Sunday, 28 September 2014

போட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்


இங்கு pdf ஆக download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லுங்கள்
கேள்விகளை PDF வடிவில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்               www.gurugulam.comதமிழ் மொழியின் சிறப்பு

* இந்தியாவில் தோன்றிய மிக்த் தொன்மையான மொழி தமிழ்

* திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையான வரி விடிவ எழுத்தைக் கொண்ட மொழி தமிழ்.

* திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி தமிழ்

* தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.

* தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்.

* தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் தேவநேயப் பாவாணர்.
* தமிழ் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, பிஜிட்தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது.
* இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ்.
* முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ்
* திராவிட மொழிகள் குறித்தும் மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
* தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.
* தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். அவை 3 அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்களும், தமிழரின் வாழ்வியலக்கணமான திருக்குறள் 3 பால்கள், 133 அதிகாரங்கள்,1330 குறள்களையும், சிலப்பதிகாரம் 3 காண்டம், 30 காதைகள் 5001 வரிகளையும், மணிமேகலை 30 காதைகள், 4755 வரிகளையும், சீவகசிந்தாமணி 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள். பெரிய புராணம் 2 காண்டங்கள், 13 சருக்கங்கையும், 4286 பாடல்களையும், கம்பராமாயணம் 6 காண்டங்கள், 118 படலங்கள், 10589 பாடல்களையும், நல்லாப்பிள்ளை பாரதம் 18 பருவங்கள், 11000 பாடல்களையும். கந்தபுராணம் 6 காண்டம், 135 படலங்கள், 10345 பாடல்களையும், திருவிளையாடற்புராணம் 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்களையும். சீறாப்புராணம் 3 காண்டங்கள், 92 படலங்கள், 5027 பாடல்களையும், இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள், 47 படலங்கள்,3776 பாடல்களையும், இராவண காவியம் 5 காண்டம், 57 படலங்கள், 3106 விருத்தங்களையும், ஏசு காவியம் 5 பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகளையும் கொண்டுள்ளது.  www.gurugulam.com
* தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.
* தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு  எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு
பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ்.
* சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப்
பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.
* தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள்,
இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை என்பதே தமிழின் தனிசிறப்பு.
* வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பனவாகும்.  www.gurugulam.com
* நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.
* "தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.
* "தமிழ்' என்பதற்கு "இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை ""இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.
* "பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:
 ""போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?'' என்னே தமிழின் சுவை!
 ""அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?
 ""தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே. என்னே தமிழின் இனிமை! - இவ்வாறு தமிழின் சிறப்புகளை அடிக்கிக் கொண்டே பேகலாம்.
மூன்று சங்கங்கள்  www.gurugulam.com
* மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியது.
* சங்கம் என்ற சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்கம்  என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.
* மூன்று சங்கங்கள் பற்றிய விரிவான செய்தியை அல்லது வரலாற்றை முதலில் குறிப்பிட்டவர் இறையனார் அகப்பொருள் உரையின் ஆசிரியர் நக்கீரர்.
* முச்சங்கத்திற்கும் உரிய நூல் அகத்தியம்.
* முத்தமிழ் இலக்கண நூல் அகத்தியம்.
* இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்.
* இசைத்தமிழ் இல்க்கண நூல் முதுநாரை. நாடகத் தமிழ் இலக்கண நூல் இந்திரகாளியம் மற்றும் பஞ்சமரபு ஆகியன.
* புலவர்களின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் அகத்தியர். அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர்.
* அகத்தியரின் 12 மாணவர்களும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம்.
* அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம் தென்தமிழ் மதுரை என்று குறிப்பிடுவது மணிமேகலை.
* சங்கத் தமிழ் மூன்றும் தா என்பது ஒளவையாரின் தனிப்பாடல் ஆகும்.
* முச்சங்கத்தையும் மறுத்தவர்ள் பி.டி.சீனிவாச ஐயங்கார், கே.என். சிவராஜ பிள்ளை, கா.மச்சிவாய முதலியார் ஆகியோர்.
* மூன்று சங்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், கா.சு.பிள்ளை, கா.அப்பாத்துரை, தேவநேயப் பாவணர் ஆகியோர்.
