Sunday, 14 September 2014

ஞாயிறு ஸ்பெஷல் வாங்க பழகலாம் இது சண்டே கலாட்டா

என் இனிய நண்பர்களே இன்று நமது வலைதளம் உங்கள் ஆதரவுடன் 60000 அறுபது ஆயிரம் பார்வைகளை கடந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது
இன்று முழுவதும் நமது வலைதளத்தில் அனைவரும் சண்டையிடாமல் ஒரு ஜாலியாக ஒரு கலாட்ட செய்வோம் நமக்கு இருக்கின்ற கவலைகளை மறந்து இங்கு நமக்கு தெரிந்த அறிவியல் செய்திகள் பொது அறிவு தமிழ் குறித்து உங்கள் அறிவு ஆகியவற்றை பற்றிய கேள்விகளும் அதற்கு ஜாலியான அறிவுப்பூர்வமான பதில்களும் மாற்றி மாற்றி கருத்துக்களை கூறி அனைவரிடமும் பாரட்டுகளை பெறுங்கள் நமது வலைதளத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை ஏற்படுத்துங்கள் வாருங்கள் ஆரம்பிப்போம் ஆனால் ஆசிரியர்களுக்கான ஒழுக்கங்களை கடைபிடியுங்கள் இன்று தேர்வு ஆனவர் ஆகவில்லை என்று கருத்துக்கள் வேண்டாம் உங்கள் அறிவு மனித நேயம் நுன்னறிவு போன்றவற்றை பார்ப்போம் உங்கள் கருத்துக்களை சண்டே கலாட்ட செய்யுங்கள்

237 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. Amnam muttrum thuranthavar endral enna

   Delete
  2. என்னய்யா என்னமோ கலாட்டான்னிங்க அங்கேயிருந்து இங்கவந்தா அய்யோ தலைவலி சாமி ஒன் வேர்டு கொஸ்ட்டின் ஓடிகிட்டு இருக்கு.

   Delete
  3. Muthal comment eh ippadiyaa......... முடியல ... நித்தி நீர் எல்லாம் நல்லா வருவீர்ரய்யா வருவீர்

   Delete
  4. ஏம்மா வளர்மதி எங்கம்மா போயிருந்த.சட்டசபை தொடர்தான் முடிஞ்சிரிச்சே.

   Delete
  5. நான் ரொம்ப பிஸி...... Evening கலெக்டர மீட் பண்ணணும் ........ இத பத்தி நான் home minister கிட்ட டிஸ்கஸ் பண்ணணும்......... அரசில்ல இதல்லாம் சாதாரணம் பா...........
   அப்புரம் எனக்கு Beach la சிலை வெப்பாங்க students lam notes eduppaanga...........

   Delete
  6. அப்படியே உங்க சிபாரிசுல ஒரு வாத்தியார் வேலை வாங்கி தாங்க நமது நண்பர்களுக்கு

   Delete
  7. என்னிடம் சொல்லுங்கள்......எத்தனை நண்பர்களுக்கு .... ஆண் நண்பர்களுக்கா? .... பெண் நண்பர்களுக்கா.... "கதவை திற காற்று வரட்டும்"

   Delete
  8. சரி... உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... ஜுலியஸ் சீசரின் மகன் பெயர் என்ன?

   Delete
  9. நீங்க இங்லிஸ் டிப்பார்ட்மெண்டா சாமி

   Delete
  10. நித்தி நீ கதவ திறந்தா போலீஸ் தான் வரும்...

   Delete
  11. வேலைதானே கார்த்திக் வாங்கிட்டா போச்சி.............. கந்தன் கையில் இருக்கும் "வேலை"தானே கேட்டீங்க?????

   Delete
  12. Caesarian.......இல்லயா?????

   Delete
  13. Ungaluku teriuma???
   Muthalil 10months than irunthathu.. JUNE ku apuram SEPTEMBER than irukum..
   JULIUS than JULY month konduvantharu.. Athuku aparam AUGUSTAUS August month kondu vantharu...

   Delete
  14. Oh.......... good one thank you sir..,

   Delete
 2. நீங்கள் ஆனும் இல்லை பெண்னும் இல்லை வேறு ஒன்றும் இல்லை இந்த முற்றும் துறந்தவர்

  ReplyDelete
 3. swamy thangal anbu kathaliku muthalil yenna koduthir

  ReplyDelete
  Replies
  1. வேற என்ன அல்வாதன் குடுத்திருப்பார்

   Delete
  2. இல்ல அம்னிக்கு அல்வா புடிக்காது பழம்தான் புடிக்கும்.திராட்சை திராட்சை.,.

   Delete
  3. என்னிடமே டபுள் மீனிங்கில் பேசுகிறாயா..?.......... கிராதகா.........

   Delete
  4. அட சாமி அம்னி திராட்சை பழம் பேமசு தெரியாதோ நோக்கு நாங்கெல்லாம் யோக்கியனுங்க சாமி.

