Tuesday, 16 September 2014

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த வழக்கு இந்த வார இறுதிக்குள் தீர்ப்பு வருமா ?

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தது.ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின்வாதங்கள் மட்டுமே 
நடைபெற்றதுஇந்த வாதங்களே கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.


வாதிகளின் தரப்பில் அனுபவம் வாய்ந்த 4 வழக்குரைஞர்கள் வாதாடினார்கள். அவர்களில் திருமதி.நளினி சிதம்பரம்திரு.சங்கரன்,போன்றோர் குறிப்பிடதக்கவர்கள்.வாதிகளின் வழக்குரைஞர்களாகிய இவர்கள் 5% தளர்வு வழங்கியது தவறில்லைஆனால் முன் தேதியிட்டு வழங்கியது தவறென்றும்,அரசியல் காரணங்களுக்காக 5% தளர்வு வழங்கப்பட்டதென்றும்,SC&ST பிரிவினருக்கு 5% தளர்வு வழங்கியது தவறில்லை ஆனால் BC&MBC பிரிவினருக்கும் சேர்த்து 5% தளர்வு வழங்கியது தவறு.BC&MBC பிரிவினருக்கு 3% மட்டுமே தளர்வு வழங்கியிருக்க வேண்டும்
என்றும் இது போன்ற மேலும் சில வாதங்களையும் முன்வைத்தனர்.அரசு தரப்பில் வாதாடிய AG திரு.சோமையாஜி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வழக்குரைஞர் திரு.கிரிஷ்ணமூர்தி அவர்களும் தற்போது பின்பற்றப்பட்டுள்ள அனைத்துவழிமுறைகளும் நீதிமன்றம் பரிந்துரைத்ததன் பேரிலும்நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும்தான் பின்பற்றப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்கள்..

இன்று (16.09.2014)-5% தளர்வு குறித்த விவாதமும்,G.O71 குறித்த முழு விவாதமும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஅதேவேளையில் இந்த வழக்குகளுக்கான தீர்ப்பும் இந்த வார இறுதிக்குள் வரும்  என்றும் நம்பப்படுகிறது.

12 comments:

 1. Appo enna judgement varapoguthunu theriyula,,,,,,,,,,,,,
  ethavathu good news varumaaaaaaaaaa...............
  onnumae puriyula intha world la....................
  natkal than kadanthu poguthuuu..............

  ReplyDelete
 2. பாத்து பாத்து டவுசர் கிழிஞ்சது தான் மிச்சம்
  நாட்டாம சீக்கிரம் தீர்ப்பு சொல்லுங்க சார்
  இவனுக இம்ச தாங்கள

  ReplyDelete
  Replies
  1. ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
   இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
   செல்லப்படுவதைப்பார்த்தார்.
   அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,
   அவருக்குப் பின்னே சுமார் 500 பேர்
   ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார்.
   இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
   நாய் வைத்திருந்தவரை அணுகி,
   "இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ
   முறை பார்த்திருக்கிறேன்.
   ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை..?
   ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?..
   "முதலில் செல்வது எனது மனைவி."
   "என்ன ஆயிற்று அவருக்கு?"
   எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது.,
   இரண்டாவது பிணம்?"
   அது என் மாமியாருடையது.
   என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற
   அவரையும் கொன்றுவிட்டது.,
   உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
   "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"
   அதற்கு அவர் சொன்னார்,
   வரிசையில் போய் நில்லுங்கள்.,😜

   Delete
 3. Ha.......Ha........ha....super vasanth

  ReplyDelete
 4. நீதிமன்ற வழிகாட்டுதல் என்பது வேறு....
  நீதிமன்ற உத்தரவு என்பது வேறு........

  நீதிமன்ற வழிகாட்டுதல் படிதான் பணிநியமனம் நடக்கிறது என அரசுதரப்பின் ஒரே வாதமாக இருக்கிறது...
  வேறு எதுவும் காரணம் அரசுதரப்பில் கூறுவதற்கு இல்லை..........

  ஆகவே நாம் ரொம்ப சுலபமாக ஜெய்ச்சரலாம்....
  கவலை வேண்டாம் நண்பா்களே........

  ReplyDelete
  Replies

  1. Santhosh அவருக்கு....
   ஓ அப்படி என்றாள் அவரை காக்கும் ஆபத்பாண்டவாறோ நீங்கள்.... களத்தில் போறாடுகின்றவர்கள் எல்லாம் கிறுக்கர்களா... ஜால்ரவுக்கே ஜால்ரா வா....