முதற்சங்கம்  www.gurugulam.com
* முதற்சங்கம் இருந்த இடம் தெனமதுரை. முதற்சங்கத்தின் காலம் சுமார் 4440 ஆண்டுகள். முதற்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 549.
* முதற்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 4449.
* முதற்சங்கம் சார்ந்த நூல்கள் அகத்தியம், பெரும் பாரிபாடல், முதுநாரை, முதுகுருகு ஆகியன.
* முதற்சங்கம் சார்ந்த புலவர்கள் அகத்தியர், நிதியின் கிழவன் ஆகியோர்.
இடைச்சங்கம்
* இடைச்சங்கம் இருந்த இடம் கபாடாபுரம் (குமரி ஆற்றங்கரை). இடைச்சங்கத்தின் காலம் சுமார் 3700 ாண்டுகள். இடைச்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 3700.
* இடைச்சங்க நூல்கள் தொல்காப்பியம். மாபுராணம், பூதபுராணம் ஆகியன.
கடைச்சங்கம்
* கடைச்சங்கம் இருந்த இடம் மதுரை (இன்றைய மதுரை). கடைச்சங்கத்தின் காலம் சுமார் 1850 ஆண்டுகள் கடைச்சங்கத்தில் புலவர்கள் 449 பேர்.
* கடைச்சங்கம் சார்ந்த நூல்கள் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றினை, புறநானூறு, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து, வரி ஆகியன.
* சிறுமேதாவியார், அறிவுடையார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரனார் ஆகியோர் கடைச்சங்க காலப் புலவர்கள்.
இறையானர் களவியல் உரை
* நூலின் பெயர் அகப்பொருள் அல்லது களவியல் ஆகும். இதனை இயற்றியவர் இறையனார் அல்லது சிவன். இதற்கு உரை எழுதியவர் நக்கீரர்.
* உரைச் சிறப்பின் காரணமாக இந்நூலே இறையனார் களவியல் உரை என்று வழங்கப்படுகிறது.
* தமிழில் தோன்றிய உரையாசிரியர் நக்கீரர். களவியலுக்கு நக்கீரர் செய்த உரையே சிறந்தது என்பவர்.  www.gurugulam.com
சங்க இலக்கியச் செய்திகள்
* வாத்யாயனார் இயற்றிய நூல் காமசூத்திரம். காமசூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் அதிவீரராம பாண்டியன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் கொக்கோகம்.
* திணை இல்க்கியம் என்று அழைக்கப்படுவது சங்க இலக்கியம்.
* சங்க இலக்கியத்தில் அகப்பாடல்கள் அனைத்தும் பாத்திரக் குற்றுகள் ஆகும். புறப்பாடல்கள் அனாத்தும் புலவர் கூற்றுகள் ஆகும்.
* எட்டுத்தொகை நூல்கள் என்பவை நற்றினை, குறுந்தொகை, ஒங்குறுனூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகியன.
* எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் ஐந்து, புற நூல்கள் இரண்டு. அகமும் புறமும் கலந்த நூல் ஒன்று (பரிபாடல்).
* எட்டுத் தொகை நூல்களில் காலத்தால் முந்தியது புறநானூறு.
* அகநானூறு அகம் என்றும், அகப்பாட்டு என்றும், நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.
* புறநானூறு புறம் என்றும், புறப்பாட்டு என்றும், புறம்பு நானூறு என்றும் குறிப்பிடப்படுகிறது.
நற்றிணை
* இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றினையைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
* நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி.
* தொண்டி என்பது சேர நாட்டுத் துறைமுகம், கொற்கை என்பது பாண்டிய நாட்டுத் துறைமுகம், மாந்தை என்பது சேர நாட்டுக் கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள்
நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.
குறுந்தொகை  www.gurugulam.com
* குறுந்தொகை இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
* குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியதாகும்.
குறுந்தொகையின் மூலம் அறியப்படும் செய்திகள்:
* நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன். அதியமானின் தலைநகரம் தகடூர்(தர்மபுரி).
* கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரி. பரம்பு மலை தலைவன் பாரி.
* திருக்கோவிலூரையும், முள்ளூரையும் ஆட்சி செய்த மன்னன் மலையாமான் திருமுடிக்காரி.
* கரிகாலனுக்கு திருமாவளவன் என்ற பெயரும் உண்டு.
* கரிகாலனின் மகள் ஆதிமந்தி.
* யாய் என்றால் என் தாய் என்று பொருள், ஞாய் என்றால் உன் தாய் என்று பொருள், தாய் என்றால் அவன் தாய் என்று பொருள்.
* எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள், நுந்தை என்றால் உம் தந்தை என்று பொருள், தந்தை என்றால் அவர்கள் தந்தை என்று பொருள்.
* அவ்வை என்றால் எம் அக்காள் என்று பொருள், நூவ்வை என்றால் உம் அக்காள் என்று பொருள், தவ்வை அவர்கள் அக்கா என்று பொருள்.
* கொற்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் இறையனார். (குறுந்தொகை)
ஐங்குறுநூறு
* இது ஒரு அகநூல். 500 பாடல்கள் கொண்டது. திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளின் கீழ் அமையப் பெற்றது. பாடிய புலவர்கள் ஐவர்.
* ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் கூடலூர்கிழார். தொகுப்பித்த அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.  www.gurugulam.com
* ஐங்குறுநூற்றை முதன் முதலாக தொகுப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.
* சங்க கால மக்கள் பகல் 12 மணியிலிருந்து நாளைக் கணக்கிட்டனர் என்னும் செய்தியை ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.
* ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நல்லது என்ற செய்தியையும், பெண்களுக்கு இடக்கண் துடித்தால் மல்லது என்ற செய்தியையும் இந்நூலில்ருந்து அறிய முடிகிறது.
பதிற்றுப்பத்து
* சேர அரசர்கள் 10 பேர் பற்றஇ 10 புலவர்கள் தலா பத்து பாடல்கள் வீதம் பாடிய தொகையே பதிற்றுப்பத்து.
* முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. 80 பாடல்களே கிடைத்துள்ளன. முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.
பதிற்றுப்பத்தின் மூலம் அறியப்படும் செய்திகள்
* கடம்பர்கள் என்பவர்கள் சேர நாட்டு கடற்கொள்ளையர்கள் ஆவர்.
* அதியமானை வென்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை அதியமானுக்கு அதிகன் என்ற பெயரும் உண்டு.
* கிடுகு என்றால் கேடயம் என்று பொருள் சேர நாட்டின் துறைமுகம் தொண்டி.
பரிபாடல்
* பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பாவகைகலில் ஒன்று. எனவே பாவகையால் பெயர் பெற்ற நூல் பரிபாடல் ஆகும்.
* எட்டுத் தொகை நூல்களிலேயே அகத்திற்கும், புறத்திற்கும் உரிய நூல் பரிபாடல்.
* பொருட்கலவை நூல் என்றும் பரிபாடல் குறிப்பிடப்படுகிறது.
* தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.
* எட்டுத் தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல் பரிபாடல்.
* எட்டுத் தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் இரண்டு 1. பரிபாடல் 2. கலித்தொகை
* பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல். பரிபாடல் என்ற நூல் 70 பாடல்களைக் கொண்டதாக உள்ளது.
* பரிபாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. பரிபாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர்.  www.gurugulam.com
* பரிபாடலை முதலில் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.
பரிபாடல் மூலம் அறியப்படும் செய்திகள்
* அம்பா ஆடல் என்பது தை நீராடல் ஆகும். தை நீராடல் தற்போது மார்கழி நோன்பாக மாறியுள்ளது.
* நெய்தல், குழலை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பவை நீண்ட காலங்களைக் குறிக்கும் பேரெண்களாகும்.
* உலகின் தோற்றம் குறித்துக் கூறும் நூல் பரிபாடல்.
கலித்தொகை
* இது ஒரு அகநூல். கலிப்பா என்ற பாவகையால் ஆன நூல் கலித்தொகை. மொத்தம் 150 பாடல்கள் கொண்டது.
* கலித்தொகை ஐந்திணை நூலாகும். இதனைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
* கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று கலித்தொகை சிறப்பிக்கப்படுகிறது.
* ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் கலித்தொகை. ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) என்பது ஒரு வீர விளையாட்டு.
* பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் கலித்தொகை ஆகும்.
* நூபுரம் என்பதன் பொருள் சிலம்பு, ஆடு மேய்ப்பவர் புல்லினத்தார், குறும்பர் என்று குறிப்பிடப்பட்ட செய்தி, பசு மேய்ப்பவர் கோவினத்தார், நல்லினத்தார் என்று
குறிப்பிடப்பட்ட செய்தி ஆகியவற்றை கலித்தொகை குறிப்பிடுகிறது.
அகநானூறு
* இது ஒரு அக நூல் ஆகும். ஆசிரியப்பாவால் ஆன 400 பாடல்கள் கொண்டது.
* அகநானூற்றைத் தொகுத்தவர் உருத்திர சன்மனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என்பவர் ஆவார்.
* அகநானூறு களிற்றியானை நிறை, மணிமிடைப் பவளம், நித்திலக்கோவை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
* அகநானூறு நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.
* குடவோலை முறைச் தேர்தல் குறித்து கூறும் நூல் அகநானூறு.
* சங்க இலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் குறிப்பிடும் அக நூல் அகநானூறு.  www.gurugulam.com
புறநானூறு
* இதுவொரு புற நூல். அகவற்பாவால் ஆன 400 பாடல்கள் கொண்டது.
* புறநானூற்றைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
* புறம், புறப்பாட்டு, புறம்பு, தமிழ்க் கருவூலம் என வேறு பெயர்களைக் கொண்டு புறநானூறு வழஹ்கப்படுகிறது.
* அறம், பொருள், வீடு என்ற மூன்றைப் பற்றியும் பாடும் நூல் புறநானூறு ஆகும்.
* சேரன் போந்தை (பனை) மலரையும், சோழன் அத்தி மலரையும், பாண்டியன் வேம்பு மலரையும் அடையாள மலராகக் கொண்டிருந்தனர் என்று புறநானூறு இயம்புகிறது.
* சேரன் வில் கொடியையும், சோழன் புலிக்கொடியையும், பாண்டியன் மீன் கொடியையும் கொண்டிருந்தனர் என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.
* சேரனின் தலைநகரம் வஞ்சி என்றும், சோவனின் தலைநகரம் உறையூர் அல்லது உறந்தை, தஞ்சாவூர் (தஞ்சை) என்றும், பாண்டியனின் தலைநகர் மதுரை என்றும், பல்லவரின் தலைநகர் காஞ்சி என்றும் இது குறிப்பிடுகிறது.
* பாரதப்போரில் சோறு படைத்தவர் உதியஞ்சேரல் என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.
* பாரிக்கு உரிய மலை பரம்பு மலை, பேகனுக்கு உரியது பழனிமலை, ஓரிக்கு உரியது கொல்லிமலை, ஆய்க்கு உரியது பொதிகை மலை, அதியனுக்கு உரியது தகடூர், நன்னனுக்கு உரியது நவிரமலை போன்ற செய்திகளையும் புறநானூறு குறிப்பிடுகிறது.
* கபிலரை ஆதரித்தவன் பாரி, ஒளவையாரை ஆதரித்தவன் அதியமான், பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன் குமணன், மாங்குடி மருதனாரை ஆதரித்தவன் நெடுஞ்செழியன், பிசிராந்தையாரிடம் நட்பு கொண்டவன் கோப்பெருஞ்சோழன் போன்ற விவரங்களையும் இது குறிப்பிடுகிறது.
* அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் ஒளவையார். கோப்பெருஞ்சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர் எயிற்றியனார். நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர் கோவூர் கிழார் ஆகிய செய்திகளையும் புறநானூறு மூலம் அறியலாம்.
* யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா போன்ற வரிகள் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள்.

