Friday, 19 September 2014

வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம் வருகிறது,,,,,,,,, அதிரடி பதில்கள்.

நண்பர்களே திறமையான ஆசிரியர்கள் சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நமது தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை
அமல் படுத்தியது. இதனை யாரும் மறுக்க முடியாது ஆனால் அதில் உள்ள சில குறைகளை நாம் அனைவரும் அறிந்ததே அதாவது அதிக பாதிப்பு குறைந்த பாதிப்பு என்று இருவகையாக பிரித்து பார்த்தால் தான் உண்மை தெரியும் அதாவது தேர்வு பெறாதவர்கள் அனைவரும் தேர்வு பெற்றவர்களை விட தகுதியில் குறைந்தவர்களா என்பதை சிந்திகக வேண்டும்.

     தேர்வு பெற்றவர்களில் எத்தனை பேர் தங்களின் பாடப்பிரிவில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் சொல்லும் அளவுக்கு திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் . கண்டிப்பாக குறிப்பிட்ட அளவு தான் அதே போல் தேர்வு பெறாதவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் அளிக்கும் வல்லமை பெற்றவர்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள். காலம் தான் அவர்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளது.

     அதற்காக அவர்களின் உரிமைக்காக நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் தங்கள் கருத்தை சுகந்திரமாக பதிவு செய்கிறார்கள் அதனை ஏன் ஏற்க உங்களுக்கு மனம் இல்லாமல் ஒரு ஆசிரியருக்கு உண்டான ஒழுக்க நிலை தவறி வார்த்தைகளில் தாறுமாறாக சொல்லக் கூச்சப்படும் வார்த்தைகளால் அர்ச்சிக்கும் தங்களுக்கு ஆசிரியர் பணி அளித்தால் எப்படி இந்த மாணவ சமுதாயம் வளர்ச்சி பெறும் தவறான வார்த்தைகளை அர்ச்சிக்கவில்லை என்றுமட்டும் கூறாதீர்கள் இந்த வலைதளத்தில கூட பல தேர்வு பெற்ற நல்ல உள்ளங்கள் வந்து எங்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடும் போது ஒரு சிலர் மட்டும் இப்படி செய்வது ஒட்டுமொத்த தேர்வு பெற்றோரின் மீது ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது

     வெயிட்டேஜ் முறையில் மாற்றம் என்பது உறுதியானது அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை விரைவில் வரவுள்ளது. மிகப் பெரிய திருப்பம் ஏற்படும் அனைவரும் பார்க்கத்தானே போகிறீர்கள் கண்டிப்பாக +2 வழங்கப்படும மதிப்பெண் மாற்றி பதிவு மூப்பு கொடுக்கலாம்

     இந்த கருத்துகள் வாசகர்களிடம் இருந்து பெறப்பட்டது ஆகும் தவறு இருப்பின் மண்ணிக்கவும்

65 comments:

 1. தற்போது உள்ள வெய்டேஜ் முறை முற்றிலும் தவரானது..

  .
  தவரானது .. என்பதே தவறாக உள்ளது முதலில் அதை சரி செய்ங்க பிறகு பார்ப்போம்

  நேற்று இந்த வலைதளத்தில் கூறினார்கள்
  நான் நேற்றே கூறினேன்
  இப்படித்தான் வரும் என்று
  பங்காளி பஞ்சாகம் பார்த்தால் மதியமே மரணம்
  என்ற பழமொழி பொருந்தும் என நான் நினைக்கிறேன் சந்தோஷ் பதில் தருவாரா

  ReplyDelete
  Replies
  1. Nanba ne solvathu unmai go71 very powerful ... so no chance change the go71 ... its true ..

