Wednesday, 19 November 2014

TNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...

இந்த பக்கத்தை download  செய்ய இந்த பக்கத்தின் கடைசி வரிக்கு செல்லவும்

தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள்
தொடர்ச்சி...
* மியூக்கரில் வெஜிடேட்டிவ் முறையிலும், பால் மற்றும் பாலிலா இனப்பெருக்க முறையிலும் இன்ப்பெருக்கம் நடைபெறுகிறது.
* மியூக்கரில் ஒரே மைசீலியத்தின் ஹைஃப்பாக்கள் இணைவதன் மூலம் ஒரு சைகோஸ்போர் தோற்றுவிக்கப்படுமானால் அந்த நிலைக்கு ஹோமா
தாலிசம் என்று பெயர். ஹோமோதாலிக் சிற்றினத்திற்கு எடுத்துக்காட்டு மியூக்கர் ஹீமாலிஸ்.
* மியூக்கரில் ஹெட்டிரோதாலிக் சிற்றினத்தில் ஒரு ஸ்போராஞ்சியத்தால் உருவாக்கப்படும் ஸ்போர்கள் அனைத்தும் + (பிளஸ்) தன்மை கொண்ட அல்லது -(மைனஸ்) தன்மை கொண்ட மைசீலியத்தைத் தோற்றுவிக்கும்.
* ஈஸ்டுகள், பழுப்புக் காளான்கள், பச்சைக் காளான்கள், இளஞ்சிவப்புக் காளான்கள், கிண்ணப் பூஞ்சைகள், உண்ணக்கூடிய மோரல்கள் ஆகியவை ஆஸ்கோ மைக்கோட்டினா வகையைச் சார்ந்தவை.
* ஆஸ்கோ மைசீட்டுக்ளுக்கே இரித்தான பண்பாக இப்பூஞ்சைகளில் ஆஸ்கோஸ்போர்கள் உருவாகின்றன. ஆஸ்கோஸ்போர்கள் ஆஸ்கஸ் எனப்படும் பை போன்ற அமைப்பில் காணப்படுகின்றன.
* ஆஸ்கஸ்கள் தொகுப்புக்களாகச் சேர்ந்து ஆஸ்கோ கார்ப் எனப்படும் கனி உறுப்பைத் தோற்றுவிக்கின்றன.
* ஆஸ்கோ கார்ப் மூன்று வகைப்படும் 1. கிளிஸ்டோதீசியம் 2. பெரிதீசியம் 3. அப்போதீசியம் ஆகியன.
* பூஞ்சைகளில் மிக்ப்பெரிய இனப்பெருக்க அமைப்புக்கள் அல்லது பெசிடியோ கார்ப் எனப்படும் கனியுறுப்புக்களை பெசிடியோ மைசீட்டுகள் தோற்றுவிக்கின்றன.
* காளான்கள், நாய்க்குடைகள், பஃப்பந்துகள், அடைப்புக் குறிப் பூஞ்சைகள் ஆகியவை பெசிடியோமைசீட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
* டியூட்ரோமைசீட்டுகள் பிரிவின் கீழ் மூன்று வகுப்புகள் உள்ளன. இவை முழுமையற்ற பூஞ்சைகள் என்று அழைக்கப்படுகின்றன.
* இப்பூஞ்சைகளில் பாலிலா இனப்பெருக்க நிலையே காணப்படுகிறது.

பூஞ்சைகளின் பொருளாதார முக்கியத்துவம்
* பெனிசிலியம் நொடேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து பெனிசிலின் என்ற மருந்து அலெக்சாண்டர் ஃபிளெம்மிங் என்பவரால் 1828ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
* உண்ணக்கூடிய அகாரிகஸ் பூஞ்சையின் சிற்றினங்களான அகாரிகஸ் பைஸ்போரஸ், அகாரிகஸ் ஆர்வென்சிஸ், வால்வேரியல்லா வால்வேசி, வால்வேரியல்லா டைஸ்போரா ஆகியவை உணவாகப் பயன்படுகின்றன.
* சாராயத் தொழிற்சாலையும், ரொட்டித் தொழிற்சாலையும் ஈஸ்டுகளையே சார்ந்துள்ளன.
* சர்க்கரைக் கரைசலை ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்சைடாகம் நொதிக்கச் செய்வது ஈஸ்டுகள் ஆகும்.
* ஈஸ்டு என்பதன் தாவரவியல் பெயர் சாக்ரோமைசிஸ் செரிவிசியே.
* மரபியல் ஆராய்ச்சிக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்த பூஞ்சை நியூரோஸ்போரா மற்றும் ஆஸ்பர்ஜில்லஸ் ஆகிய பூஞ்சைகளாகும்.

