Saturday, 15 November 2014

TNPSC TET குரூப் 4 தாவரவியல் download

இந்த பக்கத்தை download  செய்ய இந்த பக்கத்தின் கடைசி வரிக்கு செல்லுங்கள்
வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இன்றைய இளையதலைமுறையினர்களுக்கு வழிகாட்டும் விதமாக அரசு தேர்வுக்கான அரங்கம் தொடரினை பாடங்கள் வாரியாக தொடர்ந்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம். இதனை அரசு தேர்வுக்காக மட்டுமின்றி தகவல்கள் அறிந்துகொள்ளும் நோக்கத்துடனும் படித்து பயனடையுங்கள். வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

தாவரவியல்
* தாவரவியல் என்பது தாவர வாழ்க்கையைப் பற்றி கூறும் அறிவியலாகும்.
* தாவரங்களின் அமைப்பு, உருவம், வாழ்க்கை, உணவு முறை, வளர்ச்சி, இனப்பெருக்கம் போன்றவை இதனுள் அடங்குகின்றன.
* பல்லுயிர் தன்மை மற்றும் தாவரங்களின் வகைப்பாட்டியல் உயிரினங்களை வகைப்படுத்தும் எண்ணத்தை முதன் முதலில் ஏற்படுத்தியவர் அரிஸ்டாட்டில் ஆவார்.
* சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி இந்த பூமியில் 10 முதல் 40 மில்லியனுக்கு மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் 1.7 மில்லியன் உயிரினங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 7,50,000 பூச்சிகளும், 2,50,000 பூக்கும் தாவரங்களும், 47,000 முதுகெலும்பு பிராணிகளும் அடங்கும்.
* பல்வேறு உயிரினங்களுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளை பல்லுயிர்த்தன்மை (Bio-diversity) என்கிறோம்.
* உயினங்களை இனம் கண்டறிதல், பெயரிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய உயிரியலின் பிரிவு வகைப்பாட்டியல் (Taxonomy) எனப்படும்.
Systematics என்ற இந்த சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ் -நூல் Systema Naturae.
* ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட இந்திய மருத்துவர் சாரக்(சரகர்) சில தாவரங்களையும், விலங்குகளையும் இனம் கண்டறிந்து விவரித்தார்.
* மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த சில உயிரினங்களைப் பட்டியலிட்டவர் மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்ட ஹிப்போகிரேட்டஸ் ஆவார்.
* ப்ளைனி தி எல்டர் (Pliny the Elder) என்பவர் தன்னுடைய ஹிஸ்டாரியா நாச்சுராலிஸ் (Historia Naturalys) என்ற நூலில் முதன் முறையாக செயற்கை வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார்.
* சிற்றினம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஜான் ரே.
* இரு சொல் பெயரிடும் முறையை முதன் முதலில் உருவாக்கியவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி கரோலஸ் லின்னேயஸ்.
* வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் கரோலஸ் லின்னேயஸ்.
* அகஸ்டின் பரமாஸேடே கண்டோல் என்ற சுவிட்சர்லாந்து பிரெஞ்சு தாவரவியல் நிபுணர் வகைப்பாட்டியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.
* கரோலஸ் லின்னேயஸ் எழுதிய ஸ்பீசிஸ் பிளேண்ட்டேரம் என்ற நூலில் 5900 தாவர சிற்றினங்களையும், சிஸ்டமே நேச்சுரே என்ற நூலில் 4200 விலங்கு சிற்றினங்களையும் விவரித்துள்ளார்.
* வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினம் (Species)  ஆகும்.
* ஒரு வகைப்பாட்டில் காணப்படும் 7 முக்கிய குடும்பங்களாவன: 1. உலகம் அல்லது பேரரசு 2. ஃபைலம் அல்லது பிரிவு 3. வகுப்பு 4. துறை 5. குடும்பம் 6. பேரினம் 7.சிற்றினம் ஆகியன.
* ஒரு குழுமத்தின் பரிணாம வரலாறு ஃபைலோஜெனி எனப்படும்.
* இரண்டுலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்ப படுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ் ஆவார். 1. தாவர உலகம் 2. விலங்குலகம் ஆகியன.
* ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் ஆர்.எச்.விட்டேக்கர்.
* விட்டேக்கரின் ஐந்து உலகங்களாவன 1.மொனிரா 2. புரோட்டிஸ்டா 3. பூஞ்சைகள் 4. தாவரங்கள் 5. விலங்குகள் ஆகியன.