   Delete
  2. இந்தக் கட்டுரையில் தவறானது என்ற வார்த்தை இல்லை

   Delete
  3. நீங்கள் கொடுத்த தலைப்பு வெய் டேஜ் முறையின் நன்மை? தீமை ? பற்றி நடுநிலைமையுடன் விவாதிப்போம் என்று இருந்ததாக ஞாபகம் .சரிதானே சந்தோஷ்

   Delete
  4. உங்களுக்காவது தெரிகிறதே தேர்வு பெற்ற பல நல்ல உள்ளங்கள் உள்ளனர் என்று .!!!அதுவரை சந்தோசம்.உங்கள் வலை தளத்தில் உத்தமர் போலும் பிற வலைத்தளத்தில் """பெயரில்லா"""என்ற உத்தம பெயரில் ஒரு ஆசிரியருக்கு உண்டான ஒழுக்க நிலை தவறி வார்த்தைகளில் தாறுமாறாக சொல்லக் கூச்சப்படும் வார்த்தைகளால் அர்ச்சிக்கும் தங்களுக்கு ஆசிரியர் பணி அளித்தால் எப்படி இந்த மாணவ சமுதாயம் வளர்ச்சி பெறும் தவறான வார்த்தைகளை அர்ச்சிக்கவில்லை என்றுமட்டும் கூறாதீர்கள் .
   இப்படி செய்வது ஒட்டுமொத்த தேர்வு பெறாதோரின் மீது ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது .
   உங்கள் வலைத்தளத்தை தவிர்த்து பிற வலைத்தளத்தையும் பாருங்கள் சந்தோஷ் .

   Delete
  5. Gurugulam.com
   Shreeja
   நேற்றயை கட்டுரை பாரும்
   புரியும்

   Delete
  6. யோவ் ஜியோ எங்க
   ரென்டு நாளா உன்ன ஆளக் கானோம்

   Delete
  7. This comment has been removed by the author.

   Delete
  8. அதிர்ச்சியளிக்கும் உண்மை..!! படித்து பிறருக்கும் பகிருங்கள்..

   அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!

   20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு..

   சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம். காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது. ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும். ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.

   ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது, சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம், பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது. நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.

   90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல்.

   63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல்.

   18,90,00,000×12= 226, 80,00,000 ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம்.

   226,80,00,000×10 = 2,268,00,00,000.

   வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.

   ஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..?

   இப்போது சொல்லுங்கள் இது சுங்க வரியா..? பகல் கொள்ளையா..?

   இதை நாம் எதிர்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்க்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி, இந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..? அணைத்திலும் பங்கு, இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை..!!

   Delete
  9. நாம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள் மக்களே இத படிங்க
   மக்களே....

   நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் – அதிர்ச்சி தகவல்

   நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.

   அவர் சொன்னது இதுதான்.

   வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

   வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!

   இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

   நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி”.

   16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.

   இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.

   ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.

   அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.

   போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.

   இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.

   அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…

   சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.

   என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா?

   பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்?

   செய்கூலி கேட்பது நியாயம் தான்.

   16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?

   இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

   பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?

   எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?

   அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?

   பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

   மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.

   கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.

   இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.

   அல்லது திருத்தப்படவேண்டும்.

   விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…!

   இந்த செய்தியை அவரவர்கள்h அவர்களூடைய எல்லா தொடர்புகளுக்கும் தொடர்ந்து
   அனுப்புங்கள், தயவுசெய்து..

   Delete
  10. G O 7119 September 2014 08:56

   எங்கள் எழுத்துகளில் பிழை இருக்கலாம்.....
   எங்கள் கருத்துகளல் பிழை இருக்காது.....
   எங்கள் எண்ணங்களில் பிழை இருக்காது.....
   எங்கள் வாா்தைகளில் பிழை இருக்காது.....
   நன்றி.........

   Delete
  11. Great Grija, You are the great teacher!!!!!

   Delete
  12. santhosh sir.. yen sir photova mathittenga.. ?

