணையும் பெயர்
அறனீனும்-இரண்டாம் வேற்றுமைத்தொகை
தன்ஒன்னார்-ஆறாம் வேற்றுமைத்தொகை
குன்றேறி-ஏழாம் வேற்றுமைத்தொகை
திறனறிந்து-– இரண்டாம் வேற்றுமைத்தொகை
உறாஅமை-செய்யுளிசை அளபெடை
ஒழுகுதல்-தொழிற்பெயர்
இல்லை-குறிப்பு வினைமுற்று
வந்த பொருள்-பெயரெச்சம்
வேந்தன் பொருள்-ஆறாம் வேற்றுமைத்தொகை
செய்க-வியங்கோள் வினைமுற்று
படர்ந்த தெண்டிரை-பெயரெச்சம்
நெடுநீர்-பண்புத்தொகை
வெள்ளெயிறு-பண்புத்தொகை
செவிபுக-ஏழாம் வேற்றுமைத்தொகை
வால்குழைத்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
சிரமுகம்-உம்மைத்தொகை
நன்று நன்று-அடுக்குத்தொடர்
தடக்கரி-உரிச்சொற்றொடர்
கால் மடித்து-இரண்டாம் வேற்றுமைத்தொகை
பொதிந்தமெய்-பெயரெச்சம்
பூதரப்புயம்-உவமைத்தொகை
நனிமனம்-உரிச்சொற்றொடர்
மலரடி-உவமைத்தொகை
ஒழுகுதல்-தொழிற்பெயர்
பொழிதருமணி-வினையெச்சம்
நிதிதருகவிகை-வினையெச்சம்
கோல்நோக்கி-இரண்டாம் வேற்றுமைத்தொகை
வாழும்குடி-பெயரெச்சம்
பழச்சுவை-ஆறாம் வேற்றுமைத் தொகை
உயிர்த்திரள்-ஆறாம் வேற்றுமைத் தொகை
தொன்மக்கள்-பண்புத்தொகை
உரைகாலம்-வினைத்தொகை
தாள் தலை-இரண்டாம் வேற்றுமைத்தொகை
பெருகும் இன்பம்-என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
அறுகுளம், அகல்வயல்-வினைத்தொகை
கடாஅ-இசைநிறை அளபெடை
அவிழாக் கோட்டுகிர்-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நீளிடை-வினைத்தொகை
சாஅய்-இசைநிறைஅளபெடை
பிரிந்தோர்-வினையாலணையும் பெயர்
மருள்-உவமவுருபு
நாட-அண்மைவிளி
வாழியர்-வியங்கோள் வினைமுற்று
அடங்காமை-எதிர்மறை தொழிற்பெயர்
அடங்கியான்-வினையாலணையும் பெயர்
உடைத்து-குறிப்பு வினைமுற்று
அடங்கல்-தொழிற்பெயர்
பொருட்டு-குறிப்பு வினைமுற்று
மற்றையான்-குறிப்பு வினையாலணையும் பெயர்
கடனறிகாட்சி-வினைத்தொகை
கேடு, கோள்-முதனிலை திரிந்த தொழிற்பெயர்
அருவினை-பண்புத்தொகை
அதனினூஉங்கு-இன்னிசை அளபெடை
பணிதல்-தொழிற்பெயர்
நன்று-பண்புப்பெயர்
தந்தபொருள்-பெயரெச்சம்
வாழ்வான்-வினையாலணையும் பெயர்
பெருந்தகை-பண்புத்தொகை
ஆதல்-தொழிற்பெயர்
ஒழுகல்-தொழிற்பெயர்
கருதுபவர்-வினையாலணையும் பெயர்
சுமக்க-வியங்கோள் வினைமுற்று
செல்வார்-வினையாலணையும் பெயர்
சாலமிகுந்து-உரிச்சொற்றொடர்
ஒடுக்கம்-தொழிற்பெயர்
ஒக்க-வியங்கோள் வினைமுற்று
அறியார்-எதிர்மறை வினையாலணையும் பெயர்
கொம்பர்-ஈற்றுப்போலி
வாழ்க்கை-தொழிற்பெயர்
பாவை-உவமை ஆகுபெயர்
கடிமிடறு-உரிச்சொற்றொடர்
எரிமலர்-உவமத்தொகை
விடுகணை-வினைத்தொகை
கழித்த வெள்-பெயரெச்சம்
தடங்கண்-உரிச்சொற்றொடர்
கமழ் ஓதி-அன்மொழித்தொகை
சிலைத் தொழில்-ஆறாம் வேற்றுமைத்தொகை
பவளச்செவ்வாய்-உவமைத்தொகை
செவ்வாய்-அன்மொழித்தொகை
திண்டேர்-பண்புத்தொகை
அண்ணா-உவமஉருபு
சுரந்து, முதிர்ந்து-வினையெச்சம்
காளை-உவம ஆகுபெயர்
மலைமுழை-ஏழாம் வேற்றுமைத்தொகை
அறிகிலார்-எதிர்மறை வினையாலணையும் பெயர்
மென்மலர்-பண்புத்தொகை
என்ன-உவமஉருபு
நினைத்தவர்-வினையாலணையும் பெயர்
வெருவி, கிழித்து-வினையெச்சம்
மதிமுகம்-உவமத்தொகை
வல்லுடல்-பண்புத்தொகை
மதி-உவம ஆகுபெயர்
வெவ்விடம்-பண்புத்தொகை
ஆகுக-வியங்கோள் வினைமுற்று
கனங்கணம்-அடுக்குத்தொடர்