* மொனிரா (Monera) என்பதில் அனைத்து புரோகேரியாட் உயிரினங்களும் அடங்கும். மேம்பாடு அடையாத உட்கருவைக் கொண்டிருக்கும் உயிரினங்களே புரோகேரியாட் ஆகும்.
* புரோட்டீஸ்டுகள் (Protists) உலகத்தில் ஒரு செல்லால் ஆன நீர் வாழ் யூகேரியாட்டுகள் அடங்கும். மேம்பாடு அடைந்த உட்கரு சவ்வினால் சூழப்பட்ட உட்கருவைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் யூகேரியாட் ஆகும்.
* பூஞ்சைகள் (Fungi) உலகத்தில் மோல்டுகள், மஷ்ரூம்கள், நாய்க்குடைகள், நிலக்குடைகள், பஃப் பந்துகள் ஆகியவை அடங்கும்.
* தாவர உலகத்தில் மிகப்பெரிய பிரிவுகளான ஆல்காக்கள், பிரையோ ஃபைட்டுகள், டெரிடோஃபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் ஆகியவை அடங்கும்.
* பல செல்களாலான யூகேரி்யாட் உயிரினங்கள் விலங்குலகத்தில் அடங்கும்.
* 1990-ஆம் ஆண்டு இவோஸ், ஒகாண்ட்லர் மற்றும் எம்வீலிஸ் என்ற மூலக்கூறு அறிவியல் அறிஞர்கள் உயிரினங்களை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரித்தனர் அவை: 1. யூகேரியா 2. பாக்டீரியங்கள் 3. ஆர்க்கியா
* ஆர்க்கியா என்பது அதிக கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர் வாழும் பாக்டீரியங்கள் ஆக்சிஜனற்ற நிலை, 80 டிகிரி செல்சியஸ் போன்ற மிக அதிக வெப்பநிலை, அதிக உப்புச் செறிவு, அமிலத்தன்மை வாய்ந்த மண் மோன்றவற்றில் இவ்வகை பாக்டீரியங்கள் உயிர் வாழ்கின்றன.
* தாவரங்களைப் பற்றிப் படிப்பது ஃப்ளோரா (தாவரவியல்) எனப்படும். தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தியோபிராஸ்டல் ஆவார்.
* தாவர உலகத்தைப் பொதுவாக இரண்டாகப் பிரிப்பர். அவை: 1. பூவாத் தாவரம் (ஃபெனரோகேம்ஸ்) 2. பூக்கும் தாவரம் (கிரிப்டோகேம்ஸ்)
* பூவாத் தாவரத்தை 1. தாலோபைட்டா (பாக்டீரியா, பூஞ்சை, ஆல்கா) 2. பிரையோபைட்டா (ரிக்சியா, மார்கன்ஷியா 3. டெரிடோ பைட்டா (பெரணி வகைகள்) என மூன்றாகப் பிரிக்கலாம்.
* பூக்கும் தாவரத்தையும் இரண்டாகப் பிரிக்கலாம் அவை: 1. ஜிம்னோஸ்பெர்ம் (சைகஸ், பைனஸ்) 2. ஆஞ்சியோஸ் பெர்ம்
ஆஞ்சியோஸ்பெர்ம் பிரிவை 1. ஒருவித்திலைத் தாவரம் 2. இரு வித்திலைத் தாவரம் என்று மேலும் பகுக்கலாம்
வைரஸ்கள்
* உயிருள்ளவற்றின் பண்புகளையும், உயிரற்றவற்றின் பண்புகளையும் பெற்றுள்ளவை வைரஸ்கள் ஆகும்.
* மிக நுண்ணிய எலக்ட்ரான் நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய, நோயை உருவாக்கும், செல்லுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று வைரஸ் வரையறுக்கப்படுகிறது.
* வைரசை முதன்முதலில் கண்டறிந்தவர் ரஷ்ய அறிவியலறிஞர் டிமிட்ரி ஐவனோஸ்கி ஆவார்.
* புகையிலையில் பல்வண்ண இலை நோயினால் தாக்கப்பட்ட இலையின் சாற்றினை நோயில்லாத இலையில் தெளித்தாலே அது நோய்வாய்ப்பட்டது என்பதனை நிரூபித்துக் காட்டியவர் மேயர் ஆவார்.
* விரியான் (Virion) என்பது விஷம் என்று பொருள்படும்.
* வைரஸ்களைப் படிக வடிவில் பிரித்தெடுத்தவர் W.M .ஸ்டான்லி ஆவார்.
* வைரஸ்களின் உயிர் பண்புகளில் ஒம்புயிர் தாவர செல் அல்லது விலங்கு செல்லினுள் மட்டுமே பெருக்கம் அடையும்.
