Thursday, 2 October 2014

தமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3



இங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்
சைவமும் தமிழும்
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.
* சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.
* சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
* 1,2,3ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவராம்.
* 4,5,6ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவாரம்.
* 7ம் திருமுறை - சுந்தரர் -தேவாரம்.
* 8ம் திருமுறை - மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார்.
* 9ம் திருமுறை - திருமாளிகைத் தேவர் உட்பட்ட 9 நபர்கள்
* 10ம் திருமுறை - திருமலர் - திருமந்திரம்.
* 11ம் திருமுறை - திரு ஆலவாய் உடையார் உட்பட்ட 12 நபர்கள்.
* 12ம் திருமுறை - சேக்கிழார் - பெரிய புராணம்.
* திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாணடார் நம்பி. நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 துருமுறைகள் மட்டுமே. நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது பெரிய புராணம்.
* முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர்.
* திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர்.
* குரவர் என்பதற்கு பெரியவர்கள் என்று பொருள்.
* சைவர்களின் தமிழ் வேதம் பன்னிரு திருமுறைகள்.
திருஞானசம்பந்தர்
* இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை. சமயக் குரவர் நால்வரின் முதலாவதாக்க குறிப்பிடப்படுபவர்.
* தேவாரத்தின் முதல் நூலைப்பாடியவர். 23 பண்களில் (இசைகளில்) திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.
* திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த இடம் திருப்புகலூர்.
* திருமறைக்காடு (வேதாரண்யம்) கோயில் கதவு திறக்கவும், மூடவும் பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.
* கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்கியவர் திருஞானசம்பந்தர்.
* திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய இடம் திருஏடகம்.
* திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரைக் கொடுத்தவர் திருஞானசம்பந்தர்.
* பால் குடித்தபோது பாடியது முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் பாடல்.
* கதவு திறக்கப் பாடிய பாடல் இரக்கம் ஒன்றிலிர் என்று தொடங்கும் பாடல்.
* மன்னனின் நோய் தீர்க்கப் பாடிய பாடல் மந்திரமாவது நீறு என தொடங்கும் பாடல்.
* காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பதும் இவர் இயற்றிய பாடலே.
* நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று திருஞானசம்பந்தரைப் புகழ்ந்தவர் சுந்தரர்.
திருநாவுக்கரசர்
* திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். இவரது தமக்கை திலகவதியார்.
* வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் ஆகிய வேறு பெயர்களும் திருநாவுக்கரசருக்கு வழங்கப்படுகின்றன.
* திருஞான சம்பந்தர் இவரை அப்பரே என்று அழைத்ததால் அப்பர் எனப்பட்டார்.
* திருநாவுக்கரசர் தாண்டகம் என்ற செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியதால் தாண்டக வேந்தர் எனப்பட்டார்.
* திருநாவுக்கரசர் முதலில் சமணத்தைத் தழுவியவர் ஆவார். இவரது சூலைநோய் (வயிற்று வலி) தீர்க்க தம் தமக்கை திலகவதியாரால் திருநீறு அளிக்கப் பெற்றவர். பின்னர்
* சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.
* முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர் ஆவார்.
* மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசர்.
* என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்.
* தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் - திருநாவுக்கரசர்.
சுந்தரர்
* கைலாயத்தில் இவருக்கு ஆலால சுந்தரனார் என்று பெயர். சுந்தரர் பிறந்த ஊர் திருநாவலூர்.
* வன் தொண்டர், தம்பிரான் தோழர் ஆகிய வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.
* இறைவனையே மனைவியிடம் தூது அனப்பியதால் வன்தொண்டர் எனப்பட்டார்.
* சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம் திருவெண்ணெய் நல்லூர்.
* பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா - சுந்தரர்.
மாணிக்கவாசகர்
* மாணிக்கவாசகர் இயற்பெயர் தெரியவில்லை. எனினும் சிலர் திருவாதவூரார் என்கின்றனர்.
* திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களை இயற்றி உள்ளார்.
* மாணிக்கவாசகர் பொருட்டே இறைவன் நரியைப் பரியாக்கினார். இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.
* பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார் என்பது மரபு.
* மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படுகிறது.
* நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்.
* ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி - மாணிக்கவாசகர்
* தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி - மாணிக்கவாசகர்.
* வானாகி மண்ணாகி, ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்
* அம்மையே அப்பா ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்
* திருவாசகத்திற்கு உருகாதர் ஒரு வாசகத்திற்கும் உருகார் - பழமொழி.
* சைவவேதம் எனப்படுவது திருவாசகம்.
இராமலிங்க அடிகள்
* பிறந்த ஊர் மருதூர். வழிபாட்டுக் கடவுள் முருகன்.
* வழிபடு குறு திருஞானசம்பந்தர். வழிபடு நூல் திருவாசகம்.
* இராமலிங்க அடிகளின் நூல்கள் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியன.
* இவர் ஏற்படுத்திய நிறுவனங்கள் சன்மார்க்க சங்கம், சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை, சித்திவளாகம் ஆகியன.
* தம் கொள்கைக்கென தனிக்கொடி கண்டவர். இவரது கொடி மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கொண்டவை.
* இவரது ஆன்மீக நெறி ஆன்மநேய ஒருமைப்பாடு என்று போற்றப்படுகிறது.
* திருவருட்பிரகாச வள்ளலார் என்றும் போற்றப்படுகிறார். இவரது பாடல்கள் திருவருட்பா எனப்படுகின்றன.
* அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை - இராமிலிங்க அடிகள்.
* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - இராமலிங்க அடிகள்.
* வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை - இராமலிங்க அடிகள்.
தாயுமானவர்
* சமரச சன்மார்க்கத்தை முதன் முதலாகச் சொன்னவர். இதை விரிவாகக் கூறியவர் இராமலிங்க வள்ளலார்.
* இவர் பாடல்களுக்கு தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்று பெயர்.
* எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே - தாயுமானவர்.
கம்ப ராமாயணம்
* இதிகாசங்களில் முதலாவது இதிகாசம் இராமாயனம். கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்.
* இயற்றியவர் கம்பர். கம்பராமாயணம் வால்மீகியின் இராமாயணத்தின் தழுவல் நூல் ஆகும்.
* கம்பராமாயணம் 6 காண்டங்களையும், 113 படலங்களையும் உடையது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய 6 காண்டங்கள்.
* அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் - கம்பராமாயணம்.
* இன்றுபோய் நாளை வா - கம்பராமாயணம்
* வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் - கம்பராமாயணம்.
* அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா - கம்பராமாயணம்.
* கம்பரின் மகன் அம்பிகாபதி ஏர் எழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி ஆகிய நூல்களும் கம்பரால் இயற்றப்பட்ட நூல்களே.

