Thursday, 9 October 2014

தமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள் ஆன்லைன் தேர்வுக்கான விடைகள்

இங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்


1. தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு - இன்பத் தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு
   என்று பாடியவர் ----------
2. நிவேதனம் என்பதன் சொற்பொருள் ---------
3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் ----------

4. ஆறுமுக நாவலரை வசனநடை கைவந்த வள்ளலார் எனப்பாராட்டியவர்    ----------
5. எந்தெந்த பயிர்க்கு எவ்வளவு இடைடைவெளி வேண்டும் நெல்லுக்கு ----------கரும்புக்கு ----------
6. சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் என்று பாடியவர்
----------
7. இரு பொருள் தருமாறு சொற்களைப் பாட்டில் அமைத்துப் பாடுவதில் வல்லவர் ----------
8. வில்லி புத்தூராரை ஆதரித்தவர் ---------
9. செந்தமிழ்ச் செல்வர் எனும் சிறப்புப் பெயர் பெற்றவர் ----------
10. "நாளை என் தாய்மொழி சாகுமானால்" இன்றே நான் இறந்து விடுவேன் என்று கூறியவர் ----------
11. ---------- ஆண்டு பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நிநினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்டது
12. ---------- ல் சிறந்தன்று வாய்மையுடைமை
13. தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் ----------
14.இளந்தத்தனாரை  சிறை மீட்ட செம்மல் ----------
15. கால்டுவெல் மறைந்த ஊர் ----------
16.திருக்குறள் ------        மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது 
17. தமிழ் மூவாயிரம் என்ற சிறப்புப் பெயர் பெற்ற நூல் --------------
18. ஐன்னல் என்பதன் தமிழ்ச்சொல் ------------
19. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை  -----------
20. செயிற்றியம், முறுவல், நன்னூல் , சயந்தம்  இவற்றில் பொபொருந்தாத ஒன்று எது?
21. வேளாண் தொழிலில் உள்ள கூறுகள்
----------
22. வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக்கூடாது என்ற முதுமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் ----------
23. செற்றாரைச் செறுத்தலில் --------சிறந்தன்று
24. தமிழ் என்னை ஈர்த்தது ; குறளோ என்னை இழுத்தது என்று மொழிந்தவர் ----------
25. பொதுமை வேட்டலில் இடம் பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை ----------
26. காளமேகப் புலவரின் இயற்பெயர் ----------
27. தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு
------------ எனப் பொருள்.
28. வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ----------
29. முல்லை நிலத்தில் ---------- என்னுமம் வீர விளையாட்டு நடைபெற்றது
30. இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர்  --
31. பறவைகள் இடம் பெயர்தலை ---------- என்பர்
32. ஐராவதீசுவரர் கோவில் யாரால் கட்டப்பட்டது? 
33. மனித சாதி எனுமம் ஓரினமாகக் கொள்ள வேண்டும் என கூறியவர் ----------
34. உ வே சா அவர்கள் பதிப்பித்த நூல்களில் புராணங்களின் எண்ணிக்கை ----------
35. ஒடுங்கக் காண்பது ----------
36. உலகப்புத்தக தினம் ----------
37. கவிஞரேறு என்னும் பட்டம் பெற்றவர் ------------- இவரின் இயற்பெயர் ----------
38.மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
      -----------
39. டால்ஸ்டாயின்  ---------- உலகின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்று
40. வாடக்காண்பது ----------
41. பகுத்தறிவுக்கவிராயர் ----------
42. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம்            ஏந்திப் போராடிய முதல் பெண்மணி ----------
43.காந்தியடிகளால் தென்னாட்டின் ஜான்சி ராணி என அழைக்கப்பட்டவர் ----------
44. தமிழகச் சிற்பக்கலையின சிறப்புக்கு ஒரு சோற்றுப் பதமாய் விளங்கும் ஊர் ----------
45. முத்துராமலிங்கத்தேவரை தேசியம் காத்த செம்மல் எனப் பாராட்டியவர் ----------
46. திருப்பனந்தாளிலும் காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவியவர் ----------
47. இராமலிங்க சுவாமிகள் சரிதம் எனும் நூலின் ஆசிரியர் ----------
48. திரினிட்டி கல்லூரி பேராசிரியரின் பெயர்
   ----------
49. தமிழ் படித்தால் அறம் பெருகும், தமிழ் படித்தால் அகத்தில் ஒளி பெருகும் என்று கூறியவர் ----.
50.மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் இப்பாடல் இடம் பெற்ற நூல்
- ---------
51.உழவர்களின் நண்பன் ----------
52.டெலஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல்
----------
53. பறவைகளை ---------- வகையாகப் பிரிக்கலாம்
54. கடலில் நான் ஒரு முத்தென்று நீ காட்டு என்று பாடியவர் ----------
55. மனிதனின் மனநிலையை ----------,  ------;        ---------- ;  ------------- எனக்கூறியவர்              ----------
56. பள்ளிக்கூடம் வீட்டைப்போன்று இருக்க வேண்டும் என்று கூறியவர் -----------
57. மதுரை என்பது கல்வெட்டில் ---------- என்று உள்ளது
58. நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர் ----------
59. திரிகடுகம் ---------- வெண்பாக்களை உடையது
60. மருதகாசி பிறந்த ஊர் ----------
61. வருந்தக் காண்பது ----------
62. கடற்கரைச்  சிற்றூர்கள் ----------  எனப்பெயர் பெறும்
63. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர்
    ----------
64. நடுவண் அரசு உ வே சா அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு ----------
65 அம்பேத்கர் பிறந்த மாநிலம் எது--------------