* நோயை உருவாக்கும் திறன் வைரஸ்களின் உயிருள்ள தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
* வைரஸ் புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தை உடையவை. வைரஸ் சாதாரண செல் அமைப்பைக் கொண்டிருப்பதில்லை.
* வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான அமைப்பை வரைஸ் பெற்றிப்பதில்லை.
* கனசதுர வடிவ வைரசுக்கு எடுத்துக்காட்டு அடினோ வைரஸ்கள், எச்..வி.ஆகியன.
* சுருள் வடிவ வைரசுக்கு எடுத்துக்காட்டு புகையிலை மொசைக் வைரஸ், இன்புளுயென்சா வைரஸ் ஆகியன.
* சிக்கலான அல்லது அசாதாரண வடிவமுடைய வைரசுக்கு எடுத்துக்காட்டு பாக்டீரியோஃபேஜ், பாக்ஸ் வைரஸ் ஆகியன.
* வைரஸ்களின் இரு முக்கிய பாகங்கள் 1.கேப்சிட் என்னும் புரத உறை 2. நியூக்ளிக் அமிலம் ஆகியன. டி.என்.., ஆர்.என்.. நியூக்ளிக் அமிலங்களில் ஏதேனும் ஒன்று மட்டுமே வைரசில் காணப்படும்.
* கேப்சிட் எனப்படும் புரத உறை கேப்சோமியர்கள் எனப்படும் ஒரே மாதிரியான சிறிய அலகுகளால் ஆனவை.
* வைரசின் தொற்றுத் தன்மைக்கு காரணம் நியூக்ளிக் அமிலம். ஒம்புயிர் திட்டவட்டத் தன்மைக்கு வைரசின் புரத உறை காரணமாகிறது.
* ஒம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத தொற்றுத் தன்மை வாய்ந்த ஒரு முழுமையான வைரசிற்கு வீரியான் (Virion) என்று பெயர்.
* புரத உறையற்ற வட்ட வடிவமான ஒரிலை ஆர்.என்..வே வீராய்டுகள் (Viriods)  என்று அழைக்கப்படுகிறது.
* பிரியான்கள் என்பவை நோயை உண்டாக்கவல்ல புரதத் துகள்களாகும்.
* வீராய்டுகளால் உருவாகும் நோய் சிட்ரஸ் எக்சோ கார்ட்டிஸ் ஆகும்.
* ஃபிரியான்களால் உருவாகும் நோய் க்ருயிட்ஸ்ஃபெல்ட் ஜேகப் நோய், ஸ்பாஞ்சிபார்ம் என்சிஃபலோபதி ஆகியன.
வைரஸ்களின் வகைப்பாடு
* ஒம்புயிரின் அடிப்படையில் வைரஸ்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1. தாவர வைரஸ்கள் 2. விலங்கு வைரஸ்கள் 3. பூஞ்சைகளின் வைரஸ்கள் 4. பாக்டீரியாவின் வைரஸ்கள்
* தாவர வைரஸ்களுக்கு எடுத்துக்காட்டு புகையிலை, வெள்ளரி மற்றும் காலிஃபிளவரின் பல்வண்ண இலைநோயை உருவாக்கும் வைரஸ்கள், வாழையின் உச்சிக்கொத்து நோய், தக்காளியின் புள்ளி அழுகல் நோய் போன்றவற்றை உருவாக்கும் வைர்ஸக்ளும் தாவர வைரஸ்களாகும்.
* காலிஃபிளவர் மொசைக் வைரஸ் தவிர அனைத்து தாவர வைரஸ்களும் ஆர்.என்..வை மரபுப் பொருளாகக் கொண்டிருக்கும்.
* விலங்குகளைக் தாக்கி நோயை உண்டாக்கும் வைரஸ்கள் விலங்கு வைரஸ்கள் ஆகும். சார்ஸ் (கொரோனோ வைரஸ்), எய்ட்ஸ் (ரெட்ரோ வைரஸ்), வெறி நாய்க்கடி (ரேபிஸ் வைரஸ் அல்லது லிஸ்ஸா வைரஸ்), பொன்னுக்கு வீங்கி (பாராமிக்சோ வைரஸ்), மஞ்சள் காமாலை (ஹெபடைட்டிஸ் வைரஸ்), டெங்கு காய்ச்சல் (ஃபிளேவி வைரஸ்), போலியோ (போலியோ வைரஸ்) சிக்கன் பக்ஸ் (Chicken Pox) சின்னம்மை (வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ்) ஆகியன விலங்கு வைரஸ்கள் ஆகும்.
