Monday, 22 September 2014

Flash News தமிழக தலைமை செயலகத்தில் தீ விபத்து

சென்னை :சென்னையில், தலைமைச் செயலகம், முதல் மாடியில், நேற்று காலை, திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.

சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், 370 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தில், தலைமைச் செயலகம் செயல்படுகிறது.இக்கட்டடத்தில், சட்டசபை, முதல்வர் அறை, அமைச்சர்கள் அறை, நிதித் துறை, உள்துறை, சட்டத் துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, தேர்தல் துறை, அலுவலகங்கள் உள்ளன. கட்டடத்தின் முதல் தளத்தில், தேர்தல் பிரிவு எதிரே, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில், நேற்று காலை, 8:45 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. அலுவலகத்திற்கு கீழே, தரை தளத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் உள்ளது. அங்கு பணியிலிருந்த, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள், தீயில் பொருட்கள் கருகும் வாசனை அறிந்து வெளியில் வந்தனர்.
அப்போது, முதல் தளத்தில் இருந்து, புகை வெளியேறுவதை கண்டதும், அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அங்கு பணியில் இருந்த போலீசாருக்கு, தகவல் தெரிவித்தனர். பின், அதிகாரிகளுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசார் உடனடியாக, தலைமைச் செயலக வளாகத்தின், மின் இணைப்பை துண்டித்தனர். கோட்டை தீயணைப்பு நிலையம் உட்பட பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து, ஏழு வாகனங்களில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியை துவக்கினர். மாநகராட்சி லாரிகளில், தண்ணீர் கொண்டு வரப்பட்டது.இதற்குள் தீ, அருகில் இருந்த அறைகளுக்கும் பரவத் துவங்கியது. தீயணைப்பு வீரர்கள், ஏணி மூலம் ஏறி, அறைகளின் கண்ணாடியை உடைத்து, ஜன்னல்களை திறந்து, புகை வெளியேற நடவடிக்கை மேற்கொண்டனர்.அப்போது, தலைமைச் செயலக ஊழியர்கள், பணிக்கு வரத் துவங்கினர். அவர்கள் உள்ளே செல்வதைத் தடுக்க, போலீசார், அனைத்து வாயில்களையும் மூடினர். தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்ததும், தலைமைச் செயலக ஊழியர்கள், நான்காம் எண் கேட் வழியே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.தீ விபத்து நடந்த பகுதிக்கு, மாலை வரை, பத்திரிகையாளர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.இந்த தீ விபத்தில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அலுவலகத்தில் இருந்த, கம்ப்யூட்டர்கள், மேஜைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.
தீயணைப்பு வீரர்கள், தீயை அணைப்பதற்காக ஊற்றிய தண்ணீர், தரை தளத்தில் இருந்த அலுவலகங்கள் உள்ளே கசிந்ததால், அங்கிருந்த ஊழியர்களும் சிரமப்பட்டனர். கம்ப்யூட்டர்களும் தீப்பிடித்ததால், 'சர்வர்'கள் அனைத்தும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டன. இதனால், மற்ற அலுவலக ஊழியர்களும், பணி மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர். மதியத்திற்கு மேல் நிலைமை சீரானது. மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் அதிகாரிகள், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டுச் சென்றனர். தீ அணைக்கப்பட்ட பிறகு, அப்பகுதியை சுத்தப்படுத்தும் பணி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மை செயலர் டேவிதார் தலைமையில் நடந்தது.இது குறித்து, அதிகாரிகள் கூறும்போது, 'தீ விபத்து ஏற்பட்ட அறையில், முக்கிய ஆவணங்கள், இரும்பு பீரோவில் இருந்ததால், அவை தப்பின. மேஜை மேல் இருந்த சில ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், தீயில் சேதமடைந்துள்ளன' என்றனர். இதற்கு முன், தலைமைச் செயலகம் இரண்டாம் தளத்தில், பொதுத் துறை அலுவலகம் அருகே, 2009 மே மாதம், தீ விபத்து ஏற்பட்டது.

3 comments:

 1. FLAH NEWS..............

  RAJ TV...

  ALL CASES AGAINST TAMILNADU GOVT ARE DISMISSED..........


  ALL THE BEST SELECTED CANDIDATES...........

  ReplyDelete
 2. அனைத்து மனுக்களும் தள்ளுபடி..
  ஆண்டவனுக்கு நன்றி..
  START MUSIC

  ReplyDelete
 3. ஆசிரியர் பணி ஏற்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
  வாழ்த்துககள், யார் மனத்தையும் புண் படும்படி பேச வேண்டாம் ,
  இரு தரப்பு வக்கீலும் என்ன சொன்னார்களோ அதை வைத்து தான் அவரவர்
  website லும் comments செய்தோம், இறுதி முடிவு ஜட்ஜ் னுடையது, யாரும்,யாருக்கும்
  எதிரி அல்ல, உங்களுக்கு நல்ல பொறுப்பை ஆண்டவன் ஒப்படைத்துள்ளான் ,
  கால நேரம் வரும் போது அனைவருக்கும் அந்த பொறுப்பு அளிக்கப்படும்,
  ஒரு திறமையுள்ள,ஒழுக்கமுள்ள ஆசிரியரால் ஒரு தலை முறையே சிறப்பாக உருவாக முடியும்
  உங்கள் பதவியின் பெருமையை உணருங்கள்,பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்
  உங்கள் எண்ணம் தான் சொல், சொல் தான் செயல்,செயல் தான் உங்களை நல்லுவரா ,கெட்டவரா
  என தீர்மானிக்கும், நல்லாசிரியராக, நல்ல நண்பராக ,எங்களிடமிருந்து விடை பெறுவீர்கல் என
  நினைக்கிறேன், அந்த பணியின் புனித தன்மையை பெறுங்கள் நண்பரே.........

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.