Wednesday, 17 September 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கு இனி எப்படி பணிகிடைக்கப் போகிறது??? ஆசிரியர் சங்கங்கள் என்ன செய்கிறது??? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்-!!!!!! அதற்கு தீர்வு என்ன?

வணக்கம் நண்பர்களே இன்று நாம்  பார்க்க இருக்கும் முக்கியமான ஒரு தலைப்பு  இடைநிலை ஆசிரியர்களுக்கு எப்படி இனி பணி  கிடைக்கப்போகிறது. கிடைக்குமா நாம் எதிர்பார்த்து இருக்கலாம தற்போது
என்னதான் தமிழகத்தில் நடக்கிறது. ஒரு உண்மை ரிப்போர்ட் இது கட்டுக்கதையோ அல்லது புதிதாக எதையாவது கிளப்பி விடவேண்டும் என்ற நோக்கம் கொண்டு இந்த கட்டரை எழுதப்படவில்லை உண்மையை உரக்க சொல்கிறேம்.

     இன்று அதிக அளவில் ஆசிரியர்களையும் அதிக சங்கங்களையும் கொண்டது தான் இடைநிலை ஆசிரியர்கள். தமிழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் என்றால் மற்ற ஆசிரியர்களை விட இடைநிலை ஆசிரியர்கள் தான் முதலில் போர்கொடி துாக்குவர்கள் .எப்போதும் விழிப்புடன் இருக்கும் தொடக்ப்பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் பள்ளிகளில் 1 மற்றும் 2 குழந்தைகளை வைத்து பாடம் நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறர்கள். இன்னும் ஒருபடி மேலே போய் குழந்தைகள் இல்லை பள்ளியையே இழுத்தும் முடிஉள்ளது அரசு. ஏன் நமது நாட்டில் புதிதாக மக்கள் தொகை எதுவும் குறைந்து குழந்தைகள் அதிகம் பிறக்கவில்லையா! இல்லை குழந்தைகள் இடைநிற்றல் அதிகமாகிறதா!! இதற்கு பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டல் புலம்பி தள்ளுகிறார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு  காலணி பாடப்புத்தகம் சீருடை என  மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என அனைத்து பதிவேடுகளையும் பராமரிக்கின்றோம். எங்களுக்கு அரசு அனைத்து சுமையையும் தலையில் ஏற்றி வைத்துவிடுகிறார்கள் இதனால் எங்களால் சரியாக குழந்தைகளுக்கு பாடம் சொல்லிகொடுக்க முடியவில்லை அனைத்துப் குழந்தைகளும் தனியார் பள்ளியை நோக்கி சென்றுவிடுகிறார்கள் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் இதில் ஒரு கசப்பான உ ண்மை என்னவென்றால் அந்த பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை இன்று யாரும் அதிக அளவுக்கு அரசு பள்ளிகளில் படிக்கவில்லை மற்றவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் ஆசிரியர்களின் குழந்தை CBSE பள்ளிகளில் படிக்கின்றனர் அவர்களிடம் கேட்டால் ஒரு பொருளை வாங்க பல முறை யோசிக்கும் போது எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் அதில் நாங்கள் கண்டிப்பாக அக்கறை காட்ட வேண்டும் அதனால் தான் இதனை நீங்கள் பிரக்டிக்கல்லாக பாருங்கள் புரியும் என்றனர்.

       சரி பெற்றோர்களிடம் கேட்டால் எங்கள் பிள்ளைகளை ஆங்கில அறிவு மற்றும் LKG இல் இருந்து சேர்த்தால் தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் அரசு பள்ளிகளில் LKG இல்லை இன்னும் சிலர் Pre KG,play school போன்றவை அரசு பள்ளியில் இல்லை இந்த அவசரமான உலகில் அதற்கு ஏற்றார் போல் எங்கள் குழந்தையையும் தயார் செய்ய வேண்டும் என்றார்.

