Friday, 10 October 2014

காலை வணக்கம் !

பொன்மொழிகள்

மனிதனின் மனசாட்சி
தெய்வத்தின் குரல்
-பைரன்

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும்.
ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.


நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை
-கவிஞர் வைரமுத்து

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி

மரியாதைக்கு விலை கிடையாது.
ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்
-மாண்டேகு

ந‌ல்ல‌வ‌னுக்கு நலம் ந‌ட‌க்கும்
என மட்டும் ந‌ம்பாது
வ‌ல்ல‌வனாயும் வாழ்ந்துவிடு பாப்பா
-பாரதியார்

“ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!”
-கவிஞர் வாலி

ஓடத் தொடங்குமுன்
நடக்க பழகிக்கொள்வோம்.

ஒரு விளக்கு இன்னொரு விளக்கை
ஏற்றுவதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.

ஒருவன் கற்பிக்கும் போது
இருவர் கற்றுக்கொள்கின்றனர்.
-ராபர்ட் ஹாஃப்

புற்கள் தாக்குபிடிக்கும்
புயலில் புன்னைமரங்கள் வீழ்ந்துவிடுகின்றன.

வெண்ணெயை உருக்கும்
அதே கதிரவன் தான்
களிமண்ணை இறுக்கவும் செய்கின்றது.

அன்பாயிருங்க,
அதுக்குனு அடிமையாயிடாதீங்க
இரக்கம் காட்டுங்க,
பாத்து ஏமாந்திடாதீங்க.

நீ திருந்து..
நாடே திருந்தும்…

தெய்வம் காட்டுமே தவிர
ஊட்டாது.

God helps those who help themselves

அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது.
ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது,
கடவுளின் பரிசு.

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம்.
ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்…"
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது……."
"உன் மனத்தின் உயரமே… உன் வாழ்க்கையின் உயரம்…"

நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.

வெற்றி என்பது என்ன?
உங்கள் கையொப்பம், ஆட்டோ கிராப் ஆனால் அதுவே வெற்றி.

வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

நண்பனை காணாவிடத்திலும்,
ஆசானை எவிடத்திலும்,
மனையாளை பஞ்சணையிலும்,
வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.

ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது
அது இல்லாமைக்குச் சான்றில்லை

"வலுவான விதியே!
ஒரே ஒரு கோடைகாலம் எனக்கு அளி!
மெலிதான கானங்கள் நிறைந்த ஒரே ஒரு
வசந்தம் எனக்குக் கொடு
அந்த கானங்களை நிரப்பிக் கொண்டபின்
விருப்பத்தோடு என் இதயம்
இறக்கத் தயார்”
-ஃப்ரெட்ரிக் ஹோல்டர்வன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

முதியோர் சொல்லும்
முதுநெல்லியும்
ஒரே மாதிரி.
முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்

61 comments:

 1. என் இனிய குருகுல நண்பர்களுக்கு காலை வணக்கம் !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் BRO...........

   Delete
  2. காலை வணக்கம் நண்பர்களே

   Delete
  3. அனைவருக்கும் காலை வண்க்கம்....
   வசந்த் கிரிஜா வாழ்த்துக்கள்..

   Delete
  4. என் நண்பர்கள் அனைவரும் நலமா ?

   Delete
  5. காலை வணக்கம் நண்பர்களே

   Delete
  6. அருமை, வாழ்த்துகள் வசந்த் சார்

   Delete
  7. அனைவருக்கும் நன்றி!

   Delete
  8. கட்டம் போட்ட சட்ட போட்ட அட்மின் எங்க போனாலும் தினமும் காலை வணக்கம் சொல்லுங்க அனைவரும் நலம் தாங்கள் நலமா?

   Delete
 2. காலை வணக்கம் ...நண்பர்களே. !!

  ReplyDelete
 3. very nice vasanth girija sister..thank u..

  ReplyDelete
 4. வெற்றிக்குப் பிறகு
  தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
  தோல்விக்குப் பிறகு
  தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

  ஆழகான வரிகள் தோழீ..............

  ReplyDelete
  Replies
  1. தோழீ.........இல்லை அவர் தோழா......

   Delete
 5. அனைவருக்கும் வணக்கம்
  சராசரி மனிதனின் நுண்ணறிவு எவ்வளவு?

  ReplyDelete
 6. குருகுல நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  ReplyDelete
 7. அருமையான பதிவு வசந்த்.......

  குருகுல நண்பர்களுக்கு காலை வணக்கம்.

  ReplyDelete
 8. Dear karthick and ponmari sir........ நான் வினாத்தாள் முடித்து விட்டேன். இன்று மதியத்தியத்திற்குள் அனுப்பி விடுகிறேன். நான் E.kalappai எனும் Font ல் டைப் செய்திருக்கிறேன்...... so உங்களுக்கு எழுத்துகள் தெரியுமானு தெரில .......so along with question paper i will attach the e.kalappai software ....... pls check.......thank you....

  Valarmathi.

  ReplyDelete
  Replies
  1. வளர்மதி சகோதரியே இனிய காலை வணக்கம், வினா தயார் செய்ததற்கு மிக்க நன்றி ,

   Delete
 9. இஃது
  பொன்மொழிகள் அல்ல
  என்
  கண்மணிக்குள்
  ஊடுருவிய
  கணீர் மொழிகள்.

