Friday, 24 October 2014

குரூப் 4 ஏழம் வகுப்பு இலக்கணம் பாகம் 2

இடுகுறிபெயர்  காரணப்பெயர் என்றால் என்ன


1முன்னோர்கள் எவ்வித காரணமும் இன்றி ஒரு பொருளுக்கு வைத்த பெயர் இடுகுறி பெயர்கள் உதாரணம் மண் மரம் மலை காடு

2காரணத்துடன் ஒரு பொருளுக்கு பெயர் வைத்தால் அது காரணப்பெயர்கள் நான்கு கால்களை உடையதால் அது நாற்காலி இவ்வாறு காரணத்துடன் பெயர் வைத்தால் அது காரணப்பெயர்


இதில் பொதுப்பெயர் சிறப்பு பெயர்கள் என்று  2 உண்டு 


 இடுகுறிப்பெயர்கள் 
குழப்பம் எதுவும் வராது எளிமையாக புரியும் படி சொல்கிறேன் இடுகுறி பெயர்கள் மட்டும் மனதில் வையுங்கள் இதில் மரம் என்பது இடுகுறிபெயர்கள் ஏன் என்றால் முன்னோர்கள் எந்த ஒரு காரணமும் இன்றி இந்த பெயர் வைத்துள்ளனர் சரி தென்னை மரம் மாமரம் இவற்றிற்கு எதுவும் காரணம் உள்ளதா இல்லை அப்படி என்றால் இவையும் இடுகுறிப்பெயர்கள் தான் சற்று புரியும் படி சொன்னால் மரம் என்படு இடுகுறி பொதுப்பெயர் மாமரம் தென்னை மரம் என்றால் இடுகுறி சிறப்பு பெயர்கள்  

மாமரம் தென்னை மரம் பலா மரம் இதில் எந்த காரணமும் இல்லை அதாவது முன்னோர்கள் எந்த காரணத்தாலும் வைக்கவில்லை அதனால் இவை இடுகுறி பெயர்கள் தான் மரம் என்பது பொதுவாக அனைத்து மரங்களையும் மரம் என்பதால் அவை இடுகுறி பொதுப் பெயர் மாமரம் தென்னை மரம் என்பதால் இவை இடுகுறி சிறப்பு பெயர்கள்
  
காரண  பெயர்
சரி அடுத்து பார்ப்போம் காரணப்பெயர் இதில் பறவை என்பத காரணப்பெயர் ஏன் என்றால் பறக்கிறதால் இதில் கிளி மயில் புறா அனைத்தும் அடங்கும் இவை காரணப் பொதுப் பெயராகும் மரம் கொத்தி என்றால் மரத்தை கொத்துவதால் சிறப்பு பெற்று இந்த பெயர் வந்துள்ளதால் இவை இடுகுறி சிறப்பு பெயர் ஆகும் 

சந்தேகம் இருந்தால் கருத்துகளை கூறவும் பாகம் 3 விரைவில் 

 

75 comments:

  1. காரணப் பொதுப்பெயர் எது 1 மண் 2 நண்டு 3 விலங்கு

    ReplyDelete
  2. Replies
    1. விளக்கம் தாருங்கள் விலங்கு என்பது எந்த காரணத்தால் காரணப் பெயராக வைத்தனர் சொல்லுங்கள்

      Delete
    2. விலங்கு என்பது உயர்திணையின் உயர் ஒழுக்கங்களிலிருந்து விலகி இருப்பதால் சரியா கார்த்திக் கொஞ்சம் Doubt தான்

      Delete
    3. உயர் தினைக்கும் இதற்கும் சம்மந்தபடுத்தி பார்க்க முடியாது கீழ் உள்ள என் கேள்விகளுக்கு பதில்கூறுங்கள்

      Delete
    4. கனி மலர் காரணப்பெயரா

      Delete
  3. விஜி ,
    விலங்கு என்பது எதனால் காரண பொதுப்பெயர் விளக்குங்களேன்.

