Thursday, 9 October 2014

திண்டுக்கல் மாவட்டத்தில் மூடப்படும் அரசுப்பள்ளிகள் கேள்விக்குறியாகும் கிராமப்புற மாணவர்கள் கல்வி

திண்டுக்கல், அக்.8-திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த கல்வியாண்டில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமலை வேளாண் பண்ணைஆரம்பப்பள்ளியும், கூத்தம்பூண்டி ஊராட்சியில் உள்ள
மீனாட்சிவலசு ஆரம்பப் பள்ளியும் மூடப்பட்டுவிட்டது.சிறுமலை வேளாண் பண்ணைபள்ளி 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் பளியர் இனத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்துவந்தனர். வறட்சியால், பளியர் இன மக்கள் இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர். இதனால் மாணவர்கள் வருகை குறைந்தது. இப்பள்ளிக்கு ஆசிரியர்கள் பெரும்பாலும் வராத நிலையில் பளியர் இனத்தைச் சேர்ந்த 5-ம் வகுப்புவரை படித்த பெண் ஒருவர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து வந்தார். அந்தப் பெண்ணும் திருமணமாகி சென்றுவிட்டதால் மாணவர்களுக்கு சொல்லித்தர ஆசிரியர் இல்லை.கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இப்பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் இப்பள்ளியில் படித்து வந்த 13-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள தாழைக்கடை பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். தாழைக்கடை பள்ளியின் நிலையும் பரிதாபமாக உள்ளது. இந்தப்பள்ளிக்கு இரண்டு பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மகப்பேறு விடுப்பில் சென்றுவிட்டார். ஒருவர் மட்டுமே பாடம் சொல்லித் தருகிறார்.இந்தப் பள்ளியில் பளியர் இன பழங்குடி குழந்தைகள் ஒன்பது பேர் படித்து வருகிறார்கள். மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் குப்பனவலசில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்பப்பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், பொருளூரை அடுத்துள்ள புளியம்பட்டி அரசுப்பள்ளியும், குருவப்பன்நாயக்கன் வலசில் உள்ள பள்ளியும் கடந்தாண்டு மூடப்பட்டன. மீனாட்சிவலசில் உள்ள பள்ளி இந்த ஆண்டு மூடப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அரசுப்பள்ளிகள் மூடப்படுவதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் மலைவாழ் மக்கள் வீட்டுக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.திண்டுக்கல் ஆட்சியரும், மாவட்ட கல்வித்துறையும் கிராமப்புற மாணவர்களின் கல்வியை பாதுகாக்க விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது

18 comments:

 1. Replies
  1. மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.

   அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.

   உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

   சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.

   உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.

   ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.

   பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.

   அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.

   நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.

   Delete
 2. Evening vanthu ellaraium pesikiraen

  ReplyDelete
 3. வணக்கம் வினோ மேடம் நீங்கள் அனுப்பிய மெட்டீரியல் கிடைக்கப்பெற்றது மிக்க நன்றி என்று மூன்று எழுத்தில் சொல்ல மாட்டேன்

  ReplyDelete
  Replies
  1. Admin inum sila piragu anupappadum.nan velaiku senrullathal vanthu anupukiraen

   Delete
  2. நன்ன்ன்ன்ன்றி..................

   Delete
  3. Paaa'ra 3எழுத்துக்கு பதில் 8எழுத்து.........சீக்கிரம் பச்சை இங்கில் கையொப்பம் இடுங்க அட்மின்

   Delete
  4. கண்டிப்பாக ஆம் நான் நேற்று கேட்டேன் பதிலை கானோம் பள்ளி எப்படி இருக்கிறது

   Delete
  5. எனக்கு தெரியவில்லை அட்மின் நான் மறுபடியும் பயிற்சிக்காக 3நாள் வேறு இடத்திற்கு சென்றுள்ளேன். பள்ளி சூழல் பிடித்திருக்கிறது

   Delete
  6. கட்டம் போட்ட சட்ட போட்ட அட்மின் Wr r u? சீக்கிரம் வாங்க உங்க காணோம்னு வெங்கட் சார் தேடுறார்

   Delete
  7. யார் வெங்கட்

   Delete
  8. Venkat venkatnu oruthar varubarae avarthan.admin

   Delete
 4. Replies
  1. மாலை வணக்கம்

   Delete
 5. BC & MBC TAMIL MAJOR 67.50 ABOVE WEIGHTAGE CANDIATES CALL 8883773819

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.