எட்டு தொகை நூல்களின் அடிவரையறை 
1. நற்றிணை - 9 - 12
2. குறுந்தொகை - 4 - 8 
3. ஐங்குறுநூறு - 3 - 6 
4. பதிற்றுபத்து -  -
5. பரிபாடல் - 25 - 400
6. கலித்தொகை -   -       
7. அகநாநூறு - 13 - 31
8. புறறாநூறு -   -
தொகுப்பித்த்தவர் , தொகுத்தவர் இதை தேர்ந்தெடுக்கும்போது சுலபமாக அறிய ஒரு சிறிய குறிப்பு 
தொகுப்பித்த்தவர் என்பது ஒரு அரசனைக் குறிக்கும். அரசனின் வேண்டுகோளையோ (அ) கட்டளையையோ ஏற்று புலவர்கள் 
நூல்களைத் தேடித்தொகுப்பர், எனவே தொகுத்தவர் என்பது ஒரு புலவரையே குறிக்கும் 
 தொகுப்பித்தோன் -  அரசன்
தொகுத்தவர் -  புலவர் 
நற்றினை :
தொகுப்பித்தவர் -  பன்னாடு தந்த மாறன் வழுதி 
தொகுத்தவர் - -   
குறுந்தொகை 
தொகுப்பித்தவர் - -
தொகுத்தவர் -  பூரிக்கோ 
ஐங்குறுனூறு 
தொகுப்பித்தவர் -  யானைகட்சேய் மாந்தரச் சேரல் இரும் பொறை  
தொகுத்தவர் -  கூடலூர் கிழார்  
பதிற்றுப்பத்து - -
பரிபாடல் - -
கலித்தொகை
தொகுப்பித்தவர் - -
தொகுத்தவர் - நல்லந்துவானார்  
அகநானூறு
தொகுப்பித்தவர் -  பாண்டியன் உக்கிரபெருவழுதி  
தொகுத்தவர் -  உருத்திர சண்மனார்