   Delete
  13. SANTHOSH SIR AVAR PICTURE AND NAME IRUKU. UNKALU NAME ILLA PA NEENA IDU PATHI SOLLUNATHINGA

   Delete
 2. Replies
  1. அட்மின்,சந்தோஷ், விஜயலட்சுமி, வினோதினி, பொன்மாரி, பிரகாஷ், வளர்மதி, மற்றும் நம் குருகுல நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் நண்பர்களே....

   Delete
  2. Good morning kumara guru.....

   Delete
  3. இப்ப வணக்கம் ரொம்ப முக்கியமா... ? ஏதாவது உறுப்படியா கருத்து இருந்தால் சொல்லுங்க... இல்லாயின என மாதரி வாய மூடிக்கிட்டு இருக்கலாமே...

   Delete
  4. வணக்கம் சொல்வது தமிழர் பன்பாடு...
   மேலும் காலை வணக்கம் Savitha subramani அவா்களே............

   Delete
  5. good night all gurugulam friends..........

   Delete
 3. Replies
  1. மாறு மாற்றம் ஒன்றுதான் மாறாதது, மாறுவதெல்லாம் உயிரோடு, மாறாதெது எல்லாம் மண்னோடு, பொறுமைகொள் தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டிகளாக ஆகும்வரை, பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம், ஆனால் விலைக்கு வாங்க முடியாது, பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது, சூரியனுக்கு முன் எழுந்துகொள், சூரியனையே செயிக்கலாம். கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளுக்கு ஏற்ப, மாற்றம் நிச்சயம் நிகழும் நண்பர்களே..... பொருத்திருங்கள்.

   Delete
  2. முத்து முத்தான வார்த்தைகள், நன்றி நண்பரே, உங்கள் சேவை குருகுலத்துக்குத் ததேவை

   Delete
  3. நன்றி நண்பரே.....

   Delete
  4. சொந்தமா ஏதாவது சொல்லு தம்பி... cinema ல யாறோ சொன்னதா சொல்ல வேண்டாம்... ?

   Delete
 4. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜி தோழியரே.....

   Delete
 5. என்னப்பா காலையிலே எந்த மாடிக்கு போய் எட்டி பாத்தாலும் ஒரே போர்க்களம் மாதிரி இருக்கு
  உள்ள நுழையவே பயமா இருக்கு .

  ReplyDelete
 6. ஜயோ இவனுகளும் வெற்றிங்கராங்க
  அவனுகளும் வெற்றிங்கராங்க
  இதுல எத நம்புரது
  தல சுத்துதடா சாமி
  ஆனா ஓன்னு இந்த வேல கிடச்சு நாம போறக்குள்ள பாதி பேருக்கு 58 வயசாயிரும்

  ReplyDelete
 7. தேர்வு பெற்றவர்களில் எத்தனை பேர் தங்களின் பாடப்பிரிவில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் சொல்லும் அளவுக்கு திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் . கண்டிப்பாக குறிப்பிட்ட அளவு தான் அதே போல் தேர்வு பெறாதவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துாக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பதில் அளிக்கும் வல்லமை பெற்றவர்கள் கண்டிப்பாக குறிப்பிட்ட அளவு தான் இருக்கத்தான் செய்வார்கள். காலம் தான் அவர்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளது.
  என்று எழுதியுள்ளீர்களே .IAS ,குரூப் 2 போன்றவற்றில் 0.001 மதிப்பெண்களில் தவறவிட்டவர்கள் தகுதி குறைவானவர்களாக யாரும் கருதுவதில்லை .
  எங்கள் திறமையை சோதிக்கும் தகுதி ஆண்டவனுக்கும் ,அரசுக்கும் உண்டு.
  "நடுநிலைமை "என்னும் பெயரில் உங்கள்"" ஒரு தலைபட்ச"" கருத்துகளை கருத்துகளை எழுதும் உங்களுக்கு என்றும் என் வாழ்த்துக்கள் சந்தோஷ்

  ReplyDelete
  Replies
  1. IAS group -2 ல் எல்லாம் போட்டிக்கான விதிமுறைகள் எல்லாம் போட்டிக்கு முன்பே தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.......... tet போல மாதா மாதம் மாற்றியமைக்க படவில்லை......... எத்தனையோ மாற்றத்தை சந்தித்து விட்டோம் ....... இன்னும் ஒன்றே ஒன்று அதையும் சந்தித்து விடுவோம்.......

