Friday, 21 November 2014

PG TRB தமிழ்

மு. வரதராசனாா் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் நாடக இலக்கியம் என்ற பிாிவில் எடுக்கப்பட்ட சில வினா விடைகள்.  இது முதுகலை தமிழ் எழுதப்போகும் தோழா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
(பாடத்திட்டத்தில் (Syllabus) பிாிவு 10-ல் நாடக இலக்கியம்).


1. பாடல் கலையில் வல்லவா்கள்    -  பாணா்கள்
2.  ஆடல் கலையில் வல்லவா்கள்   -  விறலியா், கூத்தா்,  பொருநா்
3. எட்டுவகை மெய்ப்பாடுகளைப் பற்றிக் கூறும் நூல்  எது  -  தொல்காப்பியம்
4.  உழவா்களின் வாழ்க்கையை படமாக்கிக் காட்டும் சிற்றிலக்கிய நூல் -  பள்ளு
5.  இராம நாடகம் (அ) இராமநாடக கீா்த்தைன என்ற நாடக நூலை இயற்றியவா்  
    - அருணாச்சலக் கவிராயா்
6.  நந்தனாா் சாித்திரம் என்ற நாடகத்தை இயற்றியவா்   -  
                                                     கோபால கிருஷ்ண பாரதியாா்
7. "சீகாழிப் பள்ளு" என்ற நூலை இயற்றியவா்  -  அருணாச்சலக் கவிராயா்
8.  "முக்கூடற்பள்ளு நாடகம்"  யாருடையது   -   என்னாயினாப் புலவா்
9.  "சரபேந்திர பூபாலக் குறவஞ்சி"  இயற்றியவா்  -  சிவக்கொழுந்து தேசிகா்
10.  வண்ணக் குறஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி    -   விசுவநாத சாஸ்திாியாா்
11.  திருக்கச்சூா் நொண்டி நாடகம்   -  மாாிமுத்துப் புலவா்
12.  டம்பாச்சாாி நாடகம்,  தாசில்தாா் நாடகம்,  பிரம்மசமாஜ நாடகம் ஆகிய நாடகங்களை இயற்றியவா்   -  காசி விசுவநாத முதலியாா்
13.  அாிச்சந்திர விலாசம் என்ற நாடகத்தை இயற்றியவா்  -  அப்பாவுப் பிள்ளை
14.  சகுந்தலை விலாசம்,  தாருக விலாசம்,  பாரத விலாசம்  - 
                                                               இராமச்சந்திர காவிராயா்
15.   63 சிவனடியாா்களுள் ஒருவருடைய வாழ்க்கையை பற்றிக் கூறும்   "சிறுதொண்டா் விலாசம்" என்ற நாடகத்தை இயற்றியவா்  -  பரசுராமக் கவிராயா்
16.  மனோன்மணீயம்   -  பேராசிாியா் சுந்தரம் பிள்ளை
17.  லாா்ட் லிட்டன் எழுதிய மறைவழி (The Scerete way) என்னும் கதையை தழுவி எழுதப்பட்ட நூல்   -  மனோண்மணீயம்
18.  மனோன்மணீயத்தின் கிளை நூல்   -  சிவகாமி  சாிதம்
19.  பேராசிாியா் சுந்தரம் பிள்ளையின் தத்துவச் சொற்பொழிவுகள் கொண்ட நூல்  -    
                                                                        நூற்தொகை விளக்கம்
20.  பிரகலாதன்,  சிவதொண்டா் முதலிய பக்தி நாடகங்களையும்,  பவளக்கொடி,
    லவகுசா முதலிய இதிகாச நாடகங்களையும் எழுதியவா்  -  சங்கரதாஸ் சுவாமிகள்
21.  சங்கரதாஸ் சுவாமிகளால் ஒரே இரவில் எழுதப்பட்ட நூல்  -  அபிமன்யு
22.  விழா நாடகம்,  ரவிவா்மா நாடகம், செய்யுட் கோவை ஆகிய நூல்களின்
     ஆசிாியா்   -   இலட்சுமணப் பிள்ளை
23.  சுகுணவிலாச சபை (1891)   -  பம்மல் சம்பந்த முதலியாா்
