Saturday, 22 November 2014

சிறப்பாசிரியர்களுக்கு பயிற்சி நிறைவு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
மாற்றுத்திறனுடைய குழந்தைகளை உள்ளடக்கிய
திட்டத்தின் கீழ், சிறப்பாசிரியர்களுக்கான 3 நாள்

பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
மாநில அளவிலான இந்தப் பயிற்சியில் 60 பேர்
பங்கேற்றனர். இந்தப் பயிற்சியில்
குழந்தைகளுக்குத் தேவையான சிறப்புக் கல்வி,
மதிப்பீடு, ஆலோசனை, இயன்முறை பயிற்சி, பேச்சுப்
பயிற்சி, பார்வைத் தூண்டல், கல்வி- தொழில் சார்ந்த
பயிற்சி, நுண் தசை இயக்கப்
பயிற்சி போன்றவை தொடர்பாக ஆசிரியர்களுக்குப்
பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த ஆசிரியர்கள் மாவட்ட அளவில்
சென்று அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த
ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். மாநிலம்
முழுவதும் 1,36,267 மாற்றுத் திறனுடைய குழந்தைகள்
இந்தத் திட்டத்தின் கீழ்
கல்வி பயின்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.