Friday, 18 August 2017

அறிவியல் செயல் முறை பயிற்சி

மாணவர்கள் தானே செய்து கற்றல் 

Thursday, 17 August 2017

நகராட்சியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
 
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டை  நகராட்சியில்  பரிசு பெற்றதற்கு பள்ளியில்  பாராட்டு விழா நடைபெற்றது .

Wednesday, 16 August 2017

சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா 
 
 தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழா நடைபெற்றது.சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.

Thursday, 10 August 2017

மாணவர்களின் அறிவு மற்றும் உடல் வளர்ச்சியை குறைக்கும் குடற்புழுக்கள்
அரசு பொது மருத்துவர் பேச்சு

குடற்புழுக்கள் நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு  

குடற்புழுக்கள் நீக்க மாத்திரைகளை ஏன் சாப்பிட வேண்டும்?


குடற்புழு மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்?

எத்துனை மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரைகளை சாப்பிட வேண்டும்?
குடற்புழு மாத்திரைகளை சாப்பிடும் வழிமுறைகள் என்ன ?

அரசு மருத்துவரின் தெளிவான அறிவுரைகள்

Tuesday, 8 August 2017

நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி 

Saturday, 5 August 2017சூர்ய பிரகாஷ் - 71
காவியா - 60
ஐஸ்வர்யா - 50

காயத்ரி - 56
வெங்கட்ராமன் - 55
நித்ய கல்யாணி - 30
சின்னம்மாள் – 30

இது என்ன மதிப்பெண்களா? இல்லை.

Wednesday, 2 August 2017

டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம்

சோம்பேறித்தனத்தை  அகற்றினால் டெங்கு நம்மிடம் வராது
வட்டார மருத்துவ அதிகாரி பேச்சு 


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மற்றும் கண்ணங்குடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.

Wednesday, 28 June 2017

மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???

*உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*

தயவு செய்து

*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!

*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!

*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!

உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*

தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!

தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!

*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!

உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*

🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!*

🍅🥕🥒🍆🌰🥔 *ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்!*

🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது  கைவிட்டோமோ!* அன்றே *நாம் நோய்யின் பிடியில் சிக்கிக்* கொண்டோம். *இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக    மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை  மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*

*இன்றே!மீட்டெடுப்போம்! *வாருங்கள்!*
🙏💪🏾

Monday, 26 June 2017

MBBS 85% இடஒதுக்கீடு யாருக்கானது?

MBBS 85% இடஒதுக்கீடு யாருக்கானது?
----------------------------

மருத்துவ படிப்புகளில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடும் CBSE பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. உண்மையில் இந்த 85% இடஒதுக்கீடு யாருக்கானது? இதனால் பயனடையப் போகிறவர்கள் யார்?

தமிழகத்தில் MBBS சேரும் மாணவர்களில் எண்ணிக்கை அளவில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களைவிட  தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள்தான் அதிகம். அரசு பள்ளிகளில் படித்து MBBS படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. மொத்த மருத்துவ இடங்களில் வருடத்திற்கு 2% மாணவர்கள் மட்டுமே அரசுப்பள்ளிகளிலிருந்து MBBS சேருகிறார்கள் என்பதை புள்ளிவிபரங்கள் மூலம் அறிய முடிகிறது. அப்படியானால் இந்த 85% இடஒதுக்கீட்டால் அதிகம் பலனடையப்போவது மாநிலபாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான். அவர்களும் நமது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள்தானே என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியானால் CBSE பள்ளிகளில் பயில்வது மட்டும் நம் மாநில பிள்ளைகள் இல்லையா?

உண்மையைச் சொல்லப்போனால் NEET அறிவிப்பிற்குபிறகு பெற்றோர்களின் தேர்வு CBSE ஆக மாறிபோனதில் மிகவும் பாதிக்கப்பட்டது தனியார் State board syllabus பின்பற்றும் பள்ளிகள்தான். ஏற்கனவே சமச்சீர் கல்வியால் அரசுப்பள்ளிகளில் இருந்து தங்களை தனித்து காட்ட முடியாத நிலையில் NEETல் CBSE பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்கப்படும் என்ற அறிவிப்பு அவர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது. இதனால் கடந்த 2/3 வருடங்களில் அவர்களின் மாணவர் சேர்க்கை குறைந்து போனது. இப்போது அந்த நிலையை சரிசெய்ய கிடைத்த வாய்ப்பாக இந்த 85% இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் பயன்படுத்திக்கொள்ளும். இந்த இடஒதுக்கீட்டின் மூலம் "எங்கள் பள்ளிகளில் மாநில பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது" என்று  விளம்பரப்படுத்தி தங்களுடைய மாணவர் சேர்க்கையையும் வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ள வழிவகுக்கும்.

மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த 85%-15% இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அரசு கூறுகிறது. அப்படியானால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைவிட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் எண்ணிக்கை அளவில் அதிகம். எனவே இந்த அரசு உண்மையில் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பினால் "அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 80%மும் தனியார் பள்ளிகளுக்கு 20%மும் கொடுத்திருக்க வேண்டும்."
அவ்வாறு வழங்காமல் "மாநில பாடத்திட்டம்" என்ற வகையில் இடஒதுக்கீடு வழங்குவது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அரசு எடுத்துள்ள முடிவு என்றே உறுதியாக தெரிகிறது. அவ்வாறு அரசுபள்ளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் இப்போது இந்த 85%-15% இடஒதுக்கீடு முறையை ஆதரிக்கும் தனியார் பள்ளிகள் அப்போது மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று மாற்றிச்செல்லும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

இந்த பிரச்சனையை அரசு "CBSE பாடத்திட்டம் vs மாநில பாடத்திட்டம் " என்று கையாள்வதைவிட "அரசு பள்ளிகள் vs தனியார் பள்ளிகள் " என்று கையாளுவதே சரியாக இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏழை மாணவர்களில் யாரேனும் ஒரு சில மாணவர்களுக்கு கிடைத்த MBBSவாய்ப்பு,  NEET தேர்வுக்கு பிறகு கேள்விக்குறியான சூழலில்  அந்த எட்டாக்கனியான  மருத்துவ படிப்பு  ஏழை மாணவர்களுக்கு உண்மையில் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் அரசுபள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 80%இடஒதுக்கீடு வழங்குவதன் மூலமே சாத்தியமாகும்.

அப்படி ஒரு வேளை அரசு அறிவிக்குமானால் தனியார் பள்ளிகளின் பகையை அரசு சந்திக்க நேரிடும். CBSE பாடத்திட்டத்தை பின்பற்றினாலும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றினாலும் தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகள்தான். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மாநில பாடத்திட்டத்திற்கு 85% இடஒதுக்கீடு என்றவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவர்கள் சற்றே சிந்தித்து இது State board syllabus தனியார் பள்ளிகளுக்காக அரசு எடுத்துள்ள முடிவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குரிய இடஒதுக்கீடு கிடைக்க குரல் கொடுக்க வேண்டும்!

மேலும் அரசு செய்ய வேண்டிய முக்கியமான பணிகள்
*NEET தேர்விலிருந்து விலக்கு
*+2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை
முடியாதபட்சத்தில்,
*மாநிலபாடத்திட்டத்திலிருந்து வினாத்தாள் தயாரித்தல்
*இந்த வருடம் போல் தமிழ் மொழியில் வினாத்தாள் இருத்தல்
*தனியார் மருத்துவகல்லூரிகளுக்கு  தேர்வை கட்டாயமாக்குதல்.

அரசு செய்யுமா? அரசுப்பள்ளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குமா?

நண்பன் ஸ்ரீஜி 

Wednesday, 14 June 2017

உதவி பேராசிரியர் பணியிடத்தை போட்டி தேர்வு மூலம் நிரப்ப கோருதல் சார்ப


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடத்தை போட்டி தேர்வு மூலம் நிரப்ப கோருதல் சார்பு.

Ø  மாண்புமிகு புரட்சிதலைவி அம்மாஅவர்கள் கல்லூரி ஆசிரியர் பணியிடத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் [TRB] மூலம் போட்டி தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய உள்ளதாக,

110விதியின் கீழ் அறிவித்திருந்தார்’.

Ø  அதற்கான அரசு ஆணை வெளிவராத காரணத்தால் பழைய வெய்டேஜ் முறையே இன்று வரை பின்பற்றப்படுகிறது.

 

தற்போது உள்ள தேர்வு முறை

Ø  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடம் தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியமான (TRB) மூலமாககீழ்காணும்(Weightage and Interview) முறை பின்பற்றி, பணியாளர்கள்தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Mode of Selection

 

 

 

1

For Teaching experience in Universities / Government / aided colleges / Self-financing colleges in the approved post including the Teaching experience (in the relevant subject) of the candidates in Medical/Engineering/Law Colleges.