     இதில் இருந்து ஒன்று தெரிகிறது அரசைவிட இன்று நல்ல கல்வி வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க தொடங்கி விட்டனர். நான் பார்த்த வரைக்கும் அரசு பள்ளிகளில் 75% பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிக மிக குறைவு இதே நிலை நீடித்தால் அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு கூட வேலை கிடைக்காது எப்படி தற்போது வெற்றி பெற்றவர்களுக்கு வேலை இனி வரும் காலங்களில் கிடைக்கும். http://www.gurugulam.com/

   இது குறித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு அவர் நான் ஓய்வு பெற்ற பள்ளியில் தற்போது எனது பணியிடம் உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது ஆனால் அதற்கு ஏற்ப மாணவர்கள் இல்லை இப்போதே அங்கு வேலை பார்க்கும் 8 ஆசிரியர்களுக்கு எண்ணிக்கை ஏற்ப மாணவர்கள் எண்ணிக்கை இல்லை அந்த ஆசிரியர்களே சர்ப்லஸ்லில் உள்ளனர் அவர்களுக்கே இனி எந்த பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்போகிறார்களோ என கூறினார். இனி இதுபோல் இருக்கும் ஆசிரியர்களை வேறுபள்ளிகளுக்கு மாற்றுவார்கள் ஆனால் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் சர்ப்லஸ் என்றால் புதிய காலிப்பணியிடம் இருக்கும் இடங்களுக்கு மாற்றினால் தான் அவர்களுக்கு அரசு பணி வழங்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கும் போது எப்படி இனி புதிதாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் இருப்பது போல் எண்ணிக்கை காட்டி சமாளித்துக்கொண்டு தங்கள் இருக்கும் பள்ளியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சமாளித்து வருகின்றனர் அதனால் தான் புதிய பணியிடங்கள் உருவாகியது தற்போது கூட 2000 இடைநிலைஆசிரியர்கள் பணி உருவானது. ஆனால் தற்போது பள்ளிக்கல்வித்துறை சரியான எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகிறது வரும் கல்வியாண்டில் புதிய பணியிடங்கள் குறையும் மேலும் வரும் ஆண்டுகளில் புதிய காலிபணியிடமே இருக்காது என்ற சூழ்நிலை காணப்படும் என்றார்.

     மேற்கொண்ட காரணங்களை வைத்துப்பார்த்தால் இரண்டு ஆண்டுகாலம் சார்ட் ரிக்கார்டு நோட்டு படித்தபாடங்கள் என ஆசிரியர் பயிற்சி பெற்று இத்தனை  ஆண்டுகாலம் போராடியது வீண் என்றாகிவிடும் போல் உள்ளது. இவை அனைத்தும் உண்மை செய்திகளே யார் வேண்டுமானலும் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.

  தீர்வு

 1) இனி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

2)தொடக்கப்பள்ளியில் மழலையர்கல்வி கொண்டு வர வேண்டும் இதற்கு என தனியாக ஆசிரியர் நியமனம் செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்,
3)அரசு பள்ளிகளில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனி பதவி உயர்வுக்கு அவர்களுக்கு 6-14 வயதுடைய குழந்தை இருந்தால் அவர்களை அரசு பள்ளியில் சேர்த்தால் முன்னுரிமை கொடுத்து பதவி உயர்வு அளித்தல் வேண்டும் இனிவரும் புதிய அரசு உழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை கட்டாயப்படுத்த வேண்டும். ஏன் என்றால் உயர் அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை பார்க்க பள்ளிகளுக்கு வரும் போது அங்கு உள்ள குறைகளை எளிதாக களைய அரசுக் பரிந்துரைக்க வழிவகை செய்ய முடியும்.

4) கம்யூட்டர் பொது அறிவு யோக சிறப்பு பயிற்சிகள் போன்ற புதிய பாடத்திட்டங்களை  தனியார் பள்ளிகளுக்கு இனையாக அதற்கேற்ற தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்தல் வேண்டும்.

5)பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி படுத்தும் வகையில் அவர்களுக்கு என்று காலை மற்றும் மாலை சிறப்பு பேருந்து இயக்கவேண்டும்.

6) விளையாட்டு செஸ் போன்ற பள்ளி அளவிலான போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இனையாக அரசுபள்ளி மாணவர்களும் பல சாதனைகளை படைக்க அதற்கேற்ற விளையாட்டு உபகரணங்கள் மற்றும் முறையான பயிற்சி அளித்தல் வேண்டும்.