   Delete
  2. ஒரு மார்க் எக்ஸ்‌ட்ரா வாங்கிட்டு சில பூட்சிகளோட நமசல் தாங்களப்பா...

   Delete
  3. GO 7119 September 2014 11:38
   0.1 ல் வேலை இழந்த நிறைபோ் இருக்கிறாங்க உங்களுக்கு தெரியாதா?

   1மதிப்பண் என்பது அவ்வளவு ஈசியா...
   மேலும் 1மதிப்பெண் அதிகம் பெற்றவா்கள் பொலம்பல் இல்லை.

   84 எடுத்தவனுக்கு வேலை
   118 எடுத்தவங்களுக்கு வேலை இல்லை அதான் இத்தனை பொலம்பல்..
   பதில் சொல்லியே ஆகவேண்டும்.....

   Delete
  4. TET ல 1 மதிப்பெண் மட்டும்தான் vosthiya....

   Degree மதிப்பெண் மட்டாமா ... ?

   84 எடுத்து கேடசாவன் SC
   118 எடுத்து kedakkama போன யாரும் இல்ல.. அது வதந்தி...
   அப்படியே இருந்தாலும் அவன் OC...


   இதுக்கும் பதில் சொல்லியே ஆகணும்...

   Delete
 8. All are 100 percent not correct .......

  ReplyDelete
 9. இதுதான் சமூக நீதியா?
  எனது பதிவுமூப்பு22-8-2008 சீனியாரிட்டி சென்றதோ31.7.2008எனக்கு வேலை கிடைக்கும் என்றபோது ஆட்சியும்மாறியது காட்சியும் மாறியது.பிறகு தகுதிதேரவு என்றார்கள் நான் பெற்றதோ முறையே76,89 தகுதியில்லை.காரணம் 1மார்க்குறைவாம் ஆனால் இன்றோ82ஏ தகுதியாம் இம்முறை நான் பெற்றது104தேர்வாகி கலந்தாய்வு சென்றால் 85-90எடுத்தவர்க்கு சொந்த மாவட்டம் எனக்கோ வேறு மாவட்டம் கேட்டால் வெய்ட்டேஜ்முறையாம்.அதுவும் பரவாயில்லை ஆனால் இதற்கும் தடையானை.நண்பர்களே இதைகூறிணால் சுயநலம் என்பார்கள் பரவாயில்லை .அனுபவத்திற்கும்,சீனியாரட்டிக்கும் மதிப்பெண் இல்லையென்றாலும் பரவாயில்லை.
  தகுதி-80
  +2 -5
  டிகிரி-5
  பிஎட்-10இதைகடைபிடித்தால் கூட பெரிதாக பாதிப்பு ஏற்படாது.இம்முறையினால் அதிகமாரக் பெற்றவரின் வாய்ப்பை பறிக்க இயலாது 1,2மார்க் பாதப்பு வரலாம்.ஏன் இது மாதிரி பி.ஜி ஏற்படவில்லையா110,113 மறையே பெற்றவர்கள் 110எடுத்தவர்அனுபவம்மற்றும் சீனியாரிட்டியில் தேர்வாகிறார் 113எடுத்தவர் வாய்ப்பை இழக்கிறார் இது அவருக்கு பாதிப்பில்லையா

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. Gurugulam 60000 unselected candidateskku vangitharuvadhilai adharku mela vangitharum idhu govt job trainee website OK .weightage judgement judge solluvar Kannada naangalla............ .

  ReplyDelete
 12. +2 ku matum than change varanuma... ug mark kuda than university kula neraya different iruku. 2007ku munadi 25 practical mark ella. ippa iruku. family situation la corress la padicha low percetnage.... change pana ellam pananum. +2 matum pana case poda na ready

  ReplyDelete
  Replies
  1. யுஜி மதிப்பெண்னையும் நீக்குவதாக தான் வருமென எதிர்பார்க்கப்படுகறது...
   எனினும் தீா்ப்பே இறுதியானது.......