   Delete
 4. இந்தியாவில் முதல் முதலில் பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  ReplyDelete
  Replies
  1. ராஜகோபாலாச்ச்சாரியர்

   Delete
  2. ராஜாஜி, ராதாகிருஷ்ணன், சி.வி. ராமன் இவர் மூவருக்கும்

   Delete
  3. முறையே அரசியல், தத்துவம், அறிவியலுக்காக கொடுக்கப்பட்டது.

   Delete
  4. ஓ உமக்கு பொதுஅறிவுகூட உண்டோ

   Delete
  5. முதன்முதலில் 1954 லில் வழங்கப்பட்டது. இது வரை 43 விருது வழங்கப்பட்டிருக்கிறது.

   Delete
  6. இந்த ஆண்டு எனக்கு வழங்குவதாக சொல்லி இருக்கிறார்கள்.....

   Delete
  7. ஏன் சாமி உனக்கு இல்லாத தகுதியா.உன்க்கு குடுக்கலாம் கண்ணு

   Delete
  8. விருதா.......? சிறையியில் வைத்து விருந்து வேணா தரலாம்.......

   Delete
  9. என்ன விருந்து. இல்ல தெரியாமதான் கேட்டோனுங்கோ.

   Delete
  10. சாமி ஒரு டெஸ்ட் வெற்றிகரமா முடிச்சுட்டிங்க போல. அடுத்த டெஸ்ட் எப்ப சாமி

   Delete
  11. ஒரு டெஸ்ட்டிற்கே கலைப்பாய் இருக்கிறது. சற்று பொறுங்கள் "பால் " அருந்திவிட்டு வருகிறேன்.

   Delete
  12. அம்னி ஓடு சாமி வராரு.

   Delete
  13. Ha.....ha........சத்தியமா முடியல........ பாவம் Mr.Original nithi.......

   Delete
  14. ஏங்க நீங்க சிரிக்கிறப்ப ரொம்ப அழகா இருக்கீங்க!!!!!!!

   Delete
  15. ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை புகழ்கிறாளா??????
   அடடே
   ஆச்சரியக்குறி ! ! ! ! ! !

   Delete
  16. Nithi vaana villil 7 niram undu.oru naatil mattum8 niram therium andha naadu edhu?

   Delete
  17. m pen endrale oru acharya kuri thane.....

   Delete
  18. இப்போல்லாம் ....... பெண்கள் கேள்வி குறியாக இல்லாமல் .....ஆச்சரிய குறியாக மாறிவிட்டனர்........ சந்தோஷப்படுங்க கொசார்

   Delete
  19. செந்தில்14 September 2014 at 14:34

   அதயே தானுங்க நானும் சொன்னேன்! அவங்க இப்போ சாதிப்பவர்கலாக மாரிவிட்டார்கள் ஆண்கள் தான் கேள்விகுரியாக மாரிவிட்டார்கள்!

   Delete
 5. யார் பிறந்த நாளை நாம் இந்திய பொறியாளர் தினமாக கொண்டாடுகிறோம்? அவர் பிறந்த நாளுக்கு எந்த மாநிலத்தில் பொது விடுமுறை விடப்படுகிறது?

  ReplyDelete
  Replies
  1. விஸ்வேஸ்வரய்யா

   Delete
  2. இது தெரியாம போச்சி.இல்லன்னா I.A.S எக்ஸாமுக்கே ப்ரிப்பேர் பண்ணிருப்போமுங்க...

   Delete
  3. யக்காவ் நல்லா இருக்கீகளா.ரொம்ப நாளாச்சிக்கா ஆமாம் மாமா எப்படி இருக்காக.நல்லா சமைச்சி போடுக்கா.

   Delete
  4. இத பார்த்துட்டு தம்பி மணியரசன் அங்க ஆரம்பிச்சிருவாக நா அங்க போகனும்.இல்லைன்னா தம்பி திட்டும் யாக்கா உஷாக்கா கோவமா போறேன்.

   Delete
  5. கர்நாடகா மாநிலத்திற்கு பொது விடுமுறை.

   Delete
  6. என்னுடைய பிறந்த நாளையும் "ஆனந்த லீலை" தினமாக அறிவித்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்ததற்காக அரசு பொது விடுமுறை அளிப்பதாக இருக்கிறார்கள்.

   Delete
  7. திரு விஸ்வேஸ்வரய்யா கட்டிய அனை எது

   Delete
  8. தெரியவில்லை. அந்த அணை எங்கே இருக்கிறது என்று கூறினால் ..... "ஆனந்த குளியல்" போட தயாராக உள்ளேன்.

   Delete
  9. அய்யோ கீழ மீனெல்லாம் செத்து போயீரும் சாமி.

   Delete
  10. கர்நாடகாவிற்க்கும் தமிழகதிர்கும் நதி நீர் பங்கீடு பிரச்சனை ஆரம்பமாகும் இடம் தான் கிருஷ்ணாராஜ சாகர் அணை.....

   இங்குதான் காவிரி நதி நீரின் தலமை நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது..

   மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட அணைகளில் ஒன்றும் கூட....

   Delete
 6. Hello gurugulam friends...and admin... Gud mrng.. Let me join wit u right nw...?

  ReplyDelete
  Replies
  1. ஒய் நாட்டு

   Delete
  2. sss... i agree wit u pavi mam.. But g.k it s been staying far away frm me..