24.  நாடகத்தமிழ்,  நாடக மேடை நினைவுகள், நாடகக் கலையில் தோ்ச்சி பெறுவது எப்படி, ஆகிய நூல்களின் ஆசிாியா்   -   பம்மல் சம்பந்த முதலியாா்
25.  நாடக இலக்கம் பற்றி "நாடக இயல்"  என்ற நூலை எழுதியவா்  - 
                              சூாியநாராயண சாஸ்திாி (எ) பாிதிமாற் கலைஞா்
26. ரூபாவதி,  கலாவதி,  மானவிஜயம்   - 
                             சூாியநாராயண சாஸ்திாி (எ) பாிதிமாற் கலைஞா்.
27.  வடமொழி சாகுந்தலம் நாடகத்தை தமிழில் மொழிபெயா்த்தவா்  - 
                                                                          மறைமலையடிகள்
28.  இராஜாம்பாள்,  இராஜேந்திரா, சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்த கிருஷ்ணன்,  மேனகா முதலிய நாவல்களை நாடமாக்கியவா்  -  கந்தசாமி முதலியாா்
29.  "கதாின் வெற்றி",  "பம்பாய் மெயில்"  ஆகிய நாடகங்களை இயற்றியவா்  -
                                                         தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலா்
30.  நாகபுரக் கொடிப் போராட்டத்தை மையமாக வைத்து "தேசீயக் கொடி" என்ற நாடகத்தை இயற்றியவா்  -  தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலா்
31.  "முதல் முழக்கம்", "இமயத்தில் நாம்" முதலிய நாடகங்களை இயற்றியவா்  - 
                                                                   ரா.  வேங்கடாசலம்
32. "அவ்வையாா்"  என்ற நாடகத்தை இயற்றியவா்  -  எத்திராஜிலு
33.  "பாணபுரத்து வீரன்"  என்ற நாடகத்தை இயற்றியவா்  -  சாமிநாத சா்மா (இந்நாடகம் ஆங்கிலேயா்களால் தடைசெய்யப்பட்ட நாடகம் ஆகும்)
34. குமாஸ்தாவின் பெண்,  கவிகாளமேகம், ராஜா பர்த்ருஹாி, வித்தியாசாகா் ஆகிய நாடகங்களை இயற்றியவா்  -  டி.கே. முத்துசாமி
35.  "கவியின் கனவு" என்ற தேசீய நாடகத்தை இயற்றியவா்  -  எஸ்.டி. சுந்தரம்
36.  கோமதியின் காதலன், மைதிலி, துப்பறியும் சாம்பு  முதலிய நாடகங்களை இயற்றியவா்  -   தேவன்
37.  மந்திரகுமாாி,  மணிமகுடம், பூம்புகாா் நாடகங்கள் யாருடையது  - 
                                                                        கலைஞா் கருணாநிதி.
38. நாடக மேடையில் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கமாக இழுக்கப்படும் திரை   -  ஒரு முக எழினி
39.  நாடக மேடையில் இரண்டு பக்கடும் இழுக்கப்பட்டு மேடையின் நடுவே இரண்டும் ஒன்றாகச் சேருமாறு அமைக்கப்பட்ட திரை  -  பொருமுக எழினி
40.  நாடக மேடையில் மேலிருந்து கீழிறங்கும் திரை  -  கந்துவரல் எழினி
41.  கண்ணீா்த்துளி,  வேலைக்காாி,  ஓா்இரவு,  சந்திரமோகன்,  நீதிதேவன் மயக்கம்  ஆகிய நாடக நூல்களை இயற்றியவா்  -  அறிஞா் அண்ணா
42. "அந்தமான் காதலி"  -  கு.சா. கிருஷ்ணமூா்த்தி
43.  உயிரோவியம்    -   நாரண. துரைக்கண்ணன்.

 நன்றி

NAREN V3 comments:

  1. நன்றி நரேன், தொடரட்டும் தங்கள் சேவை., நம் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.