   Delete
  2. weightage முற்றிலும் நீக்கினால் மட்டுமே இதற்கு சரியான தீர்வு. இதில் மாற்றம் செய்தால் மீண்டும் பிரச்சனையே

   Delete
  3. சந்தோஷ் பம் மாற்றிவிட்டீரா நண்பரே

   Delete
  4. நீங்கள் சொல்வது புரியவில்லை

   Delete
  5. மாற்றம் தேவை இல்லையென்றால் அடுத்த தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் அளவும் குறைந்து விடும். தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி இல்லை என்றால் யாருக்கு தான் தன் நம்பிக்கை வரும்...?

   Delete
  6. வெயிட்டேஜை முற்றிலுமாக. நீக்கவேண்டும் , அதைவிட்டு +2. நீக்குவது, BA. ,, BEd. விடுவது,, ,BA. நீக்குவது BEd. விடுவது என்ற. நிலையே கூடாது, வெயிட்டேஜ் முறையை அறவே நீக்கவேண்டும் அப்பொழுதுதான் சரியான. தீர்வு கிடைக்கும்

   Delete
  7. 19 Sep 2014

   வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
   வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் ‘வெயிட்டேஜ்’ முறையை பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி
   தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும் அறிவியல் ரீதியான தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை’ என்று வாதாடினார்.மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சங்கரன், ஆனந்தி உள்பட பலர் ஆஜராகி, கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும் வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள் படித்தனர். குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில் படிப்பவர்கள் அதிகமான மார்க் பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று வாதாடினார்கள். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

   Delete
 13. அட்மின்,சந்தோஷ், விஜயலட்சுமி, வினோதினி, பொன்மாரி,பிரகாஷ், வளர்மதி, மற்றும் நம் குருகுல நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் நண்பர்களே....Delete

  ReplyDelete
 14. அனைவருக்கும் இனிய வணக்கம் நண்பர்களே ...

  ReplyDelete
 15. நன்பரே தகுதி மதிப்பெண் என்றால் என்ன தெரியூமா?
  பன்னிரெட்டாம் வகுப்பில் சுமார் 50க்கு மேற்பட்ட குரூப் உள்ளது. அனைவரையூம் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க விதிமுறை உள்ளதா?
  அல்லது அனைவரையூம் பொறியியல் படிப்பில் சேர்க்க விதிமுறை உள்ளதா?

  அவ்வாறு இருந்தால் நாமும் அரசாணை 71ஜ ஆதரிக்கலாம். அவன் அவன் பன்னிரென்டாம் வகுப்பில் எடுக்கும் குரூப் ஏற்றவாறு அவர்கள் கல்லூரியில் சேருகின்றனர்.

  கல்லூரியல் பலதரப்பட்ட கல்லூரிகள் உள்ளது (தன்னாட்சிஇ பல வகை பல்கலைக்கழகம்இ திறந்த வெளிஇ தொலைதூர பல்கலைக்கழகம் என்று பலவாறு உள்ளது) ஒவ்வொருவரும் அவர் ஊருக்கு அருகில் அவனுடைய பொருளாதார தகுதிக்கு ஏற்ப அரசு கல்லூரியில்இ தனியார் கல்லூரியிலும்இ திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றான். கல்லூரி கல்வி தமிழ்நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இருந்தால் இந்த அரசாணை ஏற்றுக்கொள்வோம்.

  அந்த சமயத்தில் மருத்துவம் பொறியியில் போன்ற படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசாணை அனைவருக்கு ஒரே வெயிட்டேஜ் என்று அறிவித்திருப்பது ஏற்கெனவே படித்த அனைவரையூம் கதிகலங்க வைத்து விட்டது.