சிற்றிலக்கியச் செய்திகள்
* சிற்றிலக்கிய வகை மொத்தம் 96 ஆகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைத் தெளிவாகக் கூறும் நூல் பன்னிரு பாட்டியில்.
* பரணி என்பது போர்க்கள தெய்வமான கொற்றவையைப் பாடும் நூல். பரணி 13 உறுப்புக்களை உடையது.
* பரணி பாடுவதில் வல்லவர் ஜெயங்கொண்டார்.
* பெரியவர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கியம் பிள்ளைத் தமிழ். 10 பருவங்களைக் கொண்டது பிள்ளைத் தமிழ்.
* கலம்பகம் என்பது பல்வகைப் பாக்களையும் கலந்து பாடப்படும் சிற்றிலக்கியமாகும். கலம் = 12, பகம் = 6 ஆக மொத்தம் 18 உறுப்புக்கள் கலம்பகத்தில் இடம் பெறும்.
* உழவர் வாழ்வைச் சித்தரிக்கும் இலக்கியம் பள்ளு. மருத நில நூலாகக் கருதப்படும் இலக்கியம் பள்ளு
* அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது அந்தாதி ஆகும். அந்தாதியில் 100 பாடல் இருக்கும்.
* கோவை என்பது அக இலக்கியம். 400 பாடல்களைக் கொண்ட இலக்கியம் கோவை. கட்டளைக் கலித்துறையால் பாடப்படுவது கோவை ஆகும்.
* சதகம் என்றால் 100 பாடல்களைக் கொண்டது என்று பொருள். நீதிக்கருத்துக்கள் மிகுந்த சிற்றிலக்கியம் சதகம் ஆகும்.