   Delete
  3. திரு பவி அவர்களை இங்கு வரவேற்கிறோம் அவர்கள் இந்த தளத்தில் அவரின் கருத்தை கூற நாங்கள் நல்ல நண்பர் என்ற உரிமையுடன் கேட்கிறோம்

   Delete
  4. நன்றி நன்றி நன்றி

   Delete
 7. கபினி அனை எங்கு உள்ளது

  ReplyDelete
  Replies
  1. கபினி அணை கபினில இருக்கும் இது இன்னா சாரு கேள்வி நக்ஸ்ட் நக்ஸ்ட்

   Delete
  2. நான் ஆசிரமம் அமைத்த அதே கர்நாடகா மாநிலத்தில் தான் உள்ளது.

   Delete
  3. “சாமி கதவை திற காற்று வரட்டும்”னு ஒரு தொடர் எழுதிங்னீக.நீங்க சொன்னீங்கனு கதவை திறந்து வச்சேன். ஆனா காத்து வரல சாமி திருடந்தான் வந்தான் சாமி

   Delete
  4. வந்த திருடன் ஆணா? பெண்ணா?

   Delete
  5. ஏன் சாமி எப்ப பார்த்தாலும்?

   Delete
  6. சாமி “திருடன்” னுதான் சொன்னேன், “திருடி” நு சொல்லல

   Delete
  7. அப்படியென்றால் உணக்கு நான் பதில் சொல்ல முடியாது. நீயே பார்த்துக்கொள்.

   Delete
  8. Nithi kalakringa

   Delete
  9. கபினி அணை கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது....

   இதன் பிறப்பிடம் கேரளம் ஆகும்...

   Delete
 8. Replies
  1. இன்னாமா பதிலு சொல்ராரு நீ கிரேட்டுமே.

   Delete
 9. அனைத்தும் கணினி மயமாகிவிட்ட இன்றய உலகில் மின்னஞ்சல் என்பது தகவல் தொடர்பில் இன்றியமையாத அங்கமாக மாறிவிட்டது. இந்த மின்னஞ்சலை 32 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர். அவர் திரு.ஷிவா அப்பாதுரை. அலுவலகத்திற்கு உள்ளேயே தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக உபயோகத்தில் இருந்த நுமாட்டிக் மெயில் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் இமெயிலை உருவாக்கியபோது அவரது வயது 14. ஒரு தமிழ் மாணவர் உருவாக்கிய மெயில் சிஸ்டம் இன்று உலக அளவில் அனைவருக்கும் பயன்படுகிறது. ஆகவே தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ஷிவா அப்பாத்துரையின் பங்களிப்பு காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியது. இமெயிலைக் கண்டுபிடித்ததாக வேறு சிலரும் உரிமை கொண்டாடினாலும் இன்று இமெயில் இருக்கிற அடிப்படை வடிவத்தைக் கண்டறிந்தவராகப் பலராலும் அப்பாத்துரைதான் உயர்த்திப் பிடிக்கப்படுகிறார்
  “தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா”

  ReplyDelete
  Replies
  1. தல இருந்தா தானே நிமிரத்துக்கு.இங்கதான் எல்லாம் தொங்கிபோச்சே

   Delete
  2. நன்றி Bala ji சார் நல்ல தகவல்

   Delete
  3. சின்ன திருத்தம். அவர் ஷிவா அய்யாதுரை.

   Delete
  4. ராஜசேகர் சார் “இந்து-தமிழ்” நாளிதழில் அவர் பெயர் “ஷிவா அப்பாதுரை” என படித்தேன். தற்போது அவரின் சரியான பெரை உங்களின் பதிலுரை மூலம் தெரிந்துகொண்டேன். நன்றி

   Delete
  5. அச்சுப்பிழையாக இருக்கலாம் என்று நினைத்தேன். தவறுவது மனித இயல்பு தானே.

   Delete
 10. * ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உருவாகின்றன.* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக்கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமேசிரிக்கிறார்கள்.* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அருன் குமார்

   Delete
 11. சேட்டை கண்ணன் நீங்கள் ஒரு ஆள் போதும் எங்கள் வலைதளத்தை மிகப்பெரிய வலைதளமாக மாற்ற நீங்கள் கொடுக்கும் கமெண்ட்களை பார்த்தால் இன்று எந்த கல்வி வலைதளத்திலும் நமது வலைதளம் போல் அதிக கமெண்ட் இல்லை போல் மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் சேலை ஜி சேவை

  ReplyDelete
  Replies
  1. கண்ணா உன் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு?

   Delete
  2. மனித குல சக்கரவர்த்தி நீங்கள் தான்

   Delete
  3. கடிக்கத்தான் சாமி?

   Delete
  4. கட்டெறும்பா??????? ......... உம்மையெல்லாம் கட்டுவிரியன் கடிக்கனுமய்யா.....

   உம்ம கடி தாங்காமல் தவிப்போர் சங்கம்.