* பூஞ்சைகளுக்கு நோய் உண்டாக்கும் மைக்கோ வைரஸ்கள் எனப்படும். நீலப்பசும்பாசிகளைத் தாக்கி நோய் உண்டாக்கும் வைரஸ்கள் சயனோ ஃபேஜ்கள் எனப்படும்.
* பாக்டீரியங்களைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பாக்டீரியோஃபேஜ்கள் எனப்படும்.
* பாக்டீரியோஃபேஜ் இரு வகையான வாழ்க்கைச் சுழற்சியை உடையது. 1. லைட்டிக் குழற்சி 2. லைசோஜெனிக் சுழற்சி.
* லைட்டிக் சுழற்சி என்பது பாக்டீரியோஃபேஜ்கள் செல்லுக்கு உள்ளே பெருக்கமடைவதால் ஒம்புயிர் பாக்டீரிய செல் வெடித்து பாக்டீரியா அழிகிறது.
* லைசோஜெனிக் சுழற்சியில் பாக்டீரியோஃபேஜ் ஒம்புயிர் செல்லின் குரோமோசோமின் ஒரு பகுதிபோலவே செயல்பட்டு பெருக்கமடைகிறது.
* புரோஃபேஜை தன் ஜீனோமில் கொண்டிருக்கும் பாக்டீரியா செல் லைசோஜெனிக் பாக்டீரியம் என அழைக்கப்படும். .கா. டிப்தீரியா பேசில்லஸ்.
* மனிதனில் புதிதாகத் தோன்றும் வைரஸ் நோய்கள் எபோலே வைரஸ், எச்..வி., டெங்கு, ஹெமராஜிக் ஜூரம், லஸ்ஸா ஜூரம், ரிஃப்ட் பள்ளத்தாக்கு ஜூரம், சார்ஸ், எயிட்ஸ் ஆகியன.
எயிட்ஸ் (AIDS)
* எயிட்ஸ் என்பதன் விரிவாக்கம் Acquired Immuno Deficiency Syndrome ஆகும்.
* எயிட்சை உருவாக்கும் வைரஸ் எச்ஐவி வைரஸ் (HIV - Human Immuno Deficiency Virus) எனப்படும்.
* எச்..வி. வைரஸ்கள் ரெட்ரோ வைரஸ்கள் எனப்படும் ஒரு வரைஸ் பிரவைச் சார்ந்தவை.
* இவ்வைரஸ்கள் உதவும் செல்கள் (T Helper Cells) என்று அழைக்கப்படும் T4 லிம்ஃபோ சைட்டுக்களை தாக்கி மனித உடலின் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன.
* எயிட்சைக் குணப்படுத்த மருந்து ஏதும் இல்லை.
* அசிட்டோ தைமிட்டின் போன்ற மருந்தினால் எயிட்ஸ் நோயால் தாக்கப்பட்டவர்களின் வாழ்நாளை ஒரு சில மாதங்கள் அதிகரிக்க மட்டுமே பயன்படுகின்றன. முழுமையாக கட்டுப்படுத்த இயலாது.
* புற்றுநோயை உருவாக்கும் வைரஸ்கள் ஆனகோஜெனிக் வைரஸ் (Oncogenic Virus) எனப்படும். .கா. சைமன் வைரஸ் (SV-40), ரெட்ரோ வைரஸ்கள் எனப்படும் ஆர்.என்.. வைரஸ்கள்.
* இரத்த மாற்று, மாற்றும் திசு, உறுப்பு ஆகியவற்றை நோய் வாய்ப்பட்டவர்களிடமிருவந்து தானமாகப் பெறுதல், கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள், சிரிஞ்சுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் மூலமாக எயிட்ஸ் பரவும்.
சார்ஸ் (SARS)
* சார்ஸ் என்பதன் விரிவாக்கம் (Servere Acute Respiratory Syndrome) ஆகும். சார்ஸ் நோய் கோரோனா வைரஸ்கள் எனப்படும் உறையுள்ள வைரஸ்களால் உண்டாகிறது. இந்த வைரசின் மரபுப் பொருள் ஒற்றை இழையால் ஆன ஆர்.என்.. ஆகும்.
* வைரஸ் தாக்குதலுக்கு மனி்த உடலில் தோன்றும் முதல் எதிர்ப்புப் பொருள் இன்டர்ஃபெரான்கள் ஆகும். இது சைட்டோகைனி்ன் வகையைச் சார்ந்த புரதங்கள் ஆகும்.
