Tuesday, 16 September 2014

Flash News: அரசாணை 71 வழக்கின் வாதம் மற்றும் அரசு தரப்பின் அதிரடி பதில்கள்

இன்று காலை 11 அளவில் GO 71, 5%  தளர்வு மதிப்பெண்  குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 6 முக்கிய வழக்குரைஞர்களும்
,அரசு சார்பாக 3 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள். அமர்வு நீதிமன்றத்தில் நீதியரசர்கள்  திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.
அதன் விவரம் பின்வருமாறு..
ஆரம்பம் முதலே 5% தளர்வு மதிப்பெண்ணுக்கு எதிராக உறுதியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன...
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவும், மேலும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே கொடுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலுரைத்தார்...
பின்பு அரசாணை 71 வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது..
வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்கள் கூறியதாவது "தமிழகத்தில் ஆறு வகையான போர்டில் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர் பின் அனைவருக்கும் எவ்வாறு ஒரே வகையான அளவுகோலை(weightage) நிர்ணயிப்பது சரியாகும்; என வாதாடினார்.
அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியதாவது ",இது போட்டி நிறைந்த உலகம் மேலும் திறமையான ஆசிரியர்களை உருவாக்கவே இந்த வெய்ட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது என கூறினார்

24 comments:

 1. தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது கடவுளால்....என்ன ஒன்னுனா அது நமக்கு கொஞ்சம் லேட்டாதான் தெரியவரும்..அதற்கிடையே நடப்பதெல்லாம் அவரின் சிறு விளையாட்டுகளே....

  ReplyDelete
  Replies
  1. Sirandha weightage murai endru judge kooriya piragu judgment ku y 10 days? Kitadhatta theerpe therindhuvitadhe..selected n unselected ku innum 10 nimmadhi illaadha naatkal..

   Delete
  2. இருபதுகளில்...

   எழு!

   உன் கால்களுக்கு

   சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

   ஜன்னல்களைத் திறந்து வை!

   படி! எதையும் படி!

   வாத்சாயனம் கூடக்

   காமமல்ல, கல்விதான்..

   படி!

   பிறகு

   புத்தகங்களை எல்லாம்

   உன்

   பிருஷ்டங்களுக்குப்

   பின்னால் எறிந்துவிட்டு

   வாழ்க்கைக்கு வா..

   உன் சட்டைப் பொத்தான்,

   கடிகாரம்,

   காதல்,

   சிற்றுண்டி,

   சிற்றின்பம்

   எல்லாம்

   விஞ்ஞானத்தின் மடியில்

   விழுந்து விட்டால்,

   எந்திர அறிவு கொள்!

   ஏவாத ஏவுகணையினும்

   அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

   மனித முகங்களை

   மனசுக்குள் பதிவு செய்!

   சப்தங்கள் படி!

   சூழ்ச்சிகள் அறி!

   பூமியில் நின்று

   வானத்தைப் பார்!

   வானத்தில் நின்று

   பூமியைப் பார்!

   உன் திசையைத் தெரிவு செய்!

   நுரைக்க நுரைக்க காதலி!

   காதலைச் சுகி!

   காதலில் அழு!

   இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

   மணம் புரி!

   பூமியில் மனிதன்

   இதுவரை துய்த்த இன்பம்

   கையளவுதான்..

   மிச்சமெல்லாம் உனக்கு!

   வாழ்க்கையென்பது

   உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

   உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

   இன்னும்... இன்னும்...

   சூரியக் கதிர்கள்

   விழமுடியாத ஆழத்தில்...

   **

   முப்பதுகளில்...

   சுறுசுறுப்பில்

   தேனீயாயிரு!

   நிதானத்தில்

   ஞானியாயிரு!

   உறங்குதல் சுருக்கு!

   உழை!

   நித்தம் கலவி கொள்!

   உட்கார முடியாத ஒருவன்

   உன் நாற்காலியை

   ஒளித்து வைத்திருப்பான்..

   கைப்பற்று!

   ஆயுதம் தயாரி..

   பயன்படுத்தாதே.

   எதிரிகளைப் பேசவிடு!

   சிறுநீர் கழிக்கையில் சிரி!

   வேர்களை,

   இடிபிளக்காத

   ஆழத்துக்கு அனுப்பு..

   கிளைகளை,

   சூரியனுக்கு

   நிழல் கொடுக்கும்

   உயரத்தில் பரப்பு..