பூஞ்சாகளின் தீய விளைவுகள்
* LSD (லைசர்ஜிக் அமிலம் டை எதில்அமைடு) எர்காட் எனப்படும் வேதிப்பொருள், கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்ற பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது. இது ஒருவித பகற்கனவைத் தூண்டுகிறது.
* உருழைக் கிழங்கின் மென் அழுகல் நோயை ஃபைட்டோஃதோரா இன்ஃபெஸ்டன்ஸ் என்ற பூஞ்சை உருவாக்குகிறது. தாவர நோயியல் என்ற ஒரு புது அறிவியல் பிரிவு ஆரம்பமாவதற்கு இந்நோயே காரணம்.
* பருத்தியின் வாடல் நோய்க்குக் காரணமான பூஞ்சை ஃபயூசேரியம் ஆக்ஸிஸ்போரம்.
* கடலையின் இலைப்புள்ளி (Tikka disease of Ground nut) நோய்க்குக் காரணமான பூஞ்சை செர்க்கோஸ் போரா பெர்சோனெட்டா.
* கரும்பின் சிகப்பு அழுகல் நோய்க்குக் காரணமான பூஞ்சை கொலிட்டோடிரைக்கம்ஃபல்கேட்டம்.
* கேன்டிடியாசிஸ் எனப்படும் நோய்க்குக் காரணமான பூஞ்சை கேன்டிடா ஆல்பிகன்ஸ்.
* உருளைப்புழு நோய் தாக்கப்பட்ட மனிதனுக்கு தோல் நோயை உண்டாக்கும் பூஞ்சைகள் எப்பிடெர்மோ ஃபைட்டான் மற்றும் டிரைக்கோ ஃபைட்டான் ஆகும்.