  ஒன்று வெயிட்டேஜ் முறை நீக்கம் செய்து. 2012ம் டெட் தேர்வூ முறைப்படி எப்படி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டனரே அதே மாதிரி 2013ம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அரசு அறிவித்த 5 சதவீதம் உண்மையாக வரவேற்கத்தக்கது.

  அல்லது கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை தரவேண்டும் மருத்துவம் பொறியில் கல்லூரிக்கு சேர்வதற்கு அந்த சமயத்தில் எவ்வாறு சலுகை வழங்கப்பட்டதோ. அந்த கல்வியாண்டியல் தனது பள்ளிபடிப்பு கல்லூரி படிப்பை படித்த முடித்தவருக்கு கிராமபுற சலுகை கண்டிப்பாக தரவேண்டும்.

  சட்டத்துறையில் - புதியவர்களை நீதிபதியாக தேர்தெடுக்க கூடாது என வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
 16. சென்னை நீதிமன்றத்தில் டெட் இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் குறித்த வழக்குகள் விசாரணை நடைபெற்றது. வழக்கு தொடுத்தவர்கள் சார்பாக ஐந்து முக்கிய வழக்குரைஞர்களும், அரசு தரப்பில் ஐந்து அரசு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி. திரு. அங்கோத்ரி மற்றும்
  மனிஷ்குமார் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.
  1) இடஒதுக்கீடு வழக்கு

  இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட இயலாது என வழக்கு வாதத்தின் போது நீதிபதி அவர்கள் தனது கருத்தை வெளியிட்டார். எனவே இடஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றத்தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என ஓரளவிற்கு நீதிபதிகள் கோடிட்டு காட்டியுள்ளனர்.