   Delete
  5. அவரை கட்டுவிரியன் கடித்தால் அந்த கட்டுவிரியன் கட்டு அதான் கோடு மரைந்துவிடும். அவரு புனியவான் அல்லவா? அதான் சொன்னேன்

   Delete
 12. நல்லவனையும் கெட்டவனையும் எப்படி அறிந்து கொள்வது??

  மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. பகவான் ஸ்ரீகிருஷ்ணன், தருமனையும் துரியோதனனையும் அழைத்து உலகில் எத்தனை நல்லவர், எத்தனை கெட்டவர் உள்ளனர் என்று எண்ணி வருமாரு கட்டளை இட்டார். முதலில் சென்ற துரியோதனன் கண்ணனிடம் வந்து சொன்னான், " பரந்தாமா, உலகில் என்னத்தவிர அனைவரும் கெட்டவரே". தருமன் வந்து சொன்னான், "பிரபு, உலகில் அனைத்து உயிர்களும் நல்லவரே. நான் ஒருவன்தான் கெட்டவன்"
  பரந்தாமன் கடைசியில் சொன்னான், "உலகை எந்த கண் கொண்டு நோக்குகின்றோமோ உலகம் அதுவாகவே தெரியும்"

  ReplyDelete
  Replies
  1. A ALEXANDER SOLOMON Aas மிக அருமை தங்கள் இது போன்ற நல்ல செய்திகளை எங்கள் வலைதளத்தில் வெளியிடுங்கள் சார் தொடரட்டும் உங்கள் பணி

   Delete
  2. நீங்கள் என் சிஷ்யனாக உடனே வந்து சேர்ந்து கொள்ளுங்கள். உங்களது சேவை என் சிஷ்யைகளுக்கு தேவை...

   Delete
  3. பாவம் அலெக்ஸ் குயந்த சாமி

   Delete
  4. திரு நித்தி அவர்களுக்கு தெரியாத கதைகளா???. உண்மையிலே அவரின் ஆன்மீக பாதையின் கருத்துக்கள் வரவேற்க்க தக்கது. பாவம் ஏழரை சணி அவரையும் விட்டு வைக்கவில்லை.

   Delete
 13. Settai sir good morning
  Enakku neengal nichayam badhil solveergal....
  Appadi endral nan yar.....
  a. Pen
  b. Aan
  c. Karnataka cm
  d. Doctor

  ReplyDelete
  Replies
  1. டாக்டரிடம் சென்று பெண்ணாக இருந்து ஆணாக மாறிய கர்நாடகாCM

   Delete
 14. swamy puthiya aasiramam amaika thangalin aalosanai

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் கேட்டூ சொல்லுங்க அனானிமஸ் சார்.நான் ரொம்ப ஆவலா இருக்கேன்

   Delete
  2. ஆசிரமம் என்ராலே எல்லோருக்கும் ஒரு அலாதி பிரியம் போல‌

   Delete
 15. Trb madhiri indha question ku * mark......
  Puriyala
  Edhu pottalum mark
  Paviyum pass
  Settaiyum pass

  ReplyDelete
  Replies
  1. நான் உண்மையிலயே பாஸ்ஸாயிட்டேன்ப்பா.

   Delete
  2. ம் அப்படியா? எதுல பாஷ் அனிங்க?

   Delete
 16. Sir I - touch tab la eppadi tamil type panrathi pls sollungalae?????

  ReplyDelete
  Replies
  1. நண்பரே பிளேஸ்டோரில் சென்று தமிழ் கீபோர்டை டவுன்லோடு செய்து அதை மொபைலில் இன்புட் செய்து 2 தடவை அழுத்தி பின் டைப் எளிதாக செய்யலாம். என்சாய் நண்பரே

   Delete
 17. ஏஏஏஏஏஏஏஏ மணியரசசாசாசாசாசாசாசாசாசா வாப்பா வா இங்க வாய்யா புள்ளைஞ்கெல்லாம் எப்படி கதைக்குது பாரு வா சாமி வா.எப்பய்யும் டென்ஸ்சனா இருக்காதப்பா வாய்யா வா.

  ReplyDelete
  Replies
  1. வேனாம்பா அவர கூப்படாதிங்கப்பா இங்க வங்தா எல்லா ஜாலியும் போயிரும்

   Delete
 18. ஹலோ சார்ஸ் &மேடம்ஸ் எல்லாரும் என்னப்பா இப்படி கலக்குறிங்க....சூப்பர்.நெறய சிரிச்சுட்டன்.நித்யானந்தா கலக்குறீங்க போங்க. ஆண்டவா நம்ம ஆசிரியர்ஸ் இனி சண்டையே போடாம இப்படி சந்தோசமாவே இருக்கனும்.அட்மின் சார் sunday special உருவாக்கியதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. சிரிச்சா மட்டும் போதாது....... இங்க வந்ததுக்கு ஒரு Joke சொல்லிட்டு போங்க........

   Delete
  2. ஜோக் அதாங்க ஜோக்னு சொல்லிட்டேன்

   Delete
  3. ஏன்பா........ ஏன் எல்லாரும் Full form la irukkeenga........