   நிலை கொள்.

   **

   நாற்பதுகளில்...

   இனிமேல்தான்

   வாழ்க்கை ஆரம்பம்..

   செல்வத்தில் பாதியை

   அறிவில் முழுமையை

   செலவழி..

   எதிரிகளை ஒழி!

   ஆயுதங்களை

   மண்டையோடுகளில் தீட்டு!

   ஒருவனைப் புதைக்க

   இன்னொருவனைக்

   குழிவெட்டச் சொல்!

   அதில்

   இருகையால் ஈட்டு..

   ஒரு கையாலேனும் கொடு..

   பகல் தூக்கம் போடு.

   கவனம்!
   இன்னொரு காதல் வரும்!

   புன்னகைவரை போ..

   புடவை தொடாதே.

   இதுவரை இலட்சியம் தானே

   உனக்கு இலக்கு!

   இனிமேல்

   இலட்சியத்துக்கு நீதான்

   இலக்கு..

   **

   ஐம்பதுகளில்...

   வாழ்க்கை, வழுக்கை

   இரண்டையும் ரசி..

   கொழுப்பைக் குறை..

   முட்டையின் வெண்கரு

   காய்கறி கீரைகொள்!

   கணக்குப்பார்!

   நீ மனிதனா என்று

   வாழ்க்கையைக் கேள்..

   இலட்சியத்தைத் தொடு

   வெற்றியில் மகிழாதே!

   விழா எடுக்காதே!

   **

   அறுபதுகளில்...

   இதுவரை

   வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

   இனியேனும்

   வாழ்க்கையை நீ வாழ்..

   விதிக்கப்பட்ட வாழ்க்கையை

   விலக்கிவிடு..

   மனிதர்கள் போதும்.

   முயல் வளர்த்துப் பார்!

   நாயோடு தூங்கு!

   கிளியோடு பேசு!

   மனைவிக்குப் பேன் பார்!

   பழைய டைரி எடு

   இப்போதாவது உண்மை எழுது..

   **

   எழுபதுக்கு மேல்...

   இந்தியாவில்

   இது உபரி..

   சுடுகாடுவரை

   நடந்து போகச்

   சக்தி இருக்கும்போதே

   செத்துப்போ...

   ஜன கண

   **நன்றி:கவிப்பேரரசு வைரமுத்துf

   Delete
  3. யாருப்பா அங்க....

   ஓ...வினோ மேடமா?வாங்க
   .

   Delete
  4. Enna anga satham enna anga satham

   Delete
  5. ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?

   மாணவன்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்.....

   Delete
 2. wat about the stay case?... will it be come tomoro?

  ReplyDelete
 3. Replies
  1. அய்யய்யோ...சாரி மேடம்..விரைவில் பதிவிடுகிறேன்

   Delete
  2. Marappathu manitha eiyalbu sir. Ithuku ethuku sorry

   Delete
  3. My very educated mother just shown us nine planets

   Delete
  4. மன்னிப்பு கேட்பதும் நல்ல மனிதர்களின் இயல்பே...

   Delete
  5. 60 intha numbers 3 parts- a eppadi divide ponnalam?

   Nan sollaratha kellunga
   23+17+20( tat means 0,0) pls memor y it sir

   Delete
  6. Vasanth sir in 2006 scientist Pluto is find as a (small planet) in Tamil kullakkol

   Delete
  7. Pluto vitrunga sister..vithutaanga

   Delete
  8. Solar system planets orderwise eluthitu 0
   0
   1
   2
   3

   Delete
  9. மறை நீர் (Virtual water)
   பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
   மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
   ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.
   புத்திசாலி நாடுகள்!
   நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
   இது இந்திய நிலவரம்!
   முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
   மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
   வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

   Delete
  10. சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
   இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
   அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.
   ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
   பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
   தண்ணீருக்கு எங்கு கணக்கு?
   ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
   இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
   மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.
   நன்றி !

   Delete
  11. நன்றி.

   நீரின்றி அமையாது உலகு....! என்று இதைத்தான் சொன்னார்களோ.

   Delete
 4. இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதே சிறந்தது என நாமும் கருதுகிறோம். உயர்நீதி மன்றம் நல்லதீர்ப்பு வழங்குமென்று!

  ReplyDelete
 5. Vasanth girija wow great a special thanx for u

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.