(2 marks for each year subject to a maximum of 15 marks)

Maximum Marks

 

15 marks

 

 

2

Qualification

 

 

 

 

9 Marks

(a)  For Ph.D in concerned subject

9

(b)  For M.Phil with SLET/NET

6

   (c) For PG&SLET/NET

5

3

Interview

10 Marks

                                   TOTAL

34 Marks

 

Ø  இந்த தேர்வு முறை சீனியாரிட்டி முறையை ஒத்திருக்கிறது. தனியார் கல்லூரிகளில் நீண்ட காலம் பணிபுரிந்த மூத்தோர் மட்டுமே பணியில் சேர முடியும்.

Ø  உதவி பேராசிரியர் தகுதி தேர்வான NET/SET மற்றும் ஆராய்ச்சி படிப்பான PhD முடித்து பணியில் சேரும் கனவில் இருக்கும், திறமையும், துடிப்பும் மிக்க இளைகர்களின் கனவு கரைந்தே போகிறது.

Ø  அம்மா அவர்களின் நல்ஆட்சியில் இருந்தபோட்டி தேர்வு முறையை ரத்து செய்து, தற்போது உள்ள தேர்வு முறை கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டு இன்று வரை பின்பற்றப்படுகிறது.

Ø  தற்போது, ஒவ்வொரு பாடத்திலும் பல ஆயிரம் பேர் NET/SET மற்றும் PhD தேர்ச்சி பெற்று தகுதி பெற்றுள்ளனர். உதவி பேராசிரியர் தகுதி பெற்ற அவர்கள் அனைவரும் வெறுமனே விண்ணப்பம் செய்ய மட்டுமே முடியும். அவர்களால் அடுத்த நிலைக்கு செல்ல இந்த வெய்டேஜ் முறை பெரும் முட்டுக்கட்டை ஆகவும், தடுப்பு சுவராகவும் அமைகிறது. இதனால் தகுதி வாய்ந்த அவர்களின் கனவுகள் தகர்க்கப்பட்டு தவிடுபொடி ஆக்கப்படுகிறது.

Ø  இந்த தேர்வு முறையால் எங்களால் எங்கள் வாழ்நாளில் பணி பெற வாய்ப்பே இல்லை.

 

எங்கள் கோரிக்கை

 

Ø  NET/SET/SLET/PhD தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கிடையே, அம்மாவின் நல்லாட்சியில் இருந்த பழைய போட்டி தேர்வு முறையில் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களின் கல்வி தகுதிக்கேற்ப வெயட்டேஜ் மதிப்பெண் சேர்த்து பணி நியமனம் செய்ய வேண்டும்.

[இந்த முறையே TRB யால் நடத்த பெரும் அனைத்து போட்டி தேர்வுக்கும் பின்பற்றப்படுகிறது]

 

Ø  அதற்கான அரசு ஆணை பிறப்பித்து அனைவரும் தேர்வில் பங்கு பெற சம வாய்ப்பு வழங்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

கல்வி துறையில் போட்டி தேர்வு நடத்தபெறும் மற்ற பணியிடங்கள்

 

1.       பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் போட்டி தேர்வு.

2.      அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்கநர் போட்டி தேர்வு

3.       பாலிடெக்னிக் கல்லூரிவிரிவுரையாளர் போட்டி தேர்வு.

4.       சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் போட்டி தேர்வு

5.       DIET கல்லூரி விரிவுரையாளர்போட்டி தேர்வு.

6.       முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு.

7.       பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு

8.       இடைநிலை ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு

9.       சிறப்பு ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு

10.    ஆய்வக உதவியாளர் போட்டி தேர்வு

11.    இளநிலை உதவியாளர் போட்டி தேர்வு

 

என மேலும் பல்வேறு பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

 

Ø  மேற்கண்ட அனைத்து தேர்வுகளிலும் தகுதியானஅனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

 

Ø  கல்வி துறையில் போட்டி தேர்வு நடத்தப்படாமல், வெய்ட்டேஜ் ஒன்றை மட்டும் வைத்து பணி நியமனம் செய்யப்படும் ஒரே பணியிடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிபேராசிரியர் பணி மட்டுமே.

 

Ø  உயர் கல்வி துறையில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கானஉதவிபேராசிரியர் பணியிடத்திற்கு போட்டி தேர்வு இல்லாததால் பல ஆயிரம் தகுதி வாய்ந்த நபர்கள்பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது.

Ø  தங்கள் தலைமையிலான தமிழக உயர் கல்வி துறை உயர் கல்வியில் உலக தரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க இயலாத செய்தியாகும்.