110 comments:

  1. Replies
    1. எவன் ஒரு மனிதன் நாளை என்பதை கருத்தில் கொண்டு இன்றைய நாளை தவறவிடுகிறோனே அவன் உண்மையிலே நாளை என்பைதை வீனாக்குகிறான் இன்று உழைத்தால் தான் நாளை அறுவடை செய்ய முடியும் அதனால் எதிர்காலத்தை யோசித்து வீனாக்குவதை விட இன்றைய நாளை நமதாக்க உழைக்க வேண்டும்

      Delete
  2. குருகுல நண்பர்களுக்கு மாலை வணக்கம்

    ReplyDelete
  3. முருகனின் அவதாரம் எனக்கருதப்பட்டவர்

    -நாவுக்கரசர்
    -ஞானசம்பந்தர்
    -பரஞ்சோதியார்
    -கருவூர்தேவர்

    ReplyDelete
  4. நண்பர்களே இங்கு நான் கேட்கும் கேள்விகள் Group 4 ம் pgtrb கும் சேர்த்தே.

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே.....

    ReplyDelete
  6. நவசக்தி இதழின் ஆசிரியர்

    பாரதியார்
    -திரு.வி.க
    -மறைமலையடிகள்
    -கல்கி

    ReplyDelete
  7. ஈரிதழ் ஒலிகள்

    -த,ந
    -ப,ம
    -ட,ண
    -ச,ஞ

    ReplyDelete
  8. அகின் எழுதாத நூல்

    -சித்திரபாவை
    -கயல்விழி
    -அக்னிகோபம்
    -வெற்றித்திருநகர்

    ReplyDelete
  9. மிகப்பழைமையான தமிழெழுத்து

    -வட்டெழுத்து
    -கிரந்தம்
    -பிராமி
    தேவநாகிரி

    ReplyDelete
    Replies
    1. வட்டெழுத்து

      Delete
    2. இது எந்தப் புத்தகத்தில் இருந்து எடுத்தீர்கள்?. ஏனெனில் பிராமி என்பது சரி. பிராமி கி மு 2, வட்டெழுத்து கி பி 8

      Delete
  10. உருபன் என்பது எது

    ReplyDelete
    Replies
    1. ஒரு மொழியில் காணப்படும் பொருளைக் காட்டும் சின்னஞ்சிறு கூறுகள்.