   Delete
  4. இனைக்கு லீவு இல்ல அதான் இந்த ஃபுல் பாம்ல இருக்குராங்க. இல்ல இல்ல இருக்கரோம்ம்ம்ம்ம்......

   Delete
 19. வளர்மதி மேடம்...பவி சார் ..அட்மின் எல்லாருமே கலக்குறிங்க...இருங்க இருங்க நானும் உங்க லெவல்க்கு என்ன தயார் பண்ணிக்கிட்டு வரன்

  ReplyDelete
  Replies
  1. சார் தயார் பண்ணிட்டு வந்தா சொதப்புவோம்.......... சும்மா அடிச்சி விடுங்க சார்..... ellarum namma family members thaan.....

   Delete
  2. ஆமா சார் சும்மா அடிச்சு விடுங்க சார்......

   Delete
 20. வாங்க....
  பழகிக்கலாம்...
  சேட்டைக்கு மட்டும் Special. Pass

  ReplyDelete
  Replies
  1. ஐயா சேட்டை அவர்களே உறங்கிவிட்டீரா?

   Delete
  2. ம் எனக்கு?

   Delete
 21. Irunko irunko nanum vanthudaren

  ReplyDelete
 22. சந்தோஷ் சார் எங்க போய்ட்டிங்க..சண்டே கலாட்டாவுல நீங்க கலந்துக்கலயா?விஜய் டிவி க்கு லீவு விட்டுபுட்டு இங்க வாங்க..கோபிநாத் சார்

  ReplyDelete
 23. சேட்டை கண்ணா நீர் கவுண்டமணி ரசிகன் தானே?

  ReplyDelete
  Replies
  1. இல்லங்க அவரு கவுண்டவுன் ரசிகன்

   Delete
  2. ரஞ்சிதா ரசிகன்

   Delete
 24. Thirvannamalai ku varadhinga nithi.adhu aan meega thalam.pen meega thalam alla.

  ReplyDelete
  Replies
  1. ஆண்மீக தலத்திர்குதானெ பெண்கள் அதிகமா வராங்க அதான் அங்க வராரு போல?

