Monday, 27 October 2014

மூளைக்கு வேலை-பதில் சொல்லுங்க

மூளைக்கு வேலை

1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் .
ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து.
ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார்.
அவர் மரணபடுக்கையில் இருக்கும் போது மந்திரியை கூப்பிட்டு என் மகன்களுக்கு நான் சொல்வது போல் இந்த 19 குதிரையை பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
அவர் சொன்னது – முதல் மகனுக்கு மொத்த குதிரையில் பாதியும் , இரண்டாவது மகனுக்கு மொத்த குதிரையில் நான்கில் ஒரு பங்கும் , மூன்றாவது மகனுக்கு மொத்த குதிரையில் ஐந்தில் ஒரு பங்கும் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டார்
.

மந்திரியும் ராஜா சொன்னது போலவே பிரித்து கொடுத்தார் .எப்படி ?





2)ஒரு கூடையில் ஒரே அளவானதும் ஒரே மாதிரியானதுமான பந்துகள் இருக்கின்றன. ஆனால்அவற்றில் ஒரு பந்து மட்டும் நிறை அதிகமானது.உங்களுக்கு ஒரு தராசு தரப்படுகிறது. இரு முறை மட்டுமே தராசை பயன்படுத்த முடியும். எவ்வாறு பாரமான பந்தை கண்டுபிடிப்பீர்கள்?...





3)பாபு டிவியில் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தான் .
இந்தியா வெற்றிபெற 2 பாலில் 7 ரன் தேவை .
சச்சின் பேட்டிங் , தோனி ரன்னரில் உள்ளார் .
சச்சின் & தோனி இருவரும் 94 ரன் எடுத்திருக்கிறார்கள் .
திடீரென்று கரண்ட் போய்விட்டது .
கரண்ட் வந்தவுடன் டிவியை போட்ட பாபுக்கு அதிர்ச்சி .
இந்தியா வெற்றியும் பெற்றுவிட்டது மற்றும் சச்சின் , தோனி இருவரும் 100 ரன்னும் அடித்து விட்டார்கள் ,.எப்படி?





4) மொத்தம் 1000 எழுமிச்சை பழம் உள்ளது.
10 பைகள் உள்ளது.
10 பைகளில் முதலில் 1000 எழுமிச்சை பழத்தை எப்படி வேண்டுமேனாலும் பிரித்து கட்டி வைத்து கொள்ளலாம்.
ஆனால் எழுமிச்சை பழம் 10 பைகளில் போட்ட பிறகு மிச்சம் இருக்க கூடாது.
யார் எவ்வளவு எழுமிச்சை பழம் கேட்டாலும் பையை பிரிக்காமல் எடுத்து கொடுக்கவேண்டும்.
1000 எழுமிச்சை பழத்திற்கு மேல் போக கூடாது.

10 பைகளில் ஒவ்வொரு பைகளிலிலும் எத்தனை பழங்கள் இருக்கும் ?





5)ஒருவர் கையில் கொஞ்சம் பூக்களுடன் கோவிலுக்கு செல்கிறார்.
கோவில் வாசலில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை போட்டால் தான் வாசல் கதவுதிறக்கும்.மூன்று வாசல்களை கடந்து தான் தரிசனத்துக்கு செல்லவேண்டும்.தெப்ப குளத்தில் அவர் எத்தனை பூக்களை போடுகிறாரோ அது இரண்டு மடங்கு பூக்களாக திரும்ப கிடைக்கும்.மூன்று முறை தான் குளத்தைஉபயோகிக்கமுடியும்.முதலில் குளத்தில் அவர் கொண்டு வந்த பூக்களை போடுகிறார்.அது இரண்டு மடங்கு பூக்களாக கிடைக்கிறது.
அவற்றில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை முதல்வாசலில் போடுகிறார்.முதல் வாசல் திறக்கிறது.
மீண்டும் தெப்ப குளத்தில் மீதமுள்ள பூக்களை போடுகிறார்.இரண்டு மடங்கு பூக்களாக கிடைக்கிறது.
அவற்றில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை இரண்டாவது வாசலில் போடுகிறார்.இரண்டாவது வாசல் திறக்கிறது.
மீண்டும் தெப்ப குளத்தில் எஞ்சியுள்ள பூக்களை போடுகிறார்.இரண்டு மடங்கு பூக்களாக திரும்ப கிடைக்கிறது.
கிடைத்த அனைத்து பூக்களையும் மூன்றாவது வாசலில் போடுகிறார்.கதவு திறக்கிறது.தரிசித்து விட்டுவெருங்கையுடன் வீடு திரும்புகிறார்.