66. இந்திரா காந்தி., பேராசிரியர் ----------  என்பவரின் உதவியுடன் பாடங்களைப் படித்தார்
67. உ வே சா அவர்களின் தமிழ்ப்பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ---------- ;
----------  பாராட்டியுள்ளார்கள்
68. தட்சணசித்திரம் எனும் ஓவிய நூலுக்கு உரை எழுதியவர் ----------
69. தமிழைத்தலைக்கச் செய்த செம்மல்
      ----------
70. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டவர் -----------
71. மதங்க சூளாமணி  ஆராய்ச்சி நூலின் ஆசிரியர் ----------
72. பிரகலாதன் , மனோகரன் , இலவகுசா , பவளக்கொடி  இவற்றில் பொருந்தாத ஒன்று
73. நீடுளி   காக்கும்கை   காராளர்   கை   என்ற பாடலின் ஆசிரியர்  ----------
74. ---------- என்பவரின்கவிதை நூல்கள் 20 ம் நூற்றாண்டின் இலக்கியத்துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன
75. "நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்" என ஓவியரை ----------   என்பவர் ததம் உரையில் குறிப்பிட்டுள்ளார

76. இராமானுஜம் திண்ணைப்பள்ளியில் படித்த ஊர் ----------
77. முத்துராமலிங்கத்தேவரின் ஆசிரியர் பெயர்            -----------
78. அறுவை வீதி என்பதன் பொருள் ----------
79. அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும்        ஆகையால் புதியவற்றை ஏற்க வேண்டும்              எனக் கூறியவர் ----------
80. சந்திரவாணன் கோவை எனும் நூலின் ஆசிரியர் --------
81. ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது ---------- எனப்படும் .  இதனை
------ என்றும் கூறுவர்.
82. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய
---------- எனும் நூல் நடுவண் அரசின்
  --------- விருது பெற்றுது.
83. ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த ஊர் -------  தற்போது
------------ என அழைக்கப்டுகிிறது
84. மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர்    ----------  அவர் பிறந்த ஊர் ---------
85. யானையைக் கொன்று அதன் தோலைத் தன் மீது உடுத்திக்கொள்ளும் யானை உரி போர்த்தவர் ---------
86. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே எனக் கூறும் நூல் ---------
87. டியூப்லைட் என்பதன் தமிழ்ச்சொல் ------------
88. இன்று பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் மூன்று அவை -----------,  -------  -----
89. மேதையில் சிறந்தன்று
  ---------
90. தலா புராணங்கள் பாடுவதில் வல்லவர்
-----------
91.சுற்றுச்சூழல் தினம் ------------
92. மதுரைக் கலம்பகம் எனும் நூலின் ஆசிரியர் ----------
93. மேரி கியூரி இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு ----------
94. விசுவபாரதி மேற்கு வங்காளத்தில்
்----------எனும் இடத்தில் உள்ளது
95. தராசுராம்
கோவிலின் கூம்பிய விமானத் தோற்றம் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கூறிய வானவியல் 
அறிஞர் -----------
96. நாண்மணிக்கடிகை நூலின் ஆசிரியர்
----------
97.மேதி என்பதன் சொற்பொருள் ------
98. குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் இயற்பெயர் --------
99. குவை என்பதன் சொற்பொருள் ------
100. தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் ----------
  விடைகள்