   Delete
 25. சந்தோசுக்கு இது சரக்கு சன்டே வாம்

  ReplyDelete
 26. TNPSC GK IMPORTANT DAYS

  ஜனவரி

  12-தேசிய இளைஞர் தினம்

  15-இராணுவ தினம்

  26-இந்திய குடியரசு தினம்

  26- உலக
  சுங்க தினம்

  30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

  30 -தியாகிகள் தினம்

  பிப்ரவரி

  14 - உலக காதலர் தினம்

  25- உலக காசநோய் தினம்

  24 தேசிய காலால் வரி தினம்

  28- தேசிய அறிவியல் தினம்  மார்ச்

  08 - உலக பெண்கள் தினம்

  15 - உலக நுகர்வோர் தினம்

  20 - உலக ஊனமுற்றோர் தினம்

  21 - உலக வன தினம்

  22 - உலக நீர் தினம்

  23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

  24 - உலக காசநோய் தினம்

  28 - உலக கால்நடை மருத்துவ தினம்

  ஏப்ரல்

  05 - உலக கடல் தினம்

  05 - தேசிய கடற்படை தினம்

  07 - உலக சுகாதார தினம்

  12 - உலக வான் பயண தினம்

  18 - உலக பரம்பரை தினம்

  22 - உலக பூமி தினம்

  30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

  மே

  01 - உலக தொழிலாளர் தினம்

  03 - உலக சக்தி தினம்

  08 - உலக செஞ்சிலுவை தினம்

  11 தேசிய தொழில் நுட்ப தினம்

  12 - உலக செவிலியர் தினம்

  14 - உலக அன்னையர் தினம்

  15 - உலக குடும்ப தினம்

  16 - உலக தொலைக்காட்சி தினம்

  24 - உலக காமன்வெல்த் தினம்

  29 - உலக தம்பதியர் தினம்

  31 - உலக புகையிலை மறுப்பு தினம்

  ஜீன்

  04 - உலக இளம் குழந்தைகள் தினம்

  05 - உலக சுற்றுப்புற தினம்

  18 - உலக தந்தையர் தினம்

  23 - உலக இறை வணக்க தினம்

  26 - உலக போதை ஒழிப்பு தினம்

  27 - உலக நீரழிவாளர் தினம்

  28 - உலக ஏழைகள் தினம்

  ஜீலை

  01 - உலக மருத்துவர்கள் தினம்

  11 - உலக மக்கள் தொகை தினம்

  ஆகஸ்ட்

  01 - உலக தாய்ப்பால் தினம்

  03 - உலக நண்பர்கள் தினம்

  06 - உலக ஹிரோஷிமா தினம்

  09 -வெள்ளையனே வெளியேறு தினம்

  09 - உலக நாகசாகி தினம்

  18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

  29 -தேசிய விளையாட்டு தினம்

  செப்டம்பர்

  05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்

  08 - உலக எழுத்தறிவு தினம்

  16 - உலக ஓசோன் தினம்

  18 - உலக அறிவாளர் தினம்

  21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்

  26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்

  27 - உலக சுற்றுலா தினம்

  அக்டோபர்

  01 - உலக மூத்தோர் தினம்

  02 - உலக சைவ உணவாளர் தினம்

  04 - உலக விலங்குகள் தினம்

  05 - உலக இயற்கைச் சூழல் தினம்

  08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்

  08 இந்திய விமானப்படை தினம்

  09 - உலக தபால் தினம்

  16 - உலக உணவு தினம்

  17 - உலக வறுமை ஒழிப்பு தினம்

  24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்

  30 - உலக சிந்தனை தினம்

  நவம்பர்

  14-குழந்தைகள் தினம்

  18 - உலக மனநோயாளிகள் தினம்

  19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்

  26 - உலக சட்ட தினம்

  டிசம்பர்

  01 - உலக எய்ட்ஸ் தினம்

  02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்

  10 - உலக மனித உரிமைகள் தினம்

  14 - உலக ஆற்றல் தினம்

  ReplyDelete
  Replies
  1. அலெக்ஸ் சார் நன்றி...

   Delete
  2. Wow.......... என் பிறந்த நாள் உலக மருத்துவர்கள் தினம்......... இப்போ என்னால World doctors day. ஈஸியா ஞாபகம் வச்சிக்க முடியும். Thank you sir.........

   Delete
  3. Enakkum dhan.enga parents wedding day.

   Delete
  4. அப்படியே என் பிறந்த நாளையும் நியாபகம் வச்சிக்கோங்க..நேதாஜி சபாசந்திர போசும் நானும் ஒரே நாள்ல தான் பிறந்தோம்.ஜனவரி 23

   Delete
  5. ஆகஸ்ட் 18 உலக டெட்(Dead) தினம்

   Delete
  6. செந்தில்14 September 2014 at 14:38

   அய்யய்யோ என் பிரந்த நாள கானோமே!!!!!!!!!!!!

   Delete
  7. கவலை வேண்டாம்......... senthil தினம் னு வெச்சிடலாம்......

   Delete
  8. செந்தில்14 September 2014 at 14:49

   யேங்க என்னங்க சொல்ரிங்க? அதெல்லம் இறந்த பின்னாடிதானங்க அப்படி வப்பாங்க..... அப்ப நானு.........

   Delete
  9. செந்தில் சார் வடிவேலுக்கு அப்புறம் இன்று நீங்க..அவருக்கு அன்று கிணத்த காணம்..உங்களுக்க பிறந்தநாளையே காணமா? சிபிசிஐடி ல கம்ப்லைண்ட் குடுங்க

   Delete
  10. Ayyoo..... sorry...... kavala padaathinga ஞாயிற்று கிழமை நான் சொல்லும் எதுவும் பலிக்காது......... (hi....hi...hi...சமாளிFication)

   Delete
  11. என்னுடைய "ஆனந்த லீலை நாளை" காணவில்லை

   Delete
  12. அந்த தேதி சன் டிவி கேமராவில் பதிவாகவில்லை நன்றி திரு சேட்டை கண்ணன் சூப்பர் தினமும் இங்கு வாருங்கள் உங்கள் கருத்தை இங்கு பதிவிடுங்கள் இப்போதும் சொல்கிறேன் நீங்கள் ஆசிரியராக சென்றால் அந்த பள்ளி மாணவர்கள் குடுத்து வைத்தவர்கள்

   Delete
  13. "நித்தி" ஐ சொல்லுகிறீர்களா அல்லது என்னை சொல்லுகிறீர்களா?

   Delete
  14. திரு சேட்டை கண்ணன் என்று தான் கூறினேன்

   Delete
 27. ஆசிரியயர் மாணவனைப் பபார்த்து கேட்டார் எவரெஸ்ட் எத்தனை அடி உயரம்?? மாணவன் முழிக்க ஆசிரியர் கூறினார்...........
  எட்டுடு எட்டா எடுத்து வைச்சா நாலே எட்டில் (8848 அடி) எவரெஸ்டை அடையலாம் என்றார்...................
  Super ah irukku illa??????

  ReplyDelete
  Replies
  1. வளர்மதி மேடம் கலக்குறிங்க ஒரு சின்ன சந்தேகம் நீங்க அதுக்கு அப்புறம் நான் என்ன கேப்பேனு உங்களுக்கு தெரியும்

   Delete
  2. செந்தில்14 September 2014 at 14:41

   I like very much. இப்படி சொல்லிகுடுத்தா என்னவிட முட்டாள்கூட நல்லா புரிஞ்சுகுவான்....

   Delete
  3. super... அப்படியே நான் எனது " உல்லாச தியானத்திற்கு" செல்ல வழி சொல்லுங்கள் ....

   Delete
 28. Karthick ippo check pannunga...... naan profile info change panniten.....

  ReplyDelete
 29. செந்தில்14 September 2014 at 14:44

  பணம்‍‍. இதுக்கு உண்டான கிரேக்க சொல் என்னனு சொல்லுங்க பாப்போம்...

  ReplyDelete
  Replies
  1. Chrimata........nu google translate solluthu...... sariyaa?

   Delete
  2. செந்தில்14 September 2014 at 14:54

   மாணட்டா னு நான் சொல்ரேன் இது சரியானு அந்த கூகுல கேலுஙக....