    ReplyDelete
  4. முன்னோர்கள் ஒரு காரணத்தோடு வைத்திருக்கும் பெயர் காரணப்பெயர் உதாரணம் பறப்பதால் பறவை சரி விலங்கு என்ன காரணத்தால் வைத்தார்கள் என்று விளக்கமாக கூறுங்கள் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. மண் என்பது இடுகுறி பெயர் என்பது நன்றாக தெரியும் ஆனால் கரிசல் மன் செம்மன் இவை காரணம் உள்ளது ஏன் என்றால் கருப்பு செந்நிறம் போன்றவை காரணங்களால் உள்ளது இவை என்ன பெயர் விளக்குங்கள்

      Delete
    2. மெயில் கிடைச்சதா 10த் ப்ளன் வரதான் கிடைச்சது...

      Delete
    3. நாய் என்பது இடுகுறி பெயர் என்பது தெரியும் நன்டு என்பது நான்ங்கு கால்களை கொண்டாதல் என்ன பெயர் என்று அழைக்கப்படும் கூறுங்கங்கள்

      Delete
    4. இடுகுறி காரணப் பெயர்

      Delete
    5. நமக்கெல்லாம் இடுகுறி பொது,சிறப்பு தெரியும்

      காரணபொது, சிறப்பு தெரியும்

      ஆனால் இன்னும் இருக்கு
      இடுகுறி காரணப்பெயர்
      காரண இடுகுறிப்பெயர்

      நீங்கள் கூறிய மண் இடுகுறிப்பெயர்
      செம்மண் என்பது இடுகுறி காரணப்பெயர்

      பறவை காரணப்பொதுப்பெயர்
      மயில் காரண இடுகுறிப்பெயர்

      இது மிகப் பெரிய chapter paa சொல்வது கொஞ்சம் கடினம்.

      Delete
  5. தரனி உங்க மெயில் கிடைத்தது விரைவில் வரிசையாக வெளியிடுகிறேன்

    ReplyDelete
  6. மிருகங்கள் அனைத்திற்கும் பொதுவான பெயர் விலங்கு, விலங்கு என்பதற்கு மற்றொரு அர்த்தமும் உண்டு, தப்பியோடாமல் இருப்பதற்கு பூட்டப்படும் விலங்கு( மென்மையான -என்றால் பூ விலங்கு, கடுமையாக -என்றால் இரும்பு விலங்கு) இதன் அடிப்படையிலேயே விலங்குகளிடம் மாட்டிக்கொண்டால் தப்ப முடியாது என்பதன் யூகத்தில் மிருகங்களுக்கு விலங்குகள் என்ற காரணபொதுப்பெயர் உண்டு,

    ReplyDelete
    Replies
    1. விஜி உங்கள் யூகமா இல்லை பதில் படித்துள்ளிர்களா

      Delete
  7. நமது நண்பர்கள் இதை பற்றி விரிவாக விவதம் பன்னுங்கள் அப்போது தான் நாம் எந்த தேர்வையும் எதிர் கொள்ள முடியும்

    ReplyDelete
  8. பொதுப்பெயராவது, பல பொருள்களுக்குப் பொதுவாகி வரும் பெயராம்
    உதாரணம்.
    மரம், விலங்கு, பறவை
    இவற்றுள், மரம் இடுகுறிப் பொதுப்பெயர்: விலங்கு பறவை என்பன காரணப்பொதுப் பெயர்.

    ReplyDelete
  9. யூகமே, ஆனால் அதுதான் உண்மை காரணமாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  10. கணிணி காரண பெயரா பொதுப் பெயரா

    ReplyDelete
    Replies
    1. காரண பெயர????????

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  11. இடுகுறிப்பெயரில் வரும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. காரணம் அறிய இயலாப் பெயர்கள் எல்லாம் இடுகுறிப்பெயர்களில் வரும்.

    ReplyDelete
  13. காரணப் பெயர். ஆனால் அது கணினி என்று வர வேண்டும். அப்பொழுது தான் அது காரணப் பெயர். கணி என்றால் கணித்தல், யூகித்தல் என்று பொருள்.

    ReplyDelete
    Replies
    1. கணிணி என்பது காரணப்பெயரே.....

      Delete
    2. ஆம் தவறுக்கு மன்னிக்கவும் யூகித்தல் என்ற அடிப்படையில அது காரணப் பெயரே

      Delete
    3. ஆமாம். ஆனால் எழுத்துப்பிழை. சரி பார்க்கவும். அது போல் மரம் என்பது காரணப் பெயர். நான் சொன்னால் நம்ப மாட்டார்கள்.

