Tuesday, 28 October 2014

TNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்




* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.

* சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.

* சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

* 1,2,3ம் திருமுறைகள் -திருஞான சம்பந்தர் - தேவராம்.

* 4,5,6ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவாரம்.

* 7ம் திருமுறை - சுந்தரர் -தேவாரம்.

* 8ம் திருமுறை - மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார்.

* 9ம் திருமுறை - திருமாளிகைத் தேவர் உட்பட்ட 9 நபர்கள்

* 10ம் திருமுறை - திருமலர் - திருமந்திரம்.

* 11ம் திருமுறை - திரு ஆலவாய் உடையார் உட்பட்ட 12 நபர்கள்.

* 12ம் திருமுறை - சேக்கிழார் - பெரிய புராணம்.

* திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாணடார் நம்பி. நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே. நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது பெரிய புராணம்.

* முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர்.

* திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர்.

* குரவர் என்பதற்கு பெரியவர்கள் என்று பொருள்.

* சைவர்களின் தமிழ் வேதம் பன்னிரு திருமுறைகள்.

திருஞானசம்பந்தர்

* இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை. சமயக் குரவர் நால்வரின் முதலாவதாக்க குறிப்பிடப்படுபவர்.

* தேவாரத்தின் முதல் நூலைப்பாடியவர். 23 பண்களில் (இசைகளில்) திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

* திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த இடம் திருப்புகலூர்.

* திருமறைக்காடு (வேதாரண்யம்) கோயில் கதவு திறக்கவும், மூடவும் பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

* கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்கியவர் திருஞானசம்பந்தர்.

* திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய இடம் திருஏடகம்.

* திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரைக் கொடுத்தவர் திருஞானசம்பந்தர்.

* பால் குடித்தபோது பாடியது முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் பாடல்.

* கதவு திறக்கப் பாடிய பாடல் இரக்கம் ஒன்றிலிர் என்று தொடங்கும் பாடல்.

* மன்னனின் நோய் தீர்க்கப் பாடிய பாடல் மந்திரமாவது நீறு என தொடங்கும் பாடல்.

* காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பதும் இவர் இயற்றிய பாடலே.

* நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று திருஞானசம்பந்தரைப் புகழ்ந்தவர் சுந்தரர்.

திருநாவுக்கரசர்

* திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். இவரது தமக்கை திலகவதியார்.

* வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் ஆகிய வேறு பெயர்களும் திருநாவுக்கரசருக்கு வழங்கப்படுகின்றன.

* திருஞான சம்பந்தர் இவரை அப்பரே என்று அழைத்ததால் அப்பர் எனப்பட்டார்.

* திருநாவுக்கரசர் தாண்டகம் என்ற செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியதால் தாண்டக வேந்தர் எனப்பட்டார்.

* திருநாவுக்கரசர் முதலில் சமணத்தைத் தழுவியவர் ஆவார். இவரது சூலைநோய் (வயிற்று வலி) தீர்க்க தம் தமக்கை திலகவதியாரால் திருநீறு அளிக்கப் பெற்றவர். பின்னர்

* சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.

* முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர் ஆவார்.

* மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசர்.

* என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்.

* தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் - திருநாவுக்கரசர்.

சுந்தரர்

* கைலாயத்தில் இவருக்கு ஆலால சுந்தரனார் என்று பெயர். சுந்தரர் பிறந்த ஊர் திருநாவலூர்.

* வன் தொண்டர், தம்பிரான் தோழர் ஆகிய வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.

* இறைவனையே மனைவியிடம் தூது அனப்பியதால் வன்தொண்டர் எனப்பட்டார்.

* சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம் திருவெண்ணெய் நல்லூர்.

* பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா - சுந்தரர்.

மாணிக்கவாசகர்

* மாணிக்கவாசகர் இயற்பெயர் தெரியவில்லை. எனினும் சிலர் திருவாதவூரார் என்கின்றனர்.

* திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களை இயற்றி உள்ளார்.

* மாணிக்கவாசகர் பொருட்டே இறைவன் நரியைப் பரியாக்கினார். இவர் பொருட்டே வந்தி   என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.

* பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார் என்பது மரபு.

* மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படுகிறது.

* நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்.

* ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி - மாணிக்கவாசகர்

* தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி - மாணிக்கவாசகர்.

* வானாகி மண்ணாகி, ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்

* அம்மையே அப்பா ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்

* திருவாசகத்திற்கு உருகாதர் ஒரு வாசகத்திற்கும் உருகார் - பழமொழி.

* சைவவேதம் எனப்படுவது திருவாசகம்.

26 comments:

  1. மிகவும் அருமை அட்மின் அவர்களே...

    ReplyDelete
    Replies
    1. Very useful...thanks..
      Kuravar _asiriyar...meaning correct ah?
      Paditha niyabagam!

      Delete
    2. ஆசிரியர், பெரியவர், தந்தை போன்ற பல பொருள் உண்டு.

      Delete
  2. Thirunavukkarasarum maanickavasagarum twins mathiri irukkanga!

    ReplyDelete
  3. முதுகலை ஆசிரியருக்கான தகுதித்தேர்வு எப்போது வெளியிடப்படும்? Please replay me

    ReplyDelete
  4. Admin Today 8 th STD Urainadai kekalaya

    ReplyDelete
  5. J j muthupandi sir, முதுகலை ஆசிரியருக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நண்பர்கள் கூறுகிறார்கள்,

    ReplyDelete
  6. "TALLENT TEACHER ACADEMY"
    AEEO EXAM CHEMISTRY COACHING
    FULLY SOLVED TAMIL MEDIUM MATERIAL 100 UNIT TESTS 25 MODEL EXAM PLEASE REGISTER YOUR NAME MOBILE NUMBER : 78 45 13 85 26
    100% SUCCESS

    ReplyDelete
  7. Admin sir, why dont we start 8th lessons till now??????????

    ReplyDelete
  8. குருகுல நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்., நண்பர்களே நமது வலைதளத்தில் சனி, ஞாயிறு நடைபெற்ற இலவச ஆன்லைன் தேர்வை வியாழன்., வெள்ளியில் நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம் , தொடர்ந்து சனி ஞாயிறு தேர்வை நடத்தவா அல்லது எங்களின் திட்டப்படி வியாழன்., வெள்ளியில் நடத்துவதா என்பது பற்றிய தங்களின் கருத்துக்களை நம் வலைதளத்தில் தெரியப்படுத்துங்கள் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  9. 8 வது உரைநடை இன்று மாலை கேட்கப்படும் காலையில் கேட்பது நல்லதா மாலையில் கேட்பது நல்லதா என நண்பர்கள் கூறுங்கள் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது

    ReplyDelete
  10. Morning 11 kku mela illana Mathiyam 3 kku mela best admin, 7 manikku mela venam pls its my opinion

    ReplyDelete
  11. அப்படி என்றால் சரி தினமும் காலை 11 மணிக்கு சரி தானே

    ReplyDelete
    Replies
    1. Admin mathavanga yelarayum varasollunga, nethu intha time la evlo per answer pannunanga ippo yarayume kanom, neenga question ketta vanthuruvanga

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. gud eve frnds.eve after 4pm kekalam sir, i am in school .see u later,

      Delete
    4. ம்ம்...காலை 11 மணி என்றால் சரிதான்.

      Delete
  12. Ponmari sir thank you so much sir for replay me

    ReplyDelete
  13. திருநாவுக்கரசருக்கு இறைவன் அளித்த பெயர் ?

    1.அப்பர்
    2.வாகீசர்
    3.தாண்டகவேந்தர்
    4.திருநாவுக்கரசர்

    ReplyDelete
  14. ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா , திருப்பல்லாண்டு
    பதினோராம் திருமுறை - பிரபந்த மாலை

    ReplyDelete
  15. பர சமய கோடரி , இன்தமிழ் இயேசுநாதர் இவை யாருடைய சிறப்புப் பெயர்கள்??

    ReplyDelete
  16. ”என் கடன் பணி செய்து கிடப்பதே” - இது யாருடைய அடிகள்
    என் கடன் பணி செய்து கிடப்பதே - இது யாருடைய நூல்

    ReplyDelete
  17. reverse degree is eligible for pg trb pl call 9659473985

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.