   தாங்கள் சேட்டை கண்ணன், நிதியானந்த போன்றவர்களின் கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்ல தகுதியனர்வார்..... நடுநிலையானவர் அல்ல... உங்களுக்கு admin rights தேவைthana...
   admin ஆகா இருப்பதால் எனக்கு பதில் கூற முடியவில்லை என்றாள் admin பதவியினை விட்டு விட்டு வாாருங்கள்... விரிவாக விவாதிக்கலாம்..... அல்லது எதாவது வொறு சப்பை காராணாததினை சொல்லிவிட்டு, எனக்கு பதில் சொல்ல தேவை இல்லை என்று சொல்லிவிட்டு வழக்கம் போல ஓடி விடுங்கள்.

   Delete
  2. உங்கள் நண்பரை விமர்சித்தால் கருத்தை நீக்குவாதா ? .. திரணி இருந்து இருந்தால் பதில் சொல்லி இருக்க வேண்டும்....

   களத்தில்இறங்கி போராடமா, வோரமாக நின்று கொண்டு வேடிக்கை பார்க்கின்ற அனைவருக்கும் இதே பதில்தான்.... இரண்டு முறை கைது ஆகி, வருமானமே இல்லாம, சென்னையில் தாங்கி செலவு செய்து பாருங்கள், அப்போது தெரியும்...

   ஜால்ரா அடிப்பதால் மட்டும் எந்த பயனும் இல்லை...

   Delete
 5. டெட் weitage பற்றிய பிரச்னையை ஆராய 5 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளதாகவும், அது பற்றிய விவரத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் வைத்துள்ளதாகவும் நம்ப தகுந்த தகவல் வந்துள்ளது. அக்குழு அணைத்து பிரச்னைகளையும் ஆராய்ந்து புதிய GO வெளிஇடும். இது தற்காலிக தீர்வாக இல்லாமல் நிரந்தர தீர்வாக இருக்கும். weitage method சரியானது என்று இதுவரை யாரும் ஏற்றுகொள்ளவில்லை. அரசும் இதை விரும்பவில்லை.அதனால் அனைவரும் ஏற்றுகொள்ளும் படியான தீர்வை ஏற்படுத்த அரசு விரும்புகிறது. அதனால் தான் மதுரை கோர்ட் தடையாணை எதிரான மேல் முறையிட்டு மனுவை அரசு தாக்கல் செய்யவில்லை. 5 பேர் கொண்ட குழு விவாதித்த கருத்துகள் சில

  * இது தகுதி தேர்வு தான். எனவே தகுதி தேர்வின் அடிபடையில் பணிநியமனம் செய்ய முடியாது. இதற்கு வேறொரு முறையை கடைபிடிக்க வேண்டி இருக்கிறது.

  * தற்போதைய weitage method பாரபட்சமாக உள்ளது . எனவே முழுவதுமாக நீக்க ஆலோசனை (+2, டிகிரி ,B.ed mark முழுவதுமாக நீக்கபடும் )

  * pg trb போல் seniorityகு mark அளிக்க ஆலோசனை செய்து வருகிறது (5 mark or அதிக பட்சமாக 10 mark).

  * இப்போது பாஸ் செய்தவர்களுக்கு அடுத்த தேர்வில் முன்னுரிமை அளிக்க ஆலோசனை (5 mark வரை).
  (ஏனென்றால் அடுத்த ஆண்டு பணிநியமன நேரத்தில் முன்னர் டெட் தேர்ச்சி பெற்றவர்கள் கொடிபிடிக்கலாம்)

  * இன்னொரு தேர்வு வைத்து தேர்வு செய்யவும் ஆலோசனை செய்து வருகிறது ( அவரவர் major subject). இந்த method தான் அண்டை மாநிலமான கேரளாவில் எந்த பிரச்னையும் இன்றி நடைபெறுகிறது.

  இதில் கடைசி பாயிண்ட்ய் தவிர மற்ற அனைத்தையும் அரசு பெரும்பாலும் ஏற்று கொள்ளும் என தெரிகிறது. இன்னொரு முக்கியமான பாயிண்ட். இவை அனைத்தும் கோர்ட்டின் முடிவை பொறுத்தே இருக்கும் எனவும். ஒருவேளை கோர்ட்டில் தடையாணை நீக்கபட்டால் இப்போது செலக்ட் ஆனவர்கள் பணியில் சேர்வார்கள். குழுவின் பரிந்துரைகள் அடுத்த பனிநியமனதிற்கு நடைமுறைக்கு வரும்.

  ReplyDelete
  Replies
  1. அள்ளி விடுங்கள் நண்பரே... இதை போன்ற நம்ப தகாத செய்தியினை வெளியிடுவதானால் நமக்கு என்ன கிடைக்க போகின்றது....

   இதைத்தான் இந்த தளத்தில் சிலர் தொடர்ந்து செய்து கொண்டு உள்ளார்...

   Delete
 6. when will the case come for hearing today ?

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.