      Delete
    4. காரணப்பெயர் என்று எப்படிச்சொல்கிறீர்கள்.

      Delete
    5. rajasekar உங்களை தான் தேடினேன் தயவு செய்து சற்று விளக்குங்கள் நான் மேற்கூறிய கேள்விகளுக்கு

      Delete
    6. மன்னிக்கவும் rajasekar சார் என குறிப்பிடடதற்கு

      Delete
    7. மர் என்றால் மரணம். மரமும் இறந்தவர் போல்தான். இடம்பெயராது. அம் என்றால் அத்தன்மை உடையது. மரம் என்றால் மரணம் அடைந்தது போன்ற தன்மை உடையது. கால் மரத்து போனது. அந்த இடம் மட்டும் இறந்தது போன்று உணரப்படும். இந்தியில் மர் என்றால் மரணம். ஆங்கிலத்தில் மர்டர் என்றால் மரணம் (கொலைமர் என்றால் மரணம். மரமும் இறந்தவர் போல்தான். இடம்பெயராது. அம் என்றால் அத்தன்மை உடையது. மரம் என்றால் மரணம் அடைந்தது போன்ற தன்மை உடையது. கால் மரத்து போனது. அந்த இடம் மட்டும் இறந்தது போன்று உணரப்படும். இந்தியில் மர் என்றால் மரணம். ஆங்கிலத்தில் மர்டர் என்றால் மரணம் (கொலை). திருவள்ளுவர் கூட மரம் போல்வர் என்றதனால் லத்தீன் மொழியில் மரித்தூஸ் என்றால் மரணம்.

      Delete
    8. விலஙு என்பது காரணப் பெயர்தானா என்பது எனக்கும் தெரியவில்லை நண்பரே

      Delete
    9. மகிழ்ச்சி என்பது தொழில் அல்லது குணப்பெயர் எது இரண்டில்

      Delete
    10. மகிழ்தல் தொழிற் பெயர் மகிழ்ச்சி என்ன பெயர்

      Delete
    11. தொழிற்பெயர். மகிழ் என்பது பகுதி ச்சி என்பது தொழிற்பெயர் விகுதி. குணப்பெயரில் வினைப் பகுதி இருக்காது.

      Delete
    12. மரம் வளரக்கூடிய ஒன்று பிறகு எப்படி மரணத்துடன் ஒப்பிட முடியும் விலங்கு என்பது மனிதன் தன்னிடமிருந்து விலக்கி வைத்து இருந்த நிலையில் விலக்கு என்பது மென்தொடராக மாறியது சார்

      Delete
    13. மீண்டும் ஒருமுமீண்டும் ஒருமுறை படியுங்கள். மரம் போல்வர் உயிர் இருந்தும் இல்லாது போன்ற நிலை.

      Delete
    14. அவ்வாறு குறிப்பிட்டது புலவரின் உவமை கற்பனை திறனை வெளிக்காட்டுகிறது சார்

      Delete
    15. திருவள்ளுவர் பொய்யில் புலவர் என்கிறோம் ஆனால் பாலைவனத்தில் மரமே இல்லை என்று கூறுகிறார் பாலை நிலத்திலும் மரமுண்டு

      Delete
    16. குறளை நன்றாகப் படியுங்கள் வற்றல் மரம் தளிர்த்து என்று இருக்கும். அப்படி என்றால் பட்டுப்போன மரம் மீண்டும் தளிர் வ்ட்டது என்று பொறுள். மரம் இல்லை என்று அவர் சொல்லவில்லை.

      Delete
  14. விளக்கியதும் புரிந்தது ராஜசேகர் சார், நீங்கள் தானே ஆங்கிலத்திற்கு மாடி கேட்டிருந்தீர்கள் ,அடிக்கடி தமிழுக்கும் விளக்கமளிக்கிறீர் நீங்கள் தமிழா, ஆங்கிலமா, (சகலகலாவல்லவரா)

    ReplyDelete
    Replies
    1. மொழியியல் என்ற ஒன்றைப் படித்து தொலைத்துவிட்டேன்.