1. பாரதிதாசன்
2. படையலமுது
3. பாரதிதாசன்
4. பரிதிமாற்கலைஞர்
5. நண்டோட,     ஏரோட
6. பாரதியார்
7. கவிகாளமேகம்
8. வக்க பாகையை ஆட்கொண்ட வரபதி ஆட்கொண்டான்
9. தேவநாயப்பாவணர்
10. ரசூல் கம்சதேவ்
11. 1971
12. வண்மையில்
13. வ. வே. சுப்பிரமணியம்
14. கோவூர்கிழார்
15. கொடைக்கானல்
16. 107
17. திருமந்திரம்
18. காலதர்
19. 5818
20. நன்னூல்
21. 6
22. மு.வரதராசனார்
23. தற்செய்கை
24.  12
25. 430
26. வரதன்
27. ஓவியம்
28. 1972
29. ஏறுதழுவுதல்
30. ஜான் பாஸ்டல்
31. வலசைபோதல்
32. இரண்டாம் ராச ராச சோழன்
33. பெரியார்
34.  12
35. யோகியோர் உள்ளம்
36. ஏப்ரல் 23.
37. வாணிதாசன்,  எத்திராசலு (             எ) அரங்கசாமி
38. ஈசானதேசியர்
        ( எ) சுவாமிநாததேசிகர்
39. போரும் அமைதியும்
40. மின்னார்மருங்கு
41. உடுமலை நாராயண கவி
42. வேலு நாச்சியார்
43. கடலூர் அஞ்சலையம்மாள்
44. கும்பகோணம்
45. திருவிக
46. குமரகுருபரர்
47. அசலாம்பிகை அம்மையார்
48. ஈ. எச். நெவில்
49. பெருஞ்சித்திரனார்
50. புறநானூறு
51. பாம்பு
52. தொலைநோக்கி
53. ஜந்து
54. தாராபாரதி
55. இருள், மருள், தெருள்,                     அருள்,   
       முத்துராமலிங்கத்தேவர்.
56. காந்தியடிகள்
57. மதிரை
58. கடலூர் அஞ்சலையம்மாள்
59. 100
60. திருச்சி,   மேலக்குடி காடு
61. சூல் உளைச்சங்கு
62. பாக்கம்
63. நரேந்திரதத்
64. 2006
65. மராட்டிய மாநிலம்
66. கிருபாளினி
67. சூலியல் வின்சோ, ஜி யு போப்
68. முதலாம் மகேந்திரவர்மபல்லவன்
69. மறைமலையடிகள்
70. அம்புஜத்தம்மாமாள்
71. சுவாமி விபுலானந்தர்
72. மனோகரன்
73. கம்பர்
74. ந.பிச்சமூர்த்தி
75. நாச்சினார்க்கினியார்
76. காஞ்சிபுரம்
77. குறைவற வாசித்தான் பிள்ளை
78. ஆடைகள் விற்கும் கடைப்பகுதி
79. பெரியார்
80. அந்தக்கவி வீர ராகவர்
81. சிலேடை,     இரட்டறமொழிதல்
82. ஆலாபனை,   சாகித்திய அகாதெமி
83. குருகூர்,   ஆழ்வார்திருநகரி
84. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,  செங்கப்படுத்தான் காடு
85. கஜசம்ஹாரமூர்த்தி
86. தொல்காப்பியம் 87. குழல்விளக்கு
88. கிரேக்கம், லத்தீன், சமற்கிருதம்
89. கற்றது மறவாமை
90. மீனாட்சி சுந்தரனார்
91. ஜீன் 5
92. குமரகுருபரர்
93. 1903
94. சாந்தி நிகேதன்
95. கார்ல்சேகன்
96. விளம்பி நாகனார்
97. எருமை
98. சுல்தான் அப்துல் காதிறு
99. குவியல்
100. கதரின் வெற்றி

இதனை pdf ல் படிக்க download
வழங்கியவர் மரியாதைகுரிய  பொன்மாரி  ஆசிரியர்

4 comments:

  1. BC & MBC TAMIL MAJOR 67.50 ABOVE WEIGHTAGE CANDIATES CALL 8883773819

    ReplyDelete
  2. thanks for giving such excellent effort to make this valuable information.

    congrats

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.