7)இனையதளத்தின் மூலம் அதிவேக இனையதளம் மூலம் பள்ளியின் கற்றல் கற்பித்தலை கல்வித்துறையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகையை கண்காணிக்க வேண்டும்.

8) மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புனர்வுடன் அவர்களுக்கு
 சுத்தமான தண்ணீர் கழிப்பறை போன்ற வசகிகளை செய்து தரவேண்டும்.

9) மாணவர்களுக்கு புதிய முறையிலான smart class முறையில் பாடம் நடத்த வேண்டும் அதற்கு ஏற்ற முறையில் புதிய மென்பொருள்களை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். http://www.gurugulam.com/

 10)மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற சீறிய சிந்தனையில் ஆசிரியர்கள் தன் குழந்தை போல் பிற குழந்தைகளையும் பாவிக்க வேண்டும்.

   மதிப்பிற்குறிய ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள் 
சம்பள உயர்வு பணிமாற்றம் போன்றவற்றிற்கு போராடும் நீங்கள் இனி வரும் காலங்களில் உங்கள் மாணவர்களின் நலனுக்காக அவர்களின் கல்விக்காக அரசிடம் இந்த பத்து கோரிக்கைகளையும் பெற போராடுங்கள் உண்ணாவிரதம் கூட இருங்கள் நல்ல செயலுக்கு இருந்தால் தவறு இல்லை தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வாருங்கள் அவர்களுக்கு நீங்கள் தானே பாடம் நடத்தப்போறீர்கள் மற்ற பிள்ளைகளுக்கு சிறப்பான முறையில் பாடம் நடத்தும் போது உங்கள் பிள்ளைக்கு நன்றாக நடத்த மாட்டீர்களா இது எனது பணிவான வேண்டுகோள் இதில் தவறு இருந்தால் என்னை மண்ணியுங்கள் தனியார் பள்ளிகளில் 5000 ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் போது 20000 ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் நீங்கள் இதைவிட சிறப்பாக பாடம் நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்னை இந்த அளவுக்கு ஒரு வலைதளத்தை ஏற்படுத்தி கருத்து கூற அறிவை புகட்டியது அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும்

52 comments:

 1. ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்?

  மாணவன்: டன் டன் டன்

  ReplyDelete
 2. ஹாய் சார் மதீய வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. இனி தமிழ் வழியில் நமது வினோ மேடம்

   Delete
  2. அக்கா வணக்கம்!
   அண்ணா வணக்கம்!

   Delete
  3. அக்கா அண்ணாவா ஹலோனு சொன்னா இப்படி எல்லாம் சொல்வீங்களா?
   தங்கச்சிணு கூப்பபிடுங்க

   Delete
  4. தமிழன் சார் வெய்டேஜ் டாப்பிக்குள்ளள உங்க கமெண்ட காணோம்

   Delete
  5. ஆசிரியர்: அனில் கும்ப்ளே‍யோட‌ அம்மா, அப்பா பேரு என்னடா??

   மாணவன்: அப்பா பேரு "ஆம்ப்ளே", அம்மா பேரு "பொம்ப்ளே".

   Delete
  6. அண்ணன் பயப்படுராக தங்கச்சி

   Delete
  7. Meet u latr sir having sum work

   Delete
  8. Mm...ஐய்ய்ய் இங்கயும் பெல் அடிச்சிட்டாங்க...

   Delete
  9. Santhosh sir today aptitude questions aethum post panalaya , pradhima mam, ganesh sir yellam enga poitinga

   Delete
 3. அருமையான கட்டுரை நன்றி அட்மின்,

  ReplyDelete
  Replies
  1. பொன் மாரி சார் நீங்க ஒருவர் தான இந்த கட்டுரையை பற்றி வாய்திறந்து உள்ளீர்கள் எல்லோரும் யாருக்கோ எழுதியது போல் இருக்கிறார்கள்

   Delete
 4. அரசு நினைத்தால் இதுவும் நடக்கும்:

  அடுத்த டெட்டில் முன்னுரிமை கோரமுடியது தான்.ஆனால் அரசு நினைத்தால் முடியும். அது எவ்வாறு?
  5% தளர்வு அரசின் கொள்கைமுடிவு என்றால், அடுத்த டெட்டில் முன்னுரிமை கொடுத்துவிட்டு அரசின் கொள்கை முடிவு என்று சொல்லலாம். ஆனால் இதை அரசு செய்யுமா என்பது ? தான்.