      Delete
  15. பதிவிட்டு வையுங்கள் நண்பரே ,பிறகு வந்து பார்த்துக்கொள்கிறேன், வீட்டில் ஆறிலிருந்து.......அறுபது வரைக்கும் கொலைவெறியோடு பார்க்கிறார்கள், (ச்சட்னி அரைக்கனும், இல்லனா என்னை இப்போ சட்னி ஆக்கிடுவாக போல.)

    ReplyDelete
    Replies
    1. ஆமா சிஸ்டெர் அதனாலதான் நான் பள்ளி விட்டு வந்ததும் சமைசிட்டேன்.

      Delete
    2. மகிழ்தல் தொழிற் பெயர் மகிழ்ச்சி என்ன பெயர்

      Delete

    3. ச்சி என்பது தொழிற்பெயர் விகுதி. முயற்சி, பயி
      ற்சி

      Delete
  16. தொழிற்பெயர். மகிழ் என்பது பகுதி ச்சி என்பது தொழிற்பெயர் விகுதி. குணப்பெயரில் வினைப் பகுதி இருக்காது. -சி என்பது தொழிற்பெயர் விகுதி. முயற்சி, பயிற்சி, சுழற்சி, அயர்ச்சி, தளர்ச்சி போன்றவை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் நீங்கள் கூறியது 100% உண்மை நான் படித்துள்ளேன்

      Delete
  17. மரம் இடுகுறி பெயர் என்று புத்தகத்தில் உள்ளது ஆராய்ந்தால் காரணம் வரும் போல

    ReplyDelete
    Replies
    1. மரம் இடுகுறி பெயர் சரி சார்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. புத்தகத்தின் படி பார்த்தால் சரிதான். ஆனால் புத்தகத்தின் படி சொல்லிசை அளபெடை என்ற ஒன்று தமிழில் இல்லை என்று என்னால் நிரூபிக்க mudiyum.

      Delete
    4. rajasekar சார் இறுதியில் அல் ,அம், ஐ ,கை, ச்சி என்று முடிந்தால் அது தொழிற் பெயர் வருமா சரிதானே

      Delete
    5. முடிவுற்ற பெயர் பொருள் வினையெச்சமாக மாற்றுவது சொல்லின் சிறப்பு காரணமாக அப்பெயர் பெற்று இருக்கலாம் சார்

      Delete
    6. சரி தான் சார். அது பகுபதமாய் இருக்க வேண்டும். எழுவாயாக செயல்பட வேண்டும்.

      Delete
    7. திரிசொற்கள் பெரும் பாலும் பகாப்பதம் எழுவாயாக செயல்பட பெயர் , வினா, வினை இம்மூன்றை உணர்த்தாமல் செய்யுளின் ஓசையை மையப்படுத்தி அமைந்தது சார்

      Delete
  18. மரம் வளரக்கூடிய ஒன்று பிறகு எப்படி மரணத்துடன் ஒப்பிட முடியும் விலங்கு என்பது மனிதன் தன்னிடமிருந்து விலக்கி வைத்து இருந்த நிலையில் விலக்கு என்பது மென்தொடராக மாறியது சார்

    ReplyDelete
    Replies
    1. அருமை சார் தொழில் பெயர் இறுதியில் அல் அம் ஐ கை ச்சி என்ற எழுத்துக்கள் வருவது சரிதானே

      Delete
    2. காளை மாடு விலங்கா? சேர்ப்பா?

      Delete
    3. நாம் உறங்கும் போது விலங்கு சார்

      Delete
  19. அம்மிக்குழவி. காரணப்பெயரா? இடுகுறியா?

    ReplyDelete
    Replies
    1. இடுகுறி காரணப்பெயர்

      Delete
    2. இடுகுறி காரணப்பெயர்

      Delete
    3. இட்ட பெயர் இடுகுறி

      Delete
    4. குழவி குழந்தை போல சீராட்டி அரைக்கிறோம் ஆகவே

      Delete
    5. ஒரு வகையில் காரணமாகவும் மறறொரு வகையில் இட்ட பெயராக வும் வருவது

      Delete
  20. அது முழுவதும் காரணம் தான். மேலே வாருங்கள்.

    ReplyDelete
  21. 10 examples for edukuri peyar and kara peyar

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.