ஆல்காக்கள்
* ஆல்காக்களைப் பற்றிய அறிவியல் துறைக்கு ஆல்காலஜி (Algology)  அல்லது ஃபைக்காலாஜி (Phycology) என்று பெயர்.
* பெரும்பான்மையான ஆல்காக்கள் நீரில் வாழ்பவை. மிகச் சில ஆல்காக்களே நிலத்தில் வாழ்பவை.
* தன்னிச்சையான நீரில் மிதக்கும் அல்லது தனித்து நீரில் நீந்தும் நுண்ணிய ஆல்காக்கள் ஃபைட்டோ பிளாங்டன்கள் எனப்படும்.
* கடல்கள், ஏரிகளின் ஆழமற்ற கரையோரப் பகுதிகளில் அடியில் ஒட்டி வாழும் ஆல்காக்கள் பெந்திக் எனப்படுகின்றன.
* சில ஆல்காக்கள் மற்ற ஆல்காக்கள் அல்லது ஏனைய தாவரங்கள் மீது தொற்று தாவரமாக வாழ்கின்றன. இவை எபிஃபைட்டுகள் எனப்படும்.
* சில ஆல்காக்கள் லித்தோஃபைட்டுகள் அல்லது பாறை வாழ் ஆல்காக்களாகும்.
* தற்போது சயனோ பாக்டீரியங்கள் என அழைக்கப்படும் நீலப்பசும் பாசிகளைத் தவிர அனைத்துப் பாசிகளும் யூகேரியாட்டிக் செல் அமைப்பை உடையவை.
* ஆல்காக்களில் மூன்று வகையான ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படுகின்றன. பச்சையம், கரோட்டினாய்டுகள், புலிபுரதங்கள்.
* பச்சையம் A அனைத்து வகை ஆல்காக்கலிலும் காணப்படும்.
* கரோட்டினாய்டுகளில் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற நிறமிகள் காணப்படுகின்றன.
* நீரில் கரையக்கூடிய பிலிபுரதங்களான ஃபைக்கோ எரித்ரின் மற்றும் ஃபைக்கோசயனின் நிறமிகள் பொதுவாக ரோடோஃபைசி வகுப்பிலும், சயனோஃபைசி வகுப்பிலும் முறையே காணப்படுகின்றன. இந்த நிறமிகள் சூரிய ஒளியின் சிவப்பு மற்றும் நீல ஒளி அலைகளை ஈர்த்து ஒளிச்சேர்க்கைக்கு உதவிபுரிகின்றன.
* ஆல்காக்கள் தற்சார்பு ஊட்ட முறையைச் சார்ந்தவை.
* குளோரோஃபைசி வகுப்பில் சேமிப்புப் பொருள் ஸ்டார்ச் ஆகும்.
* ரோடோஃபைசி வகுப்பில் சேமிப்புப் பொருள் ஃபளோரிடி.ன் ஆகும்.
* ஃபேயோஃபைசி வகுப்பில் லேமினேரியன் ஸ்டார்ச்சும், யூக்ளினோ ஃபைசி வகுப்பில் பாராமைலானும் சேமிப்புப் பொருட்களாக உள்ளன.
* பெரும்பான்மையான ஆல்கா வகுப்புக்களில் கசையிழைகள் அல்லது சீலியாக்கள் அவற்றின் இடப்பெயர்ச்சிக்குக் காரணமாகின்றன.
* ஒவ்வொரு கசையிழையின் மையத்திலும் 2 நுண் குழல்களும், அதனைச் சுற்றி 9 உருளை வடிவ இரட்டை நுண்குழல்களும் உள்ளன. இது 9+2 வகை அமைப்பு எனப்படும்.
* ஆல்காக்களில் 3 வகையான இனப்பெருக்க முறைகள் காணப்படுகின்றன. அவை: 1.உடல் இனப்பெருக்கம் 2. பாலில இனப்பெருக்கம் 3. பாலினப் பெருக்கம் ஆகியன.
* துண்டாதல் முறை அல்லது வேற்றிடக் கிளைகள் தோன்றுதல் முறையில் உடல இனைப்பெருக்கம் நடைபெறுகிறது.
* பல வகையான ஸ்போர்களின் மூலம் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகிறது. சூஸ்போர்கள், ஏபிளனோஸ்போர்கள் மற்றும் ஏகைனேட்டுகள் ஆகியன சில வகையான பாலிலா ஸ்போர்களாகும்.
* பாலினப்பெருக்கத்தில் இரண்டு கேமிட்டுகள் இணைகின்றன. பாலினப்பெருக்கம் மூன்று வகையில் நடைபெறுகிறது. 1. ஐசோகேமி 2. அனைசோகேமி 3. ஊகேமி
* புற அமைப்பு, செயல் தன்மை ஆகிய இரண்டிலும் ஒத்த ஒரே மாதிரியான இரு கேமிட்டுகள் இணைகின்றன. இது ஐசோகேமி எனப்படும். .கா. ஸ்பைரோகைரா மற்றும் கிளாமிடோமோனஸ்.
* அனைசோகேமி வகையில் இணையும் கேமிட்டுகள் வெவ்வேறான தோற்றம் உடையவை. ஆனால் செயல் தன்மையில் ஒத்தவை.
* ஊகேமி வகையில் இணையும் கேமிட்டுகள் தோற்றத்திலும், செயல்பாட்டுத் தன்மையிலும் வேறுபடுகின்றன. ஆண் கேமிட்டு ஆந்த்ரோசுவாய்டுகள் என்றும், பெண் கேமிட்டு அண்டம் என்றும் அழைக்கப்படுகின்றன.
* F.E.ஃபிரிட்ஜ் தனது ஆல்காக்களின் அமைப்பு மற்றும் இனப்பெருக்கம் என்னும் நூலில் ஆல்காக்களை 11 வகுப்புக்களாக, நிறமிகளின் சேர்க்கை, சேமிப்புப் பொருட்கள், கசையிழைகளின் அமைவு, தாலஸ் அணைப்பு, இனப்பெருக்கம் ஆகிய பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்.
* நன்னீர் கொண்ட குளங்கள், குட்டைகள், ஏரிகள் முதலானவற்றில் மிக அதிக அளவில் பச்சை ஆல்காவான ல்பைரோகைரா மிதந்து வாழ்கிறது. இதற்கு நீர்ப்பட்டு என்று பெயர் வழங்கப்படுகிறது.
* ஸ்பைரோகைரா கொலம்பியானா என்பது தென்னிந்தியாவில் காணப்படுமந் ஸ்பைரோகைரா சிற்றினமாகும்.
* மைசூரில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் ஸ்பைரோகைரா ஜோகன்சிஸ் என்ற சிற்றினம் காணப்படுகிறது.
* ஸ்பைரோகைராவில் காணப்படும் பசுங்கணிகங்கள் வளைய வடிவில் அல்லது சுருள் வடிவில், நாடா போன்று பட்டையாக காணப்படுகின்றன. பசுங்கணிகங்களின் எண்ணிக்கை 1 முதல் 14 ஆகும்.
* ஸ்பைரோகைராவெஜிடேட்டிவ் இனப்பெருக்கம், பார்த்தனோஸ்போர்கள், ஏகைனேட்டுகள், ஏபிளனோஸ் போர்கள், பாலினப்பெருக்கம் ஆகிய வழிகளில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
* ஸ்பைரோகைராவில் பாலினப் பெருக்கம் ஏபிளனோ கேமிட்டுகள் எனப்படும் சிறப்பு கேமிட்டுகளின் இணைவினால் ஏற்படுகிறது. இதற்கு ஏபிளனோகேமி என்று பெயர்.
* பக்க இணைவு, ஏணி இனைவு ஆகிய இரு இணைவு மூலம் ஏபிளனோகேமி நடைபெறுகிறது.