  ReplyDelete
 17. 2) வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கு
  வெயிட்டேஜ்க்கு எதிரான வழக்கு அதிக நேரம் விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு வழக்கறிஞர் டெட் அறிவிக்கப்பட்ட தேதி, கீ ஆன்சர் வெளியிடப்பட்ட தேதி, கீ ஆன்சர்கள் சார்பான வழக்கு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பழைய வெயிட்டேஜ் முறை (Ex: 90-104 Slab Method) மாற்றப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை குறித்த அரசாணை வெளியிடப்பட்ட தேதி, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற தேதி, இதன் அடிப்படையில் தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்ட தேதி, கலந்தாய்வு நடைபெற்ற விவரம், தேர்வர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்தும் பணிபுரிய இயலாத சூழல் போன்றவைகள் குறித்து தெளிவாக கருத்துகளை எடுத்துவைத்தார்.மேலும் இத்தகைய வழக்குகளால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனவும், விரைவில் வழக்குகளை முடித்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்கள் பணியில் சேர அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராடிய வழக்கறிஞர்கள் ”12ஆம் வகுப்பில் பல்வேறு குரூப்கள் உள்ளன. எனவே ஒரு சில குரூப்களில் 600 மதிப்பெண்கள் வரை செய்முறை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதே சமயம் கணிதம், அறிவியல் பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு இத்தகைய செய்முறை தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. மேலும் அதிக மதிப்பெண் பெற இயலாத கிராமப்புற அரசு மாணவர்களுக்கு இந்த வெயிட்டேஜ் முறை எதிரானது. எனவே இந்த மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர விழையும் போது பாதிக்கப்படுகிறார்கள்” என கூறினார். அப்போது மாண்புமிகு நீதிபதி. மருத்துவம், பொறியியல் போன்ற பாடங்களில் மாணவர்கள் சேரும்போதோ அல்லது இதர கல்லூரிகளில் சேரும்போதோ இத்தகைய கேள்விகள் இதுவரை எழவில்லையே என குறுக்கிட்டு எதிர் வழக்குரைஞர்களிடம் கேட்டார். மேலும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கல்லூரிகள் பலவும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டங்களை கொண்டுள்ளன. ஒரு சில கல்லூரிகள் குறிப்பிட்ட பாடங்களுக்கு செய்முறை பயிற்சி மதிப்பெண்கள் வழங்குகின்றன. ஆனால் அதே பாடங்களுக்கு இதர கல்லூரிகள் இத்தகைய மதிப்பெண்களை வழங்குவதில்லை. மேலும் முறையான கல்லூரிகளில் பயில்வோருக்கும், அஞ்சல் வழிக்கல்வியில் பயில்வோருக்கும் மதிப்பெண் பெறுவதில் வித்தியாசம் உள்ளது. எனவே கல்லூரி மதிப்பெண்களை வெயிட்டேஜ் முறைக்கு எடுத்துக்கொள்வதில் உள்ள சிக்கல்களை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது மாண்புமிகு நீதிபதி ”டெட் மதிப்பெண்கள் தானே 60 சதவீதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, 12 ஆம் வகுப்பு உட்பட இதர மதிப்பெண்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 40 சதவீதத்திற்கு தானே எடுத்துக்கொள்ளப்படுகிறது?” குறிப்பிட்டு கேள்விகள் கேட்டார். மேலும் ”அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஏதேனும் குறை இருப்பின் அந்த குறைகளை களைந்து அரசாணை வெளியிட நீதிமன்றம் அறிவுறுத்துமே தவிர, இப்படித்தான் அரசாணை வெளியிடப்பட வேண்டும் என நீதிமன்றம் இறுதி செய்து அறிவிக்காது” என நீதிபதி தனது கருத்துரையில் கூறினார். முற்பகலில் அரசாணை 71 க்கு எதிராக போராடிய வழக்கறிஞரை பல குறுக்குக் கேள்விகள் கேட்ட மாண்புமிகு நீதிபதி, பிற்பகலில் எதிர் தரப்பு வழக்கறிஞர் எடுத்து வைத்து திறமையான வாதக் கருத்துகளை முழுமையாகவும், மிகப்பொறுமையாகவும் கேட்டறிந்தார். அன்றுடன் இவ்விரு வழக்ககள் சார்ந்த விவாதமும் முழுமையாக முடிவு பெற்றன. தற்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுமே வாதிட்ட தங்கள் சார்பான கருத்துகளை எழுத்து வடிவில் வழங்க வேண்டும். மேலும் தற்போது நடைபெற்ற வழக்கு விவாதத்தை பற்றிய கருத்துகளில் ஏதேனும் மாற்றம் இருப்பினோ அல்லது வேறு ஏதேனும் புதிய கருத்துகளை சேர்க்க வேண்டி இருப்பினோ அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் எழுத்து பூர்வமாக தங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

  ReplyDelete
 18. மேலும்

  இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்.அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன் பெஞ்சில் பதிலுரைத்தார்.ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வரும். அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.மேலும் சென்னை வெய்டேஜ் வழக்கு விவாதம் முற்றிலும் முடிந்த நிலையில் 1வாரம் கழித்து சென்னை உயா்நீதி மன்றத்தில் தீா்ப்பு வரவிருக்கின்றது.தீா்ப்பு கண்டிப்பாக வெய்டேஜ் மாற்றிஅமைக்க உத்தரவிடும் தீா்ப்பாகவே அமையும் என வெய்டேஜ்க்கெதிராக வாதாடிய அனைத்து வழக்கறிஞா்களும் கூறி உள்ளனர்.மேலும் ப்ளஸ்2 மதிப்பெண் கண்டிப்பாக நீக்கபடுவதுடன் சீனியாா்டிக்கு மதிப்பெண் அளிக்க போகிறாா்கள் எனவும். எந்த விகிதாசாரத்தில் மதிப்பெண் அமையும் என தெரியாது எனவும் கூறினா்.ஒரு சில கல்வியாளா்கள் UG மதிப்பெண்னும் வெய்டேஜ்ல் இருக்காது எனவும் கூறினா்.எது எப்படியோ தீர்ப்பிற்கு முழு விவரம் தெரிய வரும்.அதுவரை பொறுத்திருப்போம்...

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.