புறனானூறு - -
________________________________________________
அதிவீரராமபாண்டியன்   சில முக்கியக் குறிப்புகள்
எழுதிய நூல்கள்
1. நைடதம்
2. வெற்றிவேற்கை (அ) நறுந்தொகை
3. கருவைபதிற்றுப்பத்தந்தாதி - இந்த நூல்  "குட்டித்திருவாசகம்"  எனவும் 
     அழைக்கப்படுகிறது.
இணையத்தில் இணைந்திருங்கள்
  www.gurugulam.com
கேள்விகளை PDF வடிவில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்         

94 comments:

 1. ஐயையோ ஒரு மாடி தானே உங்கள கட்ட சொன்னேன்,தூக்கத்தில
  எழுப்பி வுட்டதும் இப்டி 9 மாடிய சேத்து ஒரே எடத்திலே கட்டி வச்சிட்டீகளே.....,

  ReplyDelete
  Replies
  1. Ha..ha...விஜி nice counter.......... but இருந்தாலும் நம்ம அட்மின் கு ஒரு "ஓ" போட்டே ஆகனும்............ super admin.....

   Delete
  2. yellarum oru Oooooooo...............podungapa.

   Delete
  3. ஓஓஓஓஓஹோ.........

   Delete
  4. வளர் மேடம் நானும்......
   ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ....................

   Delete
  5. pdf dwnload pana mudila admin this

   Delete
  6. கம்யூட்டர் ல் பாருங்கள் மெபைலில் வருவது கடினம் வராவிட்டால் திரும்ப திரும்ப முயற்சியுங்கள் வரும்

   Delete
 2. நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.


  வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. அப்படியா பிரதர்?அப்படினா இனி நான் நிறைய தவறு செய்ய போறேன்.அது எல்லாமே எனக்கு இனி வழிகாட்டட்டும்

   Delete
  2. Ha....ha....ha..... தமிழன் குசும்பன்

   Delete
  3. ஹி....ஹி.....ஹி....எல்லாம் தங்களிடம் கற்றுகொண்டது தான்

   Delete
 3. பிரதிமா மேடம் இருக்கிங்களா?
  Thank u so much மேம்.நீங்க சொல்லி குடுத்த sum workout பண்ணி பார்த்தேன்.சூப்பர் மேடம்.ரொம்ப ரிஸ்க் எடுத்து டைப் பண்ணிருக்கிங்க.சூப்பரா புரிஞ்சிக்கிட்டேன்..அடிக்கடி சொல்லி குடுங்க..நன்றி மேம்

  ReplyDelete
  Replies
  1. K sir ungaluku endha prblm doubt erundhalum kelunga kandipa exlpain panren. Work out panni pathenu sonneengalae adhu romba nalla visayam sir keep it up. ALL THE BEST sir.

   Delete
  2. Kanippa madam..ungalala varamudilanalum appapo mail la doubt clear pannividunga...thank u so much

   Delete
  3. Neenga ellarum daily evlavo qus ketu ans panni ellarukum neraya help panringa. Idhu ennala mudunja oru chinna help.

   Delete
  4. Romba naala ungala kaaname madam...apdina daily gurugulam pakkaringa...but ulla varamale apdiye escape aagidaringanu nenaikkaran.why madam?

   Delete
  5. Na daily gurugulam visit pannuvan. Neenga ellarum kekura qus ellamae theriyudhu but ans dhan marandhupochu adhunala silent ah vedika pathutu erupen.

   Delete
  6. K mam daily vanga...nangalum answer theriyara madhiri koottathula govinda poduvam ...samalichukkalam vanga...(but i know u r a brilliant)

   Delete
  7. K sir nanum ini ans panna try panraen. Hard work panra ellarumae brilliant dhan sir.

   Delete
 4. அட்மின் சார் மேல் உள்ள தமிழ் மாடிக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
 5. வணக்கம்.

  தற்போது உள்ள குள(ல)ங்களில் மிகப்பெரியது எது???