      Ex...
      பகுபதஉருபு
      அசை

      Delete
    2. அசத்தல் மேம்

      Delete
  11. பயண இலக்கிய பெருவேந்தர்

    -ஏ.கே. செட்டியார்
    -சோமலே
    -மணியன்
    திரு.வி.க

    ReplyDelete
    Replies
    1. ஏ.கே செட்டியார்

      Delete
  12. நிகழ்கால இடைநிலை பற்றி முதலில் குறிப்பிட்ட நூல்

    -நன்னூல்
    -தொல்காப்பியம்
    -பரிபாடல்
    -நேமிநாதம்

    (Trb question)

    ReplyDelete
    Replies
    1. தொல்காப்பியம்

      Delete
    2. தவறு சசி

      விடை : பரிபாடல் (Trb ல் கேட்டது)

      Delete
  13. மால்டோ எங்கு பேசப்படும் மொழி

    ReplyDelete
    Replies
    1. வங்காளம் (ராஜ்மகால்)

      Delete
    2. ஒரிசா???

      Or
      சோடா நாகர்புரி

      Delete
  14. உடன்பாட்டு மெய்கள் எது

    ReplyDelete
  15. வடமொழியின் மொழி ஆராய்ச்சி நூல்

    -நிருக்தா
    -அத்வைதம்
    -வஷிஷ்டாத்வைதம்
    -பாணிணீயம்

    ReplyDelete
    Replies
    1. யஷ்கா நிருக்தா

      Delete
  16. யவணர்களைப்பற்றி குறிப்பிடும் தொகை நூல் எது

    ReplyDelete
    Replies
    1. தெரியல சசி

      புறநானூறா????

      Delete
    2. இந்த வினாவிற்கு எனக்கு விடை தெரியல மேம்
      உங்களுக்கு தெரியும் கேட்டேன்

      Delete
    3. ஆமாம் பாலா இப்பதான் ஞாபகம் வருது

      Delete
  17. மாலை வணக்கம் வளர் மேம்

    ReplyDelete
    Replies
    1. வந்துவிட்டாயா இந்தியன் உனக்காகத்தான் Waiting......

      Delete
    2. வந்துவிட்டேன்.என் levelku easya question kelunga.unga level ku vendam..deala?

      Delete
    3. Deal.......

      Question no 1. What is your name?

      -Indhiya thamilan
      -ரியாஷ்
      -அழகு மைனா
      -SHARUK
      -பொதுஅறிவு
      -கணேஷ்
      -அனைத்தும்

      Delete
    4. ரகசியம்....காக்கப்பட வேண்டும்

      Delete
    5. Oh.......ssssshhhhh ok.....ok......yaarkitayum sollala......


      Hey please ellaarum மறந்துடுங்கப்பா......

      நான் எதுவும் சொல்லல.....

      Delete
  18. அவையல் கிளவி என்பது

    ReplyDelete
    Replies
    1. இடக்கரடக்கல்

      Delete
    2. கரெக்ட் மேம்

      Delete
  19. அருவாநாடு என்பது

    -கன்னடநாடு
    -தமிழ்நாடு
    -மலையாளநாடு
    -ஆந்திரா

    ReplyDelete
    Replies
    1. தென்னாற்காடு தமிழ்நாடு

      Delete
  20. சிவல் என்பது என்ன பறவை

    ReplyDelete
  21. பெயரடையும் வினையடையும் சொல்லுக்கு முன்னர் மட்டும் வரும் மொழி எது

    ReplyDelete
  22. பட்டினத்தார் சார்ந்த சமயம்

    -வைணவம்
    -சைவம்
    -பௌத்தம்
    -எதுவுமில்லை

    ReplyDelete
  23. தமிழ்நாட்டின் முதல் பத்திரிக்கை

    -தமிழ் மேகசின்
    -தினவர்த்தமானி
    -மெட்ராஸ் கூரியர்
    -விவேகசிந்தாமணி

    ReplyDelete
    Replies
    1. மெட்ராஸ் கூரியர் (English)

      Delete
    2. தமிழ் மொழியிலேயே வெளி வந்த முதல் பத்திரிக்கை தமிழ் மேகசின் (1831)

      Delete
  24. நிலையாமையை உணரக்கூடிய துறை

    ReplyDelete
    Replies
    1. காஞ்சி திணை
      துறை பெருங்காஞ்சி

      Delete
  25. தேசபக்தன் பத்திரிக்கையின் ஆசிரியர்

    -பெரியார்
    -திரு.வி.க
    -சி.வை.தாமோதரம்
    -மணிவண்ணண்

    ReplyDelete
  26. கந்தழி என்பது

    ReplyDelete
    Replies
    1. உழிஞை துறை

      திருமால் சோ அரணை அழித்தது போல நம் உழிஞை அரசன் மதிலை கைப்பற்றுவான்.

