Tuesday, 23 September 2014

300 நாள் பயணம் 5 கோடி கி.மீ., தூரம்: செவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை அடைகிறது - dinamalar

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா முதன்முதலாக ஏவிய மங்கள்யான் செயற்கைக்கோள், 300 நாட்களாக 5 கோடி கி.மீ., தூரம் பயணம் செய்து, நாளை (செப்.24) செவ்வாயின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைகிறது.


பூமியிலிருந்து செவ்வாய்க்கு குறைந்தபட்ச தூரம், அதிகபட்ச தூரம் என உண்டு. சூரியனை இரண்டு கிரகங்களும் வெவ்வேறு பாதையில் சுற்றுவதால் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது. செவ்வாய்க்கு குறைந்தபட்ச தூரம் 5 கோடி கி.மீ., அதிகபட்ச தூரம் 40 கோடி கி.மீ., குறைந்தபட்ச தூரத்தில் செவ்வாய் வருவதை கணித்து, செயற்கைக்கோள் ஏவப்பட்டது. தற்போது தவறவிட்டால் 2016ம் ஆண்டுதான் மீண்டும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.இதுவரை செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலங்கள் 50 சதவீதம் மட்டுமே வெற்றியடைந்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவை மட்டுமே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மங்கள்யான் திட்டம் முழு வெற்றியடைந்தால் செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.மங்கள்யான், ஆறு மாதங்களில் 60 முறை செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும். முழுவதும் சூரிய சக்தியில் செயல்படும் மங்கள்யானில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐந்து உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

24 comments:

  1. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?

    ReplyDelete
    Replies
    1. கேள்வி கேட்டா ஒரு 15 Mis ஆவது time தரனும்.........

      Delete
    2. K teacher. நேற்றைய கடைசி போஸ்டில் உங்களுக்கென பல கேள்விகள் மணிக்கணக்கில் வெய்ட்
      பண்ணிட்டு இருக்கு....pls answer that q.....

      Delete
  2. 2 September 2014 20:32

    மகிழ்ச்சிக்கான வழி" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

    ReplyDelete
  3. அரை நாழிகை என்பது எத்தனை நிமிடம்?

    ReplyDelete
  4. உலகில் உள்ள எத்தனை நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது?

    ReplyDelete
  5. உலகில் மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளன?

    ReplyDelete
  6. இந்திய குடியரசு தலைவராக இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?

    ReplyDelete
    Replies
    1. திரு இதயத்துல்லா

      Delete
  7. பாமினி அரசர்களில் கொடுங்கோலனாக ஆட்சி புரிந்தவர் யார்?

    ReplyDelete
  8. மீனவர்களுக்கு மீன்பிடிக்க உதவும் காற்று எது?

    ReplyDelete
  9. கடலில் பனிப்பாறைகள் உருவாகாமல் தடுப்பது எது?

    ReplyDelete
  10. தேசியப் பறவையான மயில் நம் நாட்டின் எதனை பிரதிபலிக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. கருணை, மகிழ்ச்சி, அழகு

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.