Sunday, 26 October 2014

குரூப் 4 ஏழாம் வகுப்பு இலக்கணம் பாகம் 6 மூவகை போலி பகுபதம் பகாபதம் அணி இலக்கணம்

போலி இவை மூன்று வகைப்படும் முதற்போலி இடைப்போலி கடைப்போலி

ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறுபட்டாலும் அதன் பொருள் மாறுபடாது இருப்பின் அது முதற் போலி ஆகும். எடு மஞ்சு -மைஞ்சு என வருவது ம-மை ஆக மாறிவிட்டது இவ்வாறு முதல் எழுத்து மாறிவருவது முதற் போலி ஆகும்

ஒரு சொல்லின் இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இடைபோலி ஆகும் எடு முரசு-முரைசு என மாறுபடுகிறத


கடை போலி என்பது இறுதி எழுத்து மாறுபட்டாலும் பொருளில் மாறுபாடு ஏற்படாதது இது கடை போலி ஆகும் எகா அறம்-அறன்

இது போக முற்று போலி உள்ளது ஐந்து-அஞ்சு என அனைத்து எழுத்துக்கள் மாறினாலும் பொருள் மாறமல் வருவது முற்றுபோலி ஆகும்

போலி என்பது ஒரு எழுத்து எழுத்து எங்கு மாறுபட்டாலும் அதன் பொருள் மாறாதது அகம் என்றால் உள்ளம் அகன்என்று திருவள்ளுவர் ஒரு குறளில் 7 ம் வகுப்பில் கூறியுள்ளார் அதுபோல முகம் என்பதற்கு முகம் என்று கூறியுள்ளார் பாருங்கள் இவ்வாறு பொருள் மாறாமல் கூறுவது போலி    

பகுபதம் பகா பதம்

பதம் சொல் மொழி கிளவி இவை அனைத்தும் ஒன்றை தான் குறிக்கும்

ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தந்தால் அது ஓரெழுத்து ஒரு மொழி எகா ( பூ தை ) ஒரெழுத்து ஒருமொழி 42 உள்ளது

 சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி  

ஒரு சொல்லை பிரித்தால் பொருள் தந்தால் அது பகுபதம் பிரித்தால் பொருள் தாரவிட்டால் அது பகா பதம்

நட வா போ நில் இவற்றை பிரித்தால் பொருள் தராது இவை பாகாபதம்

பகுபதம் பிரித்தால் பொருள்தரும்   பகுபத உறுப்புகள் 6 உள்ளது பகுதி விகுதி இடைநிலை,சந்தி  சாரிகை விகாரம் என உள்ளது 

அணி என்பது அழகு என்று பொருள் படும் இவை பலவகை உள்ளது செய்யுள்களை அழகுபடுத்த புலவர்கள் அணியை கையாண்டார்கள் இவற்றில் இயல்பு நாவிற்சி உயர்வு நாவிற்சி அணி என இரண்டு உள்ளது இயல்பாய் இருப்பதை இயல்பாய் கூறுவது இயல்பு நாவிற்சி அணி மலை விண்ணை தொடும் என மலையின் உயரத்தை வின்வெளி அளவுக்கு உயர்வாக கூறுவது உயர்வு நாவிற்சி அணி
 


 

13 comments:

 1. தலைப்பில் உள்ள தவறை திருத்தவும் கார்த்திக்...

  ReplyDelete
 2. நன்றி நண்பரே வேகமாக டைப் செய்வதினால் பிழை ஏற்பட்டுள்ளது

  ReplyDelete
 3. உவம உருபுகள் செய்யுளில் வெளிப்படையாக் வந்தால் உமையணி
  சான்று.
  1. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் போல்
  2. கனியிருப்பக் காய்கவர்ந்து அற்று
  3. பொய்யாமை அன்னப் புகழில்லை
  உவம உருபுகள்: போல, புரைய, ஒப்ப, மான, கடுப்ப, அன்ன, இன்ன, அற்று முதலியன.