பாரதியார்
* பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியம், சுப்பையா என்றும் அழைக்கப்பட்டார். பெற்றோர் சின்னசாமி ஐயர் மற்றும் லட்சும் அம்மாள்.
* ஊர் எட்டயபுரம் வாழ்நாள் 11.12.1882 முதல் 11.09.1921 வரை (39 ஆண்டுகள்)
* எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் பாரதி என்ற பட்டம் அளித்தனர்.
* பாரதியார் தம்மை ஷெல்லிதாசன் என்று அழைத்துக்கொண்டார்.
* காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி, ஓர் உத்தம தேசாபிமானி, நித்திய தீரர் ஆகியவை இவரது புனைப்பெயர்கள்.
* பாரதியின் புதுக்கவிதை முன்னோடி வால்ட் விட்மன்
* புதுக்கவிதையின் முன்னோடி பாரதியார் ஆவார்.
* கவிதையில் சுய சரிதம் எழுதிய முதல் கவிஞர் பாரதியார்.
* 1905ல் சக்கரவர்த்தினி என்ற இதழை பாரதியார் தொடங்கினார். கர்மயோகி, பாலபாரதி போன்ற இதழ்களையும் நடத்தினார்.
* இந்தியா என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார் பாரதியார்.
* சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் பாரதியார்.
* நிவேதா தேவியைச் சந்தித்த பின் பாரதி தீவிரவாதியானார்.
* பாரதியார் 14 மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார்.
* இவரது முப்பெரும் பாடல்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியன.
* பாரதி சங்கத்தைக் கோற்றுவித்தவர் கல்கி.
* பாரதிக்கு மகாகவி என்ற பட்டத்தை வழங்கியவர் வ.ராமசாமி ஐயங்கார்.
* யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் - பாரதியார்.
* தேமதூரத் தமிழோசை உலகமெலாம் - பாரதியார்.
* சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - பாரதியார்.
* பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் - பாரதியார்.
* சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் - பாரதியார்.
* மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொள்ளுத்துவோம் - பாரதியார்.
* ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே - பாரதியார்.
* ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில் - பாரதியார்.
* வாழிய பாரத மணித்திருநாடு - பாரதியார்.
* நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் - பாரதியார்.
* எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - பாரதியார்.
* ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு - பாரதியார்.
* பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் - பாரதியார்.
* புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - பாரதியார்.
* காதல் காதல் காதல் காதல் போயின் - பாரதியார்.
* பாட்டினில் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் - பாரதியார்.
* தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்சகத்தினை அழித்திடுவோம் - பாரதியார்.
* காக்கை குருவி எங்கள் சாதி உடலும் மலையும் எங்கள் கூட்டம் - பாரதியார்.
* செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் - பாரதியார்.
* தருமட்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் - பாரதியார்.
* செந்தமிழ் நாடெனும் போதினிலே - பாரதியார்.
* சிந்து நதியின் மிசை - பாரதியார்.

PDF வடிவில் படிக்க download

46 comments:

  1. வணக்கம் நண்பர்களளே

    ReplyDelete
    Replies
    1. 1,2,3ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவராம்.
      * 4,5,6ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவாரம் ??????