  ReplyDelete
  Replies
  1. கோரிக்கையாக கேட்கலாமே தவிர நிர்பந்தபடுத்த முடியாது.

   Delete
 5. வாங்கோ வாங்கோ தங்கள் பதிவை புதுப்பிக்கவா , அவசியமில்லைங்க. யாருங்க. வேலைவாய்ப்பு பதிவுமூப்பை பாக்குறாங்க. , TET. ங்குறாங்க. ...வெயிட்டேஜ்ல. வேலைங்கறாங்க. ,10. ,15. , 20, 25. ,ஆண்டுகள் பதிவுமூப்பில் இருந்தும் , TET.பாஸ் செய்தும் . என்ன. பிரயோஜனம் . யாருதான் கவனிக்கறாங்க. , கடவுளே , கடவுளே .

  ReplyDelete
 6. அட்மின் சார் நல்ல கருத்துல ஆர்டிகல் ஆனால் இது நடைமுறைக்கு வந்தால் மிகவும் சந்தோஷம்

  ReplyDelete
 7. இந்த கட்டுரை யில். 3 வதாக சொல்ல பட்டுள்ள கருத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ,அரசு அதிகாரி கள் ஆகியோர் கவனத்தில் கொள்ள. வேண்டிய முக்கிய. விசியம் .குருகுலத்திர்கு வாழ்த்துக்கள் .நல்ல அறைகூவல்.

  ReplyDelete
  Replies
  1. மிகவுன் நன்றி சார்

   Delete
 8. TET. பாஸ் செய்தாச்சு ,வேலைவாய்ப்பு. பதிவுமூப்பில. வேலைவழங்கினா என்னங்க. தப்பு.

  ReplyDelete
 9. நண்பர்களே நான் NOKIA ASHA 501 mobile ல UC browser use செய்கிறேன் ஆனால் அதில் comment ku reply செய்ய முடியவில்லை மேலும் குறிப்பிட்ட comment கு மேல் சென்றால் பார்க்க முடிவது இல்லை. இப்போ browsing center ல இருக்கிறேன் . குறிப்பிட்ட time தான் இங்கு இருக்க முடியும் . நான் எந்த browser use செய்தா நல்லா இருக்கும் என சொல்லுங்கள் நண்பர்களே please . எனக்கு help செய்வீங்க என நம்புகிறேன்.

  thank you friends

  ReplyDelete
  Replies
  1. opera mini அல்லது டால்பின் நோக்கியா இதைவிட நல்ல browser இருந்தால் நண்பர்களே கூறுங்கள்

   Delete
  2. Chrome la type Pannal mudiyum.

   Delete
  3. அட்மின் சார், டால்பின் மினி பிரௌசர் நன்றாகத்தான் உள்ளது நான் டால்பினைத்தான் பயன்படுத்துகிறேன் நண்பரே மிக அருமையாக உள்ளது

   Delete
 10. ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு, வாழ்த்துககள் நண்பரே,
  அரசு வீண் செலவீனங்களை குறைத்து கல்வித்துரைக்கு மேற்சொன்ன
  வழிமுறைகளை செயல்படுத்தினால் அனைத்தும் சாத்தியம்.
  முத்தான 10 கருத்துக்கள் ,மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. விஜி மேம் இன்று எனக்கு வணக்கமே சொல்லவில்லை கோபமா தோழியரே.......

   Delete
  2. குருவே முதல் வணக்கமே உங்களுக்குத்தானே செலுத்தினேன்
   மீண்டும் ஒருமுறை பாருங்கள் நண்பரே

   Delete
  3. நாளை எங்கள் மாவட்டத்திற்கு local holiday அனைவரும் வீட்டில்
   இருப்பார்கள் கொஞ்சம் busy யாக இருப்பேன்,வர இயலாது ,நாளை மறுநாள் குருகுலத்தில் சந்திப்போம் நண்பரே .