  வாழ்க நீடூழி சகோதரா,

  ReplyDelete
 10. பழையது ஆனால் புதிய பதிவு

  ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

  தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

  இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

  குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

  இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

  "ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

  அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

  இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

  அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!
  குருகுல நண்பர்களுக்கு காலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. அருமையான தத்துவம் மிக்க நன்றி நண்பரே

   Delete
 11. அனைவருக்கும் காலை வணக்கம்

  ReplyDelete
 12. Dear Sir

  Please upload PG English materials or previous year question paper

  ReplyDelete
 13. Allegory-ஒட்டுவமை
  Alliteration-முற்று மோனை

  Allusion-மேற்கோள்

  Anticlimax-முரண்தொடை

  aphorism-பழமொழி சூத்திரம்

  ReplyDelete
  Replies
  1. Super bro/sister! Ivlo naal enga irundhinga?

   Delete
  2. உலகத்தில் தான்.,....

   Delete
 14. asyndeton-உம்மைத்தொகை
  beriphasis-மீமிசை
  climax-ஏற்றவணி
  epigram-சுருங்கச்சொல்லல்
  euphemism-இடக்கரடக்கல்
  hyper bole-உயர்வு நவிற்சி
  irony-வஞ்சப்புகழ்ச்சி

  ReplyDelete
 15. ungal sevaikku munnal nan seivadhu kaal thoosi alavu dhan girija sister

  ReplyDelete
  Replies
  1. அய்யோ..பெரிய வார்த்தைகள் வேண்டாம் சகோதரி ..உங்கள் சேவை தொடரட்டும்..

   Delete
 16. synecdoche-பிறிதுமொழிதல்
  simile-உவமை
  pun-சிலேடை
  metonymy-ஆகுபெயர்
  metaphor-உருவகம்

  ReplyDelete
 17. Hai friends good morning
  Who developed the first intelligence test?
  Alfred binet
  Charles edward spearman
  Robert sternberg
  David wechsler

  ReplyDelete
 18. ழ ள ல
  indha 3 eluthugalayum eppadi uchcharikkanumnu yaravadhu explain pannunga sirs/madams.tongue touch eppadi use pannanumnu sollunga pls

  ReplyDelete
  Replies
  1. First year dted tamil bookla picture iruku parunga

   Delete
 19. தகுதித் தேர்வில் ஆங்கில வினாக்களைளுக்கு உரிய குறிப்புகள்(tips&tricks) கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Second language acquistion is more effective when it
   Involves periodic revision work by the teacher and students
   Involves mostly self-study by students,using certain guidelines
   Is practised in situations familiar to students
   Is.used as the basis for discussing grammatical concepts

   Delete
  2. Is practised in situations familiar to students

   Delete
 20. A reacher. Collects and reads the work of the class,yhen plans and adjusts the next lesson to meet student needs. He/she is doing
  Assessment as learning
  Assessment for learning
  Assessment at learning
  Assessment of learning

  ReplyDelete
 21. Gender discrimination in aclassroom
  May lead to mininshed effort or performance of the students
  May lead to enhanced effort or performance of the male students
  Is done more by the male teachers than their female counterpartscounterparts
  Doesnot affect the performance of the students

  ReplyDelete
  Replies
  1. May lead to diminshed effort or performance of the students

   Delete
 22. Phonological awareness to the ability to
  Speak fluently and accurately
  Know,inderstand and write
  Master the rules of grammar
  Reflect and manipulate the sound structure

  ReplyDelete
  Replies
  1. Reflect manipulate the sound structure

   Delete
 23. The nature nurture debate refers to
  Behaviour and environment
  Environment and biology
  Environment and upbringing
  Genetics and environment

  ReplyDelete
 24. accusative case-இரண்டாம் வேற்றுமை
  case-வேற்றுமை
  causative verb-பிறவினை
  change-விகாரம்

  combination-புணர்ச்சி
  dative case-நான்காம் வேற்றுமை
  genitive case-ஆறாம் வேற்றுமை
  locative case-ஏழாம் வேற்றுமை
  vocative case-விளி வேற்றுமை

  ReplyDelete
 25. புதிய பதிவுக்கு வாருங்கள் நண்பர்களே புதிய நண்பர்களுக்கு வழி காட்டுங்கள் நண்பர்களே

  ReplyDelete
 26. DtEd book illaye sister.k thank u i will try to get it.

  ReplyDelete
  Replies
  1. Seventh tamil book page no.176parunga

   Delete
 27. 1.நினைவு மஞ்ஜரி ‍‍‍‍....யாருடைய நூல்?
  2.நினைவு மஞ்ஜரி.....என்ன வகை நூல்?
  3.காடம்பாடியில் பிறந்தவர் யார்?
  4.உ.வே.ச வின் தமிழ் பணீ ஆண்டுகள் எத்தனை?
  5.இளம் போதீனியார் யார்?

  ReplyDelete
 28. 6.பட்டினத்தார் இயற்பெயர் என்ன?
  7.பட்டினத்தார் சமாதி அடைந்த இடம் எது?
  8.பாலைக்கலி பாடியவர் யார்?
  9.குறீஞ்சி கலி பாடியவர் யார்?
  10.முல்லை கலி பாடியவர் யார்?

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.