Friday, 21 November 2014

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்ற ஏன் கூறினார்கள் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த
பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்
போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள்,

வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள்
வந்த திசையை மாற்றி வேறு திசையில்
செல்வார்களாம்.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்க
பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என
உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக
செல்லக்கூடாது என்றார்கள்.
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல
விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்,
.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும்
திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை. இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?
பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!
நூருல் அமீன்
LikeLike · 

29 comments:

 1. நேற்றிரவு,
  தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்.
  "ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....
  அது எப்ப அப்பா தூங்கும்?"
  "அது தூக்கம் வரும்போது தூங்கும்..."
  "எப்ப தூக்கம் வரும்பா?"
  "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."
  "கொசுக்கு வீடு எங்கப்பா?"
  "அதுக்கு வீடே இல்லை..."
  "ஏம்பா வீடே இல்லை?"
  "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."
  "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."
  "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."
  "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."
  "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா
  அதான் அதுக்கு வீடு இல்ல..."
  "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"
  "கடவுள்..."
  "கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"
  "கடிக்காது..."
  "ஏம்பா கடிக்காது?"
  "கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."
  "அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"
  "வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."
  "கடவுள் நல்லவராப்பா?"
  "ரொம்ப நல்லவர்...."
  "அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"
  "அது அப்படித்தான் நீ தூங்கு..."
  "கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"
  "அதுக்கு பசிக்குது..."
  "கொசு இட்லி சாப்பிடுமா?"
  "அதெல்லாம் பிடிக்காது..."
  "கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"
  "வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."
  "ஒரே ஒரு கேள்வி அப்பா ?"
  "கேட்டுத் தொலை"
  "கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"
  "அதுக்கு பல்லே இல்லை..."
  "பிறகு எப்படி கடிக்கும்?"
  "அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
  இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."
  "பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"
  "இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"
  "நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"
  இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு
  போகலாம்னு முடிவு பண்ணி, வேலை
  தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்!!!!
  ஒரு கொசுவைப் பற்றி எப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறது இந்தக் குழந்தை. கொசுவைப் பற்றியே இப்படியென்றால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஆயிரம் ஆயிரம் விடயங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி விட்டால் நம் குழந்தைகளின் சிந்தனை எப்படியெல்லாம் விரியும்.......
  குழந்தைகள் உலகம் அழகானது மட்டுமல்ல. ஆழமானதும் கூட. எம்மால் நம் குழந்தைகள் இழந்தவை மிக அதிகம் என்றே எண்ணத் தோன்றுகிறது...ஒரு குழந்தையின் கேள்வி ஞானத்திற்க்கு முன் நாம் எல்லாம் முட்டாள்கள் தான்............
  - நவீன் கிருஷ்ணன்

  ReplyDelete
 2. வழக்கம் போல் அந்த இட்லி கடையில் நல்ல கூட்டம். காரணம், ருசி, சுகாதாரம் மட்டுமல்ல.. அங்கு வேலை செய்யும் அந்த இளவயசுப் பையனும்தான். கில்லி மாதிரி சுழன்று, சாப்பிட வருபவர்களையும், பார்சல் வாங்கிப் போகிறவர்களை யும், மின்னல் வேகத்தில் கவனித்து இன்முகத்துடன் அனுப்பி வைப்பான்.
  இட்லி வாங்க வந்த பெரியவர் ஒருவர், பையனைப் பற்றி கடை முதலாளியிடம் விசாரிக்கத் தொடங்கினார்.
  “என்ன சம்பளம் குடுப்பீங்க.. இந்த பையனுக்கு..?”
  “எனக்கு கிடைக்கிற சொற்ப லாபத்துல என்னத்த குடுத்துடப் போறேன். சாயந்திரம் 7 மணியிலிருந்து 10 மணி வரை வேலை. போகும் போது இங்கேயே சாப்பிடச் சொல்லிட்டு,கையில் 50 ரூபா குடுத்தனுப்புவேன்..”
  “ஹும்ம்.. படிக்க வேண்டிய வயசுல ஒழுங்கா படிச்சிருந்தா இந்த நிலமை வந்திருக்குமா? அப்ப எந்தப் பொண்ணு பின்னால சுத்தினானோ.. இப்ப எச்சில் தட்டை தூக்கறான்..” என்று பேசிக் கொண்டே போன பெரியவரை, கடைக்காரர் இடைமறித்தார்.
  “நிறுத்துங்க. தெரியாம தப்பாப் பேசாதீங்க. அந்தப் பையனுக்கு பக்கத்து கிராமம். அப்பா,அம்மா ஏழை விவசாயிங்க. தன் மகன் படிச்சு இன்ஜினீயர் ஆகட்டுமேன்னு, ஆட்டை வித்து, காட்டை வித்து இங்கே டவுன் காலேஜ்ல படிக்க வச்சிருக்காங்க. அவனும், பெத்தவங்களுக்கு மேலும் கஷ்டம் குடுக்கக் கூடாதுன்னு, காலேஜ் முடிஞ்சதும் இங்கே வந்து வேலை செஞ்சு வயித்தை கழுவிக்கறான். அந்தப் பையனை போய்..”
  பெரியவர் தன் பேச்சுக்கு வெட்கித் தலை குனிந்தபடி நடையை கட்டினார்

  ReplyDelete
 3. கார்த்தி சார் வணக்கம் எங்கு சென்றார்கள் நமது குருகுல நண்பர்களை? சரி, சரி, வேண்டுமென்றால் நமது சண்டியரை விட்டு கூப்பிடச்சொல்வோம்.

  ReplyDelete
 4. Hello friends i will join to(monday)b.t(eng) at aided school in kanchi dt (aided scl take Above90 mark only)

  ReplyDelete
  Replies
  1. how to join aided school sir i am also tet pass paper1 salem district

   Delete
  2. Dear chandru are u pay any amount.

   Delete
 5. செல்லை கண்டுபிடித்தவர்

  ReplyDelete
 6. உட்கருவை கண்டுபிடித்தவர்

  ReplyDelete
 7. செல்லின் காவலர்கள் யார்

  ReplyDelete
 8. Replies
  1. புதிய செல்லை உருவாக்குவது

   Delete
 9. எண்டோபிலாச வலை எவ்வாறு அழைக்கப்படுகிறது

  ReplyDelete
 10. நண்பர்கள் அருமையாக கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

  ReplyDelete
 11. Sathish kumar sir tet certificate employmentla register panunga.unga dtla aided schoola unga casteku posting iruntha ungaluku interview varum sir.

  ReplyDelete
 12. itha pathi detail kekanum sir unga mail id kudunga sir

  ReplyDelete
 13. In pg omr sheet branch code five box my branch code four I was filled first four box remaining one empty..but journal number correct..sir any problem....or I will send one more application

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.