      Delete
    2. 1,2,3 திருமுறைகள் திருஞான சம்பந்தர் சரியான விடை,, தயவு செய்து விடையை சரியாக அனுப்புங்கள்,, தவரான விடையை அளிக்காதிர்கள்

      Delete
  2. கார்த்தி மேற்கோள்களில் சில முழுமையடையவில்லை
    கவனிக்கவும் அர்த்தம் புரியாமல் போகும்

    ReplyDelete
  3. Pgtrb english ku last year question paper yaravdhu upload panungapa,please...

    ReplyDelete
  4. Ponmari sir pgtrb ku yenna material sir use pannuringa? Soft copy erundha mail pandringala sir?

    ReplyDelete
  5. Manonmaniam sundaranar university ddce november examination announcement:last date for fee paymen:17.10.2014 with penalty:24.10.2014.

    ReplyDelete
  6. நண்பர்களில் PG geography யாரும் உள்ளீரா

    ReplyDelete
  7. 1.அலகாபாத் தூண் கல்வெட்டை பொறித்த சமுத்திரகுப்தரின் அமைச்சர் யார்?

    2. ஒரு நிதிடத்திற்கு இதயம் எத்தனை முறை துடிக்கும்?

    3.நாய்களே இல்லாத ஊர் எது?

    4.அன்னை தெரசா பிறந்த நாடு எது?

    5.ஓரு அடிக்கு(அளவுகோலில் ) எத்தனை INCHES, CM, MM இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. 4. Annai therasa born
      on 26 August 1910 Skopje, Macedonia.

      Delete
    2. 3.சிங்கப்பூர்

      Delete
    3. 5. ஒரு அடிக்கு12 inch, 30 cm, 300mm.

      Delete
  8. Admin sir please pgtrb english lastyr question paper irundha upload panunga.first time exm eludhaporen..question paper irundha epdi questions varumnu therinjukalam.pls help me.

    ReplyDelete
  9. பாரதிக்கு கலைமகள் என்ற பட்டம் கொடுத்தவர் யார்?

    ReplyDelete
    Replies
    1. maha kavi ....... iyangar...
      kalai magal.........??????

      Delete
    2. Ans;எட்டயபுரத்து அரசவைக்கவிஞர்கள்

      Delete
  10. மதிய வணக்கம் நண்பர்களே எங்க யாரையும் காணோம்?

    ReplyDelete
  11. சக்கரவர்த்தினி,விஜயா இவை இரண்டையும் பாரதி பற்றி படிக்கும் போது கேள்விபட்டுறுக்கிறேன்.

    ReplyDelete
  12. Admin நான் இல்லாத அப்போ எல்லாரும் பேசிக்கிறீங்க நான் வந்துட்டா எல்லாரூம் எங்க பாஸ் போவீங்க?

    ReplyDelete
  13. பாடாலிபுத்திரம் தற்போது என்னவென்று அழைக்கப்படுகிறது?

    ReplyDelete
  14. டெல்லி நகரின் பழங்கால பெயர்?

    ReplyDelete
    Replies
    1. பாடாலிபுத்திரம்

      Delete
    2. இந்திரபிரஸ்தம் Is corect

      Delete
  15. குசிநகரம் எங்கு உள்ளது?

    ReplyDelete
  16. மூன்று ரத்தினங்களை போதித்தவர்?

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போல் நல்ல எண்ணம் சிந்தனை செயல்பாடு இருக்கவேண்டும் மேடம் இன்று விடுமுறை எனவே எல்லோரும் ஊருக்கு சென்றுள்ளனர் விடுமுறை முடியும் வரை இப்படி தான் இருக்கும் பிறகு நீங்கள் பள்ளிக்கு சென்ற பின் எல்லோரும் வந்து விடுவார்கள் நீங்கள் வரமாட்டீர்கள் just for fun

      Delete
    2. மகாவீர்,ஜீனர்

      Delete
    3. நானும் வருவேன் அட்மின்

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.