   Delete
  3. Nomisma.......than correct...

   Delete
  4. Senthil......manatta etho oru பெண் தெய்வத்தின் பெயர்..........maranthu pochi pa........

   Delete
  5. செந்தில்14 September 2014 at 15:11

   ம் அது கரக்டூடூடூடூ...........

   Delete
 30. சந்தோஷ்......... எங்க இருக்கீங்க???? சீக்கிரம் வந்து ஜோதியில ஐக்கியம் ஆகுங்க........ we r missing you.....

  ReplyDelete
  Replies
  1. செந்தில்14 September 2014 at 14:52

   ஆமா ஆமா வாங்க சீக்கிரம். எங்க போனீங்க சதீஷ் சார்? வாஙக சீக்கிரம் அதுக்குல எல்லம் காலி அயிடும்..........

   Delete
  2. வளர்மதி மேடம் நீங்கள் டெட்ல எவ்வளவு மார்க்

   Delete
  3. Correct ah 100 mark karthik......

   Delete
  4. ஏங்க சார் இதுவரையும் நல்லாதானே போச்சு

   Delete
  5. திரு பவி அவர்கள் இந்த நீங்கள் வைத்திருக்கும் போட்டோ போல் எங்கள் வீட்டில் உள்ளது இவர் ராணி வேலு நாச்சியாரா இல்லை வேறு யாருமா

   Delete
  6. Photo நல்லா இருக்கா? நான் தான் சார்?

   Delete
  7. இந்த செய்தி சிவகங்கை சீமைக்கு மட்டும் தெரிந்தது உங்கள் வீட்டுக்கு வந்து எல்லோரும் சண்டை போடுவாங்க

   Delete
  8. வேலு நாச்சியாரா?????....நான் ஜான்சி ராணினு நெனச்சேன்.

   Delete
 31. Friends i 'm new to this site.......admin sir gurugulam really superb........my best wishes........santhosh sir comments too good......india tamizhan sir my b'day also jan 23rd.........tank u.....

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சார்?சூப்பர்.அப்படினா என் பிறந்த நாள எனக்கு நியாபகபடுத்திடுங்க மறக்காம..அப்படியே உங்கள் அன்பளிப்பா ஒரு ஐ போனும் அனுப்பி வையுங்க சார் உங்களுக்கு புண்ணியமா போகும்

   Delete
  2. Enna anbu????.......enna solreenga..... oh unga birthday jan 24 ah.....?? Thamizan kita sollanumaa ok....ok.... solliduren.....

   Delete
  3. வளர் மேடம் நீங்க என்ன அன்பளிப்பு தரலாம்னூ இருக்குங்க?

   Delete
  4. ஏய் சந்துல சக்கிளவிடாதே.ஆட்டோவ விடு.

   Delete
 32. gurugulam.com...

  மனித சங்கிலி போராட்டம் போலிஸ் தடியடி பெண் மயங்கி விழுந்தார் நடந்தது என்ன ஒரு நேரடி ரீப்போர்ட்???  இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா அவர்களை சந்தித்து மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களைபோலிஸார் தடுத்தனர் அதனை தொடர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்திய போராட்டக்கார்ர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது இதில் ஒரு பெண் உட்பட பலர் காயமடைந்தனர் போராட்ட குழு தலைவர் செல்லதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தற்போது மதுரவாயல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கைது செய்தவர்களை வைத்துள்ளனர் .இது குறித்து போராட்டகாரர்களில் ஒருவர் கூறியது நாங்கள் அமைதியாக போராடினோம் எங்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர் இதில் ஒரு பெண்னுக்கு பலமாக காயம் ஏற்பட்டுள்ளது அவர் சேப்பாக்கம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனக்கு சட்டை கிழிந்துள்ளது கையில் அடிபட்டுள்ளது எங்கள் போராட்டத்தை திசை திருப்பிய சிலர் மீதும் எங்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் இன்று மாலை மாநகர காவல் துறை ஆனையாளரிடம் புகார் மனு கொடுக்க செல்ல உள்ளோம். என்று கூறினார்.

  ReplyDelete
 33. நான் வாங்க பழகலாம்னு சொன்னேன் உடனே 150 கமென்ட்களை போட்டு ஒரு பரபரப்பை ஏத்திட்டிங்க இன்று கல்வி சம்மந்தமான வலைதளங்களில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்திட்டிங்க இன்று அதிகமான கமெண்ட் நமது வலைதளம் தான் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. செந்தில்14 September 2014 at 15:06

   இப்படி ஒருவருக்கு ஒருவர் நன்றாக பழக ஒரு வாய்ப்பு குடுத்த உங்களூக்கு எமது மனபூர்வமன வழ்த்க்கள்!

   Delete
  2. ஆனந்த நிலையில் இருக்கிறீர்களா அட்மின் சார்.

   வாருங்கள் நாம் இருவரும் இமயமலைக்கு என் சிஷ்யைகளுடன் "உல்லாச சுற்றுலா" சென்று வருவோம்.

