Friday, 10 October 2014

FLASH NEWS : ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 7 % அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு

-தீபாவளிக்கு முன்னர் ARREAR பணமாக பெற்றுக் கொள்ளலாம்
அனைத்து அரசு பணியாளர்களுக்கும் 7% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன்தேதி இட்டு வழங்க உத்தரவு. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் வேலையில் இது பெரிய உதவியாக இருக்கும் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.... தீபாவளிக்கு முன்னர் ARREAR பணமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு மூலம் ஓய்வூதியதாரர்கள் உள்பட 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.