பாக்டீரியங்கள்:
* பாக்டீரியம் என்பது "பாக்டீரியான்" என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்ததாகும். அதன் பொருள் " சிறு குச்சி " என்பதாகும்.
* பாக்டீரியங்கள் அளவில் மிக நுண்ணியவை ஆகும்.
* பாக்டீரியாவை நுண் நோக்கியின் (microscope ) மூலமே காணலாம். இவைதான் பல நோய்கள் உருவாக காரணமாய் உள்ளன.
* பால் புளிப்பதற்கும், நம் உடலின் மீது வியர்வை நாற்றம் அடிப்பதற்கும், நோய்கள் பரவுவுவது உள்ளிட்ட பலவற்றிக்கும் காரணம் இந்த பாக்டீரியங்கள் தான்.
* அதே சமையத்தில் இவை இயற்கைக்கு அளிக்கும் முக்கிய பங்கையும் நாம் மறந்து விட கூடாது. இவைதான் இறந்து போன தாவரங்கள், மிருகங்கள் மற்றும் பல வித கரிம கழிவு பொருட்களை அழுகச் செய்யவதால் இவற்றை இயற்கை துப்புரவாளர்கள் எனலாம்.
* பாக்டீரியங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் ஆண்டன்வான் லியுவென்காக்
* நோய்கள் பற்றிய ஜெர்ம் கொள்கையை வெலியிட்டவர் லூயி பாஸ்டர்.
* விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு நுண்ணுயிரிகள் தான் காரணம் எனக் கீறி நோய்களுக்கும் நுண்ணுயிரிகளுக்குமான தொடர்பினை நிரூபித்தவர் இராபர்ட் சோச்.
* பாக்டீரியா என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஏரன்பர்க்.
* பாக்டீரியங்கள் அனைத்தும் புரோகேரி்யாட் அமைப்புடைய ஒரு செல் உயிரிகளாகும்.
* பாக்டீரியங்கள் எல்லா இடங்களிலும் காணப்படும். எல்லா சுற்றுப் புறங்களிலும் அங்ககப் பொருட்களிலும், அங்ககப் பொருட்கள் அதிகமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.
* பாக்டீரியங்கள் பொதுவாக கமென்சல் ஆக வாழ்க்கின்றன. கமென்சல் (Commensal) என்பது இரண்டு சேர்ந்து வாழும் உயிரிகளில் ஒன்று பயனடையும், மற்றொன்று எந்தவிதப் பயனுமின்றி பாதிப்பின்றிக் காணப்படும். .கா. மனித சிறுகுடலில் வாழும் எஸ்செரிசியா கோலை.
* சில பாக்டீரியங்கள் தாவரங்களிலும் விலங்குகளிலும் மற்றும் மனிதர்களுக்கும் நோய்களை உண்டாக்கும் இந்த வகையில்(ஒட்டுண்ணி வகை பாக்டீரியங்கள்) (Parasitism) ஒரு உயிரினம் பயனடையும் மற்றொறு உயிரினம் பாதிப்படையும்.
* பாக்டீரியாவின் வடிவ அமைப்பை அதன் உறுதியான செல் சுவரே நிர்ணயிக்கிறது. பாக்டீரியங்கள் பொதுவாக கோள வடிவம், கோல் வடிவம், திருகு வடிவம் உடையன.
* சில பாக்டீரியங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் (Pleomorphic) காணப்படும். .கா.ஆர்த்ரோபாக்டர்.
* பாக்டீரியங்களின் இடப்பெயர்ச்சிக்கு உதவுவது கசையிழைகள் (Flagella).
* வேதிச் சமிக்ஞைகளை கசையிழைகள் கண்டறிந்து அதனை நோக்கி நகர்கின்றன. இவ்வகை இயக்க முறைக்கு வேதித் தூண்டல் நகர்வு (Chemotaxis)  என்று பெயர்.
* உணவுப் பொருட்களின் தூண்டலுக்கேற்ப அதனை நோக்கி நகர்வு (Positive Chemotaxis) என்கிறோம்.
* வேதிப்பொருளை விட்டு விலகிச் செல்லும் நிகழ்வு எதிர்மறை வேதித் தூண்டல் நகர்வு (Negative Chemotaxis) எனப்படும்.
பாக்டீரியாவின் உணவூட்ட முறைகள்:
* பாக்டீரியங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன. அவை தற்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் எனப்படுகின்றன. .கா. ஸ்பைரில்லம்.
* வேதித் தற்சார்பு ஊட்ட பாக்டீரியங்களுக்கும் எடுத்துக் காட்டு நைட்ரசோ மோனால் மற்றும் நைட்ரோபாக்டர் ஆகியன.