  விடை : நம்ம "குருகுலம் ".

  Mmmm m ......தொடரட்டும் ..............


  ReplyDelete
  Replies
  1. Wow....யார் சார் நீங்க? அப்பப்போ வந்துட்டு குருகுலத்த புகழ்ந்துட்டு காணாம போய்டறிங்க...நன்றி சார்

   Delete
  2. Brother ...

   மறதியும் நல்லதுதான் !!..ஆனால்.,

   இவ்வளவு வேகமாக அல்ல ..

   குருகுலம் ஆரம்பித்த நாள் முதலே ...

   நம்மில் ஒருவன்தான்..

   Delete
  3. Ha...ha.... மாட்டிக்கொண்டாயா இந்தியன்...... sir எனக்கு ஞாபகம் இருக்கு....

   Delete
  4. சார் உங்களை எனக்கு நன்றாக தெரியும்..மேலே இருப்பதும் தாங்கள்தானா?அந்த போட்டோவில் அடையாளமே தெரியவில்லை சார் உண்மையாகவே...தங்களின் இளமை வயது போட்டோவா சார் அது?அருமை

   Delete
  5. வளர் அக்கா உண்மையை சொல்லுங்கள்..மேல் உள்ள திரு.கணேசன் சார் போட்டோவை பார்த்து உங்களால் இவர் அவர்தான் என்று அடையாளம் காண முடிந்ததா?

   Delete
  6. மேலே எங்கிட்ட பேசிகிட்டே இருந்து..........sudden ஆ பாக்குறேன் தோழி வளரையே ஆளக்
   காணோம் ,அப்றம் பாத்தா தமிழர் கூட நிக்கிறாங்க ,அதுக்குள்ள இவ்ளோ சீக்கிரமா தாவி, தாவி
   ஓடுதுங்கப்பா ,புள்ளைங்க் நம்ம பரம்பர பழக்கத்த இன்னும் follow பண்ணுத்துக இப்டியே continue
   பண்ணுங்க பா.

   Delete
  7. சாரி திரு.கணேசன் சார்.தாங்கள் மேல் உள்ள போட்டோவில் நீங்கள் என்று எனக்கு தெரியாது.ஆனால் உண்மையை சொல்ல போனால் ஹீரோ மாதிரி இருக்கிங்க.அதனால்தான் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை...

   Delete
  8. In the year of .. 2011 July.

   And another one is. 4 Januaryy 2013

   Delete
  9. எனக்கு அவர் பெயர் நன்றாக நினைவில் உள்ளது தமிழன்........ தமிழ் கேள்விகளுக்கு அருமையாக பதீல் சொல்வாருப்பா..........

   Delete
  10. சார் இப்பவும் நீங்க ஹீரோ மாதிரிதான் இருக்கிங்க...   வளர் அக்கா என்ன மாட்டிவிட நீங்களே போதும்......

   Delete
  11. Ha..ha.... விஜி....... super.... பழக்க தோஷம்....

   Delete
 6. எங்கே யாரையும் காணோம்?

  ReplyDelete
 7. Pradhima mam,
  I am also weak in maths.

  ReplyDelete
  Replies
  1. Dont worry brother nan ungalukku sollitharan.
   கூட்டல் கணக்கு
   கழித்தல் கணக்கு
   பெருக்கல் கணக்கு

   இதுல என்ன டவுட்னாலும் என்கிட்ட கேளுங்க...
   But வகுத்தல் கணக்கு மட்டும் கேட்டுடாதிங்க...இப்பதான் நானே கத்துக்கிட்டு இருக்கன்.

   Delete
  2. K sir na help panraen dont worry.

   Delete
 8. மாலை வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சிவானந்த் சார்.வாங்க

   Delete
 9. தம்பி தமிழரே மேல குடுத்துருக்கறதலேர்ந்து நாளைக்கி
  10 -20 Question எடுத்துருக்கேன் எல்லா question வும் உனக்குதான்?
  ready யா ?
  Time 10-12

  ReplyDelete
  Replies
  1. சொல்லிட்டிங்க இல்ல..இனி பாருங்க........   வசந்த் சார் மினி ஜெராக்ஸ் எந்த கடையில போடலாம்

   Delete
  2. Namma avangakitaye kaetu ezhudhidalaam bro

   Delete
 10. மேலே உள்ளததிலேர்ந்து hints (extra points உள்ளத )எடுத்துகோங்கப்பா நாளைக்கு
  question கேட்டுக்கும் .