   Delete
  4. ஆம் தோழியே மண்ணிக்கவும் சரியாக கவனிக்கவில்லை நன்றி.......

   Delete
  5. தோழி விஜி ,எந்த மாவட்டம் என்ன திருவிழாவா?

   Delete
  6. கடலூர் மாவட்டம், இடைத்தேர்தல்
   கொஞ்சம் வேலை இருக்கிறது, நன்றி வருகிறேன் நன்பரே

   Delete
 11. 15. ஆண்டா காத்திருந்து என்னபிரயோஜனம் ஆசிரியர் வேலை போச்சே

  ReplyDelete
 12. Replies
  1. தங்கள் கோரிக்கையை சற்று சிந்தித்து கண்டிப்பாக அனுப்பு கிறேன் மிக்க நன்றி

   Delete
 13. அட்மின் சார், தங்களுடைய கட்டுரையை தற்போதுதான் படித்தேன் மிகவும் ஆழ்ந்த சிந்தனையோடு கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் பல.... என்னுடைய பையன் அரசு உதவிபெறும் பள்ளியில்தான் பயிலுகிறான் மெட்ரிக்கில் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் நண்பரே.....

  ReplyDelete
 14. The immediate solution for TET 2013 is give appointment order immediately to above 90 candidates those who attended first C.V. Most of them enter into the provisional selection list. The remaining candidates if they get appointment order in Corporation school vacancy and this academic year vacancy also will be given to them. 99% problem solved.

  ReplyDelete
 15. Thank you admin sir, Mubarak ali sir, kumarakuru sir, venkat venkat sir.

  ReplyDelete
 16. சந்தோஷ். எங்க சார் ?

  ReplyDelete
  Replies
  1. நான் இங்க தான் இருக்கேன் சாா்......

   Delete
  2. போன வருடம் 1000 க்கு மேல் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டன...
   64 தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டன...
   அப்புரம் எப்படி இடைநிலை ஆசிரியா்களுக்கு வேலை கொடுக்க முடியும்.......

   Delete
  3. சந்தோஷ் நண்பரே மாலை வணக்கம். இன்றைய மதுரை வழக்கு பற்றிய தகவல் பறிமாற்றமே இல்லை ஏதேனும் தகவல்கள் உண்டா?

   Delete
  4. தடையாணை வழக்கு இன்று பட்டியலில் இல்லை சாா்....
   வதந்தியை கிளப்பிவிட்டுட்டாங்க நம்பாதீங்க...........

   Delete
 17. *எந்த ஒரு போட்டிக்கும் தகுதி பெற்றவுடன்தான் உண்மையான போட்டி நடக்கும் அதில் சாதனை புரிபவர்களே வெற்றி பெறுவார்கள் .தகுதி போட்டிக்கு முந்தைய சாதனைகள் கணக்கில் எடுத்து கொள்ளபடுவதில்லை ஒலிம்பிக்கில் தகுதி சுற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு இறுதி போட்டி நடத்தி அதில் சாதனை புரிபவர்களே வெற்றியாளர்கள் மாறாக tet -il மட்டும் முரண்பாடு

  ReplyDelete
 18. Nan 13 la b.ed mudichen.MA pannala.January la job kidacidum nu.MA padichavaga PG eludhuga TET eludheeto MA MPhil ku mark keakathega.Thavaruna mannichitogo.TET mark ku 1st preference secnd seniority`Juniors mark ka vetchi posting erukanum to asa.And relax vandhavagaluku opposite nan elango k tc.MA pannavum vaipu ela Seniority um ela nangalum enna than pannuvom negaley solunga.Seniority 1st preference 1stey soli erudha youngsters tet eludhama erundhurupaga.Sari papom ena than mudivu nu Jesus save us.

  ReplyDelete
 19. Vino,vijaya laxmi,Tamilan sir,vasanth girija mam fan nana nd comments pototey eruka asa than bt enna pantradhu 255 ku 1 GB than kudukaga so only i can,t

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.