கேள்வி இது தான்.....

1)அவர் எத்தனை பூக்கள் வரும்போது கையோடு எடுத்து வந்தார்?
2)ஒவ்வொரு வாசலிலும் கதவு திறக்க எத்தனை பூக்களை போட்டார்?

பி.கு : மூன்று வாசல்களையும் திறக்க ஒரே எண்ணிக்கையிலான பூக்கள் தான் போட பட வேண்டும்.



6) இரட்டையராகப் பிறந்தவர்களுள் (twins / ட்வின்ஸ்) முதலில் பிறந்தவன் இரண்டாவது பிறந்தவனுக்கு தம்பி (செல்லப் பெயர் அல்ல, வயதுபடி).  இது எப்படி சாத்தியம் ?







11 comments:

  1. மந்திரி தனது குதிரையை அதனொடு சேர்த்தார். மொத்தம் 20. சரி பாதி மூத்த மகனுக்கு ஆக 10. நான்கில் ஒரு பங்கு 5. மீதம் இருப்பது 5. மூன்றாவது மகனுக்கு ஐந்தில் ஒரு பங்கு 4. அதை கடைசி மகனுக்கு கொடுத்து விட்டு மந்திரி தனது குதிரை மீண்டும் எடுத்து கொண்டார்.

    ReplyDelete
  2. 2 பந்துகளை எடுத்து விட்டு மீதம் உள்ள 6 பந்துகளை சரி பாதியாக பிரித்து எடை போட வேண்டும். ஒரே அளவாக இருந்தால் தனியே எடுத்து வைத்த 2 பந்துகளை எடை போட வேண்டும். ஒரே அளவாக இல்லை என்றால் கூடுதலாக இருந்த 3 பந்துகளை எடுது அதில் ஒன்றை தனியே வைத்து விட்டு இரண்டை மட்டும் எடை போட வேண்டும். ஒன்றாக இருந்தால் தனியே எடுத்து வைத பந்து எடை அதிகமானது.

    ReplyDelete
  3. 1)1/2+1/4+1/5=19,19/20=19,20...1/2=10,1/4=5,1/5=4.....ans... 10,5,4

    ReplyDelete
  4. Avar koviluku varumpodhu 7 poo eduthutu vandhar. Ovoru vasallayum 8 poo pottar.
    Modha 7 poo va kokathula podurapa adhu 14 poo akudhu modha vasalla 8 poo potadhuku aparam micham 6 poo erukudhu adha thirumba kolathula potta 12 poo kedaikum adhula 8 poo va 2 vadhu vasalla podarar micham 4 poo eruku adha thirumba kolathula potta 8 poo kedaikum adha 3 vadhu vasalla potruvaru.

    ReplyDelete
  5. Vasandh kiruzha sir...
    Brain questions very nice..pla update daily. ..

    ReplyDelete
  6. Yeli thinnu micha pazham....
    1,2,4,8,16,32,64,128,256,489....
    Righta....right tu....

    ReplyDelete
  7. Q3..............sir.muthal sachin vilayadi iruppar muthal banthai boundiry ellaikku adithuirppar 4 ottam odiiruppar pilldar athaithaduththu bowler kitta adithuiruppar athai bowlar vittu iruppar atharkku over throw murayil odum pothu 3 ottam odumpothu sachin runout akiruppar adutha banthai dhoni 6 adithu iruppar...............

    ReplyDelete
  8. Q6 annan ki.mu..............thambi ki.pi

    ReplyDelete
  9. Sachin six adichitu adutha ball run odumbodhu run out agitar but adhu no ball so ball not count and run not added dhoni six adichirupar OK va?

    ReplyDelete
  10. சச்சின் அடித்தபந்து கீப்பருக்கு பின்னால் ஃபீல்டர் வைத்திருந்த ஹெல்மட்டில் பட்டிருக்கலாம். அதற்கு ஃபெனால்டி 5 ரன்கள், சச்சின் ஒரு ரன் ஓடியிருக்கலாம். மொத்தம் 6 ஆகவே சச்சின் செஞ்சுரி.
    1 பாலில் 1 ரன் தேவை, தோனி சிக்ஸர் அடிக்க அவரும் செஞ்சுரி..

    (ஹெல்மெட் ஃபெனால்டி எக்ஸ்ட்ராஸுக்கு சேருமா, பேட்ஸ்மேனுக்கு சேருமான்னு கன்ப்யூஸ்.)

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.