* பசும் கந்தக பாக்டீரியங்களில் ஹைட்ரஜன் அழிப்பானாகப் பயன்படுவது ஹைட்ரஜன் சல்ஃபைடு ஆகும். இவ்வகை பாகாடீரியங்கள் அனங்கக ஒளி தற்சார்பு ஜீவிகள் ஆகும்.
* பசுங்கந்தக பாக்டீரியங்களில் காணப்படும் பசுகங்கணிகம் பாக்டீரியோ விரிடின் ஆகும்.
* அங்கக ஒளி தற்சார்பு ஜீவிகளுக்கு உதாரணம் ரோடோஸ்பைரில்லம்.
* அனங்கக வேதிசார்பு ஜீவி பாக்டீரியங்களுக்கு உதாரணம் தயோ பேசில்லஸ், ஃபெர்ரோபேசில்லஸ், ஹைட்ரஜனோ மோனஸ், நைட்ரசோ மோனஸ், நைட்ரோபாக்டர் ஆகியன.
* அங்கக வேதிச் சார்பு ஜீவிகளுக்கு உதாரணம் அசிட்டோபாக்டர், மெத்தனோகாக்கஸ், லாக்டோ பாசில்லஸ்.
பாக்டீரியாவில் காணப்படும் சுவாச முறைகள்:
* பாக்டீரியாவினால் காணப்படும் சுவாச முறையினைப் பொறுத்து கட்டாயக் காற்றுச் சுவாசிகள், காற்றில்லா சுவாசிகள், நிலை மாறும் காற்றில்லா சுவாசிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
* கட்டாயக் காற்றுச் சுவாசிகளில் இறுதி எலக்டிரான் ஏற்பியாக ஆக்சிஜன் செயல்படுகிறது.
* காற்றில்லா சுவாசிகள் வளர்வதற்கோ, வளர்சிதை மாற்றத்திற்கோ நொதிகள் தேவைப்படுவதில்லை. ஆனால் நொதித்தல் வினைகள் மூலம் இவை ஆற்றலைப் பெறுகின்றன..கா. கிளாஸ்டிரிடியம்
* நிலைமாறும் காற்றி்ல்லா சுவாசிகளில் ஆக்சிஜனை எலக்ட்ரான் ஏற்பியாகப் பயன்படுத்தி ஆக்சிஜனேற்ற முறையிலோ அல்லது காற்றில்லாமல் நடைபெறும் நொதித்தல் வினையின் மூலமாகவோ ஆற்றலைப் பெற்று வளர்கின்றன. .கா. எஸ்சிரியா கோலை.
* கிராமின் சாயத்திற்கேற்ப பாக்டீரியங்கள் எவ்விதம் வினைபுரிகின்றன என்பது பாக்டீரியங்களின் வகைப் படுத்துதலில் ஒரு முக்கியப் பண்பாக உள்ளது.
* கிராமின் சாயமேற்றுதலைப் பொறுத்து கிராம் பாசிட்டிவ், கிராம் நெகட்டிவ் என இரு வகைகளாக பாக்டீரியா பிரிக்கப்பட்டுள்ளது.
* கிராமின் சாயமேற்றுதலைப் பொறுத்து கிராம் பாசிட்டிவ், கிராம் நெகட்டிவ் என இரு வகைகளாக பாக்டீரியா பிரிக்கப்பட்டுள்ளது.
* கிராம் நெகட்டிவ் வகை பாக்டீரியங்கள் இளஞ் சிவப்பாகவும், கிராம் பாசிட்டிவ் வகை பாக்டீரியங்கள் ஆழ்ந்த ஊதா நிறத்துடனும் காணப்படும்.
* கிராம் பாசிட்டிவ் வகை செல்சுவர்களில் டெய்க்காயிக் அமிலம் மற்றும் டெய்க்யூரானிக் அமிலம் மிகுந்து காணப்படும். மேலும் பாலிசாக்கரைடு மூலக்கூறு பெற்றுள்ளது.
* கிராம் நெகட்டிவ் வகை செல் சுவர்களில் பெப்டிடோ கிளைக்கான் அடுக்குக்கு வெளியே லிப்போ புரதங்கள், வெளிச்சவ்வு, லிப்போ பாலிசாக்கரைடு ஆகியவை காணப்படுகின்றன.
* சாதகமற்ற சூழ்நிலைகளில் பாக்டீரியங்களில் உருவாவது எண்டோஸ்போர் ஆகும்.
பாக்டீரியங்களின் இனப்பெருக்கம்:
* பாக்டீரியங்களில் இருவகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது. அவை: 1.இரண்டாகப் பிரித்தல் 2. பாலினப் பெருக்கம் ஆகியன்.