Ø  தரமான மாணவர்கள் உருவாக தரமான ஆசிரியர்கள் தேவை. தரம் என்பது போட்டி தேர்வு மூலமே கண்டறியப்படும் என்பதை பல எடுத்துகாட்டுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Ø  போட்டி தேர்வு மூலம் உதவிபேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களின் தனித்திறமைகளைக்கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக வழிகாட்ட முடியும், கல்வியின் தரம் மேன்மேலும் உயரும்.

 

கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்கள், போட்டி தேர்வு மூலமாகவே நடத்தப்படுகிறது.தகுதி பெற்ற அனைவருக்கும் தேர்ச்சி சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

 

 

TRB’s 2017 Annual Planner.

 

            ஆசிரியர் தேர்வு வாரியம் [TRB] Annual Planner ஐ வெளியிட்டுள்ளது. அதில் வரும்ஜூலை நான்காம் வாரத்தில் [4nd week of JULY 2017], அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான 1883 உதவிபேராசிரியர்பதவிக்கான அறிவிக்கை வெளியாகும் என்றும் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட  வெயிட்டேஜ் முறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

      எனவே, தகுதி வாய்ந்த அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க எதுவாக போட்டி தேர்வுநடத்தி பணியாளர்களைத்தேர்தேடுக்க வேண்டும். நீங்கள் உடனடியாக ஆணை வழங்கினால் மட்டுமே எங்களுக்கு கல்லூரிஉதவி பேராசிரியர் பணி போட்டியில் கலந்து கொள்ள முடியும். இல்லையேல் எங்கள் வாழ்க்கையில் பணியில் சேர வாய்ப்பே இல்லாமல் போகும்.

 

      தங்களது நல்ஆணைக்காக பல ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

 

                                                               NET/SET/SLET/PH.D முடித்த பட்டதாரிகள்,

                                                           அனைத்து மாவட்டங்கள்,

                                                                       தமிழ்நாடு.

 

     

 

 

Tuesday, 13 June 2017

இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் திராவிட அரசியல் தலைவர்கள். ஆனால், இந்த தலைவர்களையே ஏமாற்றும் மாபெரும் மோசடிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், மு.க. ஸ்டாலின் ஆகியோரை சில டுபாக்கூர் பேர்விழிகள் படுமோசமாக ஏமாற்றினர். இப்போதும் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

ஜெயலலிதா: 'தங்கத்தாரகை' விருது

2004 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழிகளில் அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அதை ஐநா விருதென்று அப்பொது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார்.


உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டர்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. (தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை)

கருணாநிதி: ஆஸ்திரியா ஸ்டாம்பு

"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது. "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டார்.ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.

ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை, பூனை, நாய் அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். இதற்கு சுமார் 222 யூரோ பணம் கட்டினால் போதும். அப்படி ஒரு ஸ்டாம்பினை வாங்கிக் கொடுத்து யாரோ சிலர் கலைஞர் கருணாநிதியை நன்றாக ஏமாற்றினார்கள்.

விஜயகாந்த்: டாக்டர் பட்டம்

"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக தேமுதிகவினர் விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித்தவ தேவாலய மேலாண்மை நிறுவனம் - ஐ.ஐ.சி.எம்" (International Institute of Church Management Inc.) விஜயகாந்த்திற்கு டாக்டர் பட்டம் அளித்தது.
பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இந்த அமைப்பினர் டாக்டர் பட்டம் தருகின்றனர். இப்படி முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் தான் விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றார்.


அமெரிக்காவில் ஐ.ஐ.சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லை. சென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தை - ஐ.ஐ.சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்கு அனுப்பக் கூறியுள்ளனர். ஆக, இந்திய கிறித்துவ கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசினர் தேமுதிகவினர்.

மு.க. ஸ்டாலின்: கென்டகி கர்னல் 

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் பொதுச்சேவைக்காக பணம் திரட்டுவதற்காக கென்டகி கர்னல் எனும் விருதை வைத்துள்ளார்கள். இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு கென்டகி கர்னல் எனும் விருதினை வழங்குவார்கள். இப்படி, மு.க. ஸ்டாலின் பெயரில் பணம் கட்டி, விருது வாங்கினர் திமுகவினர். இதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். இப்போதும் கூட கென்டகி கர்னலே என்று ஸ்டாலினை அழைக்கின்றனர் உடன் பிறப்புகள்!

மு.க. ஸ்டாலின்: ஐநா அவை மனித உரிமைகள் பேரவையில் கூட்டம்

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதினார்.

"தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டன.

நடக்காத கூட்டத்திற்கே மறுப்பு எழுதும் அளவுக்கு யாரோ சிலரால் படு கேவலாமாக ஏமாற்றப்பட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்