  ReplyDelete
 4. AIDED SCHOOL VACANCY PG PHYSICS

  PLACE: CHENNAI ST.THOMAS MOUNT
  COMMUNITY : OC
  COMTACT - jegansaran@gmail.com, 8144170981

  ReplyDelete
 5. சில வேளைகளில் இந்த உவம உருபுகள் வெளிப்படையாக வராது. யாராவது எடுத்துச் சொன்னால் தான்(மறைந்து கிடப்பதை எடுத்துக் காட்டினால் தான்) விளங்கும். இவ்வாறு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி.
  சான்று
  1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு.
  இதில் உவம உருபு வரவில்லை. ஆனால் இதன் பொருள் எவ்வாறு எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகாக் கொண்டு இயங்குகிறதோ அது போல் இந்த உலகமானது ஆதி பகவனை முதலாகக் கொண்டு இயங்குகிறது. இது எடுத்துக்காட்டு உவமையணி.

  ReplyDelete
  Replies
  1. ராஜா சர் நானும் பலதடவை உங்களிடமும் விஜி அக்காவிடமும் அணி கண்டுபிடிக்க சொல்லித்தர கேட்டிருக்கிறேன் முடிந்தால் இன்று கூறவும்

   Delete
  2. உங்கள் கேள்விக்கு நாளை பதில் அளிக்கிறேன் தோழி. தாமதத்திற்கு வருந்துகிறேன்.

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. அணி இலக்கணம்
  இந்தப் பக்கத்தைக் கவனிக்கவும்
  அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,

  பொருள் அணிகள்தொகு

  அதிசய அணி(உயர்வு நவிற்சி அணி)
  அவநுதியணி
  ஆர்வமொழியணி(மகிழ்ச்சி அணி)
  இலேச அணி
  உதாத்தவணி
  ஏதுவணி
  ஒட்டணி
  ஒப்புமைக் கூட்டவணி
  ஒழித்துக்காட்டணி
  சங்கீரணவணி
  சமாகிதவணி
  சிலேடையணி
  சுவையணி
  தற்குறிப்பேற்ற அணி
  தன்மேம்பாட்டுரை அணி
  தன்மையணி(தன்மை நவிற்சி அணி,இயல்பு நவிற்சி அணி)
  தீவக அணி
  நிதரிசன அணி(காட்சிப் பொருள் வைப்பு அணி)
  நிரல்நிறை அணி
  நுட்ப அணி
  பரியாய அணி
  பரிவருத்தனை அணி
  பாவிக அணி
  பின்வருநிலையணி(பொருள் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  புகழாப்புகழ்ச்சி அணி
  புணர்நிலையணி
  மயக்க அணி
  மாறுபடுபுகழ்நிலையணி
  முன்னவிலக்கணி
  வாழ்த்தணி
  விசேட அணி(சிறப்பு அணி)
  விபாவனை அணி
  விரோதவணி
  வேற்றுப்பொருள் வைப்பணி
  வேற்றுமையணி
  சொல் அணிகள்தொகு

  எதுகை
  மோனை
  சிலேடை
  மடக்கு
  பின்வருநிலையணி(சொல் பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி)
  அந்தாதி
  வகைப்படுத்தப்பட வேண்டிய அணிகள்தொகு

  இரட்டுறமொழிதல் அணி
  இல்பொருள் உவமையணி
  உயர்வு நவிற்சி அணி
  உருவக அணி
  உவமையணி
  எடுத்துக்காட்டு உவமையணி
  தன்மை நவிற்சி அணி
  பிறிது மொழிதல் அணி
  வஞ்சப் புகழ்ச்சியணி

  ReplyDelete
 8. Replies
  1. இத்தனை அணிகளை ஒருசேர கொடுத்தால் மலைத்து விட மாட்டார்களா?

   Delete
 9. ethanai anikal erukka...? questions ethanai aniyill erunthu varum

  vasanth sir ur really great...

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.