* பாலினப் பெருக்கம் 1. இணைவு (Conjugation) 2. ட்ரான்ஸ்டக்ஷன் (Transduction) 3. இயல்பு மாற்றம் (Transformation) ஆகிய மூன்று வகைகளில் நடைபெறுகிறது.
ட்ரான்ஸ்டக்ஷன் வகையில் பாக்டீயோஃபேஜின் புரத உறையின் மூலமாக, வழங்கி (Donar DNA) டி.என்.. பெறும் செல்லுக்கு (Recipient Cell) எடுத்துச் செல்லப்படுகிறது.
பாக்டீரியங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள்:
* டைபாய்டு காய்ச்சல், சால்மானல்லா டைபி என்ற பாக்டீரியத்தால் உண்டாகிறது. சால்மானல்லா என்னும் பாக்டீரியம் கேஸ்ட்ரோ எண்ரைட்டிஸ் நோயை உருவாக்கும் சால்மானல்லா காலரேசியஸ் என்னும் பாக்டீரியத்தினாலும் கேஸ்ட்ரோ என்ரைட்டிஸ் நோய் உருவாகும்.
* விப்ரியோ காலரே என்னும் பாக்டீரியத்தால் மனிதனில் காலரா நோய் உருவாகிறது. இவ்வகை பாக்டீரியா சிறுகுடல் பகுதியில் எபிதீலியத் திசுவை ஒட்டிப் பெருக்கமடைந்து என்ட்ரோடாக்சின் (Enterotoxin) என்ற நச்சுப் பொருளை உற்பத்தி செய்கிறது.
* மனிதனில் பிளேக் நோய் எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியத் தொற்றால் உண்டாகிறது. இது ஒரு நகர்ச்சியற்ற கிராம் நெகட்டிவ் பேசில்லை வகையைச் சார்ந்த பாக்டீரியா ஆகும்.
* சிஃபிலிஸ் என்ற கொடூரமான பால்வினை நோய் ட்ரிப்போனிமா பாலிடம் சிபிலிஸ் என்ற பாகாடீயத்தால் தொற்றுகிறது.
* நிஸ்சேரியா கொனோரியா என்ற மற்றொரு பால்வினை நோயை உருவாக்குவது நிஸ்சேரியா பாக்டீரியம் ஆகும்.
* ட்யூபர்குளோசிஸ் (காசநோய்) எனப்படும் மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவினால் உருவாகிறது.
* தொழுநோயை உருவாக்குவது மைக்கோபாக்டீரியம் லேப்ரே என்னும் பாக்டீரியா, இந்நோய் ஹேன்சனின் நோய் என்று அழைக்கப்படுகிறது.
* ஸ்கேபிஸ் எனப்படும் சொறி சிரங்கு இட்ச் மைட் எனப்படும் ஒரு வித மைட்டினால் (Mite) உருவாகிறது.
பாக்டீரியங்களால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள்:
* எலுமிச்சை தாவரத்தில் சிட்ரஸ் கான்கர் நோயை உருவாக்குவது சாந்தோமோனஸ் சிட்ரி என்ற பாக்டீரியா.
* நெல் செடியில் பாக்டீரிய வெப்பு நோயை உருவாக்குவது சாந்தோமோனஸ் ஒரைசே என்ற பாக்டீரியா.
* பருத்தியில் கோண இலைப்புள்ளி நோயை உருவாக்குவது சாந்தோமோனஸ் மால்வேசியேரம் என்ற பாக்டீரியா.
* பேரிச் செடியில் தீ வெப்பு நோயை உருவாக்குவது எர்வினியா கேரட்யோவோரா என்ற பாக்டீரியா.
* கேரட் செடியில் மென் அழுகல் நோயை உருவாக்குவது சூடோமோனஸ் சோலனேசியேரம் என்ற பாக்டீரியா.
பாக்டீரியங்களால் விலங்குகளுக்கு உண்டாகும் நோய்கள்:
* ஆடுகளுக்கு ஆந்திராக்ஸ் என்ற நோய் பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் பாக்டீரியாவில் உருவாகிறது.
* மாடுகளுக்கு புருசெல்லா மெலிட்டென்சிஸ் என்ற பாக்டீரியா ஆகும்.
* செம்மறி ஆடுகளுக்கு புருசெல்லோசிஸ் என்ற நோயை உருவாக்குவது புருசெல்லா மெலிட்டென்சிஸ் என்ற பாக்டீரியா ஆகும்.
