Tuesday, 18 November 2014

குரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8

 1. 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார்? 

 2. 402. வாஸ்கோடகமா இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடித்த ஆண்டு? 

 3. 403. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்? 

 4. 404. ஹர்ஷர் இயற்றிய நூல்கள் எவை? 

 5. 405. ஹரப்பா மக்கள் அறிந்திராத உலோகம் எது? 

 6. 406. புத்தரின் இயற்பெயர் என்ன? 

 7. 407. இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தை ஆட்சி செய்தவர் யார்? 

 8. 408. சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது? 

 9. 409. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு? 

 10. 410. சாளுக்கியர்களின் தலைநகரம் எது? 

 11. 411. கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட மன்னன் யார்? 

 12. 412. அடிமை வம்சத்தை நிறுவியர் யார்? 

 13. 413. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்? 

 14. 414. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார் ? 

 15. 415. துக்ளக் அரசை வீழ்த்தியவர் யார்? 

 16. 416. சோழர் காலத்தில் கிராம வாரியங்களின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வுசெய்யப்பட்டனர்? 

 17. 417. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்? 

 18. 418. சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது? 

 19. 419. காஷ்மீர் ராஜாக்கள் பற்றி கூறும் நூல்? 

 20. 420. பழங்காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது எது? 

 21. 421. இந்தியாவுக்கு வருகை தந்த முதல் சீன யாத்திரீகர்? 

 22. 422. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார்? 

 23. 423. பிளாசி போர் எப்போது நடந்தது? 

 24. 424. கிராண்ட் டிரங் நெடுஞ்சாலையை அமைத்தவர் யார் 

 25. 425. டெல்லி செங்கோட்டையை கட்டியவர் யார்? 

 26. 426. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்? 

 27. 427. சிந்துசமவெளி நாகரீகத்தில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகம் எது? 

 28. 428. வேதகால மக்களின் முக்கிய தொழில் எது? 

 29. 429. சமணர்களின் புனித நூல் எது? 

 30. 430. மன்னருக்கு வரிக்குப் பதில் இலவசமாக உடல் உழைப்பை தரும் முறையின் பெயர் என்ன? 

 31. பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் 

 32. 431. மத்திய அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் வரை பிரதமர் நியமிக்கலாம்? 

 33. 432. இந்தியாவில் நிறுத்தப்பட்ட தந்தி சேவையை ஈடுகட்ட மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மாற்றுமுறை எது? 

 34. 433. "நாங்கள் வெறும் அணி அல்ல, நாடு" என 2014 உலக கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஒரு நாட்டின் தாரக மந்திரமாக குறிப்பிடப்பட்டது. அது எந்த நாடு? 

 35. 434. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் எப்போது ஏவப்பட்டது? 

 36. 435. மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த நாள் எது? 

 37. 436. மங்கள்யான் எந்த ராக்கெட் அனுப்பும் தளத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது? 

 38. 437. குஜராத் மாநில முதல்-அமைச்சர் யார்? 

 39. 438. ஒடிசா முதல்-அமைச்சரான நவீன் பட்நாயக் எத்தனையாவது முறையாக தொடர்ந்து முதல்-அமைச்சர் ஆகியிருக்கிறார்? 

 40. 439. இந்த ஆண்டு செய்தித்தாள்களில் "SIMBEX14" என குறிப்பிட்டு செய்தி வெளியாகியிருந்தது. அது என்ன? 

 41. 440. 2014-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருது பெற்றவர் யார்? 

 42. 441. 2013-ம் ஆண்டுக்கான தாதாசாகிப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பட்டது? 

 43. 442. 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது இந்திய தேர்தல் ஆணையம் National Icon என ஒரு திரைப்பட நடிகரை அறிவித்தது. அந்த நடிகர் யார்? 

 44. 443. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்? 

 45. 444. 2014-ம் ஆண்டுக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது யாருக்கு வழங்கப்பட்டது? 

 46. 445. இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு எப்போது வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது? 

 47. 446. அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்-அமைச்சர் யார்? 

 48. 447. உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 

 49. 448. 20-வது காமன்வெல்த் விளையாட்டு எந்த நாட்டில் நடைபெற்றது? 

 50. 449. அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து எந்த ஆண்டுக்குள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்? 

 51. 450. 2014-ம் ஆண்டில் இந்திய அழகி யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? 

 52. Answers 
 53. 401. மெகஸ்தனிஸ் (கி.மு. 303) 
 54. 402. 1498 
 55. 403. ஹர்ஷர் 
 56. 404. நாகானந்தா, ரத்தினாவலி, பிரியதர்ஷிணி 
 57. 405. வெண்கலம் 
 58. 406. சித்தார்த்தா 
 59. 407. வின்ஸ்டன் சர்ச்சில் 
 60. 408. ஹோவாங்கோ 
 61. 409. ஹோவாங்கோ ஆறு 
 62. 410. வாதாபி 
 63. 411. ராஜேந்திர சோழன் 
 64. 412. குத்புதீன் ஐபெக் 
 65. 413. ரஸியா பேகம் 
 66. 414. ஜலாலுதீன் கில்ஜி 
 67. 415. தைமூர் 
 68. 416. குடவோலை முறை 
 69. 417. குருநானக் 
 70. 418. 5,000 ஆண்டுகள் 
 71. 419. சாகுந்தலம் 
 72. 420. கைபர் கணவாய் 
 73. 421. பாஹியான் 
 74. 422. சமுத்திர குப்தர் 
 75. 423. கி.பி. 1757 
 76. 424. ஷெர்ஷா சூரி 
 77. 425. ஷாஜகான் 
 78. 426. இந்திரன் 
 79. 427. லோத்தால் 
 80. 428. கால்நடை வளர்ப்பு 
 81. 429. ஆகம சித்தாந்தங்கள் 
 82. 430. வைஷ்டிகா 
 83. 431. நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் 10 சதவீதம் வரை 
 84. 432. இ-போஸ்ட் 
 85. 433. அர்ஜெண்டினா 
 86. 434. 5.11.2013 
 87. 435. 24.9.2014 
 88. 436. ஸ்ரீஹரிகோட்டா 
 89. 437. ஆனந்தி பென் படேல் 
 90. 438. 4-வது முறை 
 91. 439. இந்திய கடற்படையும், சிங்கப்பூர் கடற்படையும் இணைந்து இரு நாடுகளின் நல்லுறவை தெரிவிக்கும் வகையில் அந்தமான் கடலில் நடத்திய வருடாந்திர ஒத்திகை 
 92. 440. விஜய் சேஷாத்திரி 
 93. 441. குல்சார் 
 94. 442. அமீர்கான் 
 95. 443. ஜி.ரோகிணி 
 96. 444. மாதங்கி சத்தியமூர்த்தி 
 97. 445. 2015-ம் ஆண்டு 
 98. 446. நபம்துகி 
 99. 447. நார்வே 
 100. 448. ஸ்காட்லாந்து (கிளாஸ்கோ) 
 101. 449. 2016-ம் ஆண்டு இறுதியில் 
 102. 450. கோயல்ரானா

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.