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக விஜி....... but tomorrow what time???

   Delete
  2. 10 to 12 (mele paarunga ungala pathi oru nice comment poturuken thozhi )

   Delete
 11. Dear admin இதை Pdf வடிவில் கொடுத்திருந்தால் அனைவரும் டவுண்லோடு செய்து படிப்பதற்கு வசதியாக இருந்திருக்கும்

  ReplyDelete
  Replies
  1. பொன் மாரி சார் தற்போது பாருங்கள் pdf வடிவில் மாற்றப்பட்டுள்ளது நன்றி சார் உங்களின் வார்த்தைக்க இந்த வலைதளம் கட்டுப்பட்டது உங்கள் கருத்து நமது வலைதளத்திற்கு மிக முக்கியம்

   Delete
  2. Dear admin,
   நீங்களகஷ்ப்பட்டு பாடக்குறிப்புகளைதயார் செய்துபின் டைப் செய்து நம் வலைதளத்தில் வெளியிடுகிறீர்கள். இது பல ஆயிரம் நண்பர் களுக்கு தேர்வுக்கு மிக மிக பயனுள்ள தாக இருக்கும்., அவர்கள் டவுண்லோடு செய்து வைத்துக்கொள்ளலாம், தேவைப்படும் நேரங்களில் மீண்டும்திரும்பவும் படித்துக்கொள்ளலாம் என்பதற்காகத்தான் Pdf வடிவில் வெளியிடச்சொன்னேன்., எனது கருத்தை உடனே ஏற்று Pdf வடிவில் வெளியிட்டதற்கு கோடான கோடி நன்றி அட்மின் சார், மேலும் மொபைல்ல Pdf வசதி இல்லாதவர்களும் பயன் பெறும் வண்ணம் முதலில் வெளியிட்ட மாதிரியும் வெளியிடுங்கள், குருகுலத்திற்கு நான் தான் கட்டுப்பட்டவன், என் மேல் இந்த அளவு பாசம் வைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்

   Delete
 12. பல நண்பர்கள் மொபைல் பார்க்கிறார்கள் அதில் pdf ஒரு சில மொபைல்களில் எடுக்கவில்லை அதனால் இப்படி கொடுத்திருக்கேன் விரைவில் நீங்கள் கூறியபடி வெளியிடுகிறேன் நன்றி சார்

  ReplyDelete
 13. Replies
  1. Why????why???
   நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு மேடம்
   அப்றம் ஏன்???

   Delete
 14. சொல்லாம கூட கிளம்பிட்டிங்களா எல்லாரும்....

  ReplyDelete
  Replies
  1. அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..

   Delete
  2. ஹா...
   ஹா....ஹா....ஹா... வெரி நைஸ் காமெடி
   ....

   Delete
 15. குருகுலம் ப்ரண்டுகளை இப்போ எப்படி இங்க வரவைக்கிறேனு மட்டும் பாருங்க..........

  ReplyDelete
 16. எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாய் விளங்குவது எது?

  ReplyDelete
 17. 24 நிமிடம் என்பது எத்தனை நாழிகை?

  ReplyDelete
  Replies
  1. 1 நாழிகை = 24 நிமிடங்கள் = 60 விநாழிகை = 3600 லிப்தம்

   Delete
  2. வாவ்....அருமை திரு.அலெக்ஸ் சார்

   Delete
 18. லிகிதம் என்பதன் பொருள் என்ன?

  ReplyDelete
 19. இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர் யார்?

  ReplyDelete
  Replies
  1. Aanandharangar nu nenaikuren sariya????

   Delete
  2. சரியான விடை ப்ரதி மேடம்.very nice

   Delete
 20. டைஸ் என்னும் இலத்தின் சொல்லின் பொருள் என்ன?

  ReplyDelete
 21. டைரியம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

  ReplyDelete
 22. சமஸ்தானம்- இதற்கான தமிழ்ச்சொல் என்ன?

  ReplyDelete
 23. சொல் என்பதனைக் குறிக்கும் சொல் எது?
  களபா
  சொலினா
  மொழியினா
  கிளவி
  பதமினா

  ReplyDelete
 24. அட்மின் சார்,சந்தோஷ் சார், முக்கிய செய்தி: இரண்டாவது லிஸ்டில் 2032 போஸ்ட்டிற்கு மேல் வரப்போகிறது அதில் தமிழுக்கு 250 இடங்கள் வரப்போவது உறுதி நண்பர்களே.. இது உண்மையாக நடக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் உங்கள் இந்த தகவலை உடனடியாக வெளியிடுகிறேன் சார்

   Delete
  2. Sir,English ku??? 1 weightage mark la maximum evlo paer irupaanga??