பார்டீரியங்களின் நன்மை பயக்கும் செயல்கள்:
* தாவர விலங்கு எச்சங்கள் சிதைக்கப்படுவதற்கு பாக்டீரியங்கள் பயன்படுகின்றன. எனவே இயற்கைக் கழிவுநீக்கிகள் (இயற்கைத்தோட்டி) என பாக்டீரியாக்கள் அழைக்கப்படுகின்றன.
* பேசில்லஸ் ரமோசஸ், பேசில்லஸ் மைகாய்டஸ் போன்ற பாக்டீரியங்கள் இறந்த தாவர விலங்கு உடலங்களிலிருந்து புரதங்களை அம்மோனியாவாக மாற்றி, பின்பு அம்மோனியம் உப்புக்களாக மாற்றுகின்றன.
* நைட்ரோபாக்டர் மற்றும் நைட்ரேட்டாக்கும் பாக்டீரியங்கள் அம்மோனியம் உப்புக்களை நைட்ரைட்டு மற்றும் நைட்ரேட் ஆக மாற்றுகின்றன.
* பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களில் தொழிற்சாலைகளில் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் பயன்படுகின்றன.
* பாலைத் தயிராக மாற்ற லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ் என்ற பாக்டீரியமும், பாலாடைக் கட்டியாக மாற்ற லாக்டோபேசில்லஸ் அசிடோஃபோபஸ் என்ற பாக்டீரியமும் பயன்படுகின்றன.
* அசிட்டோபாக்டர் அசிட்டை என்ற அசிட்டிக் அமில பாக்டீரியத்தின் செயலால் வினிகர் உற்பத்தி செய்யப்படுகிறது.
* கரும்புச் சக்கையிலிருந்து நொதித்தல் செயல்மூலம் பியூட்டைல் ஆல்கஹால், மெத்தில் ஆல்கஹால் மற்றும் அசிட்டோன் ஆகியவை தயாரிப்பதற்கு கிளாஸ்ட்ரிடியம் அசிட்டோ ப்யூட்டிலிகம் என்ற காற்றில்லா சுவாச பாக்டீரியம் பயன்படுகிறது.
* கிளாஸ்ட்டிரியம் போன்ற சில பாக்டீரியங்களின் செயல்களால் நார்தரும் தாவரங்களிலிருந்து நார்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதுவே ரெட்டிங் (Retting) எனப்படுகிறது.
* பல பாக்டீரியங்களிலிருந்தே நுண்ணுயிர்க்கொல்லிகள் (Antibiotic) பெறப்படுகின்றன. .கா.பாசிட்ராசின் என்ற நுண்ணுயிரிக்கொல்லி பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
* பாலிமிக்சின் என்னும் நுண்னுயிர்க் கொல்லி பேசில்லஸ் பாலிமிக்சின் என்ற பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
* ஸ்ட்ரெப்டோமைசின் என்னும் நுண்ணுயிர்க் கொல்லி ஸ்ட்ரேப்டோமைசிஸ் கிரைசியஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
* மனித குடலில் வாழும் எஸ்சிரிசியா கோலை என்னும் பாக்டீரியா வைட்டமின் K மற்றும் வைட்டமின் B ஆகியவற்ரை உற்பத்தி செய்கிறது.
* கிளாஸ்ட்ரிடியம் என்ற பாக்டீரியாவின் சிற்றினங்கள் சர்க்கரையை நொதிக்கச் செய்து வைட்டமின் பி2 உற்பத்தி செய்கின்றன.

* பூச்சிகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் புழுக்களைக் கொல்ல பேசில்லஸ் வகையைச் சார்ந்த பேசில்லஸ் துரிஞ்சன்சிஸ் போன்ற பாக்டீரியங்கள் பயன்படுகின்றன.

download


மேலும் நமது நண்பர்களுக்கு ஒரு வேண்டுக்கோள்...
PG TRB ஆங்கிலம் தொடர்பான ஆலோசனை களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது எந்த மெடிரியல் படிப்பதற்கு சிறந்தது என தெரிவியுங்கள் நீங்கள் கூறும் சிறு ஆலோசனைகள் பலருக்கு பயனளிக்கும் மேலும் உங்களிடம் பதிப்புகள் ஏதேனும் இருந்தால்gurugulamadvisor@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

2 comments:

  1. நண்பர்கள் பயன் பெறும் வகையில் படிக்க வேண்டியப் பகுதிகளை பாடவாரியாக தொகுத்தளித்த நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. மிக்க நன்றி அறிவியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததற்கு இது போன்று தொடர்ந்து வெளியிடவும்

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.