Friday, 28 November 2014

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிவு எப்போது?- 2000 பேர் காத்திருப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிவு வெளியிடப்படாததால் தேர்வு எழுதிய 2 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 17
காலியிடங்களை நிரப்ப கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பொறியியல் டிப்ளமோ படிப்பு, கனரக வாகன பணி அனுபவம், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவை இப்பணிக்கான அடிப்படை தகுதிகள் ஆகும்.
இந்த தேர்வை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இவ்வாறு நேரடியாக மோட்டார் வாகன ஆய்வாளராக பணியில் சேருவோர்தான் பிறகு மண்டல போக்குவரத்து அதிகாரியாக (ஆர்.டி.ஓ.) பதவி உயர்வு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு நடந்து முடிந்து சுமார் 8 மாதங்கள் கழித்து, சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு ஒரு சில தேர்வர்களுக்கு கடந்த 2013 ஏப்ரல் மாதவாக்கில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலிருந்து தபால் வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த தேர்வர்கள் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டனர்.
ஆனால், எழுத்துத் தேர்வு முடிவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவு வெளியிடப்படவில்லை. சான்றொப்பமிட்ட சான்றிதழ்கள் கேட்டு வரப்பெற்ற தேர்வர்களும் தாங்கள் தேர்வில் வெற்றி பெற்றிருப்போமோ என்பது உறுதியாகத் தெரியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஒரு சில தேர்வர்கள் நேரில் சென்று கேட்டபோது நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்வு முடிவு வெளியிட தாமதம் ஆகிவருவதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை குறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “எழுத்துத் தேர்வு முடிவு தயாராகவே உள்ளது. இப்பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்பத் தகுதிகள் தொடர்பாக தேர்வு எழுதியவர்கள் சமர்ப்பித்துள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து போக்குவரத்துத் துறையிடமிருந்து தகவல் வரப்பெற்றதும் தேர்வு முடிவு உடனடியாக வெளியிடப்படும்” என்று தெரிவித்தனர்.
சான்றொப்பமிட்ட சான்றிதழ்கள் கேட்டு வரப்பெற்ற தேர்வர்களும் தாங்கள் தேர்வில் வெற்றி பெற்றிருப்போமோ என்பது உறுதியாகத் தெரியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1 comment:

 1. வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரியும், அடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை தரக்கோரியும் மீண்டும் ஓர் புரட்சி; தயராக இருங்கள்

  கடந்த மாதம் செப்டம்பர் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம் இன்று வரை நமக்கு நியாயம் கிடைக்கவில்லை...

  தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் வரும் திங்கள் சென்னை செல்ல உள்ளனர்....

  வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழக சட்டபேரவை கூடவுள்ளது இந்நேரத்தில் நாம் நம் கோரிக்கைகளை முறையாக முதல்வர் மாண்புமிகு ஒ.பன்ணீர்செல்வம் அவர்களிடம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களிடமும் மேலும் திண்டுக்கல் உறுப்பினர் பாலபாரதி மேடம் போன்ற சமூக சிந்தனையாளர்களிடம் மனு கொடுத்து நமக்கக குரல் கொடுக்க வேண்டுவோம்...

  ஒருவேளை நம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாள் போராடவும் தயாராக இருக்கிறோம் ஆசிரியர் சொந்தங்களே!!! நீங்களும் தயாராக இருங்கள்

  இதைப் படித்து விட்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸப், கல்வி வலைதளம் அனைத்திலும் பதிவிடுங்கள்....உங்களால் முடிந்த சிறு உதவியாவது செய்யலாமே!!!

  மேலும் உணர்வோடு பேச
  செல்லத்துரை 98436 33012
  கபிலன் 90920 19692
  ராஜலிங்கம் புளியங்குடி
  95430 79848

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.