   Delete
 25. சார் உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் அந்த அந்த கேள்விகளுக்கு கீழ் அளியுங்கள் உங்களுக்கு பதில் கூறவில்லை என்றாலும் இந்த கேள்விகளை பலர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள் நீங்களும் சற்று ஓய்வு எடுத்து பிறகு ஆரம்பியுங்கள் எப்படியும் 6 மணிக்கு நமது நண்பர்கள் திரும்ப வந்து விடுவார்கள்

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களுக்காக கேள்விகளை எழுதினேன்.சரி சார் கமெண்ட் செய்ய முடியாமல் தவிக்கும் மொபைல் நண்பர்களுக்காக நானே பதிலையும் எழுதிவிடுகிறேன்

   Delete
  2. Dear admin,
   நீங்களகஷ்ப்பட்டு பாடக்குறிப்புகளைதயார் செய்துபின் டைப் செய்து நம் வலைதளத்தில் வெளியிடுகிறீர்கள். இது பல ஆயிரம் நண்பர் களுக்கு தேர்வுக்கு மிக மிக பயனுள்ள தாக இருக்கும்., அவர்கள் டவுண்லோடு செய்து வைத்துக்கொள்ளலாம், தேவைப்படும் நேரங்களில் மீண்டும்திரும்பவும் படித்துக்கொள்ளலாம் என்பதற்காகத்தான் Pdf வடிவில் வெளியிடச்சொன்னேன்., எனது கருத்தை உடனே ஏற்று Pdf வடிவில் வெளியிட்டதற்கு கோடான கோடி நன்றி அட்மின் சார், மேலும் மொபைல்ல Pdf வசதி இல்லாதவர்களும் பயன் பெறும் வண்ணம் முதலில் வெளியிட்ட மாதிரியும் வெளியிடுங்கள், குருகுலத்திற்கு நான் தான் கட்டுப்பட்டவன், என் மேல் இந்த அளவு பாசம் வைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்

   Delete
  3. Vanakkam sir...thiruvalluvar romba nallavar sir...matravargalai madhika therindhavar....

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. நன்றி வசந்த சார் மற்றும் பொன்மாரி சார்

   Delete
 26. புதிய போஸ்ட் உள்ளது மேல் மாடிக்கு போங்க நண்பர்களே

  FLASH NEWS TET ஆசிரியர்களுக்கு இரண்டாவது பட்டியல் 2032 பணியிடங்கள் விரைவில் வரஉள்ளது

  ReplyDelete
  Replies
  1. விரைவில் என்பதன் பொருள், ஒரு வருடம் காத்திருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்??.

   நம்பிக்கையே வாழ்க்கை. நல்லதையே எதிர்பார்ப்போம்.

   நன்றி

   Delete
  2. will we get ?(paper 1---------)

   Delete
 27. ஆங்கில எழுத்துக்களில் அடங்கிய அற்புதம் !!!!!!

  ‘A’, ‘B’, ‘C’ மற்றும் ‘D’ ஆனது 1 முதல் 99 வரை உள்ள எண்களில் இதற்கு இடை பட்ட எழுத்துக்கள் ஆங்கில சொற்களில் எங்கும் தோன்றுவது இல்லை

  எழுத்து ‘D’ ஆனது ( Hundred ) முதல் முறையாக வரும்

  ‘A’, ‘B’ மற்றும் ‘C’ ஆனது 1 முதல் 999 வரை உள்ள இதற்கு இடை பட்ட எழுத்துக்கள் ஆங்கில சொற்களில் எங்கும் தோன்றுவது இல்லை

  எழுத்து ‘A’ ஆனது ( ThousAnd ) முதல் முறையாக வரும்

  ‘B’ மற்றும் ‘C’ ஆனது 1 முதல் 999.999.999 வரை உள்ள இதற்கு இடைபட்ட எழுத்துக்கள் ஆங்கில சொற்களில் எங்கும் தோன்று வது இல்லை

  எழுத்து ‘B‘ ஆனது ( Billion ) முதல் முறையாக வரும்

  எழுத்து ‘C’ ஆனது முழு ஆங்கிலம் எண்ணிக்கையிடுதலில் சொற் களில் எங்கும் தோன்றவில்லை.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.