      Delete
    2. கலக்கிடீங்க

      Delete
    3. இப்போ இதுலதான் notes எடுத்துகொண்டு இருக்கிறேன் சசி சார்.

      Delete
    4. ஓ.கே மேம்
      தொல்காப்பியர் காலம் 4 அல்லது 3ம் நூற்றாண்டா

      Delete
    5. 3 தான் எல்லாவற்றிலும் கொடுக்கப்பட்டுள்ளது சசி.

      Delete
  27. பொதுவியல் திணைக்குரிய துறைகள் எத்தனை

    ReplyDelete
    Replies
    1. 12 வெட்சி முதல் பெருந்திணை முடிய

      Delete
  28. சுதேசிமித்திரன் பத்திரிக்கை துவக்கப்பட்ட ஆண்டு

    ReplyDelete
    Replies
    1. வடை : 1882

      பாரதியார் பிறந்த வருடமும் இதேதான். So ஞாபகம் வைத்து கொள்வது எளிது

      Delete
    2. Ha....ha.....sorry விடை.

      Delete
  29. தொல்காப்பியர் கூறும் புறத்திணைகள் எத்தனை

    ReplyDelete
    Replies
    1. கலக்குங்கோ கலக்குங்கோ சரியான பதில்

      Delete
  30. குறிப்பு வினைமுற்றுகளுக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:

    பொன்னன் - பொருள்
    ஆரூரன் - இடம்
    ஆதிரையான் - காலம்
    கண்ணன் - சினை
    கரியன் - குணம்
    நடையன் - தொழில்
    இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

    ReplyDelete
  31. நன்று இலக்கண குறிப்பு தருக

    ReplyDelete
    Replies
    1. மென் தொடர் குற்றியலிகரம்

      Delete
    2. குறிப்பு வினைமுற்று

      Delete
    3. குறிப்பு வினைமுற்று:

      அவன் நல்லவன் - என்பதில் நல்லவன் நல்லவன் என்பது போல காலங்காட்டா வினைமுற்றுகள் உண்டு. அவை குறிப்பு வினைமுற்று எனப்படும். பெயர் அடியாகப் பிறந்து காலம் காட்டாத குறிப்பு வினைமுற்றுகள் கீழ்வருமாறு:- -

      எடுத்துக்காட்டு:-

      நீர்த்து, உடைத்து, நன்று, இல்லை, வேறு, இனிது, உண்டு, இன்று, மருகனை, உளன்.

      Delete
  32. வெட்சியின் இரு வகை

    ReplyDelete
  33. நண்பர்களே.....
    நண்பர்களின் அழைப்பு நீங்கள் தொடருங்கள்..

    ReplyDelete
  34. மலை இலக்கண குறிப்பு தருக

    ReplyDelete
  35. எவன் ஒரு மனிதன் நாளை என்பதை கருத்தில் கொண்டு இன்றைய நாளை தவறவிடுகிறோனே அவன் உண்மையிலே நாளை என்பைதை வீனாக்குகிறான் இன்று உழைத்தால் தான் நாளை அறுவடை செய்ய முடியும் அதனால் எதிர்காலத்தை யோசித்து வீனாக்குவதை விட இன்றைய நாளை நமதாக்க உழைக்க வேண்டும்

    ReplyDelete
  36. அரசு உதவி பெறும் பள்ளியில் காலி ப்பணியிடம்

    இடம் : மதுரை

    பாடம் : பட்டதாரி ஆங்கிலம் ()

    இனம் : SC- 1, BC-1, MBC -1

    CONTACT : 8144170981

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.