   Delete
 34. sunday special வாங்க பழகளானு கூப்டீங்களேனு ஆசையா computer முன்னாடி உக்காந்தேன் MyLord ,
  அடுத்த 5 நிமிஷத்தில அத்தான் வந்துட்டாரு ,kitchen ல chicken சமைக்க வேண்டிய நேரத்தில அங்க
  என்னடி பண்றேனு அடிச்சி மண்டைய ஒடச்சிட்டாரு Mylord, computer ல நித்தி படத்த வேற காட்டி அநியாயத்துக்கும்
  அத்தான இப்டி வெறுப்பேத்தி உட்டுட்டீங்களே Mylord.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த வாரம் கலந்து கொள்ளலாம் என்பதை விட இன்னும் இன்றைக்கு 9 மணி நேரம் 5 நிமிடம் உள்ளது இன்று முடிய எனவே கலந்து கொள்ளுங்கள்

   Delete
  2. என்ன உங்க கணவர் உங்க மீது கோபப்பட்டாரா?????????........... அப்புரம் அவருக்கு என்ன ஆச்சி Madam????? (Chumma kidding)

   Delete
  3. விஜயலட்சுமி மேடம் அடி வாங்கனிங்களா உண்மையாவே...

   Delete
  4. உண்மைய சொல்லுங்க...அடி குடுத்திங்கதானே...

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. அத்தானை Diverse பண்ணிடலாம் கவலைபடாதீங்க.ஏங்க சும்மாதாங்க சொன்னேன் எங்கே கிளம்பிட்டிங்.

   Delete
 35. அனுபவம் பேசுதா இந்திய தமிழரே?

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ...நான் இன்னும் கல்யாண subject க்குள்ளயே வரல...

   Delete
  2. ம்ம்.. னு ஒரு வார்த்த சொல்லுங்க பத்திரிக்கை அடிச்சிடுவோம் நம்ம friends களுக்கு சாப்பாட்டு செலவு
   என்னோடது, சொன்னதும் போதும்னு எத்தன பேரு list குடுக்க ready ஆவுராங்க பாருங்க,வரிசயில
   மொத ஆளா அதோ.... நம்ம சண்டியர் நிக்கிறாரு பாருங்க.

   Delete
  3. தம்பி சிக்கிறாத சின்னாபின்னமா ஆக்கிருவாஞ்ஞ.

   Delete
  4. ம்....ம்...ம்....ம்...


   ம்..ம்....ம்....

   Delete
  5. இப்ப தான் ஒரு வலைதளம் ஆரம்பித்து நல்லபடியா போய்கிட்டு இருக்கு அதற்கு இந்திய தமிழன் உதவுகிறார் அவருக்கு கல்யானம் ஆயிட்ட அவரு wife அவருகிட்ட சண்டை போடவே time சரியாகிடும் நல்ல வேல எனக்கு இப்பதான் 25 வயது நடக்குது இன்னும் 3 வருதத்துக்கு நான் தப்பிச்சுருவேன்

   Delete
 36. நானும் உங்க நண்பர்களோடு சேர்ந்து கொள்ளலாமா சார்?

  ReplyDelete
  Replies
  1. ஏனுங்க இப்படி கேட்டூபோட்டிங்கோ.வாங்க வாங்க கடலைபோட வாங்க?

   Delete
  2. வாங்க மேடம்.இது நம் கலாட்டா வீடுதான்.பயப்படாம வாங்க

   Delete
 37. ஐயய்யோ................அத்தான் வர்ற சத்தம் கேக்குது நா escape.........................................

  ReplyDelete
  Replies
  1. மணி ஏதும் கட்டியிருக்காரா?

   Delete
 38. நண்பர்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்.

  ReplyDelete
 39. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 40. படகு புகட்டிய பாடம்


  (கோபத்தைக் களைவது எப்படி?)

  லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.

  ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

  தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.

  "என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

  ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும்.

  பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.

  பிறர் மீது கோபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

  ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை.

  அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

  ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம்.

  கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

  ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.

  இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

  வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. தண்ணியை வாளியில ஊத்தி உள்ள உட்டா இதெப்படி

   Delete
 41. தொடர்ச்சி:

  அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும்.

  அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள்.

  கம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோகிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறனவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம்.

  இதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போதைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம்.

  எனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிரது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே.

  இந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர்களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.

  கோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்து அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே.

  எனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுங்கள். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

  பல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தைகளில் பதில் அவசியம் என நீங்கள் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளியுங்கள். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நீங்களாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

  அரிஸ்டாடில் சொன்னது போல் "கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது" என்பதை உணர்ந்திருங்கள். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

  - என்.கணேசன்

  ReplyDelete
  Replies
  1. மிக அருமையான கட்டுரை இந்த கட்டுரையை எனக்கு மெயில் அனுப்பியிருந்தால் கண்டிப்பாக இந்த வலைதளத்தில் வெளியிட்டுருப்பேன்

   Delete
  2. நிச்சயமாக சார்.

   Delete
 42. Sunday special pavi settai & co kalakkoranga . We enjoyd ,laughd appadi overa

  ReplyDelete
 43. அருமை... நண்பரே

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.