ஆல்காக்களின் பொருளாதார முக்கியத்துவம்
* சமிபத்தீய கணக்கெடுப்பின்படி பாதி ஒளிச்சேர்க்கை கடலில் இருந்தே உண்டாகிறது. இதற்குக் காரணம் கடலில் வாழக்கூடிய ஒரே தாவர இனமான ஆல்காக்களாகும்.
* போர்ஃபைராவின் சிற்றினங்கள் ஜப்பான், இங்கிலாந்து மற்றும் கலிஃபோர்னியா நாடுகளில் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
* அல்வா, லாமினேரியா, சர்காசம் மற்றும் குளோரெல்லா போன்ற ஆல்காக்கள் பல நாடுகளில் உணவாக உண்ணப்படுகின்றன.
* கடல்பாசி எனப்படும் லாமினேரியா, ஃபியூக்கஸ் மற்றும் ஆஸ்கோஃபில்லம் ஆகிய ஆல்காக்கள் வீட்டு விலங்குகளுக்கும், கால்நடைகளுக்கும் உணவாக அளிக்கப்படுகின்றன.
* ஆஸில்லட்டோரியா, அனாபினா, நாஸ்டாக் மற்றும் அலோசிரா ஆகிய நீலப்பசும்பாசிகள் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண் வளத்தை அதிகரிக்கின்றன.
* பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகளை ஆய்வுச் சாலையில் வளர்க்கும்போது அகார்-அகார் வளர் தளமாகப் பயன்படுகிறது. ஜெலிடியம் மற்றும் கிராஸிலேரியா ஆகிய சிவப்பு ஆல்காக்களிலிருந்து அகார் அகார் தயாரிக்கப்படுகிறது.
* ஆல்ஜினிக் அமிலம் எனப்படும் கூழ்மம் பழுப்பு ஆல்காக்களிலிருந்து பெறப்படுகிறது. ஐஸ்கிரீம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பற்பசைகளில் நிலைப்படுத்தும் பொருளாக ஆல்ஜின் பயன்படுகிறது.
* கெல்ப் என்று அழைக்கப்படும் பழுப்பு ஆல்காக்களிலிருந்து அயோடின் பெறப்படுகிறது.
* தீயால் தாக்கப்படாத பொருட்களை உண்டாக்குவதிலும், உறிஞ்சும் திறன் நிரம்பிய டையேட்டமைட்டு என்னும் ஆல்கா பயன்படுகிறது. மேலும் இராசாயனப் பொருட்களைப் பாதுகாப்பான முறையில் அடுக்குவதிலும் டையேட்டம் ஆல்கா பயன்படுகிறது.
* டையேட்டம் வகை ஆல்காக்களின் செல் சுவர்களில் சிலிக்கா காணப்படுகிறது.
* விண்வெளிப் பயணங்களின்போது கார்பன் டை ஆக்சைடு மற்றும் உடலிலிருந்து வெளியாகும் கனிவுப் பொருட்களை வெளியேற்றவும், குளோரெல்லா பைரினாய்டோசா என்ற ஆல்கா பயன்படுத்தப்படுகிறது.
* ஒற்றைச் செல் புரதம் தயாரிக்க குளோரெல்லா மற்றும் ஸ்பைருலினா போன்ற ஒரு சில ஆல்காக்கள் பயன்படுகின்றன.
* குளோரெல்லின் என்ற நுண்ணுயிர்க்கொல்லி குளோரெல்லாவிலிருந்து எடுக்கப்படுகிறது.
* சில சமயங்களில் ஆல்காக்கள் ப்ளூம்கள் எனப்படும் அடர்ந்த அமைப்பைத் தோற்றுவிக்கினறன.
* நீர்நிலைகளில் ஏற்படும் ஊட்டச் சத்துக்களின் (நைட்ரஜன், பாஸ்பரஸ்) சேர்க்கைக்கு யூட்ரோஃபி கேசன் என்று பெயர்.No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.